பெரியார் மறைந்தபோது, அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அப்போது முதல்வராக இருந்த கலைஞர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அப்போது தலைமை செயலாளராக இருந்த சபாநாயகம் எந்த அரசு பதவியிலும் இல்லாதவருக்கு அரசு மரியாதை எப்படி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதைக் கேட்டு கோபமடைந்த கலைஞர் , ''மகாத்மா காந்தி எந்த அரசு பதவியில் இருந்தார். அவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டதே என்றார். அதற்கு பதில் அளித்த சபாநாயகம் காந்தி ''Father of the Nation'' என்று கூறினார்.
பிரச்சனைகள் எழுந்தால் என்ன செய்வது என்று சபாநாயகம் கேட்டபோது, எனது அரசு அதற்காக கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று கலைஞர் கூறினார்.
இதையடுத்து ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட பெரியாரின் உடலுக்கு மூன்று குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
கலைஞரை பெரியார் ஒருமுறை பாராட்டி இருந்தபோது, ''கலைஞர் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்... ஒரு பகுத்தறிவாளராக, ஆட்சியில் அரிய ராஜதந்திரியாக நடந்து வருவதன் மூலம் தமிழர்களுக்கு புது வாழ்வு தருபவராகிறார்'' என்று புகழாராம் சூட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘‘காந்தியடிகள் கூடத்தான் எவ்வித அரசுப் பொறுப்பையும் வகிக்காத நிலையில் ,எந்த அடிப்படையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டனவோ அதே அடிப்படையில்தான் தந்தை பெரியாருக்கும் நிறைவேற்றப்படும். ஏனெனில் இது பெரியாரின் அரசு’’ என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் -கலைஞர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று
கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.
‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.
தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
பசும்பொன் முத்துராமலிங்கம்
முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?
1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.
"ஆட்சியிலிருந்த போது, கொடநாடு விவகாரத்தை ஒண்ணும் இல்லாம ஆக்குற பொறுப்பை வேலுமணி கிட்ட ஒப்படைச்சிருந்தாராம் எடப்பாடி. இதை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு மாஜி தங்கமணிக் கிட்டயாம்.
அதுக்கு பட்ஜெட் 5 கோடி வேலுமணி வசம் கொடுக்கப்பட்டிருக்கு. குற்றவாளிகள், அவங்களோடு தொடர்புடைய 84 பேர், காவால்துறை அதிகாரிகள், சட்டத்துறையினர்னு சரிக்கட்ட வேண்டிய -லிஸ்ட் பெருசா இருந்திருக்கு. ஆனால் வேலுமணியிடமிருந்து எவருக்கும் எதுவும் பாசனம் ஆகலையாம்.
அதனால்தான் கடுப்பாயிருக்கிறார் எடப்பாடி.''”
"கொடநாடு விவகாரத்தை சாஃப்ட் ஆக்கி, மறைக்கணும்னு அப்ப இருந்த காவல்துறை உயரதிகாரி மூலம், கோவை பகுதிக்கு சரக டி.ஐ.ஜி.யா முத்துசாமியை எடப்பாடி நியமிச்சாராம்.
''என் கொள்கை -எம்ஜிஆர் தெய்வம்!” -அதிரடி அரசியலால் ‘உயர்ந்த’ ஜேப்பியார்!
இன்று ஜேப்பியார் நினைவு நாள். அதிமுக அனுதாபியான அந்த முதியவர் கூறிய விபரங்கள் இதோ -
ஜேப்பியாரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம். ஜே.பங்குராஜ் என்ற பெயர்தான் பின்னாளில் ஜேப்பியார் ஆனது.
காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில், கட்சி உறுப்பினர் படிவத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டபோது, இவரும் கையெழுத்திட்டு உறுப்பினர் ஆனார். ஒரு பாதுகாவலராக இருந்து தமிழகம் முழுவதும்
எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் செய்தார். 1973-ல் இவரை தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக ஆட்சி அமைந்ததும், குடிநீர் வாரிய தலைவர் ஆனார். எம்.எல்.சி யாகவும் மேலவை கொறடா ஆகவும் இருந்தார். எம்.ஜி.ஆர்.
ஈழவரின் மீதான தீண்டாமையை மறுத்துப் பேசும்போது பெரியார் பின்வருமாறு பேசினார். “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா?
இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா?
வலது பக்கம் இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா?” என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசினார் பெரியார்.