#ஶ்ரீஆஞ்சநேயர்கோயில்#நாமக்கல்#ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர்திருக்கோவில்
கொடிய அரக்கன் இரணியன் தன் மகனை யானையின் காலடியில் கிடத்தியும், மலை மீதிலிருந்து உருட்டியும் கொல்ல முயன்றும், ஒவ்வொரு முறையும் பிரகலாதனை ஶ்ரீஹரி காப்பாற்றினார். ஶ்ரீஹரியை நம்பியவர்கள் என்றும் கைவிடப்பட மாட்டார்கள்
என்பதை வெளிப்படுத்தும் திருவவதாரம் ஶ்ரீநரஸிம்மர் என்னும் உக்ர ரூப அவதாரம். மற்ற அவதாரங்கள் யோசித்து, திட்டமிட்டு எடுக்கப்பட்ட அவதாரங்கள். ஆனால் நரஸிம்மாவதாரம் ஒரு நொடியில் எடுக்கப்பட்டது. ஶ்ரீமஹாலக்ஷ்மிக்கு கூட தெரிவிக்கும் முன் எடுக்கப்பட்ட அவதாரம். ஶ்ரீநரஸிம்மரின் உக்ரத்தை
கண்டோர் நடுங்கினர். அவரை சாந்தபடுத்த வேண்டும் இல்லையேல் உலகுக்கு என்ன நஷ்டம் வரும் என்று சொல்ல முடியாது என்பதால் எல்லோரும் குழந்தை பிரகலாதனை வேண்டினர். அவனும் ஶ்ரீஹரியிடம் உலக நலனுக்காக சாந்தமடைய பிராத்தனை செய்தான். அதே சமயம் ஶ்ரீஹரியின் இந்த ரூபத்தை பார்த்த தேவர்கள் ஶ்ரீஹரியை
சாந்தபடுத்த ஶ்ரீமஹாலக்ஷ்மியிடம் சென்று வேண்டினர்கள். ஶ்ரீமஹாலக்ஷ்மி ஹரியின் உக்ரத்தை தணிக்க பூமிக்கு வந்தார். ஆனால் அவர் வரும் முன்பே குழந்தை பிரகலாதனின் பிரார்த்தனைக்கு இசைந்து தனது உக்ரத்தை தணித்துக்கொண்டு விட்டார். ஶ்ரீஹரியின் உக்ர ரூபத்தை காண வந்த ஶ்ரீமஹாலக்ஷ்மிக்கு ஹரியின்
இக்கோலம் ஏமாற்றத்தை கொடுத்தது. அக்காட்சியை காண வேண்டும் என்பதால் அருகிலிருந்த தாமரை தடாகத்தில் இறங்கி தவமிருக்க ஆரம்பித்தாள். அப்படி தாயார் தவமிருந்த ’கமலாலயம்’ என்ற தாமரைகுளம் நாமக்கல்லில் உள்ளது. பிரகலாதன் எப்படி ஶ்ரீஹரியிடம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தானோ அதே போல்
ஶ்ரீஹரியின் அவதாரமான ஶ்ரீராமரிடம் அசைக்க முடியாத பக்தி வைத்திருந்தவர் ஶ்ரீஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் நீராடும்போது அவரிடம் ஒரு சாளக்கிராமம் கிடைத்தது. அதை அவர் எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டார். (விஷ்ணுவின் ஏதாவது ஒரு ரூபமாக சாளக்கிராமம் இருக்கும்.
இது நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கும் மிக அபூர்வமான கல். சங்கும் சக்ரமும் இயற்கையாகவே இருக்கும். அதனை பூஜிப்பார்கள். இதனை பூமியில் வைக்க மாட்டார்கள்.) சந்தியாகாலம் வந்த உடன் ஆஞ்சநேயர் தனது நித்யகர்மவான சந்தியாவந்தனத்திற்கு ஆறு, குளம் தேடினார். நாமக்கல் கமலாலயம் கண்ணில்
பட்டதும், இறங்கி அங்கு இருந்த தேவியிடம் சாளக்கிராமத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டினார். ஸந்தியாவந்தனம் செய்யத் தொடங்கினார். முடிந்த உடன் தேவியிடம் சாளக்கிராமம் பெறுவதற்கு சென்றார். தியானத்திலிருந்த தேவி தன்னிடம் உள்ளது சாளக்கிராமம் என்பதை உணரும் முன் அதனை பூமியில் வைத்து
ஆஞ்சநேயரை எடுத்துக்கொள்ள செய்கையால் காண்பித்தார். பூமியை தொட்ட உடன் சாளக்கிராமம் பெரிதாக வளர ஆரம்பித்தது. யாருக்கும் ஒன்றும் புரியாத நிலையில் ஆஞ்சநேயர் தனது வாலால் சாலிகிராமத்தை கட்டி எடுக்கப் பார்த்தார். அப்பொழுது வெடித்து சிதறிய சாளக்கிராமத்திலிருந்து உக்ர ரூபத்தில் நரசிம்மர்
வெளிப்பட்டார். அதை கண்டு ஶ்ரீமஹாலக்ஷ்மி தேவி அச்சத்துடன் கூடிய ஆனந்தத்தில் ஆழ்ந்தாள். ஆஞ்சநேயர் வைத்த கண்ணெடுக்காமல் தரிசித்தார். பகவான், “ஆஞ்சநேயா! நீ கொண்டுவந்த சாளக்கிராமம் உக்ர நரசிம்மருக்கு உரியது. அதை இங்கு நீ எடுத்து வந்ததால் என்னை உக்ர ரூபத்தில் தர்சித்ததால் ஶ்ரீதேவியின்
தவம் பூர்த்தியடைந்தது. சாளக்கிராமம் மலையாக மாறியதால் இவ்விடம் ’நாமகிரி’ நாமக்கல் என்று நிலைக்கட்டும்” என்றார். நாமக்கல் டவுனின் மையத்தில் அமைந்திருக்கும் பெரிய மலை உச்சியில் உள்ள குடைவறை கோயிலில் ஶ்ரீநரசிம்மரை தரிசிக்கலாம். இந்த மலையே சாளக்கிராம மலை. ஶ்ரீநரசிம்மர் மேற்கு நோக்கி
வீராசனமாக வலது திருப்பாதம்பூமியில் அழுந்தியும் இடது கால் வலது தொடையின் மேல் வைத்து வீற்றிருக்கிறார். அவரது திருகரங்களின் ’வஜ்ரநகம்’ இன்னும் இரணியனை வதம் செய்தபோது உண்டான ரத்தத்துடன் விளங்குகிறது. ஹிரண்யனை ஸம்ஹாரம் செய்த நகங்கள் என்பதால் அச்சம் தவிர்த்து பக்தி மேலிடுகிறது. சனகன்
சனாதன் அவரின் இரு புறமும் இருந்து லோக க்ஷேமத்தை விவரிக்கிறார்கள். சூரிய சந்திரர்கள் இருபுறமும் கவரி வீசுகிறார்கள். இடதுபுறம் உள்ள சிவனும் வலதுபுறம் உள்ள பிரம்மாவும் உக்ரத்தை தணிக்கச் சொல்லும் பாவனையில் உள்ளார்கள். இங்கு வரும் பக்தர்களுக்கு திரிமூர்த்திகளையும் தரிசிக்கும் ஆனந்தம்
கிடைக்கும். உக்ரமூர்த்தி போல் தெரிந்தாலும், ஶ்ரீலக்ஷ்மியின் தவத்தை பூர்த்தி செய்து ஶ்ரீலக்ஷ்மியும் இங்கு இருப்பதால் இவர் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் ஆவார். இங்கு ஶ்ரீலக்ஷ்மி தேவி #நாமகிரிதாயார் என்று பெயர் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்குடவறை கோயிலை நோக்கியவாரு சுமார் 250
அடி தூரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் இருக்கிறார். கூறை வெய்யா கோயிலில் கூப்பிய கரங்களுடன் ஶ்ரீநரசிம்மரை வணங்குவதாக உள்ளார். மிக ஆச்சரியமான விசேஷம் என்னவென்றால் ஶ்ரீஆஞ்சநேயரின் கண்களுக்கு நேர் எதிரே தெரிவது பகவான் ஶ்ரீநரசிம்மருடைய திருபாதங்களே. இதை இன்றும் கருடர் சன்னதியிலிருந்து பக்தர்கள்
காண்கிறார்கள். சுமார் 18 அடி நெடிந்து வளர்திருக்கும் ஶ்ரீஆஞ்சநேயரின் மூர்த்தம் கண்கொள்ளா காட்சி. அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் மிக அற்புதம். ஶ்ரீநரசிம்மரை பார்க்கும் நேர்த்தியான கண்களும், அவரின் திருபாதங்களும் என்றும் நம் கண்முன் நிற்கும். ஶ்ரீஆஞ்சநேயரின் திருபாதங்கள் படிமம்
கமலாலயம் குளக்கரையில் படித்துறையில் உள்ளது. கொல்லிமலை மலைத்தொடர் சரிவில் கிழக்கு பகுதியில் உள்ளது நாமக்கல். ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது ஸ்ரீ நரசிம்மர் கோவில். இக்கோவில் கொங்கு நாட்டை ஆண்ட அதியமான் கட்டியதாகவும் குடவறை சிற்பங்கள் அதியேந்திர குணசீலன் என்ற பல்லவ அரசனால்
ஏழாம் நூற்றாண்டு வரைய பட்டுள்ளது என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. நாமக்கல் ஶ்ரீஆஞ்சநேயர் ஶ்ரீலக்ஷ்மிதேவியின் தவத்தை பூர்த்தி செய்து ஶ்ரீநரசிம்மருடைய அவதார கோலத்தை தரிசிக்க வைத்தவர். ஶ்ரீநரசிம்மருடைய பாதாரவிந்ததை என்றும் தரிசித்துக் கொண்டிருப்பவர். இந்த ஜன்ம தவத்தை பூர்த்தி
செய்து ஶ்ரீநரசிம்மரின் பாதாரவிந்ததை தரிசனம் செய்து வைத்த ஶ்ரீஆஞ்சநேயரை இந்த க்ஷேத்திரத்தில் தரிசித்து சித்தி பெறுவோம்🙏🏾
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே.
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க!
நாமகிரி தாயார் சமேத ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் திருவடிகளே சரணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ வேதநாராயண கோயில் அல்லது மத்ஸ்ய நாராயணகோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நாகலபுரம் நகரில் அமைந்துள்ளது. இங்கு மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரத்தை குறிக்கும் வகையில் மீன் உருவில் உள்ளார். இந்தப் பெருமாளை சூரியன் வழிபடுவது ஒரு
சிறப்பு. இது ஒரு வானியல் அற்புதமாகக் கருதப்படுகிறது. வருடத்தில் நின்று நாட்கள் ஒளிரும் சூரிய கதிர்கள் கர்பக்கிரகத்தில் உள்ள வேதநாராயணர் மீது நேரடியாக விழுகின்றது. காலையில் கோயில் கோபுரத்தில் தொடங்கி மாலையில் கர்பக்கிரகத்தின் மீது 360 அடி தூரம் பயணிக்கிறது. முதல் நாளில் மாலை
6 மணி முதல் 6.15 வரை கதிர்கள் பெருமாளின் பாதங்களிலும் இரண்டாவது நாள் வயிற்றுப் பகுதியிலும், மூன்றாம் நாள் அதே நேரத்தில் கிரீடத்திலும் விழுகிறது. கர்பக்கிரகத்தில் பெருமாள் பாதி மனித உருவில் இடுப்புக்குக் கீழே மீன் உருவில் தரிசனம் தருகிறார். தாயார் பெயர் வேதவல்லி தாயார். இக்கோயிலை
திருமாலின் பத்து சயன தலங்கள்: 1. ஜல சயனம்- 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. திருமாலின் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத இடம் ஜல சயனம். 2. தல சயனம்- 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு
திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார். 3. புஜங்க சயனம் (சேஷசயனம்)- முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
4. உத்தியோக சயனம்- 12வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். 5. வீர சயனம்- 59வது திவ்ய
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்#புரட்டாசிஸ்பெஷல் ஏழுமலை எம்பெருமானை தனியாக வழிபடுவதைவிட தாயாருடன் சேர்த்து வழிபடும் போது பெருமாளின் அனுக்கரகம் நம் மேல் அருவி போல் கொட்டுகிறது. இதை நம்மாழ்வார் 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறையும் மார்பா' என்று தாயாரை முன்னிட்டு சரணாகதி
செய்கிறார். இப்படி எம்பெருமான் மார்பிலே அமர்ந்தது தன் சுகத்திற்க்காகவா என்றால் இல்லை. நாம் சுகப்பட வேண்டும் என்பதற்காகத்தான். பொதுவாக ஆழ்வார்கள் திவ்விய தேசத்திலும் பெருமாளை சேவிக்கும் போது பக்தி மேம்பட்டு கொஞ்சி மகிழ்வார்கள். ஆனால் திருமலை வந்தால் மட்டும் கதறி அழுது சரணாகதி
செய்து விடுகின்றனர். உதாரணமாக நம்மாழ்வார் மலையப்பனிடம்,
திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
என கதறி சரணாகதி செய்கிறார். இந்த மலையப்பனிடம் ஆழ்வார்கள் என்ன விசேஷத்தை பார்த்தார்கள்? பொதுவாக மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியிலும்,
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு ஒரிஸ்ஸா மாநிலத்தை உத்யோத் கேசரி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். ஒரிஸ்ஸாவில் பாயும் புனித நதி ரிஷிகுல்யா. அதன் கரையோரம் சஹாபூர் என்கிற அழகிய கிராமம் ஒன்று உண்டு அங்கு பக்த மனோகர் தாஸ் என்னும் அடியவர் வாழ்ந்து வந்தார். பூரியில் உள்ள
ஜகந்நாதரை தரிசிக்கவேண்டி ஒரு நாள் கால்நடையாக சஹாபூரிலிருந்து புறப்பட்ட மனோகர் தாஸ், பல நாட்கள் இரவு பகல் மழை வெயில் பாராமல் பூரி நோக்கி நடந்தவண்ணமிருந்தார். இவ்வாறு நடந்து வந்த மனோகர் தாஸ் ஒரு நாள் வழியில் சாலையோரத்தில் அழகிய குளத்தை பார்த்தார். அதில் மிகவும் அபூர்வமான நூறிதழ்
தாமரை மலர்கள் பூத்து மிதந்து கொண்டிருந்தை பார்த்தார். இத்தனை அழகான தாமரை மலர்களை இதுவரை பார்த்ததில்லையே. இதை ஜகந்நாதனுக்கு சூட்டினால் எப்படியிருக்கும் என்று கருதியவர், தாம் பூரி சென்று சேரும் வரை பூவானாது வாடாமல் இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் குளத்தில் இறங்கி
மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர்
காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான் மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாக
கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே. அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரகலாதன் தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். இவன் இரணியன் என்னும் கொடிய அரக்கனின் புதல்வன். விஷ்ணு உண்மையான் கடவுள் அல்ல அவர் தங்கள் குல விரோதி என்று இரணியன் நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனதை மாற்ற
முடியவில்லை. எத்துணை துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். விஷ்ணு பக்தர்கள் கேட்டதை உடனே கொடுப்பவன். நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு. அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்தான். நீயே கதி என
சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பவன். ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று சொன்னதே
இல்லை. அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன். அதனால் தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நாரஸிம்ஹவபு ஶ்ரீமான் கேசவ புருஷோத்தம: என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.