ரிச்சர்ட் ஜுவல் சட்டத்தை மதித்து நடக்கும் ஒரு வெகுளியான முன்னாள் காவல் அதிகாரி. அப்பா இல்லாத நிலையில் தனது அம்மா பாபியுடன் வசித்து வருகிறார். செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் அவர் 1986 வது வருடம் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில்
வெடிகுண்டு இருப்பதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறார்.
பத்திரிக்கைகள் மற்றும் காவல்துறையின் பொறுப்பின்மை காரணமாக அவர் தான் வெடிகுண்டு வைத்தார் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பது பற்றிச் சொல்கின்ற படம்.
மீடியாக்களில் பிரபலமான நபராக ஆகிறார் ரிச்சர்ட்.
ஆனால் ஒரே நாளில் நிலைமை தலைகீழாக மாறி ரிச்சர்ட் தான் தான் பிரபலமாக அந்த குண்டை வைத்தார் என FBI ஆல் குற்றம் சாட்டப்படுகிறார்.
நிலைமை கை மீறி போவதை உணர்ந்த அவர் தனக்கு தெரிந்த ஒரே வக்கீல் நண்பர் வாட்சனை உதவிக்கு அழைக்கின்றார்.
படத்தில் பத்திரிகை மற்றும் FBI ன் இன்னொரு பக்கம் காட்டப்படுகிறது. தங்களின் பொறுப்பின்மை காரணமாக எவ்வாறு அப்பாவியான ரிச்சர்ட்யை சிக்க வைக்கும் தில்லு முல்லுகள் திடுக்கிட வைக்கிறது.
ஆனால் ரிச்சர்ட் கூலாக இருக்கிறார்.அவர் அம்மாவுடன் நிறைய நெகிழ்ச்சியான தருணங்கள் உள்ளது.
அவருடைய அம்மா பாபி கதாபாத்திரத்தில் கேத்தி பேட்ஸ் (Kathy Bates) அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சீரியசான கதை என்றாலும் ரிச்சர்ட் கதாபாத்திரத்தின் இயல்பு காரணமாக படம் முழுவதும் மெலிதான நகைச்சுவை இழையோடுகிறது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
ரிச்சர்ட் ஜுவல் கதாபாத்திரத்தில் நடித்தவர் பால் வால்டர் (Paul Walter Hauser) .
வெகுளியான கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பு.
அதுவும் இறுதி காட்சியில் அம்மாவை பார்க்கனும் என்று சொல்லும் காட்சி, கோபத்தில் உள்ள அம்மாவை சமாதான படுத்தும் காட்சிகள் கண்கலங்க வைக்கும்.
அவருடைய வக்கீல் நண்பராக வரும் வாட்சன் கதாபாத்திரத்தில் சாம் ராக்வெல்(Sam Rockwell) கலக்கி இருக்கிறார்.
கிளின்ட் ஈஸ்ட்வுட் வழக்கம் போல சிறப்பான திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார்.
துப்பறியும் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவனா இருக்குமோ ? இவனா இருக்குமோ ? என சுத்தி விட்டு கடைசியில் எவனுமே இல்லனு புதுசா ஒருத்தனை காட்டுவாங்க. விறு விறுப்புக்கு பஞ்சமே இருக்காது. #tamilhollywoodrecommendations #Tamil #investigation
இல்லைனா நம்ம இவனா தான் இருக்கும்னு யோசிச்சு வச்சுருப்போம் அவன் தான் கொலைகாரன் என்பது போலவே காட்டி கடைசியில் ட்விஸ்ட் வைப்பார்கள்.
இன்னொரு ரகம் துப்பறியும் போலீஸ் பார்வையில் நகரும் படம். யாருக்குமே கொலைகாரனை தெரியாது.. போலீஸ் போலவே க்ளூவ வச்சு நாமளும் யோசிச்சுகிட்டு இருப்போம்.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் குழந்தை கடத்தல் விசாரணை சம்பந்தப்பட்ட இரண்டு மூன்று படங்களையும் இணைத்து உள்ளேன்.
இன்னும் நிறைய நல்ல படங்கள் உள்ளன. இது நான் பார்த்த நல்ல படங்களின் ஒரு பகுதி மட்டுமே. So நீங்க இந்த படத்தை விட்டுட்டீங்கனு கம்பளெய்ன்ட் பண்ணாதீங்க. #crime#Thriller
நடிகைகள் Viola Davis (How to get away with murder, Prisoners) . இவர் சில வருடங்களுக்கு முன்பு சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் ஆஸ்கார் அவார்டு வாங்கியவர் ஆவார்.
Michelle Rodriguez - இவர் பெரும்பாலும் அதிரடி ஆக்ஷன் (Avatar, Fast and Furious) கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் .
Elizabeth Debicki - இவர் Tenet , Night Manger போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் 4 பேர் இணைந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் இதற்கு லீடராக இருப்பவர் Harry (Liam Neeson) . கொள்ளையில் ஏற்படும் குழப்பத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்
கொரியன் போலீஸ் யுனிவர்சிட்டியில் படிக்கிறார்கள் இரண்டு நண்பர்கள். குடும்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக போலீஸ் ட்ரைனிங்கில் சேர்ந்திருப்பது பின்னர் தெரிய வருகிறது
ஒரு நாள் இரவில் பார்ட்டி முடித்து வெளியே வரும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண்ணை கடத்துகிறது ஒரு கும்பல்
இருவரும் வேனை விரட்ட அது கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விடுகிறது. இருவரும் கல்லூரியில் படித்ததை செயலில் காட்டி அந்த பெண்ணை காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.
விசாரணையில் பிண்ணனியில் கொடூரமான மெடிக்கல் மாஃபியா இருக்கிறது என தெரியவருகிறது. போலீஸ் கேஸ் மற்றும் ஆதாரம் இல்லை என்கிறது.
எப்பவுமே சிட்டியில் நடக்கும் கதைகளை விட சின்ன ஊருக்குள் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடித்த ஒன்று. அது மாதிரி ஒரு படம் தான் இது.
ஒரு சின்ன விவசாய கிராமம் . பேஸ் பால் மேட்ச் நடக்கும் சமயம் ஒருத்தன் கையில் Shot Gun ஓட உள்ள வர்றான்.
ஹீரோ அந்த ஊர் தலைமை போலீஸ். அவர் மற்றும் அவரோட அஸிஸ்ட்டன்ட் ரெண்டு பேரும் வார்னிங் கொடுத்தும் வெளியே போகாததால் வேறு வழி இல்லாமல் சுட வேண்டி இருக்கிறது.
இன்னொருத்தன் பொண்டாட்டி பிள்ளைகளை வீட்டுக்குள் போட்டு தீயை வைத்து கொளுத்திக் கொல்கிறான்.
படம் முழுவதும் கருப்பு வெள்ளை மற்றும். Aspect Ratio குறைவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மொபைல்ல கொஞ்சமா நடு ஸ்கிரீன்ல தான் படம் ஓடுது.
இரண்டு பேர் கடலுக்கு நடுவே ஒரு லைட் கவுஸ்ல இருக்காங்க.
ஒருத்தர் சீனியர் (William Dafoe - ஒரு ஸ்பைடர்மேன் படத்துல வில்லனா வருவார்) இன்னொருத்தர் 4 வார கான்ட்ராக்டல வேலைக்கு வருகிறார்.( Robert Pattinson - கடைசியாக Tenet ல நடிச்சு இருந்தாரு)
ஆரம்பத்திலுல இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாமல் சண்டை போட்டுட்டு இருக்காங்க. அந்த சீனியர் மட்டும் லைட் கவுஸ்க்கு மேல போய் என்னமோ பண்ணிட்டு வறாரு. புதுசா வந்தவன கண்டபடி வேலை வாங்குகிறார்.
புதுசா வந்தவனுக்கு கனவுல கடல்கன்னி வருது , ஏதோ ஒரு கொடூரமான மிருகம் தெரியுது.