இந்தத் திரைப்படம் இவருக்கு ஹாலிவுட் என்டிரி திரைப்படம் ஆகும். நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம்.
ஒரு 13 வயது இளம் பெண்ணிற்கும் அவள் வளர்க்கும் ஓக்ஜா என்ற பெரிய சைஸ் பன்றி போன்ற மிருகத்திற்கும் நடக்கும் பாசப் போராட்டத்தை பற்றிய கதை.
என்னுடைய பார்வையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.🔥🔥🔥🔥
எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
Genetically Mutated பன்றிகளை ஒரு corporate கம்பெனி இறைச்சிக்காக உருவாக்குகிறது.
அதை சோதனை செய்ய கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் கொடுக்கின்றது.
ஒரு விவசாயின் மகள் இதனுடன் பாசமாக பழகுகிறாள். சோதனை காலம் முடிந்த உடன் பன்றியை கறியாக்க திரும்ப அழைக்கிறது கம்பெனி.
ஆனால் சிறுமி அந்த பன்றியை தேடி நகரத்துக்கு கிளம்புகிறார். ஒரு விலங்குகள் ஆர்வலர் குழு இவளுக்கு உதவி செய்கிறது.
அதிகாரம் நிறைந்த கார்ப்பரேட் கம்பெனியை எதிர்த்து
அந்த பன்றியை காப்பாற்றினார்களை என்பதை படத்தில் பாருங்கள்.
கிராபிக்ஸில் ஒக்ஜா மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது காட்டும் உணர்ச்சிகள் கிராபிக்ஸில் மிகத் துல்லியமாக உள்ளது. கிராஃபிக்ஸை எவ்வாறு இதுபோன்று உயிரோட்டமாக உள்ள கதைகளில் உபயோகப்படுத்த வேண்டும் என்பதை கொரியர்களிடம்
தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஓக்ஜா பண்ணை மற்றும் இறைச்சி தொழிற்சாலையில் காட்டப்படும் காட்சிகள் மனதை உலுக்கும் விதத்தில் உள்ளன. இறைச்சி கூடங்களில் மனித உணவுக்காக மிருகங்களுக்கு நேரும் கொடுமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு சில வன்முறை காட்சிகள் மற்றும் F*** வார்த்தைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய மிகச்சிறந்த படம்
How to add movie review in #IMDb Critics' section?
உலக சினிமா ரசிகர்களுக்கு #IMDb ஒரு சினிமா விக்கிப்பீடியா படங்கள், சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள் என அனைத்தைப் பற்றியும் விவரங்கள் இதில் கொட்டிக்கிடக்கும்.
தனிப்பட்ட முறையில் ஒரு படத்தை பார்க்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை #IMDb
வைத்து தான் முடிவு செய்வேன்.
இந்த போஸ்ட்ல உங்க ரிவ்யூ லிங்கை எப்படி IMDb Critics' Review Section la add பண்ணுறதுனு பார்க்கலாம்.
நான் IMDb mobile app la எப்படி இத பண்றதுன்னு சொல்றேன்.
உங்களுக்கு தேவை:
1. IMDb App உங்க மொபைல்ல install பண்ணிக்கோங்க.
2. IMDb account sign up பண்ணுங்க.
3. எந்த படத்துக்கு ரிவ்யூ Add பண்ணணும்னு நினைக்கிறீங்களோ அந்த படத்தை Search பண்ணி Open பண்ணுங்க.
வேற கிரகத்தில் உயினங்கள் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் ஹீரோயின் பற்றிய படம்.
எல்லி ஒரு திறமையான விஞ்ஞானி. இவருடைய லட்சியம் மனிதர்களைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் உள்ளனவா அப்படி இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபிப்பது.
இதற்காக சில தனியார் உதவியுடன் பெரிய பெரிய ரேடியோ டெலஸ்கோப் வைச்சு வானத்தில் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறதா என்று ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்குறாங்க.
இதற்கு இடையில் அங்கு உள்ள மதம் சம்பந்தப்பட்ட படிப்பில் படிக்கும் Palmer உடன் பழக்கம் ஏற்படுகிறது.
துப்பறியும் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவனா இருக்குமோ ? இவனா இருக்குமோ ? என சுத்தி விட்டு கடைசியில் எவனுமே இல்லனு புதுசா ஒருத்தனை காட்டுவாங்க. விறு விறுப்புக்கு பஞ்சமே இருக்காது. #tamilhollywoodrecommendations #Tamil #investigation
இல்லைனா நம்ம இவனா தான் இருக்கும்னு யோசிச்சு வச்சுருப்போம் அவன் தான் கொலைகாரன் என்பது போலவே காட்டி கடைசியில் ட்விஸ்ட் வைப்பார்கள்.
இன்னொரு ரகம் துப்பறியும் போலீஸ் பார்வையில் நகரும் படம். யாருக்குமே கொலைகாரனை தெரியாது.. போலீஸ் போலவே க்ளூவ வச்சு நாமளும் யோசிச்சுகிட்டு இருப்போம்.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் குழந்தை கடத்தல் விசாரணை சம்பந்தப்பட்ட இரண்டு மூன்று படங்களையும் இணைத்து உள்ளேன்.
இன்னும் நிறைய நல்ல படங்கள் உள்ளன. இது நான் பார்த்த நல்ல படங்களின் ஒரு பகுதி மட்டுமே. So நீங்க இந்த படத்தை விட்டுட்டீங்கனு கம்பளெய்ன்ட் பண்ணாதீங்க. #crime#Thriller
ரிச்சர்ட் ஜுவல் சட்டத்தை மதித்து நடக்கும் ஒரு வெகுளியான முன்னாள் காவல் அதிகாரி. அப்பா இல்லாத நிலையில் தனது அம்மா பாபியுடன் வசித்து வருகிறார். செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் அவர் 1986 வது வருடம் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில்
வெடிகுண்டு இருப்பதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறார்.
பத்திரிக்கைகள் மற்றும் காவல்துறையின் பொறுப்பின்மை காரணமாக அவர் தான் வெடிகுண்டு வைத்தார் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பது பற்றிச் சொல்கின்ற படம்.
நடிகைகள் Viola Davis (How to get away with murder, Prisoners) . இவர் சில வருடங்களுக்கு முன்பு சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் ஆஸ்கார் அவார்டு வாங்கியவர் ஆவார்.
Michelle Rodriguez - இவர் பெரும்பாலும் அதிரடி ஆக்ஷன் (Avatar, Fast and Furious) கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் .
Elizabeth Debicki - இவர் Tenet , Night Manger போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் 4 பேர் இணைந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் இதற்கு லீடராக இருப்பவர் Harry (Liam Neeson) . கொள்ளையில் ஏற்படும் குழப்பத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்