#unsolvedmysteries#PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 5".இந்த பாகத்தில் 93 வருடங்கள் கடந்தும் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் ஒரு நபரின் மர்மமான மரணம் பற்றிய நிகழ்வை தான் பார்க்க போகிறோம்".ஜூலை 4,1928 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருக்கும் கிராய்டான் விமான
நிலையத்தில் இருந்து அப்போதைய உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த ஆல்பிரட் லோவன்ஸ்டீன் தன்னுடைய சொந்த நாடான பெல்ஜியத்திற்கு செல்ல தன்னுடைய உதவியாளர்கள் மற்றும் ஒரு பைலட் ஒரு மெக்கானிக் என மொத்தம் 6 பேருடன் செல்கிறார்.விமானம் கிளம்பிய அந்த நேரம் மேகம் தெளிவாக,காற்று விமானம் பரக்க
சாதகமாகவும்,விமானம் எந்த கோளாறும் இல்லாமல் பறக்கிறது.விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் ஆல்பிரட் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்.உதவியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு வருகிறார்கள்.மெக்கானிக் மற்றும் பைலட் விமானம் செலுத்துவதில் கவனம் கொள்கிறார்கள்.இந்த விமானம் மூன்று
225 குதிரைதிறன் கொண்ட என்ஜின்கள்,வெளியே வரும் சத்தம் உள்ளே கேட்காதவாறு உள்ளே கட்டமைக்கபட்டிருக்கிறது.உள்ளே ஒரு பாத்ரூம்,அதற்கு பக்கத்தில் ஒரு கதவு.கதவை திறந்தால் விமானத்தில் இருந்து வெளியே செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.விமானம் ஏறுவதற்கு முன்பு கனடாவின் பெரிய நிதி
நிர்வாகியான ராபர்ட் என்பவருக்கு தொலைபேசியில் அழைத்து அந்த வாரத்திற்கு இரவு உணர்விற்கு தயார் செய்யும்படி கூறுகிறார்.விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும் ஆங்கில கால்வாய் பகுதி வந்த பிறகு,தான் படித்துகொண்டிருக்கும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு பாத்ரூம்
செல்கிறார்.செல்லும் போது தனது உதவியாளர்கள் ஒருவருடன் சிரித்து பேசிவிட்டு செல்கிறார்.10 நிமிடங்கள் கழித்தும் ஆல்பிரட் திரும்பாததால் உதவியாளர் ஒருவர் சென்று கதவை தட்டுகிறார்.ஆனால் கதவு திறக்கப்படவில்லை.உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை.பின்பு கதவை திறந்து பார்த்ததில் உள்ளே
ஆல்பிரட் உள்ளே இருப்பதில்லை.உடனே விமானியிடன் ஆல்பிரட் காணாமல் போனதை பற்றி தெரிவிக்கிறார்.விமானி டொனால்ட் இதை கேட்டு அதிர,5 நிமிட தொலைவில் இருக்கும் பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்திற்கு செல்லாமல் திரும்பி சென்று அருகில் இருக்கும் பிரான்ஸ் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமான பீச்சில்
விமானத்தை தரையிறக்குகிறார்.நேரம் இரவு 7:30 மணியை நெருங்குகிறது.ராணுவத்தை சேர்ந்த யாராவது வருவார்கள் என்று காத்திருக்கிறார்கள்.இரவு 8 மணியளவில் விமானம் தரையிறங்கியதை அறியும் பிரான்ஸ் இராணுவ படையின் தலைவர் ஒரு குழுவை அனுப்பி அங்கு இருப்பவர்களை கைது செய்ய உத்தரவிடுகிறார்.அங்கு
செல்லும் ராணுவம் அங்கு இருக்கும் 6 நபர்களையும் கைது செய்து அழைத்து வருகிறது.6 நபர்களிடம் தனி தனியாக விசாரணை செய்கிறார் இராணுவ படையின் தலைவர்.இதற்கு அடுத்து காவல்துறை விசாரணை செய்கிறது.பெண் உதவியாளர்கள் அழுதுக்கொண்டே இருக்க,
ஆண் உதவியாளர்கள் நடுங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவர்களிடம் விசாரணை செய்தபின்பு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்"இவர்கள் நடிப்பதாக தெரியவில்லை"என்று கூறுகிறார்.விமானம் தரையிறங்கிய 24 மணி நேரத்திற்கு பின்பும் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் இதை பற்றி சுயமாக வந்து விசாரிக்க வரவில்லை.காரணம் சம்பவம் நடந்த இடம் சர்வதேச கடல் பகுதியில்
வருவதால்.இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளும் இதையே காரணமாக கூறி விசாரணை செய்ய மறுக்கிறார்கள்.இறுதியாக ஆல்பிரடின் மனைவி மெடாலின் என்ன நடந்தது என்று விசாரணையை ஆரம்பிக்கிறார்.பெல்ஜியம் நாட்டின் சட்டத்தின்படி ஒருவரின் இறந்த உடல் இல்லாமல் இறப்பு சான்றிதழ் வழங்க மாட்டார்கள்.இறப்பு
சான்றிதழ் இல்லாமல் இறந்தவரின் உயிலை படிக்க மாட்டார்கள்.இதன் காரணமாக ஆல்பிரடின் பல கோடி சொத்துகள் 4 ஆண்டிற்கு சீல் வைக்கப்படும் நிலை ஏற்படலாம் என்று ஆல்பிரட்டின் மனைவி எண்ணுகிறார்.எனவே தன்னுடைய கணவரின் உடலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று
அறிவிக்கிறார்.இதற்கிடையே சில பத்திரிக்கைகள் பல்வேறு செய்திகளை வெளியிடுகிறது.ஆல்பிரட் காணாமல் போன அன்று இரவு வானத்தில் இருந்து ஒரு பாராசூட் தரையிறங்கியதாகவும்,உடனே அங்கு ஒரு கப்பல் வந்து பாராசூட்டில் வந்த நபரை அழைத்து சென்றதை தான் பார்த்ததாகவும் ஒரு படகோட்டி தெரிவித்தார் என்று
செய்தி வெளியிடுகிறது ஒரு பத்திரிக்கை.இன்னொரு செய்தியாக ஒரு கார் பீச் பக்கம் வந்து ஆல்பிரட்டை அழைத்து சென்றதை ஒருவர் பார்த்ததாகவும் சொல்கிறது.இல்லையில்லை,உண்மையாக ஆல்பிரட் அந்த விமானத்தில் பயணிக்கவே இல்லை என்று இன்னொரு பத்திரிக்கை கூறுகிறது.இவர்கள் இப்படி கூற,ஆல்பிரட் என்ன ஆனார்
என்று தெரியாமல் அனைவரும் குழம்புகிறார்கள்.ஜூலை 19ஆம் தேதி கடலில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் அழுகிய நிலையில் பிணம் ஒன்று மிதப்பதை காண்கிறார்.உடனே பிணத்தை கைப்பற்றி,அதன் கைகளில் இருக்கும் கடிகாரத்தின் பட்டையை பார்க்கும் போது அதில் "ஆல்பிரட்" என்று பொறிக்கபட்டிருப்பது தெரிய
வருகிறது.சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்த பின்பு இரண்டு மாதங்கள் கழித்து அறிக்கை வெளிவருகிறது.அதில்"வயிற்று பகுதியில் பெரிய காயம் இருந்தது.உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் நொறுங்கிய நிலையில் இருந்தது.கடலில் விழுந்த சில மணி நேரங்கள் ஆல்பிரட் உயிரோடு தான் இருந்தார்"என்று
கூறி,இறந்ததற்கு "4000 அடி உயரத்தில் இருந்து விழுந்தது தான் காரணம்",என்று அறிக்கை முடிகிறது.இறந்தது எப்படி என்று தெரிந்தாலும் எப்படி கடலில் விழுந்தார்?கடலில் விழுந்து பல நாட்கள் கழித்து தான் உடல் கிடைத்தது.அதுவரை யார் கண்களிலும் படாதது ஏன்?என்று பல்வேறு கேள்விகள் ரெக்கை கட்டி
பறக்கிறது.ஆல்பிரட் இறந்ததற்கு பலவேறு காரணங்கள் கூறப்படும் நிலையில்,இது தான் காரணமாக இருக்கக்கூடும் என்று மக்களால் நம்பப்படும் சில செய்திகளை பற்றி பார்ப்போம்.1.ஆல்பிரட் பாத்ரூம் கதவை திறப்பதற்கு பதில் வெளியேறும் கதவை தவறுதலாக திறந்திருக்க வாய்ப்பிருக்கிறது.2.ஆல்பிரட் சில காலமாக
அடிக்கடி சுய நினைவற்று இருந்தார்.அதனால் வெளியேறும் கதவை திறந்து வெளியேற முயற்சி செய்து கடலில் விழுந்திருக்கலாம்.பைலட் மற்றும் மெக்கானிக் இருவரும் பெல்ஜியம் நீதிபதி முன்பு அளித்த வாக்குமூலத்தில்"வெளியேறும் கதவு சுலபமாக திறக்கும் நிலையில் இருந்தது"என்று கூறினார்கள்.பாத்ரூம் கதவில்
சிறிய ஜன்னல் இருந்தது.வெளியேறும் கதவில் இல்லை.அப்படியிருக்க,தவறுதலாக கதவை மாற்றி திறக்க வாய்ப்பில்லை என்று எண்ணப்படுகிறது.விமானபடை அதிகாரி ஒருவர்"வெளியேறும் கதவை ஒருவர் திறந்தால்,காற்றின் வேகத்திற்கு மறுபடியும் கதவு மூடிக்கொள்ளும்.அப்படியும் திறந்து விட்டால்,வெளியே இருக்கும்
காற்று விமானத்தின் உள்ளே நிறைந்து விமானத்தை நிலைகுலைய செய்துவிடும்"என்று கூறுகிறார்.ஆனால் உள்ளே இருக்கும் யாரும்,அப்படி தாங்கள் எதுவும் உணரவில்லை என்று கூறுகிறார்கள்.ஒருவேளை பைலட் மற்றும் மெக்கானிக் ஆல்பிரட்டை பிடித்து தள்ளியிருந்தால்,விமானத்தை ஒட்டியது யார் என்ற கேள்வி எழுகிறது.
பைலட் தவிர யாருக்கும் விமானம் ஓட்ட தெரியாது.உதவியாளர்கள் அப்படி செய்திருந்தாலும்,காற்றின் வேகத்திற்கு விமானம் சில நொடிகளில் செயலிழந்து கடலில் விழுந்திருக்கும்.ஆனால் அப்படி நடக்கவில்லை.ஆல்பிரட் நண்பர்கள் இருவர் இவருடன் சேர்ந்து ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்திருந்தார்கள்.ஆல்பிரட்
இறந்த பின்பு இருவருக்கும் 13 மில்லியன் டாலர் லாபம் கிடைத்ததை பார்க்கும் போது,இவர்கள் இருவரும் ஆல்பிரட்டின் உதவியாளர்களை வைத்துக்கொண்டு ஆல்பிரட்டை கொன்றிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.பயணம் செய்த அனைவரும் இறந்துவிட,உள்ளே என்ன ஆனது என்பது இன்று வரை மர்மமாக நீடிக்கிறது.
#Notearsforthedead2014#PCMreview Action Thriller.தமிழ் டப்பிங் இல்லை.சில இரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளது.OTT - தெரியவில்லை. டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ வில்லனின் கூலிபடையில் இருக்கிறார்.ஒரு நாள் ஒருவனை கொலைசெய்ய அனுப்புகிறார்.அவன் ஒரு பாருக்குள் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கு
செல்கிறார்.அங்கு பல பேர் இருக்க,அனைவரையும் சுட்டு கொல்கிறார்.தவறுதலாக கொலைசெய்யப்பட வேண்டிய நபரின் சிறுவயது மகளையும் கொன்றுவிடுகிறார்.இன்னும் கொலைசெய்யப்பட்டவரின் மனைவி உயிரோடு இருக்க,அவளையும் கொல்ல சொல்கிறார் வில்லன்.ஹீரோவும் கொல்ல செல்கிறார்.ஆனால்,சில காரணங்களால் வில்லனுக்கு
எதிராக திரும்புகிறார் ஹீரோ.இதற்கு பின் நடக்கும் அதகளமான சண்டை காட்சிகள் நிறைந்த திரைக்கதையுடன் படம் நகர்கிறது. "The Man From Nowhere" படத்தை இயக்கியவர் தான் இப்படத்தின் இயக்குனரும்.அந்த படம் முழுவதும் சுவாரஸ்யமாக மற்றும் அருமையான சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும்.இவரின்
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியா மர்மங்கள்:பாகம் 4".இன்று நாம் பார்க்க போவது 86 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கு பற்றி தான்."ஜனவரி 2,1935ஆம் ஆண்டு மதியம் 1:20 மணியளவில் அமெரிக்க நாட்டின் கான்சாஸ் நகரத்தில் இருக்கும் பிரஸிடென்ட் ஹோட்டலுக்கு ரோலண்ட்.டி.ஓவன்
என்ற நபர் நுழைகிறார்.10ஆவது மாடியில் தனக்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டு வாங்கி மேலே செல்கிறார்.உடன் பெல்பாய்(ரூம்பாய்) ரேன்டால்ப் பிராப்ஸ்ட் செல்கிறார்.அறையை காட்டிவிட்டு வந்துவிடுகிறார்.பணிப்பெண் மேரி சோப்டிக் அறையை சுத்தம் செய்ய செல்லும் போது,ஓவன்"அறையை சுத்தம் செய்துவிட்டு
கதவை அப்படியே விட்டுவிடுங்கள்.எனது நண்பர் வர போகிறார்"என்று கூறுகிறார்.பணிப்பெண் வேலையை முடித்து அறையில் இருக்கும் துண்டை எடுத்து செல்கையில் அறை மிகவும் இருட்டாக டேபிள் லாம்ப் ஒளி மட்டும் இருந்ததை கவனிக்கிறார்.மேரி மாலை 4 மணிக்கு புது துண்டை அறைக்குள் வைக்க வருகையில் கதவு பூட்ட
#KodiyilOruvan#PCMreview ஆபாச காட்சிகள் இல்லை.லிங்க் - தியேட்டர்.கதை சுருக்கம்:ஹீரோ விஜய் ஆண்டனியின் அம்மா ஒரு அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்கிறார்.அவர் சார்ந்த பஞ்சாயத்து தேர்தல் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.இதனால் அந்த அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை தேர்தலில் நிற்க
சொல்கிறார். தன் ஊருக்கு நல்லது நடக்கும் என்று நம்பி அவரும் நின்று வெற்றி பெறுகிறார்.ஆனால் ஊழல் செய்ய அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை கட்டயாப்படுத்துவதால் மறுக்கிறார்.இதனால் ஆத்திரமடையும் அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை பெட்ரோல் ஊத்தி கொழுத்துகிறார்.எப்படியோ உயிர் பிழைக்கும் ஹீரோவின்
அம்மா ஹீரோவை பெற்றெடுக்கிறார். தன் அம்மாவிற்கு தான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஆசை கொள்வதால் எப்படியாக ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் ஹீரோ.அங்கு சேரியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார்.இது அங்கு இருக்கும் ரவுடிகளுக்கு பிடிக்காமல் போக
#vivonetflix#PCMreview "குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.இசையில் வல்லுவரான ஒரு தாத்தா மற்றும் அவருடன் இருக்கும் ஒரு குட்டி குரங்கு இருவரும் தெருவில் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள்.சில நிமிடங்கள்
கழித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதில் அவரது பழைய கால தோழி இவரை அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.இவரும் செல்லலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த குட்டி குரங்கிற்கு இது பிடிப்பதில்லை.திடீரென தாத்தா இறந்து போக,இசை நிகழ்ச்சிக்கு சென்று பாட வேண்டிய
பாடல் வரிகள் அடங்கிய காகிதம் மற்றும் பழைய புகைப்படங்கள் ஆகியவை அங்கு இருப்பதை குரங்கு பார்க்கிறது.தாத்தாவின் கனவை நிறைவேற்ற குரங்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு சென்றதா?பாடலை பாடியதா?என்பதே மீதிக்கதை.கிகான்ஜோ என்ற குட்டி குரங்குடன் ஒரு சிறுமியும் பயணம் செய்வாள்.இருவரின் உரையாடல்
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில்
இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை
பெற Sverdlovsk பகுதி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மிகவும் கடினமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாக இருக்கும் Oterten என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். இக்குழுவிற்கு இகோர் டயட்லோவ் (23) என்ற மாணவர் தலைமை தாங்குகிறார்.ஜனவரி 25 ஆம் தேதி ரயில் மூலம் இவ்டேல் என்ற இடத்தை
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர்
விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு புறப்படுகிறது. விமானத்தில் 227 பயணிகள்,10 கேபின் குழுவினர்,2 பைலட்டுகள் என மொத்தம் 239 நபர்கள் பயணிக்கிறார்கள்.பயணம் தூரம் 5.30 மணி நேரம்.விமானத்தை 53 வயதான ஜஹாரி அகமத் என்ற முதல் பைலட்டும் 27 வயதான ஃபரிக் ஹமீத் என்ற
இரண்டாம் பைலட்டும் ஓட்டுகிறார்கள்.சரியாக இரவு 1:08 மணிக்கு விமானம் தெற்கு சீன கடல் பகுதியில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்று விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.மலேசிய கட்டுப்பாட்டு அறை விமானியை தொடர்பு கொண்டு "நீங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில்