#சமூகநீதிநாள்
#HBDPeriyar143
#HBDThanthaiPeriyar

தமிழ் நினைத்து இதயத்தைத் தமிழால் நனைத்து

இமை கடலில் ஆதிக்கம் செலுத்தியவர் நம் தமிழர்

உமிழ்நீரை வாயில் தேக்கி
ஊத்தைப் பல் துலக்கிவிட்டு

மீண்டும் உடலுக்குள் கொப்பளித்து விழுங்குதல்போல்
அமிழ்தான இனப்பண்பு, கலை மான்பு, இலக்கியங்கள் மாய்ப்பதற்கு

தமிழர்களே ஒப்புவிட்டார்

கெட்ட உமிழ்நீரை உடலுக்குள் துப்பிவிட்டார்

அழுக்குச் சேர்ந்த குடலை வெளுத்திடவேண்டும்

அதற்கு மருந்தெனும் நல்ல சலவைத்தொழிலாளி வேண்டும்

உடல் தூய்மை ஔடதத்தால் அமையும்

உளத்தூய்மை வாய்மையாலே ஆகும்
அந்த வாய்மைக்கு வழிவைத்து

வஞ்சகக்கோட்டைக்கு வெடிவைத்து

அறுபது ஆண்டுகள் அஞ்சாது போரிட்டார்

நம் அண்ணாவின் தலைவர் பெரியார்

அந்த பெரியாரை

‘பயிர் போன்றார் உழவருக்கு

பால்போன்றார் குழந்தைகட்கு

பசும்பால் கட்டித் தயிர் போன்றார் பசித்தவர்க்கு
தாய் போன்றார் ஏழையர்க்கு

தகுந்தவர்க்கு செயிர் தீர்ந்த தவம் போன்றார்

செந்தமிழ் நாட்டில் பிறந்த மக்களுக்கெல்லாம்

உயிர்போன்றார்’ என்று
பாரதிதாசப் பாவேந்தர் பாடி மகிழ்ந்தார் அன்று

‘ஈ.வே.ரா நாத்திகரா?

இல்லையில்லை அவர் இயற்கையின் புதல்வர்

இந்த மண்ணை மணந்த மணாளர்
எதிர்காலத் தமிழகத்துப் பெருமைக்குத் தூதர்’ என்று

அக்ரஹாரத்து அதிசய மாமனிதர்

வா. ரா முன்பு அழகாக வரைந்திட்டார் ஒரு கட்டுரைதான்.

நமது பெரியார்க்கு

வங்கத்துத் தாகூர்போல் தாடியுண்டு

பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வையுண்டு

தெங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு
வெண் சங்கொத்த கண்களிலே

விழியிரண்டும் கருவண்டு அதில் சாகும்வரை ஒளியுண்டு

பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின்

இவரோ படுகிழமாய்ப் போனபின்பும் பம்பரமாய்ச் சுற்றிவந்தார்

எரிமலையாய் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய்

எதிரிகளை நடுங்க வைக்கும் இடியொலியாய்
இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்

இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்

எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்

ஏனென்ற கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய்

என் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்

அவர் பாதம் படாத பட்டிதொட்டி உண்டா?
அவர் பேர்கேட்டு காதம் ஓடுகின்ற ஆத்திகரும்

அவர் பேசக்கேட்டால்

தமிழ்கீதம் கேட்ட கிறுகிறுப்பில் மயங்கிப்போவார்

அறிவு மழை பொழியும்

எழில் வழியும்

இருள் கழியும்

தெளிவுமிகு உரைகள் பல ஒளிரும்

திறன் மிளிரும்

கடலின் மடை

அலையில் ஒலி

மலையின் முடி

தழுவு முகில் வழியும்
ஆணவங்கள் முறியும்

அடிமை முறை ஒழியும்

~~~தந்தை பெரியார் பற்றி கலைஞர் மு.கருணாநிதி எழுதிய கவிதை~~

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

18 Sep
முத்துராமலிங்க தேவர் கைதை வரவேற்றார் பெரியார்

‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று Image
கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன. Image
‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.
Read 28 tweets
18 Sep
முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியர்.

இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்

தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். Image
பசும்பொன் முத்துராமலிங்கம்

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?
1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.
Read 112 tweets
18 Sep
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

எடப்பாடியை ஏமாற்றிய வேலுமணி!

சைலன்ட்டான விஜயபாஸ்கர்!

"ஆட்சியிலிருந்த போது, கொடநாடு விவகாரத்தை ஒண்ணும் இல்லாம ஆக்குற பொறுப்பை வேலுமணி கிட்ட ஒப்படைச்சிருந்தாராம் எடப்பாடி. இதை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பு மாஜி தங்கமணிக் கிட்டயாம். Image
அதுக்கு பட்ஜெட் 5 கோடி வேலுமணி வசம் கொடுக்கப்பட்டிருக்கு. குற்றவாளிகள், அவங்களோடு தொடர்புடைய 84 பேர், காவால்துறை அதிகாரிகள், சட்டத்துறையினர்னு சரிக்கட்ட வேண்டிய -லிஸ்ட் பெருசா இருந்திருக்கு. ஆனால் வேலுமணியிடமிருந்து எவருக்கும் எதுவும் பாசனம் ஆகலையாம்.
அதனால்தான் கடுப்பாயிருக்கிறார் எடப்பாடி.''”

"கொடநாடு விவகாரத்தை சாஃப்ட் ஆக்கி, மறைக்கணும்னு அப்ப இருந்த காவல்துறை உயரதிகாரி மூலம், கோவை பகுதிக்கு சரக டி.ஐ.ஜி.யா முத்துசாமியை எடப்பாடி நியமிச்சாராம்.
Read 5 tweets
18 Sep
''என் கொள்கை -எம்ஜிஆர் தெய்வம்!” -அதிரடி அரசியலால் ‘உயர்ந்த’ ஜேப்பியார்!

இன்று ஜேப்பியார் நினைவு நாள். அதிமுக அனுதாபியான அந்த முதியவர் கூறிய விபரங்கள் இதோ -

ஜேப்பியாரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம். ஜே.பங்குராஜ் என்ற பெயர்தான் பின்னாளில் ஜேப்பியார் ஆனது. Image
காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில், கட்சி உறுப்பினர் படிவத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டபோது, இவரும் கையெழுத்திட்டு உறுப்பினர் ஆனார். ஒரு பாதுகாவலராக இருந்து தமிழகம் முழுவதும்
எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் செய்தார். 1973-ல் இவரை தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக ஆட்சி அமைந்ததும், குடிநீர் வாரிய தலைவர் ஆனார். எம்.எல்.சி யாகவும் மேலவை கொறடா ஆகவும் இருந்தார். எம்.ஜி.ஆர்.
Read 19 tweets
17 Sep
வைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்.

ஈழவரின் மீதான தீண்டாமையை மறுத்துப் பேசும்போது பெரியார் பின்வருமாறு பேசினார். “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா? Image
இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா?
வலது பக்கம் இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா?” என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசினார் பெரியார்.
Read 74 tweets
16 Sep
#சமூகநீதிநாள்
#HBDPeriyar143
#HBDThanthaiPeriyar
பெரியார் மறைந்தபோது, அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அப்போது முதல்வராக இருந்த கலைஞர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், அப்போது தலைமை செயலாளராக இருந்த சபாநாயகம் எந்த அரசு பதவியிலும் இல்லாதவருக்கு அரசு மரியாதை எப்படி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதைக் கேட்டு கோபமடைந்த கலைஞர் , ''மகாத்மா காந்தி எந்த அரசு பதவியில் இருந்தார். அவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டதே என்றார். அதற்கு பதில் அளித்த சபாநாயகம் காந்தி ''Father of the Nation'' என்று கூறினார்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(