திமுகவும் முஸ்லிம்களும்!

காயிதே மில்லத்: தமிழ் முஸ்லிம் தலைமைக்கான ஒரு முன்னுதாரணம்!

1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் இருந்தார். அப்போது, சென்னை அண்ணா சாலையில் கன்னிமரா ஹோட்டல்
எதிரே இருந்த முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான முகமதியன் கல்லூரியைக் கையகப்படுத்திய அரசு, அதை அரசுப் பெண்கள் கல்லூரியாக மாற்ற முடிவுசெய்தது. இதை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார்.
முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமாக இருக்கும் ஒரே ஒரு கல்லூரியையும் அரசு கையகப்படுத்துவதால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதினார்.
முஸ்லிம் கல்லூரிகள்

அப்போதைய உள்துறை அமைச்சர் டாக்டர் சுப்பராயனைச் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினார், காயிதே மில்லத். அப்போது அமைச்சர் சுப்பராயன், ‘ஒரு கல்லூரிக்காகப் போராடுவதில் காட்டும் உழைப்பை, முஸ்லிம் சமூகத்துக்காக உங்கள் சமூகத்தில்
உள்ள செல்வந்தர்களிடம் பேசி தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கல்லூரிகளைத் தொடங்குவதில் நீங்கள் ஆர்வம் காட்டினால் அதிக பலன் கிடைக்குமே’ என்று யோசனை தெரிவித்தார்.
இந்த யோசனையில் இருக்கும் நன்மையைப் புரிந்துகொண்ட காயிதே மில்லத், உடனடியாகத் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரும் செல்வந்தர்களைச் சந்தித்து, ‘முஸ்லிம் சமூகத்துக்கென்று கல்லூரிகள் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
அவரது வேண்டுகோளைப் பல செல்வந்தர்கள் ஏற்றுக்கொண்டனர். தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியாரைச் சந்தித்து, தனது இந்தத் திட்டம் பற்றி விளக்கி அனுமதி பெற்றார்.
இதைத் தொடர்ந்தே, சென்னையில் புதுக் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்திலிருந்து சென்று சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் தொழில்செய்து வந்த
முஸ்லிம் தனவந்தர்களிடம், கல்லூரிகளின் கட்டிட வசதிக்காக நிதி கோரினார். அவரது வேண்டுகோளை உத்தரவாக மதித்து அவர்கள் தாராளமாக நிதி வழங்கினர். ஒட்டுமொத்த நிதியையும் வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் கல்லூரிகளின் கட்டிடங்களுக்காக செலவிட்டார்.
இன்றும் புதுக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரிகளில் பர்மா- மலாய் வாழ் முஸ்லிம் பெயர்கள் கட்டிடங்களுக்குச் சூட்டப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி.
தலைவர்களால் மதிக்கப்பட்டவர்

தந்தை பெரியார் முதல் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், வரை எல்லாத் தலைவர்களும் காயிதே மில்லத் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள். 1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்குத் துணை நின்றார். தேர்தலின்போது அவரது இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினார் அண்ணா.
எந்த முகமதியன் கல்லூரியை அரசு மகளிர் கல்லூரியாக மாற்ற காயிதே மில்லத் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே கல்லூரிக்கு காயிதே மில்லத்தின் பெயரையே சூட்டினார், அப்போது முதல்வராக இருந்த கலைஞர்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1983-ல் காயிதே மில்லத்தின் வாழ்க்கை பற்றி ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்தார்.
காயிதே மில்லத் மறைந்தபோது, அவரால் உருவாக்கப்பட்ட புதுக் கல்லூரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்திய எம்ஜிஆர் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்தே வந்தார்.
முன்னதாக காயிதே மில்லத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுக் கல்லூரிக்குப் பெரியார் வந்தார். அப்போது அங்கே கடுமையான கூட்டம். பெரியாரின் நெருங்கிய நண்பரான ஈரோடு கே.ஏ.எஸ். அலாவுதீன் சாஹிப், கூட்டத்தினரை விலக்கிவிட்டு பெரியாரை காயிதே மில்லத் உடல் அருகே அழைத்துச் சென்றார்.
அப்போது தேம்பிய பெரியார், “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர். முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்” என்று அனைவரின் காதுகளிலும் விழும்படி கூறினார். இதை அலாவுதீன் சாஹிபே பதிவுசெய்திருக்கிறார். பெரியார் சாதாரணமாக யாரையும் புகழ மாட்டார்.
அப்படிப்பட்ட பெரியாரிடம் இருந்து காயிதே மில்லத் பற்றி வெளியான இந்த வார்த்தைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன.

நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத்தின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்துக்கு வெளியே காயிதே மில்லத்தின் மேன்மையைப் புரிந்துகொண்டு அரசியல் தலைவர்கள் கடமை ஆற்றினார்கள்.
மத நல்லிணக்கம்

மத நல்லிணக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர். முக்கியமாக மதப் பதற்றம் விளைவிக்கக் கூடிய தருணங்கள் உருவாகும்போது, யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசி பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே சுமுகத் தீர்வு கண்டுவிடுவார்.
அப்படி பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தது பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளவும் மாட்டார். சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்தி, பதற்றத்தை நீட்டிக்கும் வகையில் அவர் செயல்பட்டதே இல்லை.

இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்த்தவர். 'இஸ்லாம் என் மதம்; தமிழ் என் தாய் மொழி' என்று பிரகடனப்படுத்தியவர்.
மாநில மொழிகளின் உரிமைக்காகவும், மாநிலங்களின் உரிமைக்காகவும் போராடியவர் காயிதே மில்லத். மத நல்லிணக்கத்துக்கான இன்முகம், மாநில உரிமைகளுக்கான முழக்கம், தேர்ந்த தேச பக்தி என்று காயிதே மில்லத்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவானது.
கல்லூரிகளைத் தோற்றுவித்த காயிதே மில்லத்திடமிருந்து முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. முஸ்லிம் சமுதாயத்தின் ஏற்றத்துக்கு வழிவகுக்கும் பாடங்கள் அவை!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

23 Sep
பெரியாரும் தேவர்களும்!

1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகச் துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை Image
இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடை என்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார்.
1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும் தான் என்பது Image
Read 28 tweets
23 Sep
தமிழ்நாடு பிரிவினையில் தேவரும் பெரியாரும்!-தட்சன பிரதேசம்

1956 இல் நேரு தட்சிணப் பிரதேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை ஒன்றிணைந்த மண்டலமாக அது அமைய இருந்தது. தமிழ் தேசியர்கள் பார்வையில் அது திராவிட நாடு. Image
அதை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்றார். ‘தென்மாநிலக் கூட்டமைப்பாக’ நான்கு மாநிலங்களும் இணைந்த பகுதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் தேவர். பி.டி. இராஜன் தலைமையில் அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம், நாம் தமிழர் ஆதித்தனார்,
கம்யூனிஸ்ட்டுகள் உட்பட தமிழ்நாட்டின் 20அரசியல் கட்சிகளும் எதிர்த்த தட்சிணப்பிரதேசத் திட்டத்தை முத்துராமலிங்கத் தேவர் ஆதரித்தார். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவதை எதிர்த்தார். ஆனால் பெரியார் மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்றார்.
Read 21 tweets
23 Sep
வேடிக்கை பார்த்த தேவர் !

முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கார் என்னும் பார்ப்பான். மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர். கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது Image
அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டு பிளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
Read 42 tweets
23 Sep
நோயை சரிசெய்ய வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்த போது, இறைவன் கொடுத்த உடம்பில் இறைவனே அளித்த நோயை மனிதர் சரிசெய்வதா என்று கூறி அதற்காக ஆபரேஷனே செய்துகொள்ளாமல் செத்தவர்தான் தேவர் திருமகன். Image
90களில் ஜெயா சசி கும்பல் ஆட்டம் போட்ட காலம் முதல் தேவர் சாதி வெறி அதிகார அமைப்புகளிலும், அரசியலிலும் வெகுவாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் இந்த தேவர் சாதி வெறியின் மூலம் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தேவர்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது?
தேவர் சாதியினர் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் தேவர் சாதி மக்களுக்கு இலவச கல்வி வழங்ப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் ஐம்பது சதம் தள்ளுபடி தரப்படுகிறதா? தேவர் சாதியினர் கந்து வட்டித் தேவர்களிடம் கடன் வாங்கினால் வட்டியில்லாமல் அனுமதிக்கப்படுகிறதா?
Read 44 tweets
23 Sep
ராயல்டி விசயத்தில், ராகங்கள் மட்டுமல்ல; ராஜாவும் புதிது தான்!

”ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை” Image
எஸ்.பி.பி Vs இளையராஜா என்பது போன்ற இசை சார்ந்த இணையப்போர் ஒருசில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரங்களையெல்லாம் கவனிக்கையில், 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது. Image
’இதய கோவில்’ என்ற படத்தில், ”இதயம் ஒரு கோவில்; அதில் உதயம் ஒரு பாடல்” என்ற ஒரு பாடலை ’இசை ஞானி’ இளையராஜாவே எழுதி, இசையமைத்து அவரே பாடியும் இருப்பார். அந்த பாடலிலுள்ள சில வரிகள், தற்போதைய சூழலில் உண்மைக்கு அருகில் இருப்பதாக தோன்றுகிறது.
Read 32 tweets
22 Sep
இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்-வே. மதிமாறன்

இளையராஜாவின் இறைநம்பிக்கை, இந்துமத பற்று ஒரு பகுத்தறிவாளன் என்கிற முறையில் உங்களுக்கு தவறாகவோ, ஆபத்தானதாகவோ தெரியவில்லையா? Image
பெரியாருக்கு எதிராகவும், மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும், ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும்
‘தேவர் பெரியாரிஸ்ட்’டின் ‘பார்ப்பனரல்லாத’ உணர்வு,

பாமக போன்ற ஜாதிக்கட்சி என்ன தவறு செய்தாலும், அதை விமர்சிக்க மறுக்கிற, ஏதோ ஒரு வகையில் பாமக மீது பாசமாக இருக்கிற வன்னிய பெரியாரிஸ்ட்டுகளின் ‘வன்னியப் பகுத்தறிவு’,
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(