எதையும் நன்கு ஆராய்ந்து கொண்டு அதைப் புரிந்து கொண்டால் ஏன் புதிய சொந்தக்காரர்கள் வருகிறார்கள் என்ற அந்த ரகசியம் புரிந்து விடும்.
குறளை இது வரையில் சமஸ்கிருத உலகம் ஏற்றுக் கொண்டது கிடையாது. அப்படி ஏற்றுக் கொண்டால் குறளை
குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க முன் வந்திருப்பார்கள்.குறள் சமஸ்கிருதமயமாக்கப்படவில்லை. அதற்கு அவர்கள் விரும்பவும் இல்லை 20 ஆம் நூற்றாண்டு வரையில்.
இன்னும் சொல்லப் போனால் நீதிசாரம் என்பதின் மொழியாக்கம் தான் குறள் என்று சொல்கின்ற சமஸ்கிருத ஆர்வலர்களும் உண்டு.இந்து தர்மத்தைத் தான் குறள் கூறுகிறது என்று சொல்லும் புதிய குறளாலர்களும் உண்டு. இந்த சூழலில் இந்த புதிய ஆர்வம் குறித்த விவாதம் அவசியம்.
ஏனென்றால் நாம் நம்மை இழந்து விடக் கூடாது. நமது விழுமியங்களை, நமது அடையாளங்களை, நமது சொத்துக்களை இழந்து விடக் கூடாது.
கீதையின் முதல் சுலோகமே என்ன சொல்கிறது என்றால் இது இறைவனால் அருளப்பட்டது என்கிறது.
கிருஷ்ணன் கூறுகிறார் நான் தான் நான்கு வருணங்களையும் படைத்தேன், நானே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது என்று. அதாவது கடவுளின் வாக்கு. உறுதியானது என்றுகூறப்படுகிறது. அதை மீறுவது தெய்வக் குற்றம்.என்னை, என்னிடம் குறை காண்பவர்களுக்கு இதை சொல்லாதே என்கிறார் கிருஷ்ணன்.
தமிழின் அறநூல்கள் எதிலுமே அவை தெய்வக் குரலாகத் தரப்படவில்லை.ஆனால் சமஸ்கிருதத்தில் அனைத்துமே தெய்வத்தின் குரலாகத் தான் அவை தரப்படுகின்றன. பூசுரரின் குரல் சுரரின் குரலே என்பதாகத் தரப்பட்டுள்ளது.
சுரர் என்றால் தேவர்கள். பூசுரர் என்றால் பூமியில் உள்ள தேவர்கள்(பிராமணர்கள்) , அசுரர் என்றால் சுரர் அல்லாதவர்கள் நம்மைப் போன்றவர்கள். இந்தப் பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுரர் என்றால் பாரசீக மொழியில், சமஸ்கிருத மொழியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்.
மானுடர். அசுரர் என்றால் சுரர் அல்ல மனிதர்களே அல்ல என்று பொருள். சமஸ்கிருதத்தில் உள்ள அனைத்து நூல்களிலும், இலக்கியங்களிலும் இந்தப் பிரிவு என்பது அடிப்படையாக இருக்கும்.
நாம் காணும் மனிதர்களில் பெரும்பிரிவினரை மனிதர்களே அல்ல என்னும் போக்கு தான் அது.
திருவள்ளுவரை வள்ளுவ நாயனார் என்று சிலர் இன்று கூறுகின்றனர். 63 நாயனார்கள் பட்டியலில் அவர் இருக்கிறாரா என்ன? அது போலியாக உருவாக்கப்பட்டது. திருவள்ளுவ மாலை, வெண்பா போன்ற நூற்கள் பின்னாடி எழுதப்பட்டன.
வள்ளுவரின் வாழ்க்கையை நேரில் பார்த்தது போலப் பல அற்புத அற்பக் கதைகள் தோன்றன. வள்ளுவரின் திருமணம், மண வாழ்க்கை, அவர் சந்தித்த சோதனைகள், குறளை ஏற்க மறுத்தார்கள், சங்கப் பலகையில் வைத்தார்கள், அலைகளை எதிர்த்துப் பலகையில் வந்தது என்பன போன்ற கதைகள் உருவாக்கப்பட்டன.
பக்தி இயக்க காலத்தில் இங்கே இருந்த புத்தி இழந்த பக்தியாளர்கள் வள்ளுவரை தெய்வீகமாக்கினர்.
இந்த சதி ஏறக்குறைய பல்லவர் காலத்திற்கு பிற்பட்ட சோழர்காலத்துச் சைவர்களால் நிகழ்த்தப்பட்டது.
தெய்வத்தின் நீதிக்கும் மனிதனின் நீதிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இவையெல்லம் சர்ச்சைகள் என்று புறந்தள்ள முடியாது. இவை சமூக உளவியலில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. புதிர்கள் அவிழ்க்கப்பட வேண்டும்.
வள்ளுவரின் சரித்திரம் என சொல்லப்படும் ஒரு கட்டுக்கதை அதன் முதல் குறளை வைத்தே கட்டப்பட்டது.
ஆதி என்ற தாழ்த்தப்பட்ட பெண் பகவன் என்ற பிராமணர் உடன் ஆசை வயப்பட்டு அவர் கட்டளைகளை மதித்து அவரோடு சொல்வதாகவும் அவர்கள் ஆங்காங்கே சொல்லும் பிள்ளைகளைப் பெற்று விட்டுவிட்டுச் சென்றதாகவும் அவர்கள் வளர்ந்து ஒருவர் இளங்கோவாகவும்,ஒருவர் கபிலராகவும்,
ஒருவர் வள்ளுவராகவும், ஒரு பெண் குழந்தை அவ்வையாரானதாகவும் கதைகள் கட்டப்பட்டன.
இந்தக் கதைகளின் உள்நோக்கம் என்ன?
ஆரம்ப காலம் முதல் கட்டப்பட்ட அனைத்துக் கட்டுக்கதைகளும் சொல்வது ஒன்றே. அறிவுள்ளவன், திறனுள்ளவன் பார்ப்பனருக்குப் பிறந்தவனாகத் தான் இருக்க முடியும் அவர்களே அறிவாளி,
திறமைசாலி என்பதைத் திணிப்பது தான் அதன் உள்நோக்கம். நம் அப்பாவி மக்கள் கூறுவார்களே ஐயர் எல்லாம் அறிவாளி என்று.
அறிவு என்பது இறைவனால் பார்பனருக்கு மட்டுமே வழங்கப்பட்ட சொத்து என்பது போலவும், வேறு பிரிவில் அறிவாளி பிறந்து விட்டால்
அதற்கு ஒரு பிராமண மூலம் இருப்பது போலவும் இந்தக் கதைகள் தொன்று தொட்டு உருவாக்கப்படுகின்றன. முன்னே சேர்த்தார். ஐயன் என்றால் அறிவாளி என்பது பொருள். அவர்கள் அதை ஜாதிப் பெயராக செரித்துக் கொண்டனர்.
அடுத்தது வாசுகி கதை !
கற்பின் சின்னமாகத் திருவள்ளுவருக்கு வாசுகி வழங்கப்பட்டார் கட்டுக்கதைகள் மூலமாக. வாசுகி என்றால் வடமொழிச் சொல்லின்படி பாம்பு. பாம்பு என்ற பெயரை எப்படி வள்ளுவரின் மனைவிக்குக் கொடுத்தார்களோ தெரியவில்லை.
வாசுகி ஒருநாள் கிணற்றில் நீர் எடுத்த போது வள்ளுவர் கூப்பிட்டாராம். கற்பின் அரசி ஆச்சே. கயிற்றை அப்படியே விட்டுட்டுப் போக தண்ணீர் குடம் அந்தரத்தில் அப்படியே நின்னதாம். இதெல்லாம் கதை கொங்கண முனிவர் என்பது பிற்கால சோழர் பின்னால் விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவான ஒரு பெயர்.
கொங்கண முனிவர் கோபமாகப் பார்த்தால் எரிந்து விடுவார்களாம். அவர் வீட்டிற்குப் போய் கதவைத் தட்ட வாசுகி வர சற்று தாமதமானதாம். காதவைத் திறந்த உடன் அவர் வாசுகியைக் கோபமாகப் பார்த்தாராம். அந்த அம்மாவுக்கு ஒன்று ஆகவில்லையாம் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா"
என்று வாசுகி கேட்டதாகவும் ஒரு கதை .
வள்ளுவரும் வாசுகியும் போல வாழ வேண்டும் என நம் மக்களே தமிழ் உணர்வோடு வாழ்த்த ஆரம்பித்தனர்.இந்தக் கதைகளையெல்லாம் மறந்து விட்டு, ஏற்கனவே மனதில் திணிக்கப்பட்ட அந்த அழுக்குகளை நீக்கி விட்டு சுதந்திர மனிதராக குறளைப் பார்க்கும்போது உண்மை புரியும்.
கதைகளை மனதில் வைத்துக் குறளைப் பார்த்தால் கதை தான் குறளாகும். குறள் ஒருநாளும் நெறி ஆகாது.
ஆதிபகவன் என்ற ஒரு பெயரை இரண்டாகப் பிரித்தார்கள் சதிகாரர்கள். ஆதி பெண், பகவன் ஆண் என்று பிரிக்கிறார்கள்.
ஆதிபகவன் என்பது எந்த சமய மரபில் வருகிறது.என்றால் சமண சமய மரபில் வருகிறது.
அதில் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள். முதல் தீர்த்தங்கரர் கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே தோன்றிவிட்டார் அவர்கள் கூற்றுப்படி. அவர் பெயர் ரிஷப தேவர். அவர் இந்தியாவுக்கு வெளியே இருக்கும் திபெத்தில் கைலாயத்தில் இருந்தார். ரிஷபன் என்றால் காளைஎன்ற பொருளும் உண்டு.
ரிஷப தேவரின் சின்னம் காளை. அவரை சமண நூல்களில் குறிப்பாக மேரு மந்திர புராணம் என்ற சமண நூலில் ஆதி நாதர் ஆதி பகவன் என்று குறிப்பிடுகிறது. அதாவது முதல் ஆள்.அவர் கடவுள் கிடையாது அவர்களுக்கு.இந்த ஆதிநாதரை(ஆதிபகவன்) இரண்டாக வெட்டி ஒன்றை ஆணாக, மற்றொன்றை பெண்ணாக மாற்றி அவர்களுக்குள் த
காத உறவை ஏற்படுத்தி பொறுப்பில்லாத தந்தையும் தாயுமாக அவர்களை மாற்றி அதில் பல அற்புதக் கதைகளை உருவாக்குவது என்பதை வைதிக வக்கிரம் என்று சொல்வதில் என்ன தவறு?
வைதிகத்தை மறுத்த, ஜாதியை
தீர்த்தங்கரர் யாரும் கடவுள் கிடையாது. Prophets(தீர்க்க தரிசிகள்)
இந்த ஆதிநாதரை(ஆதிபகவன்) இரண்டாக வெட்டி ஒன்றை ஆணாக, மற்றொன்றை பெண்ணாக மாற்றி அவர்களுக்குள் தகாத உறவை ஏற்படுத்தி பொறுப்பில்லாத தந்தையும் தாயுமாக அவர்களை மாற்றி அதில் பல அற்புதக் கதைகளை உருவாக்குவது என்பதை வைதிக வக்கிரம் என்று சொல்வதில் என்ன தவறு?
மறுத்த, சனாதனத்தை மறுத்த வள்ளுவருக்கு பிராமணத் தந்தையைக் கற்பிப்பது எவ்வளவு கொடூரமான செயல்?
உண்மையாகவே தமிழர்கள் உணர்ச்சி உள்ளவர்களாக இருந்தால், மானம் உள்ளவர்களாக இருந்தால், இப்படி வள்ளுவனுக்குக் கள்ளத் தந்தையை கற்பித்தவர்களை நோக்கி நம் சினம் போயிருக்க வேண்டும்.
ஆனால் நம் மக்களின் அடிமை புத்தி இதையெல்லாம் ஏற்றுக் கொண்டதோடு இல்லாமல் இந்தக் கதையை அடுத்தவனுக்கும் சொல்கிறார்கள். அதை வைத்து SS வாசன் ஒரு திரைப்படமே எடுத்து சம்பாதித்து விட்டார்.
இதை சொல்லக் காரணம் வள்ளுவர் தெய்வம் அல்ல, பிராமணத் தந்தை மூலம் உடையவர் அல்ல வைதிகத்தை மறுத்த,ஜாதியை
அவர் மனிதர், தமிழர், இங்கேயே நம்மில் ஒருவராக வாழ்ந்தவர். நல்லகாலம் இன்னும் வைணவர்கள் போட்டிக்கு வரவில்லை.
வந்திருந்தால் வள்ளுவருக்கு V நாமம் போட வேண்டுமா Y நாமம் போட வேண்டுமா என்ற சண்டை வந்திருக்கும்
சங்க இலக்கியம் எதுவுமே மத இலக்கியம் அல்ல. அவை இறை வேண்டுதலில் வருவதில்லை.
இறையைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆனால் சங்க இலக்கியங்களில் பெருங்கோயில்கள் கிடையாது.
சங்க இலக்கியங்களில் மாறுபட்ட இலக்கியமாக நாம் பார்ப்பது பரிபாடலும், திருமுருகாற்றுப் படையும் மட்டுமே.
சேயோன் என்பதை சிவனின் மகன் என்று சங்க இலக்கியத்தில் எங்காவது குறிப்புகள் உண்டா? சேயோன் என்றால் மகன் மட்டும் தானா? செம்மையானவன் என்ற பொருள் இல்லையா?
சேயோன் என்ற திணைக் கடவுளை எப்போது சிவனின் குடும்பத்தில் சேர்த்தார்கள்?
அந்த சதி தான் சங்கம் மருவிய காலத்தில் முயற்சிக்கப்பட்டு திருமுருகாற்றுப்படை ,அறுபடை வீடுகள் எல்லாம் உருவாக்கப்பட்டது.
அறுபடை வீடும் முல்லை நிலத்தையோ அல்லது குறிஞ்சி நிலத்தையோ சார்ந்தவையாக இருக்கின்றன.
குன்று தோறும் குடியிருக்கும் முருகன் என்றால் யாரும் தானாக அங்கே போய் உட்காரவில்லை. மனிதன்தானே அங்கே சிலைகளை வைத்தான்.
இந்த இரண்டு இலக்கியம் தவிர எந்த சங்க இலக்கியமும் இறைவழிபாட்டோடு தொடர்பு அற்றவை. ஆனால் சமஸ்கிருதத்தின் மூத்த இலக்கியமான வேத இலக்கியம் தோத்திரப்பாக்களின் தொகுப்பு.
அறநூல் கிடையாது. பலவேறு கடவுள்களை பல்வேறு சுயநல நோக்கங்களுக்காக வேண்டுகின்ற பாடல்கள் அவற்றோடு இணைந்த யக்ஞங்கள். இவை மட்டும் தான் சமஸ்கிருதத்தின் ஆதி இலங்கியங்கள். தன்னைப் பற்றிய கவலை மட்டுமே அதில் உண்டு.ஒழுக்கத்தைப் பற்றிய கவலை அதில் இல்லை.
எதிரிகளை அழிப்பது மட்டுமே அதன் நோக்கம், ஒன்றுபட்ட பொதுவான அறம் சமஸ்கிருத இலக்கியத்தில் கிடையாது.
தமிழ்ச்சங்க இலக்கியங்களில் நாம் பார்ப்பது இணைந்து வாழ்வதற்கான ஒழுக்கங்கள்.
கீதையின் காலம் வேத காலம் அல்ல.
திருவள்ளுவருக்கு ஜாதிப் பட்டம் பின்னாடி சேர்த்து விடுவார்கள் என உணர்ந்து தான் கலைஞர் அவர்கள் ஐயன் வள்ளுவன் என அழைத்தார் .
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று
கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.
‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.
தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
பசும்பொன் முத்துராமலிங்கம்
முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?
1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.
"ஆட்சியிலிருந்த போது, கொடநாடு விவகாரத்தை ஒண்ணும் இல்லாம ஆக்குற பொறுப்பை வேலுமணி கிட்ட ஒப்படைச்சிருந்தாராம் எடப்பாடி. இதை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு மாஜி தங்கமணிக் கிட்டயாம்.
அதுக்கு பட்ஜெட் 5 கோடி வேலுமணி வசம் கொடுக்கப்பட்டிருக்கு. குற்றவாளிகள், அவங்களோடு தொடர்புடைய 84 பேர், காவால்துறை அதிகாரிகள், சட்டத்துறையினர்னு சரிக்கட்ட வேண்டிய -லிஸ்ட் பெருசா இருந்திருக்கு. ஆனால் வேலுமணியிடமிருந்து எவருக்கும் எதுவும் பாசனம் ஆகலையாம்.
அதனால்தான் கடுப்பாயிருக்கிறார் எடப்பாடி.''”
"கொடநாடு விவகாரத்தை சாஃப்ட் ஆக்கி, மறைக்கணும்னு அப்ப இருந்த காவல்துறை உயரதிகாரி மூலம், கோவை பகுதிக்கு சரக டி.ஐ.ஜி.யா முத்துசாமியை எடப்பாடி நியமிச்சாராம்.
''என் கொள்கை -எம்ஜிஆர் தெய்வம்!” -அதிரடி அரசியலால் ‘உயர்ந்த’ ஜேப்பியார்!
இன்று ஜேப்பியார் நினைவு நாள். அதிமுக அனுதாபியான அந்த முதியவர் கூறிய விபரங்கள் இதோ -
ஜேப்பியாரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம். ஜே.பங்குராஜ் என்ற பெயர்தான் பின்னாளில் ஜேப்பியார் ஆனது.
காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில், கட்சி உறுப்பினர் படிவத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டபோது, இவரும் கையெழுத்திட்டு உறுப்பினர் ஆனார். ஒரு பாதுகாவலராக இருந்து தமிழகம் முழுவதும்
எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் செய்தார். 1973-ல் இவரை தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக ஆட்சி அமைந்ததும், குடிநீர் வாரிய தலைவர் ஆனார். எம்.எல்.சி யாகவும் மேலவை கொறடா ஆகவும் இருந்தார். எம்.ஜி.ஆர்.
ஈழவரின் மீதான தீண்டாமையை மறுத்துப் பேசும்போது பெரியார் பின்வருமாறு பேசினார். “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா?
இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா?
வலது பக்கம் இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா?” என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசினார் பெரியார்.
பெரியார் மறைந்தபோது, அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அப்போது முதல்வராக இருந்த கலைஞர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அப்போது தலைமை செயலாளராக இருந்த சபாநாயகம் எந்த அரசு பதவியிலும் இல்லாதவருக்கு அரசு மரியாதை எப்படி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதைக் கேட்டு கோபமடைந்த கலைஞர் , ''மகாத்மா காந்தி எந்த அரசு பதவியில் இருந்தார். அவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டதே என்றார். அதற்கு பதில் அளித்த சபாநாயகம் காந்தி ''Father of the Nation'' என்று கூறினார்.