🌺மீண்டும் பிறந்தோமா மக்களே...🌺

இன்று நம் சிங்கத் தலைவன், நரேந்த்ர மோடியின் பிறந்தநாள்.

காலை முதல் காணும் இடமெல்லாம் வாழ்த்துகள் பறக்கின்றன.

கேட்கும் இடமெல்லாம் வாழ்க வாழ்கவெனும் வாழ்த்தொலிகள் விண்ணை நிறைக்கின்றன.

படிக்கும் பக்கமெலாம் பாரதப் புதல்வனின் தலைமையை மெச்சுகின்றன. Image
தேசியவாதிகள் ஒவ்வொருவர் மனதும் இன்று துள்ளிக் குதிக்கின்றன.

ராணுவ வீரர்கள் உள்ளங்கள் பொங்கிக் கரைமீறி இன்பத்தில் ஓடுகின்றன.

சீறிவரும் சிங்கம் கண்டதும் இளைஞர்கள் “மோடி... மோடி...” என ஆரவாரிக்கின்றனர். Image
பிஞ்சுகள் கூட, “தாடி இருந்தால் மோடி தாத்தா...” என்று அடையாளம் காட்டிக் கைதட்டி, பால்பற்கள் காட்டிச் சிரிக்கின்றன.

காலை முதல் மனமெல்லாம் நெகிழ்ந்திருக்கும் தன் பிள்ளைகளைப் பார்த்து பாரத மாதாவும் மனம் குளிர்ந்து நிற்கிறாள்.

சிங்கநடை போடும் இந்த பீஷ்மனுக்கு வரும் Image
வாழ்த்தொலிகள் எல்லாம் அவரவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கேட்டது போல மகிழ்ச்சி மக்கள் மனதில்.

இதுவரை சுதந்திரத்துக்குப் பின் பாரதம் கண்டிராத ஒரு விந்தையிது.

நம் பாரதன் ஒருவன் பாரினில் நம் தேசத்தை மட்டுமா உலகத் தலைவர்களையும் ஆள்கிறான். அவனடியில் குடிமக்களாய் இருப்பதே பெருமிதமடா... Image
நம்மை மட்டுமா...

அந்த இறைவனே ஓய்வுகொள்ள தன் தோளைத் தந்து, தான் மட்டும் அயராது பாடுபடும் இந்த மனிதனை ஒப்பிட வார்த்தை ஏது?

மனம் குளிர வாழ்த்துகிறோம்...
இன்று போல் என்றென்றும் வாழ்கவே! பல்லாயிரம் ஆண்டு பார்புகழ வாழ்கவே!! Image
பலகோடி நூறாயிரம் ஆண்டு உன்புகழ் வாழ்கவே!!

#HappyBdayModiji
#HappyBirthdayDaddy
#SevaSamarpan
#தேசம்_வாழ_நமோ_வாழ்க.

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

20 Sep
🌺நடுநிலை முட்டாள் இந்துவே முதலில் இதைப்படி...🌺

நமது கண் முன்பே நமது சலுகைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையினர் என்ற பெயரைச் சொல்லி அவரவர்களுடைய சலுகைகளை எப்படி அதிகரித்துக் கொள்கின்றனர் என்பதை படித்துப்பார் உனக்கு புரியும்!

உறங்கியது போதும் விழித்துக்கொள்..🚩
கிறிஸ்தவ முன்னேற்ற கழக எம்எல்ஏ,க்கள் கோரிக்கை!!

தமிழக சட்டப் பேரவையில் நேற்று அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: ஜெருசலேம் புனித பயணத்துக்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37 ஆயிரம் ரூபாயிலிருந்து
60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

சிறுபான்மையினர் விடுதி மாணவ, மாணவியருக்கு சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு (பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ்) சிறப்பு உணவு வழங்கப்படும்.

உலேமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு 10 ஆயிரத்து 553 மிதிவண்டிகள் வழங்கப்படும்.
Read 20 tweets
20 Sep
🌺முட்டாளாகவே இருக்க முடிவா??🌺

இன்று மான்புமிகு மான்கறி மார்க்கெட் கூட்டம் ஏதோ கருப்புக் கொடிபிடித்துக் கொண்டு, பெட்ரோல் டீசல் விலை பற்றிக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறதாம்... வட்டாரம் தகவல் சொன்னது. சட்டென நம்ம டபுள் வாட்ச் டக்ளஸ் நினைப்பு வந்துருச்சுங்க...
ஏதோ 3 ரூபாய் பெட்ரோலுக்கு குறைத்தாராமே... அடேயப்பா... பெரிய விஷயம்தான்.

ஆமாம்... ஜி.எஸ்.டி பற்றிய கௌன்ஸில் கூட்டத்திற்கு அழைப்பு வந்ததாமே டக்ளஸ்... ஏன் போகவில்லை?? எனக் கேட்டார்களாம். ஐயா அதுக்கு தந்த பதிலைப் பாரேத்தீர்களா...

தன் கடைமையிலிருந்து தவறிவிட்டு, இப்போது கொடிபிடித்து
கூப்பாடு போடுகிறதாம் மான்கறி மார்க்கெட்...

இதைக் கேள்வி கேட்ட எந்த RSB ஊடகத்துக்காவது துப்பிருந்ததா? இல்லையே... கேவலமான ஒரு விஷயத்தைப் பற்றி, அடுத்தவன் அந்தரங்கம் பற்றி பட்டிமன்றம் நடத்தத் துப்பிருக்கு... அனிதா சாவுக்குக் குதிக்கத் துப்பிருக்கு... ஆனால் தனுஷ், கனிமொழி, சௌந்தர்யா
Read 8 tweets
18 Sep
🌺மனம் சிறு சந்தோஷத்தை அடைந்தது...🌺

இன்று தேசப்பிதா மோடி ஜி-யின் பிறந்த தினத்தையொட்டி, தமிழக பா.ஜ.க வின் ஒரே நாடு பத்திரிகை 🌺மோடி மலர்🌺 வெளியிட்டது.

அதன் முதன் பிரதியை மாநிலத் தலைவர், நம் சிங்கம் 🍃அண்ணாமலை🍃 வெளியிட, நடிகர் திலகம் **செவாலியேசிவாஜி கணேசன்** அவர்களின்
மூத்த குமாரர், திரு. ராம்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதில் மிகப்பெரிய எழுத்தார்கள் மோடியைப் பற்றி எழுதியுள்ளனர். அதில் அடியேன் எனது கட்டுரையும் அவர்களுடைய கட்டுரையோடு பிரசுரமாகியுள்ளது☺

திரு. அண்ணாமலை சால்வை போர்த்தி கௌரவித்தார். என்ன புண்ணியமோ இப்பாரத மண்ணில் பிறந்தது
என நினைப்பேன்...

அதில் எனது உயிரினும் மேலான தந்தை மோடி ஜி பற்றி எழுதியதே பாக்யம். அண்ணாமலையால் "அக்கா வாருங்கள்..." என அழைத்து கௌரவிக்கப்பட்டது...

சொல்ல முடியவில்லை ஆனந்தத்தில்... கண்கள் பனிக்கின்றன. இதோ என் கட்டுரையை பகிர்ந்துள்ளேன்.... Image
Read 6 tweets
16 Sep
🌺இன்னும் என்ன வேண்டும் திருடர்களே??🌺

முதல் நாள் தனுஷ், இரண்டாம் நாள் கனிமொழி, மூன்றாம் நாள் சௌந்தர்யா...

இந்த தற்கொலையைப் பற்றிப் பொதுவான கருத்துக்களை நான் பேச விரும்பவில்லை. மாறாக, இந்த ப்ரச்சனையின் ஆணி வேர் நோக்கிப் போவோமா?

தொந்தரவு தரும் ஒரு மரத்தில் கிளைகளை மட்டும்
கழித்துக் கொண்டு வந்தால், நிரந்தரத் தீர்வு வந்துவிடுமா? அடி மரத்தோடு வெட்டி, ஆணி வேரோடு பிடுங்கி அல்லது எரித்து அதனை அழிக்க வேண்டாமா?

இது மரத்துக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கையில் ப்ரச்சனைகளையும் வேதனைகளையும் மட்டுமே தருவது எதுவாகினும் அதற்கும் இதுதானே தீர்வு?
முதலில் மாணவர்கள்...

தன்னம்பிக்கை என்பது ஏன் அற்றுப்போனது அவர்களுக்கு? தேர்தல் என்பதை ஒரு பயமாகவே மாற்றி விட்டதால். மாணவச் செல்வங்களே... எத்தனை நபர்களை தினமும் சந்திக்கிறீர்கள் வாழ்வில்? கணவனை இழந்தவர், பெற்றோரை இழந்த குழந்தைகள் முதல் கைகால்களை இழந்தவர் வரை உங்களைச் சுற்றி
Read 55 tweets
7 Sep
🌺Enjoy before sleeping....🌺

🤣 டாக்டருக்கும் ஆக்டருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?

இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!

🤣 சிவகாசிக்கும்
நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசில காச கரியாக்குவாங்க.

நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!
🤣 FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?

FILE ல் உட்கார்ந்து பார்க்கணும்.

PILE க்கு பார்த்து உட்காரணும்.

🤣 செல்போனுக்கும்
மனிதனுக்கும் என்ன
வித்தியாசம்?

மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.

செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.
🤣ஒவ்வொரு இளைஞனின்
மன உளைச்சலுக்கும்
காரணம்?

மதிப்பெண்ணும்
மதிக்காத பெண்ணும்!

🤣 ஏழைக்கும் பணக்காரனுக்கும் வித்யாசமென்ன?

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!

வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!

🤣 ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விஷயங்கள் ரெண்டு?

ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!
Read 5 tweets
7 Sep
🌺😃😃 நன்றி மகளே....🌺

இதில் ஒரு பெண் என்னை அழகாகத் திட்டியிருக்கிறார். கோவிலில் அசைவம் சமைப்பவர் பரிஜாரகராவது தவறு என அரசு செய்யும் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு, முருகனுக்கு அசைவம்தான் பிடிக்குமென்றும், நான் மாற்றிப் பேசுகிறேன் என்றும் திட்டியிருக்கிறார்...

மிக்க நன்றி...
இதன் மூலம் ஒரு நன்மையை அவரறியாமல் செய்துள்ளார்.

செய்யுள்கள் எத்தனைத் தவறாகப் பொருள் கூறப்பட்டு, உண்மையைத் திரிக்கின்றன என்பதற்கான Example அல்ல... Sample இது. சரி அதன் பொருள் என்ன பார்ப்போமா?

அதாவது வேலன் என்பது இங்கு முருகனில்லை. சாமி ஆடுவது என்று நாம் கூறுவோமல்லவா... அதேதான்,
அப்படி வேலெடுத்து ஆடுவோரை வேலன் என அழைப்போம்.

கண்ணப்பநாயனார் கறி வைத்தார், வாயில் நீர் எடுத்து வந்து உமிழ்ந்து துடைத்தார் லிங்கத்தை என்பதால், வாயால் தண்ணீரைத் துப்பி பகவானைத் துடைப்பதுதான் தமிழர் மரபு என்று கூறுவரா இந்த புத்திசாலிகள்??

அதில் சிவபெருமான் ஏற்றுக் கொண்டது,
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(