திப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி!

கர்நாடகத்தில் மூன்றாவது ஆண்டாக திப்பு சுல்தானின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படு கிறது. இவ்விழாவுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
திப்பு சுல்தான் இந்து மதத்தினரைத் துன்புறுத்தியவர் என்று ஆங்கிலேயர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள புனைந்த கதைகளை இப்போது இந்துத்துவவாதிகள் கையிலெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
திப்பு சுல்தானின் ஆட்சி எல்லையைத் தற்போதைய மாநில எல்லைகளின்படி கர்நாடகத்துக்குள்ளேயே அடக்கிவிட முடியாது. கேரளமும் ஆந்திரத்தின் சில பகுதிகளும் தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியும் அவரது ஆளுகைக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன.
திப்பு சுல்தான், குடகுப் பகுதியை இணைத்துக்கொண்ட போது 80,000 பேரை இஸ்லாமிய சமயத்துக்கு மதம் மாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் குடகில் 10,000 சொச்சம் பேரே இஸ்லாமியர்களாக இருந்தார்கள்
என்று தெரிகிறது. உண்மையில், தனது ஆட்சிக் காலத்தில் திப்புவின் சமய அணுகுமுறை இந்துக்களுக்கு எதிராகவும் இல்லை, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் இல்லை. மதச்சார்பற்ற ஆட்சியையே அவர் நடத்தியிருக்கிறார்.
சுல்தானின் பெருமை

சிறீரங்கப்பட்டணத்தின் புகழ்பெற்ற ரெங்கநாதர் கோயிலிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் திப்பு சுல்தானின் அரண்மனை இருந்தது. திப்பு மதவெறியராக இருந்ததில்லை என்பதற்கு அந்தக் கோயிலே முதன்மைச் சான்று.
இன்றும் நஞ்சன்கூடு கோயிலில் அவர் அளித்த மரகத லிங்கமும் மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் அவர் வழங்கிய முரசும் பார்வைக்கு இருக்கின்றன. மேலும், அவரது அரசாங்கத்தால் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளில் 90% இந்து சமய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டன.
அதனால்தான் நரசிம்மர் கோயிலில் புராண நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓவியங்களுக்கு இடையே திப்பு சுல்தானின் படத்தையும் வரைந்து பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
மராட்டியர்கள் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த பிராமணர்களைக் கொன்று, சாரதாதேவி யின் பொற்சிலையைக் கொண்டுசென்றபோது, அம்மடத்தின் பணிகள் மீண்டும் தொடர்வதற்குக் கொடைகளை அளித்ததுடன் சிருங்கேரி
சங்கராச்சாரியாருக்குப் பாதுகாப்பாக சையத் முகமது என்ற தளபதியையும் ஒரு படையையும் அனுப்பிவைத்தவர் திப்பு சுல்தான்.

திப்பு சுல்தான் கேரளத்தின் மலபார் பகுதியை நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, குருவாயூர் கோயிலில் இருந்த பிராமணர்கள் அங்கிருந்த சிலையை மறைத்து வைத்தனர்.
அவர்களது அச்சத்தை அறிந்த திப்பு சுல்தான், சிலை இருந்த இடத்தில் மீண்டும் அதை நிறுவச் செய்து அக்கோயிலுக்குக் கொடையளித்துத் திரும்பினார். மலபார் பகுதியில் பெண்கள் மேலாடை இல்லாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த திப்பு சுல்தான்,
அவ்வழக்கத்துக்குக் காரணம் எதுவென்றாலும் அது உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே சச்சரவுகள் எழுந்தபோதும் திப்பு சுல்தான் சமயச் சார்புக்கு ஆளாகிவிடவில்லை.
சிறீரங்கப்பட்டணத்தில் நடந்த ஒரு இந்து மத ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமிய சமய அறிஞரான பீர்லதா அரசரிடம் புகார் செய்தார். விசாரித்த திப்பு சுல்தான், அந்த ஊர்வலத்தில் சிக்கல் உருவாவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என்று அறிந்து அவர்களைத் தண்டித்தார்.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்கப்படாவிட்டால் நாட்டை விட்டே தான் வெளியேறப் போவதாகப் பயமுறுத்தினார் பீர்லதா. ‘தங்களது விருப்பம் அதுவானால் அப்படியே நடக்கட்டும்!’ என்று பதிலளித்தவர் திப்பு சுல்தான்.
திரிக்கப்பட்ட வரலாறு

1787-ல் திப்பு சுல்தான் வெளியிட்ட பிரகடனம், பிற மதங்களிடம் சகிப்புத்தன்மையே புனித குர்ஆனின் கோட்பாடு என்று தொடங்கி சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதும் ஒதுக்குவதும் சட்டவிரோதமானது என்று முடிகிறது.
இப்படியெல்லாம் நடந்திருந்தும் திப்பு சுல்தானின் மீது மதவெறியர் என்று பழிசொல்ல நேர்ந்தது எப்படி? திப்பு வரலாற்றை எழுதிய ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் முதல், இரண்டாம் மைசூர் போர்களில் அவரால் சிறைபிடிக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டவர்கள்.
திப்புவின் வரலாற்றை எழுதிய இஸ்லாமியர்களோ ஆங்கிலேய அரசிடம் ஓய்வூதியம் பெற்றவர்கள். இரண்டு வகையிலும் திப்புவின் வரலாறு திரித்து எழுதப்பட்டிருக்கிறது.
திப்பு சுல்தானுக்கு இந்திய விடுதலைப் போராட்டத் தில் தவிர்க்கவே முடியாத இடம் உண்டு. ஆங்கிலேயர் களுக்கு எதிராக துருக்கி, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவை அவர் பெற முயற்சித்தார். சூழல் கைகூடவில்லை. மராட்டியர்களும் சரி,
நிஜாமும் சரி நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பதால், அவர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கவும் வாய்ப்பில்லாமல் போனது. தோல்வி உறுதி என்றபோதும் ஓடி ஒளியாமல், சரணடையாமல் போரிட்டு மடிந்தது திப்பு சுல்தானின் வீரத்தை எடுத்துச் சொல்லும்.
மைசூரை ஆண்ட இந்து அரசர்களான உடையார் களிடமிருந்து ஹைதர் ஆட்சியைக் கைப்பற்றினார். எனவே, அவரும் அவரது மகன் திப்புவும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் இருக்கிறது. ஔரங்கசீப்புக்கும் அதன் பிறகு மராட்டியர்களுக்கும் கப்பம் கட்டும் சிற்றரசாகத்தான் மைசூர் இருந்தது.
உடையார்கள் வலிமை இழந்துபோய் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் அதன் ஆட்சிப்பொறுப்பை ஹைதர் ஏற்றுக்கொண்டார். அதனால், மராட்டியர்கள் கப்பம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.
விவசாயிகளின் நண்பர்

திப்பு சுல்தான் தொலைநோக்கு கொண்ட நிர்வாகத் திறமையாளரும்கூட. 17 ஆண்டுகால ஆட்சியில் அவர் மேற்கொண்ட திட்டங்கள் இன்றைக்கும் வியந்துநோக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொழில் மற்றும் வணிகக் கொள்கையை வகுத்த மன்னர் அவர்.
விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, அவற்றை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். விவசாயம் செய்யப்படாத நிலங்களைக் கண்டறிந்து, அவற்றை நிலமில்லாதவர்களுக்கு அளித்தார்.
நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர், ‘‘குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி அளிக்காத தந்தை கடமையை மறந்தவன்’’ என்று அறிவித்தார். பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய திப்பு சுல்தான், அதனால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைப் பற்றி கவலைப்படவே இல்லை.
திப்பு சுல்தானின் இச்செயலுக்காக அவரை உன்னதமான மன்னர் என்று வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார் காந்தி. காவிரிக் கரையோரத்தில் இருந்த ஆயுதத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கந்தகக் கழிவால் நதிநீர் மாசுபட்டு,
நீர்வாழ் உயிரினங்கள் அழியுமென்று அத்தொழிற்சாலையை வேறிடத்துக்கு மாற்றியவர் திப்பு சுல்தான். இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அவர் முன்னோடி.

@mohamedilyasNBD @vasantalic
விடுதலை வீரர், சிறந்த நிர்வாகி என்ற காரணங்களுக்காக திப்பு சுல்தான் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவர். குறிப்பாக, மதச்சார்பற்ற ஆட்சிமுறைக்காக அவரைப் போற்றுவது இன்றைய சூழலில் மிகவும் பொருத்தம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

21 Oct
நாம் தமிழர் கட்சியினர் பேராசிரியர் ஜெயராமனுக்கு கொலை மிரட்டல்

கனிம பேராசிரியர் ஜெயராமன் - திராவிட எதிர்ப்பாளர்களின் புரட்டு வாதங்களுக்கு பதிலடி தருவதை சகிக்க முடியாமல், நாம் தமிழர் கட்சியினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலக் கழகம் மற்றும் எஸ்.டி.பி.அய். அமைப்பைச் சார்ந்த தோழர்கள் காவல்துறையிடம் புகார் மனுவை அளித்தனர்.
மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ‘தமிழன் காளிதாஸ்’ 8 பேருடன் சேர்ந்து கொண்டு பேரசிரியர் ஜெயராமன் தமிழ்மண் தன்னுரிமை இயக்க செயல்பாட்டாளரான செல்வ அரசன், கடலை வணிகக் கடைக்குப் போய் பேராசிரியர் ஜெயராமனை தீர்த்துக் கட்டி விடுவோம் என்று போய் கூறு என்று மிரட்டியுள்ளனர்.
Read 38 tweets
21 Oct
எந்தப் புலவனுக்கும் வராத கோபம் பெரியாருக்கு வந்தது-வாலாசா வல்லவன்.

மபொசியும் ஆதித்தனாரும் தமிழ் தேசிய போராளிகளா ?

பெ .மணியரசன் ,சீமான் ஆகியோர்கள் முப்பாட்டன் முருகனிலிருந்து ஆரியனை முப்பாட்டனாக ஏற்று அதிக நாட்கள் கடந்து விட்டது .

டர் ..டமார் ...கிழி ...
தமிழ் தேசம் எனும் இந்த தேசத்தின் உண்மையான எதிரிகள் ,இன்றைக்கு நம்மை ஒடுக்குகின்ற பார்ப்பனிய ,பாசிச ,ஒன்றிய அரசு தான் .
குடியுரிமை வழங்கும் அதிகாரம் மாநில அரசின் கையில் இல்லை அது ஒன்றிய அரசால் மட்டுமே முடியும் . ஏறத்தாழ 35 ஆண்டுக்கு மேல் ஈழத் தமிழர்கள் புலம்பெயரந்து தமிழகத்தில் வசிக்கிறார்கள் .
Read 59 tweets
21 Oct
பிரபல ஆபாச எழுத்தாளரும் ,பிரபல ரவுடியும் கல்யாணராமன் ஜாமீன் மனு தள்ளுபடி !

அவனின் தற்போதைய ஆபாச எழுத்துக்களுக்கு நடவடிக்கைகளுக்கு வழக்கு பதிவுகள் கிடையாது .

முந்தைய நிலுவையிலுள்ள வழக்கு 2018 லிருந்து இன்று வரை உள்ள வித்தியாசமான முறையில் கவனிக்கணும் .

உதாரணமாக !!🙃
சைக்கிளில் டபுள்ஸ் போகும் போது பின்னால் உட்கார்ந்து இருந்தவர் அந்த சைக்கிளை ஒட்டி நடந்து போன ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து விட்டார் என்று ஒரு வழக்கு ..

அந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஒரு ராணுவவீரர்.
லீவு முடிந்து எல்லைக்குப் போக வேண்டிய நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது...

கோயமுத்தூரில் தங்கி இருந்து வழக்கை நடத்த இயலாத இக்கட்டான நிலை..
நீதிபதியிடம் நிலைமையைச் சொல்லி "குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்கிறேன்.
Read 10 tweets
21 Oct
தன் மகள் திருமணத்திற்கு பெரியாருக்கு அழைப்பு கொடுத்திருந்தார்...
பொன்னியின் செல்வன் சரித்திர நாவலாசிரியர் கல்கி...

முகூர்த்த நேரத்திற்கு பெரியார் வரவில்லை...

அது கல்கியை வருத்தம் கொள்ளச் செய்தது...

அன்று மாலை 5 மணிக்கு கல்கி வீட்டின்முன் பெரியாரின் வேன் வந்து நின்றது... Image
வந்த பெரியாரை கைபிடித்து அழைத்துச் சென்றார் கல்கி...

“காலையில் கல்யாணத்திற்கு அய்யா வரலையே... உடம்புக்கு சரியில்லையோ....”

அதெல்லாம் ஒன்னுமில்லை நல்லாத்தான் இருந்தேன்....

அப்புறம் ஏன் வரலை..?....
“வேறொண்ணுமில்லை.. காலையில வந்தேன்னு வையுங்க..
என்னயக் கூட்டிட்டுப்போயி முன்னால உட்கார வெச்சிடுவீங்க... நான் கருப்புச் சட்டையோட இருக்கறதப் பார்த்து ஒங்க வீட்டுப் பொண்ணுக முகம் சுளிக்கலாம்... கல்யாணம் நடக்கும் போது... கருப்புச் சட்டை போட்டு வந்திருக்கறேன்னு வருத்தப்படலாம்... அதான் இப்ப வந்திருக்கேன்
Read 6 tweets
20 Oct
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;

வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி

மறைத்தத னாலழகு மறைந்த தில்லை; Image
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்

சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ... 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?

ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்

ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு

வாக முகத்திரையை அகற்றி விட்டால்?

காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி

கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? ..

கண்ணம்மா என் காதலி -3
Read 34 tweets
20 Oct
அடே சீமான் 🙃🙃

மாலியம் -‘ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாது அலியும் அல்லன்’ -நம்மாழ்வார்

”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் Image
உருவகத் தாலே உணர்ந் துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே;
அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம்.”
இப்பாடலில், முறையே சைவம் வைணவம் இஸ்லாம் கிறித்துவம் ஆகிய சமயங்களைக் குறிப்பிட ஒவ்வொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவை அனைத்தையும் உருவகங்கள் என்று குறிப்பிடுகிறார். அதில்தான் சிக்கல் எழுகின்றது.
Read 38 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(