[Animation - Movie ] Up - 2009

என்ன ஒரு அழகான படம் !!!

அருமையான உணர்வுப்பூர்வமான திரைப்படம்.

அனிமேஷன் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

இறந்த மனைவியின் நிறைவேறாத ஆசையை பூர்த்தி செய்ய பாடுபடும் முதியவரின் கதை.

நல்ல ஒரு Adventure, Comedy movie.

#tamilhollywoodreviews #Tamil ImageImage
அனிமேஷன் மூவி எல்லாம் சின்ன பசங்களுக்குனு பார்க்காமல் விட்டுறாதீங்க...

76 வயது முதியவர் கார்ல் தனியாக வசித்து வருகிறார். மனைவியின் ஆசை பேரடைஸ் ஃபால்ஸ் இடத்தில் மலை உச்சியில் வீடு கட்டி வாழ்வது. ஆனால் பல காரணங்களினால் முடியாமல் போகிறது. ஆசை நிறைவேறாமலே இறந்து போகிறார்.
பல நெருக்கடி காரணமாக வீட்டை காலி செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார். மனைவியுடன் பல வருடங்கள் வாழ்ந்த வீட்டை பிரிய மனமில்லை.

ஒரு நன்னாளில் ஆயிரக்கணக்கான ‌பலூன்களை வீட்டின் மீது கட்டி வீட்டோடு பெயர்த்து கொண்டு பாரடைஸ் ஃபால்ஸ் நோக்கி கிளம்புகிறார். Image
எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் பறக்கும் வீட்டில் மாட்டிக் கொள்கிறான்.

பாரடைஸ் ஃபால்ஸ்ல் வில்லன் இவர்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறான்.

போகும் வழி மற்றும் அந்த தீவில் இருவரும் செய்யும் சாகசங்கள் தான் கதை.

நானும் என் 8 வயது மகனும் இணைந்து பார்த்தோம்.
அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனக்கும் ரொம்பவே பிடித்த படம்.
நான் ஏற்கனவே பல முறை பார்த்து இருக்கிறேன்.

கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

காமெடி, சென்டிமென்ட், அட்வென்ட்சர் என கலக்கல்.

அனிமேஷன் வேற லெவலில் இருக்கும்.

Blog link tamilhollywoodreviews.com/2020/06/up.html

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Tamil Hollywood Recommendations

Tamil Hollywood Recommendations Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @tamilhollywood2

23 Nov
Midnight Special - 2016

சிம்பிளான ஒரு Sci Fi திரில்லர் இது.

ஸ்பெஷல் பவர் கொண்ட சிறுவனை கவர்மெண்ட் மற்றும் சில எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற போராடும் பெற்றோர்களின் கதை.

#imdbrating 6.6
#Tamil டப் ❌

#tamilhollywoodrecommendations ImageImage
சிறுவன் Alton ஒரு Cult மாதிரியான அமைப்பில் தந்தையால் வள்ர்க்கப்படுகிறான். அவன் Prayer ன் போது சில நம்பர்களை தருகிறான் அது அமெரிக்கா மிலிட்டரியில் படு ரகசியமாக பாதுக்காக்கப் படும் தகவல்.

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் போக வேண்டும்
என்கிறான் அந்த சிறுவன்.

தந்தை தனது நண்பன் ஒருவனை துணைக்கு கூட்டிக்கொண்டு மகனுடன் அந்த இடத்தை நோக்கி கிளம்புகிறார்.

இன்னொரு புறம் அமெரிக்க ராணுவம் மற்றும் அந்த Cult உறுப்பினர்கள் அந்த சிறுவனை கைப்பற்ற துடிக்கிறார்கள்.

யார் இந்த சிறுவன் ?
Read 18 tweets
21 Nov
Mutual Fund & Investment Basic- Part 2

Part - 1 இங்க படிங்க: tamilhollywoodreviews.com/2021/11/mutual…
இந்த முறை Direct #MutualFund வாங்குவது எப்படி என்பதை பற்றிய போஸ்ட் போடலாம் என நினைத்தேன்
ஆனால் மார்க்கெட் மற்றும் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளாமல்

#MutualFundsSahiHai
நேரடியாக இன்வெஸ்ட்மென்ட் செய்ய ஆரம்பிப்பது நல்லது கிடையாது. அதுக்கு முன்னாடி கொஞ்சம் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

எப்பவுமே உங்களுடைய #stocks and #MutualFund unit களை #DEMAT அக்கௌன்ட்ல வைப்பது நல்லது. ஆனால் #stocks வாங்கனும்னா கண்டிப்பாக #DEMAT account இருக்க வேண்டும்.
#MutualFund ஆரம்பிக்க #DEMAT அக்கௌன்ட் அவசியம் இல்லை ‌.

ஆனால் நான் #Zerodha வில் அக்கௌன்ட் வைத்து உள்ளேன் மற்றும் #MutualFund களை அதனுடைய #coin App வழியாக வாங்குவதால் நேரடியாக #DEMAT account ல் கிரடிட் ஆகிவிடும். மற்ற ஆஃப்கள் எப்படி என்று தெரியவில்லை.
Read 22 tweets
21 Nov
Come As You Are - 2019
நல்ல காமெடி ட்ராமா படம்.

மூன்று physically challenged நண்பர்களின் Road Trip பற்றிய படம்.

#imdbrating 7
#Tamil டப் ❌
OTT #Netflix

படத்தோட கான்செப்ட் அடல்ட் கன்டென்ட். So 18+ ஆனால் ஆபாசக் காட்சிகள் இல்லை
#feelgood #comedy
#TamilHollywoodRecommendations ImageImage
Scotty வாழ்க்கை வீல் சேரில் தான். அவனால் தனியாக எதுவுமே செய்ய முடியாது. சாப்பாடு அவனுடைய அம்மா தான் ஊட்டி விட வேண்டும்.
25 வயது ஆகியும் இன்னும் கன்னிப்பையனாக இருக்கிறான்.

Matt - இன்னொரு Physically challenged person.

Mo- கண்பார்வை தெரியாமல் உள்ளவன்.
இவர்கள் மூவரும் ஒரு தெரபி சென்ட்ரில் சந்திக்கிறார்கள்.

Scotty க்கு தன்னைப்போல special persons களுக்காகவே ஒரு Prostitute Center கனடாவில் இருக்கின்றது என தெரிய வருகிறது.

மூன்று பேரும் தங்களுது வீட்டிற்கு தெரியாமல் ப்ளான் பண்ணி ஒரு நாள் கிளம்பி விடுகிறார்கள்.
Read 17 tweets
13 Oct
How to add movie review in #IMDb Critics' section?

உலக சினிமா ரசிகர்களுக்கு #IMDb ஒரு சினிமா விக்கிப்பீடியா படங்கள், சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள் என அனைத்தைப் பற்றியும் விவரங்கள் இதில் கொட்டிக்கிடக்கும்.

தனிப்பட்ட முறையில் ஒரு படத்தை பார்க்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை #IMDb
வைத்து தான் முடிவு செய்வேன்.
இந்த போஸ்ட்ல உங்க ரிவ்யூ லிங்கை எப்படி IMDb Critics' Review Section la add பண்ணுறதுனு பார்க்கலாம்.

நான் IMDb mobile app la எப்படி இத பண்றதுன்னு சொல்றேன்.

உங்களுக்கு தேவை:

1. IMDb App உங்க மொபைல்ல install பண்ணிக்கோங்க. ‌
2. IMDb account sign up பண்ணுங்க.

3. எந்த படத்துக்கு ரிவ்யூ Add பண்ணணும்னு நினைக்கிறீங்களோ அந்த படத்தை Search பண்ணி Open பண்ணுங்க.

நான் Contact படத்தோட ரிவ்யூவை Add பண்ண போறேன்.
Read 24 tweets
13 Oct
[Korean] Okja - 2017
பிரபல கொரியன் திரைப்பட இயக்குனர் Bong Joon Ho வின் மற்றுமொரு படைப்பு இது.

IMDb 7.3

பல அருமையான திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

உதாரணமாக மதர், மெமரிஸ் ஆஃப் தி மர்டர் சமீபத்தில் வெளிவந்த பாரசைட் ஆஸ்கர்களை வாங்கி குவித்தது

#tamilhollywoodrecommendations
#Tamil
இந்தத் திரைப்படம் இவருக்கு ஹாலிவுட் என்டிரி திரைப்படம் ஆகும். நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம்.

ஒரு 13 வயது இளம் பெண்ணிற்கும் அவள் வளர்க்கும் ஓக்ஜா என்ற பெரிய சைஸ் பன்றி போன்ற மிருகத்திற்கும் நடக்கும் பாசப் போராட்டத்தை பற்றிய கதை.
என்னுடைய பார்வையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.🔥🔥🔥🔥
எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

Genetically Mutated பன்றிகளை ஒரு corporate கம்பெனி இறைச்சிக்காக உருவாக்குகிறது.

அதை சோதனை செய்ய கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் கொடுக்கின்றது.
Read 19 tweets
11 Oct
Contact - 1997

இந்த படம் ரொம்ப வருஷமா என் வாட்ச் லிஸ்ட்ல இருந்தது. இது ஒரு Sci Fi படம். 

Forrest Gump பட இயக்குனர் Robert Zemeckis ன் படம், ஹீரோயின் Jodie Foster , ஹீரோ Matthew McConaughey 

IMDb 7.5
தமிழ் டப் இல்லை. 

#tamilhollywoodrecommendations
#Tamil #scifi #aliens ImageImage
வேற கிரகத்தில் உயினங்கள் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் ஹீரோயின் பற்றிய படம். 

எல்லி ஒரு திறமையான விஞ்ஞானி. இவருடைய லட்சியம் மனிதர்களைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் உள்ளனவா அப்படி இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபிப்பது.
இதற்காக சில தனியார் உதவியுடன் பெரிய பெரிய ரேடியோ டெலஸ்கோப் வைச்சு வானத்தில் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறதா என்று ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்குறாங்க. 

இதற்கு இடையில் அங்கு உள்ள மதம் சம்பந்தப்பட்ட படிப்பில் படிக்கும் Palmer உடன் பழக்கம் ஏற்படுகிறது.
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(