22.08.1924-இல் சட்டசபையில் ஐயா இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது.
(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,...
(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள்,...
கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம்மட்டிலும், ஆதி திராவிடர் வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது...
ஐயா இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939-இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல்(சிவில்) உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.
20.01.1922 இல் எம்.சி. இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-இல் பறையர், பள்ளர் மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது...
பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என ஐயா இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது...
பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் ஆதிதிராவிடர் வசிக்கும் தெருவிற்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – ஆதிதிராவிடர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்...
இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்.சி. குருசாமியும் முன் வைத்தார். இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் #எம்ஜிஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது...
06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய ஐயா இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்...
ஐயா இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது. ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்தினார்...
ப.சுப்பராயன், 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் ஆதிதிராவிடர்களை கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து ஐயா இரட்டைமலை சீனிவாசன் பேசினார். @rajakumaari@shafeeqkwt@esesaar
இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள், ஆதிதிராவிடர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19 வாக்குகள் நடுநிலையாகவும் இருந்தது. எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்களின் சமய நம்பிக்கைகளை பாதிப்பதாகக் கூறி, @riyaz8101@arafath687@UrimaiPesu
இந்தியாவின் தலைமை ஆளுனர் (கவர்னர் ஜெனரல்) ஒப்புதல் அளிக்காததால் இத்தீர்மானத்துக்கு சட்ட ஏற்பு கிட்டவில்லை.
ஹைதராபாத் ரத்தம் மற்றும் வன்முறையால் சரணடைய செய்யப்பட்ட நாள் இன்று!...
பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுமார் 500 ராஜ்யங்களில் ஹைதராபாதும் ஒன்றாக இருந்தது...
விடுதலைக்கு பின்னர், பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதற்கு இணங்கின.
ஆனால் ஹைதராபாத் நிஜாமோ, தனி ராஜ்யமாக இருப்பதை வலியுறுத்தினார். இது புதுடில்லியிலுள்ள பெரும்பாலான தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது...
மேலும் பெரும்பாலும் இந்து மக்கள் வசிக்கும் இந்தியாவின் மத்தியப் பகுதியில், சுதந்திரமான முஸ்லிம் நாடு வேரூன்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சில தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு கவலையும், அவாவும் இருந்தது...
ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ,...
இந்த நாட்டில் அந்தப் பணிசெய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
இதைத்தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததால், பகுத்தறிவையே அடிப்படையாகக்கொண்டு கொள்கைகளையும்,...
திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டிற்கு தகுதி உடையவன் எனக்கருதுகின்றேன். சமுதாயத்தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்...
ஒலிம்பிக்கில் வென்ற #தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசிய நாக்-அவுட் நாயகன்!...
1960 ரோம் ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்காகக் களமிறங்கினார் #முஹம்மத்_அலி தொடக்க சுற்றிலேயே அனைவரும் அஞ்சும் வகையில் பெல்ஜியம் நாட்டு வீரரை குத்தி வீழ்த்தினார்...
அடுத்த சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனைத் தோற்கடித்தார். கடைசியாக வலிமையான போலந்து நாட்டு வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
அப்போதே அவர் அதைப் பெரிய பெருமையாகக் கருதிக் கொண்டதில்லை எனக் கூறப்படுகிறது...
போட்டிகள் முடிந்து பிறகு அமெரிக்காவில் தனது சொந்த ஊரான லூயிஸ்விலிக்குத் திரும்பிவிட்டார். அப்போது ஒரு உணவகத்துக்குச் சென்ற அவர், அங்கு வெள்ளையர்களுககு மட்டுமே உணவு வழங்கப்படும் என்று கூறியதால் கோபமடைந்து சண்டையிட்டுள்ளார்...
இடியப்ப நாயக்கர் பரம்பரை”. ”எல்லப்பச்செட்டி பரம்பரை”.
"கறியார பாபுபாய் பரம்பரை",
இவை வடசென்னை இளைஞர்களுக்கு பாக்ஸிங் கற்றுக் கொடுத்து வளர்த்தெடுத்த மையங்கள் ஆகும்.
சார்பட்டா பரம்பரை காலப்போக்கில் சல்பேட்டா பரம்பரை என பெயர் பெற்றது...
அந்த காலகட்டத்தில் மெட்ராஸ் பாக்சர்களில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட்டெர்ரி. அவரது ஸ்டைல், கால் அசைவு நுணுக்கமான சண்டைக்கு பெயர் பெற்றவர் டெர்ரி. ஆங்கிலோ இந்தியன் வீரரான டெர்ரியை முதன்முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர்...
கித்தேரி முத்துவின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி ஆல்பர்ட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ”திராவட வீரன்” என்ற பட்டத்தை தந்தை #பெரியார் அவருக்கு சூட்டினார்....
ஊர் எல்லையிலும் தமிழ் நிலமெங்கும் நிற்கும் குதிரைச் சிலைகளின் மேல் சுடலை மாடன், அய்யனார், கருப்பண்ணசாமி ஆகியோர் அமர்ந்திருப்பதுபோல ஒரு முஸ்லிமான ‘ராவுத்த குமாரசாமி’ அமர்ந்திருப்பதைக் கொங்கு பகுதியில், சிவகிரியை அடுத்துள்ள காகம் கிராமத்தில் பார்க்கலாம்.
காகம் கிராமத்தில், கண்ணன் கூட்டத்தினரால் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிபடப்படும் ‘ராவுத்த குமாரசாமி’ சற்றே வேறுபடுகிறார். சிறு மினாராக்கள், விமானம் என்று கோயிலின் அமைப்பே, மதங்களைக் கடந்து இங்கு மனிதநேயம் வெழிபடப்படுவதை பார்க்கலாம். கோயிலின் நுழைவாயிலி லிருந்து...
கருவறை வரை, வாளை உயர்த்திப் பிடித்து அமர்ந்தவாறும், வாயில் சுருட்டுடன் கைலி உடுத்தி ஒருக்களித்துப் படுத்தவாறும், குதிரையின் மேல் அமர்ந்தவண்ணம் என வெவ்வேறு நிலைகளில் ராவுத்தர் சிலைகள் உள்ளனவாம்.கருவறையில் குமாரசாமியான முருகனுக்குப் பின்னால்,பீடத்தில் வாளை உயர்த்திப் பிடித்தவண்ணம்,
தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்த போது காங்கிரசை சேர்ந்த பிரதமர்கள் சட்டை செய்யவில்லை.
ஐ.நா கூட்டத்திற்கு வந்த பிடல் காஸ்ட்ரோவை, யாரும் சந்திக்க கூடாதென்று மற்ற நாட்டு தலைவர்களை அமெரிக்கா மிரட்டிய போது
அதை பொருட்டாக மதிக்காது அப்போதைய பிரதமர் நேரு பிடலை சந்தித்தார். முதன் முதலாக #என்னைக்#கௌரவித்த உலக #தலைவர்#நேரு என #பிடல் அச்சமயத்தில் நன்றி தெரிவித்தார்.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஒரு சிறு புள்ளி யைக் கூட மாற்றினால்
இந்திய அவ்வொப் பந்தத்தில் கையெழுத்திடாது என்று உங்கள் அதிபரிடம் சொல்லுங்கள் என அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சரை எச்சரி த்து அனுப்பினார் மன்மோகன்.