துப்பறியும் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவனா இருக்குமோ ? இவனா இருக்குமோ ? என சுத்தி விட்டு கடைசியில் எவனுமே இல்லனு புதுசா ஒருத்தனை காட்டுவாங்க. விறு விறுப்புக்கு பஞ்சமே இருக்காது. #tamilhollywoodrecommendations #Tamil #investigation
இல்லைனா நம்ம இவனா தான் இருக்கும்னு யோசிச்சு வச்சுருப்போம் அவன் தான் கொலைகாரன் என்பது போலவே காட்டி கடைசியில் ட்விஸ்ட் வைப்பார்கள்.
இன்னொரு ரகம் துப்பறியும் போலீஸ் பார்வையில் நகரும் படம். யாருக்குமே கொலைகாரனை தெரியாது.. போலீஸ் போலவே க்ளூவ வச்சு நாமளும் யோசிச்சுகிட்டு இருப்போம்.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் குழந்தை கடத்தல் விசாரணை சம்பந்தப்பட்ட இரண்டு மூன்று படங்களையும் இணைத்து உள்ளேன்.
இன்னும் நிறைய நல்ல படங்கள் உள்ளன. இது நான் பார்த்த நல்ல படங்களின் ஒரு பகுதி மட்டுமே. So நீங்க இந்த படத்தை விட்டுட்டீங்கனு கம்பளெய்ன்ட் பண்ணாதீங்க. #crime#Thriller
நீங்களும் பெரும்பாலான படங்களை பார்த்து இருக்க வாய்ப்புகள் உண்டு.
பெரும்பாலான படங்களை பற்றி என் Blog ல் ஏற்கனவே எழுதி உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு படித்துக் கொள்ளலாம்.
Se7en - 1995
பிரபல இயக்குனர் David Fincher படம். ஒரு கொடூரமான சீரியல் கொலைகாரனை கண்டுபிடிப்பதை பற்றிய படம்.
அந்நியனுக்கு கருடபுராணம் மாதிரி இதுல 7 பாவங்களை வச்சு கொல்லுவான் வில்லன்
Brad Pitt, Morgan Freeman இரண்டு பேரும் டிடெக்டிவ்வா வருவார்கள். Kevin Spacey வில்லனா வருவார்
Gone Baby Gone - 2017
ஒரு குழந்தை காணாமல் போய் விடும். குழந்தையின் உறவினர்கள் ப்ரைவேட் டிடெக்டிவ் உதவியை நாடுவார்கள் . குழந்தை என்ன ஆனது என்று நம்மால் யூகிக்க முடியாத அளவு திரைக்கதை சிறப்பாக இருக்கும்.
Knives Out - 2019
ஒரு பிரபலமான பணக்கார எழுத்தாளரின் பெரிய வீடு. பார்ட்டி நடந்த அன்று இறந்து விடுவார்.
அது கொலையா ? தற்கொலையா என்பதை பற்றி நடக்கும் விசாரணை தான் படம்.
ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வந்து கொண்டே இருக்கும்.
The Girl With The Dragon Tatto - 2011
இதுவும் Knives Out மாதிரி தான். ஒரு தீவில் நடக்கும் கதை.
40 வருஷங்களுக்கு முன்னாடி காணமல் போன ஒரு பெண்ணை தேடிக்கொண்டு பிடிக்கும் பத்திரிகையாளர் + தனியாக துப்பறியும் ஒரு இளம்பெண்.
Wind River - 2017
இது ஒரு பனிபடர்ந்த ஏரியாவில் நடக்கும் கதை. ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு விட அதை விசாரிக்க வரும் FBI பெண் அதிகாரி லோக்கல் வேட்டைக்காரனான ஹீரோவுடன் சேர்ந்து கொலையாளியை கண்டுபிடிப்பதை பற்றிய படம். லொக்கேஷன்கள் எல்லாம் அருமையாக இருக்கும்.
Prisoners - 2013
இதுவும் குழந்தைகள் கடத்தல் சம்பந்தப்பட்ட படம் தான்.
போலீஸ், பெற்றோர் என எல்லாரும் ஒவ்வொரு பக்கம் விசாரணை பண்ணுவாங்க.
கடைசியில் குழந்தைகள் கெடச்சதானு படத்துல பாருங்கள். இதுவும் நம்மால் யூகிக்க முடியாத தளங்களில் பயணிக்கும் கதை.
Montage - 2013
கொரியன் திரில்லர் படம். 15 வருஷத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அந்த கேஸ் குளோஸ் அங்க.
கேஸ் குளோஸ் ஆக 5 நாட்கள் இருக்கும் போது கிடைக்கும் க்ளூவை வைத்து மறுபடியும் விசாரணை ஆரம்பமாகும்.
மறுபடியும் 15 வருஷத்துக்கு முந்தைய கேஸை தூசு தட்டுவார்கள்
The Little Things - 2021
இதுவும் ஒரு சீரியல் கில்லர் படம் தான். கொஞ்சம் Se7en படத்தோடு ஒத்துப் போகும்.
Denzel Washington & Remi Malek டிடெக்டிவ்வாக கலக்கி இருப்பார்கள்.
படம் ஸ்லோவா தான் போகும்.
Inside Man - 2006
இது ஒரு பேங்க் கொள்ளையை பற்றி விசாரிக்கும் படம்.
புத்திசாலித்தனமான பேங்க் கொள்ளையை பற்றியது. கொள்ளைக்காரர்களும் மக்களோடு சேர்ந்து விடுவார்கள்.
விசாரணையில் அவர்களே கண்டுபிடிக்க முயற்சி செய்யும் போலீஸ்காரர்களின் விசாரணை பற்றிய படம்.
The Silence Of The Lambs - 1991
இந்த படமும் சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதை பற்றியது. ஆனால் அதற்கு இன்னொரு சீரியல் கில்லரின் உதவியை நாடுவாள் போலீசான ஹீரோயின்.
ஆஸ்கார் வரலாற்றில் ஹாரர்
படத்துக்கு விருது வாங்கிய படம் இதுவாக தான் இருக்கும்.
ரிச்சர்ட் ஜுவல் சட்டத்தை மதித்து நடக்கும் ஒரு வெகுளியான முன்னாள் காவல் அதிகாரி. அப்பா இல்லாத நிலையில் தனது அம்மா பாபியுடன் வசித்து வருகிறார். செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் அவர் 1986 வது வருடம் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில்
வெடிகுண்டு இருப்பதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகிறார்.
பத்திரிக்கைகள் மற்றும் காவல்துறையின் பொறுப்பின்மை காரணமாக அவர் தான் வெடிகுண்டு வைத்தார் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பது பற்றிச் சொல்கின்ற படம்.
நடிகைகள் Viola Davis (How to get away with murder, Prisoners) . இவர் சில வருடங்களுக்கு முன்பு சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் ஆஸ்கார் அவார்டு வாங்கியவர் ஆவார்.
Michelle Rodriguez - இவர் பெரும்பாலும் அதிரடி ஆக்ஷன் (Avatar, Fast and Furious) கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் .
Elizabeth Debicki - இவர் Tenet , Night Manger போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் 4 பேர் இணைந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் இதற்கு லீடராக இருப்பவர் Harry (Liam Neeson) . கொள்ளையில் ஏற்படும் குழப்பத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்
கொரியன் போலீஸ் யுனிவர்சிட்டியில் படிக்கிறார்கள் இரண்டு நண்பர்கள். குடும்ப சூழ்நிலையால் வேண்டா வெறுப்பாக போலீஸ் ட்ரைனிங்கில் சேர்ந்திருப்பது பின்னர் தெரிய வருகிறது
ஒரு நாள் இரவில் பார்ட்டி முடித்து வெளியே வரும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இளம்பெண்ணை கடத்துகிறது ஒரு கும்பல்
இருவரும் வேனை விரட்ட அது கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து விடுகிறது. இருவரும் கல்லூரியில் படித்ததை செயலில் காட்டி அந்த பெண்ணை காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.
விசாரணையில் பிண்ணனியில் கொடூரமான மெடிக்கல் மாஃபியா இருக்கிறது என தெரியவருகிறது. போலீஸ் கேஸ் மற்றும் ஆதாரம் இல்லை என்கிறது.
எப்பவுமே சிட்டியில் நடக்கும் கதைகளை விட சின்ன ஊருக்குள் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எனக்கு பிடித்த ஒன்று. அது மாதிரி ஒரு படம் தான் இது.
ஒரு சின்ன விவசாய கிராமம் . பேஸ் பால் மேட்ச் நடக்கும் சமயம் ஒருத்தன் கையில் Shot Gun ஓட உள்ள வர்றான்.
ஹீரோ அந்த ஊர் தலைமை போலீஸ். அவர் மற்றும் அவரோட அஸிஸ்ட்டன்ட் ரெண்டு பேரும் வார்னிங் கொடுத்தும் வெளியே போகாததால் வேறு வழி இல்லாமல் சுட வேண்டி இருக்கிறது.
இன்னொருத்தன் பொண்டாட்டி பிள்ளைகளை வீட்டுக்குள் போட்டு தீயை வைத்து கொளுத்திக் கொல்கிறான்.
படம் முழுவதும் கருப்பு வெள்ளை மற்றும். Aspect Ratio குறைவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மொபைல்ல கொஞ்சமா நடு ஸ்கிரீன்ல தான் படம் ஓடுது.
இரண்டு பேர் கடலுக்கு நடுவே ஒரு லைட் கவுஸ்ல இருக்காங்க.
ஒருத்தர் சீனியர் (William Dafoe - ஒரு ஸ்பைடர்மேன் படத்துல வில்லனா வருவார்) இன்னொருத்தர் 4 வார கான்ட்ராக்டல வேலைக்கு வருகிறார்.( Robert Pattinson - கடைசியாக Tenet ல நடிச்சு இருந்தாரு)
ஆரம்பத்திலுல இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாமல் சண்டை போட்டுட்டு இருக்காங்க. அந்த சீனியர் மட்டும் லைட் கவுஸ்க்கு மேல போய் என்னமோ பண்ணிட்டு வறாரு. புதுசா வந்தவன கண்டபடி வேலை வாங்குகிறார்.
புதுசா வந்தவனுக்கு கனவுல கடல்கன்னி வருது , ஏதோ ஒரு கொடூரமான மிருகம் தெரியுது.