#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் இரண்டு மரக்கட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு மிதந்தன. ஒரு கட்டை நதியில் குறுக்காக நின்று வெள்ள ஓட்டத்தை தடுக்கப் பெருமுயற்சி செய்தது. வெள்ளமே உன்னை மேலே போக விடமாட்டேன் என்று கூறிக் கொண்டே குறுக்கே படுத்துக்
கொண்டு கறுவியது. நதியின் வேகத்தினால் அந்த மரக்கட்டை தாறுமாறாக அலைக்கழிக்கப் பட்டது. நதியின் போக்கில் மயிரிழை மாறுதல் செய்ய முடியாவிட்டாலும் நதியை எப்படியாவது நிறுத்தியே தீருவேன். உயிரே போனாலும் இந்த நதியை அடக்கியே தீருவேன் என்று அலறிக் கொண்டே திணறியது. வெள்ளப் போக்கில் மூழ்கி,
முட்டி, திணறி அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது. நதிக்கு அத்துரும்பின்/ மரக்கட்டையின் குரல் கேட்கவும் இல்லை. அதன் இருப்பை நதி உணரவும் இல்லை. மற்றொரு துரும்போ தன்னை அந்தப் பிரவாகத்தில் விட்டுவிட்டது. அது நதியின் குறுக்காக அல்ல, நதி போகும் திசையில் மிதக்க வசதியாக நேராக
கிடந்தது. அதன் மனதில் தான் நதிக்கு இடையூறு செய்யாமல் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டது. இந்த நதியை நான் கடல்வரை அழைத்துச் செல்வேன். என் உதவி இருந்தால் அவசியம் கடலைப் போய்ச் சேர்ந்து விடும் என்று சந்தோஷப்பட்டது. இந்தக் மரக்கட்டையைப் பற்றியும் நதிக்குத் தெரியாது, அதன் உதவியைப்
பற்றியும் தெரியாது. நதிக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் நதியுடன் ஓடும் மரக்கட்டை மிகவும் ஆனந்தமாக ஆடியும் பாடியும் வேடிக்கை செய்து கொண்டு செல்லுகிறது. நதியுடன் போராடும் மரக்கட்டையோ வலியும், வேதனையும், துக்கமும் அலைக்கழிக்க உடலெல்லாம் ரணத்துடன் செல்கிறது. ஒன்றுக்குப்
பற்றியும் தெரியாது. நதிக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் நதியுடன் ஓடும் மரக்கட்டை மிகவும் ஆனந்தமாக ஆடியும் பாடியும் வேடிக்கை செய்து கொண்டு செல்லுகிறது. நதியுடன் போராடும் மரக்கட்டையோ வலியும், வேதனையும், துக்கமும் அலைக்கழிக்க உடலெல்லாம் ரணத்துடன் செல்கிறது. ஒன்றுக்குப்
படுதோல்வி, மற்றொன்றுக்கு வெற்றி. நதியின் ஓட்டத்திற்கு உதவுவதாக நினைத்த மரக்கட்டை வெற்றியடையத்தான் வேண்டும். அதன் தோல்விக்கு வழியே கிடையாது. எந்தத் மரக்கட்டை நதியை எதிர்த்ததோ அது தோற்றே ஆக வேண்டும். அதன் வெற்றிக்கு வழியே இல்லை. இறைவனின் இச்சையை அறிவது சாத்தியமில்லை. ஆனால்
பிரம்மத்துடன் ஒன்றாகி விட முடியும். அப்போது நமது இச்சைகள் அழிந்து விடுகின்றன. பிரம்மத்தின் இச்சையே மிகுதி நிற்கிறது. வாழ்வில் நாம் யாருடைய/ நம் ஓட்டத்தையும் மாற்ற முடியாது. நதியைப் போல் அதன் ஓட்டத்தில் நாம் எல்லோரும் பரந்தாமன் நாமத்தை சொல்லி கொண்டே, மிகவும் ஆனந்தமாக ஆடியும்
பாடியும், வேடிக்கை செய்து கொண்டு நாம் செல்வோம்!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

23 Sep
மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர் Image
காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான் மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாக
கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே. அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின்
Read 15 tweets
23 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரகலாதன் தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். இவன் இரணியன் என்னும் கொடிய அரக்கனின் புதல்வன். விஷ்ணு உண்மையான் கடவுள் அல்ல அவர் தங்கள் குல விரோதி என்று இரணியன் நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனதை மாற்ற ImageImage
முடியவில்லை. எத்துணை துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். விஷ்ணு பக்தர்கள் கேட்டதை உடனே கொடுப்பவன். நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு. அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்தான். நீயே கதி என
சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பவன். ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று சொன்னதே
இல்லை. அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன். அதனால் தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நாரஸிம்ஹவபு ஶ்ரீமான் கேசவ புருஷோத்தம: என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.
Read 6 tweets
22 Sep
Heard from an Archakar that HR&CE inspector a convert came to inspect their small temple which came under it. Sealed the temple removed the idols & put them in a godown since he declared the temple was not secure. Look what all games these converts play to prevent Hindu worship.
Many have asked me to name the temple. The villagers and well wishers are dealing with it. They did dharna and have been able to restore the idols from the godown and now they are all in one small room (madapalli of the temple) & Pujas are being performed. What they say is at the
end of the day they are at the mercy of the HRCE. So antagonizing them even in a small way brings them a lot of head aches. The sole Archakar there has requested for sanction, for repairs to make the temple safer. Even to get the sanction and carry out the repairs he needs their
Read 7 tweets
21 Sep
#மஹாளயபக்ஷம் (மகாளயபட்சம்) 21.09.2021 முதல் 06.10.2021 வரை. மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள். பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் (சில சமயம் 16) மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து நம்மோடு தங்கிச் செல்லும் காலமே ImageImage
மகாளயபட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பௌர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை ஆடி அமாவாசை இவைகளை விட உயர்ந்தது மகாளய அமாவாசை. மறந்து போனவனுக்கு மகாளயபட்சம் என்று பெரியவர்கள்
சொல்வார்கள். அதாவது ஒரு வருடமாக திதி கொடுக்க மறந்தவர்களுக்கான வாய்ப்பு இந்த 15 நாட்கள். இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு நாம் கர்ணனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். அவன் சொர்கத்தில் இருந்த கொஞ்ச காலத்திலேயே தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறான். சொர்க்க
Read 23 tweets
21 Sep
#ஶ்ரீகிருஷ்ணகதைகள் விஷ்ணு பக்தன் பிரகாசம் என்பவன் தனது பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். விஷ்ணு அவனுடைய பூலோக வாழ்க்கையில் செய்த நன்மைகளைப் பாராட்டி, நீ செய்த நன்மைகளால் உனக்கு வைகுண்ட வாழ்வு கிடைத்திருக்கிறது. இங்கு நீ மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றார்.
அவன் பரமாத்மாவிடம், Image
எனக்குப் பூலோகத்தில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தாலும், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் என் மனம் குறையுடன் உள்ளது. அந்தக் குறையை நீங்கள் போக்க வேண்டும் என்றான்.
அவனுடைய மனக்குறையை விஷ்ணு அறிந்திருந்த போதிலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அப்படியா, வைகுண்ட வாழ்வைப்
பெற்ற உனக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாதே. உன் மனக்குறையைச் சொல். அந்தக் குறையை உடனே தீர்த்து வைக்கிறேன் என்றார். பரந்தாமனே! நான் பூலோகத்தில் இருந்த பொழுது மக்களிடம் நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற நிலையே அதிகமாக இருந்தது. இந்தக் கேள்வியால் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன
Read 9 tweets
18 Sep
#புரட்டாசி #சனிக்கிழமை
ஓம் நமோ ஸ்ரீவேங்கடேசாய🙏🏻
மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள். இதற்கு ஒரு காரணம் உள்ளது. சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்கிறோம். இவர்
சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வர். புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சனீஸ்வரன் பிறந்தார். நவக்கிரகங்களின் சனிபகவான் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவனது ஆயுட்காலம் அமைகிறது. சனியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் பெருமாளே சனிக்கு அதிபதியாக இருக்கிறார். ஒருமுறை சனிபகவான்
கலியுகத்துக்கு முதன் முதலாக வருவதற்கு ஆயுத்தமானார். அப்போது எதிரே நாரதரைச் சந்தித்தார். தான் கலியுகத்துக்கு செல்வதாக கூற, அப்படியானால் சரி ஆனால் நீங்கள் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று யாரை வேண்டுமானாலும் துன்புறுத்தலாம். ஆனால் தப்பி தவறி கூட திருமலை பக்கம் சென்று
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(