மூலவர் : தன்வந்திரி
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : கீழ்ப்புதுப்பேட்டை
மாவட்டம் : வேலூர்
🙏🇮🇳1
திருவிழா:
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை உலகம் முழுவதும் உள்ள மக்களின் தேக ஆரோக்கியம் கருதி தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது.
🙏🇮🇳2
தல_சிறப்பு:
தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே சிறப்பு.
இத்துடன் மணம் கமழும் மூலிகை வனம், கவலைகள் போக்கும் காலச் சக்கரம் (27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் தனித் தனி விருட்சம் உள்ளது). இருபத்திநான்கு நேரமும் புகைந்து கொண்டிருக்கும் யாக சாலை,
🙏🇮🇳6
சுவாஹா பீடம், பஞ்ச தீபம் (அகண்ட தீபம்), பித்ரு தோஷம் நீக்கும் பாதம், திருவருள் அளிக்கும் குரு பிரார்த்தனை போன்ற சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளன.
🙏🇮🇳7
பிரார்த்தனை
பக்தர்கள் உடல் நலம் சம்பந்தப்பட்ட நோய்கள், திருமணத் தடை, குடும்பப் பிரச்சனை, வழக்குகள் போன்றவற்றுக்கு இங்கு பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.
🙏🇮🇳8
நேர்த்திக்கடன்:
இங்குள்ள மூலவருக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
🙏🇮🇳9
தலபெருமை:
வேதங்கள் நான்கு. அவையாவன: ரிக், யஜுர், சாமம், அதர்வணம். இவற்றோடு ஐந்தாம் வேதம் ஒன்றும் உண்டு. அதுதான்-ஆயுர்வேதம். எண்ணற்ற மகரிஷிகள், நம்மிடம் இருக்கும் மருத்துவ முறைகளை ஆராய்ந்து ஏராளமான மருத்துவ நூல்களை எழுதி இருக்கிறார்கள். இதன் தொகுப்பே ஆயுர்வேதம். 🙏🇮🇳10
அதாவது, மூலிகைகளை வைத்தே பல வியாதிகளைக் குணப்படுத்தும் முறைதான் இது. மனிதர்களின் ஆரோக்கியம் சிறந்து விளங்குவதற்கான பல நல்ல பயனுள்ள வழிமுறைகள் இந்த ஆயுர்வேதத்தில் உள்ளன. யுத்த சாஸ்திரத்தை (சஸ்திர சாஸ்திரம்) ரண வைத்தியம் எனவும் அழைப்பதுண்டு.
🙏🇮🇳11
அதாவது, போரில் காயம் பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள காயங்களை ஆற்றுவது சஸ்திர சாஸ்திரம் எனப்படும். தனுஷ் என்றால், யுத்தம், யுத்த சாஸ்திரம், சஸ்திர சாஸ்திரம் என்ற பொருட்களும் உண்டு. இந்த சாஸ்திரத்தை முழுமையாக அறிந்தவர் தன்வந்திரி பகவான். 🙏🇮🇳12
தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். 🙏🇮🇳13
இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரிய பகவானும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார். 🙏🇮🇳14
சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். 🙏🇮🇳15
அதாவது, சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு ஆகாயம் என்று பொருள். தன்வன் என்றால் ஆகாய லோகத்தில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம்.
🙏🇮🇳16
எனவே, இவரையே சூரியன் என்றும் சொல்வார்கள். ஸூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரிய பகவானையே குறிப்பிடுகிறது. தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தை சிருஷ்டித்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. 🙏🇮🇳17
தன்வந்திரியை வைத்திய ராஜா, ஆதர்ச மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது.
🙏🇮🇳18
சுமார் ஏழடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த பகவானின் திருமார்பில் வலப்பக்கம் தங்கத்தால் ஆன லட்சுமிதேவியின் ரூபம் இருக்கிறது. சற்றுக் கீழே கஜலட்சுமி காட்சி தருகிறாள். 🙏🇮🇳19
வலது மேல் கரத்தில் சக்கரம், வலது கீழ்க் கரத்தில் அமிர்த கலசம், இடது மேல் கரத்தில் சங்கு, இடது கீழ்க் கையில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி. 🙏🇮🇳20
வெள்ளியால் ஆன ஸ்டெதாஸ்கோப்பும் கைக்கடிகாரமும் வைத்து கத்தியும் இடுப்பில் பெல்ட்டுமாக தலைமை அலோபதி வைத்தியராகத் தரிசனம் தருகிறார்
இந்த தன்வந்திரி பகவான். இவர் பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடத்தில் தன்வந்திரி மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. 🙏🇮🇳21
இந்த தன்வந்திரி பகவான் சாதாரணமாக பிரதிஷ்டை ஆகவில்லை. மிகவும் கோலாகலமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சுமார் இரண்டு லட்சம் கி.மீ. தொலைவு பயணம் செய்து அதன் பின்தான் பிரதிஷ்டை ஆகி உள்ளார். 🙏🇮🇳22
தவிர 46 லட்சம் பக்தர்களால் 13 மொழிகளில் 147 நாட்டு மக்களால் எழுதித் தரப்பட்ட 54 கோடி தன்வந்திரி மந்திரம் இந்த விக்கிரகத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதிஷ்டைக்கு முன்பே நூற்றுக்கும் மேற்பட்ட தன்வந்திரி ஹோமம் இந்த இடத்தில் செய்யப்பட்டது. 🙏🇮🇳23
தற்போது தினமும் தன்வந்திரி ஹோமம் நடந்து வருகிறது. தீபாவளி தினத்தில் இந்த தன்வந்திரி பகவானுக்கு டாக்டர் கோட் அணிவித்து, டாக்டர் தன்வந்திரி என்று பொறிக்கப்பட்ட பேட்ஜையும் அணிந்து ஸ்பெஷலாகத் தரிசனம் தருவார்.
🙏🇮🇳24
தன்வந்திரி ஜயந்தி ஐப்பசி திரயோதசி என்பதால், அன்றைய தினம் திரளான பக்தர்கள் கூடி இருக்கும்போது தன்வந்திரியின் மகா மந்திரங்களைச் சொல்லி, நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம் இவை கலந்து தயாரித்து நிவேதிக்கப்படும் மருந்து 🙏🇮🇳25
தீபாவளியன்று ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. மற்றபடி சாதாரண தினங்களில் சுக்கு, வெல்லம் மட்டுமே பிரசாதம். 🙏🇮🇳26
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை உலகம் முழுதும் உள்ள மக்களின் தேக ஆரோக்கியம் கருதி தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது. 🙏🇮🇳27
தன்வந்திரி பகவான் மூலிகைகளோடு சம்பந்தப்பட்டவர் என்பதால், சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் மூலிகைச் செடிகள் பிரமாண்டமாக வளர்க்கப்பட்டுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் பச்சை மயம். மூலிகை வாசம்.
🙏🇮🇳28
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், சித்தி-புத்தி விநாயகர் திருக்கல்யாணம், முருகன் தெய்வானை-வள்ளி திருக்கல்யாணம், சீதா ராமசந்திர மூர்த்தி திருக்கல்யாணம், ஆரோக்கிய லட்சுமி-தன்வந்திரி திருக்கல்யாணம் என ஐந்து உத்ஸவங்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. 🙏🇮🇳29
திருமணமாகியும் புத்திரப் பேறு இல்லாமை மற்றும் குடும்ப நலத்துக்காக இந்த உத்ஸவத்தை ஜானவாஸம் தொடங்கி, மாங்கல்ய தாரணம் வரை விமரிசையாக நடத்த இருக்கிறார்கள்
🙏🇮🇳30
வாலாஜாபேட்டையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் எழுந்தருளி இருக்கும் தன்வந்திரி பகவானை தரிசித்து, நோய் இல்லா பெருவாழ்வு வாழ்வோம்.🙏🇮🇳31
தல_வரலாறு:
தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அவதாரம். உலகையே காத்து ரட்சிக்கும் மகாவிஷ்ணு, தன்வந்திரியாக அவதாரம் எடுக்க என்ன காரணம்? அசுரர்களுடன் எப்போதும் போராடி வருபவர்கள் தேவர்கள். அசுரர்களோடு ஏற்பட்ட மோதலில் பல சந்தர்ப்பங்களில் தேவர்கள் பலம் இழந்து போனார்கள்.
🙏🇮🇳32
உயிர்ப் பயம் ஏற்பட்டு விட்டது அவர்களுக்கு. எனவே, பிரம்மதேவனிடமும், தங்களின் தலைவனான இந்திரனிடமும் இது குறித்துக் கவலையுடன் முறையிட்டார்கள். 🙏🇮🇳33
இதன் விளைவாக, தேவர்களுக்குப் பூரண வாழ்வை வழங்குவதற்காகத் திருப்பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலில் இருந்து தன்வந்திரி பகவான் அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறும். 🙏🇮🇳34
இவர் தன் திருக்கரத்தில் வைத்திருக்கும் கலசத்தில் இருந்து வழங்கிய அமிர்தத்தை உண்டதனால்தான் தேவர்கள் பூரண ஆயுளைப் பெற்றார்கள். எனவே, தன்வந்திரி பகவானை மருத்துவத் துறையின் பிதாமகர் என்பர்.
🙏🇮🇳35
ஆயுர்வேத வைத்தியத்தை ஆராய்ந்து பல சிகிச்சை முறைகளை நமக்கு அருளியவர் தன்வந்திரி பகவான்.
இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்...
யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்...
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார்...
அடுத்த 10 ஆண்டுக்கு பா.ஜ.க. ஆட்சியே ! பிரதமர் மோடி இடத்திற்கு ராகுலால் வரவே முடியாது ! - பிரசாந்த் கிஷோர்!
பிரதமர் மோடியின் வலிமை என்ன என்பதை புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்திற்கு ராகுல்காந்தியால் வரவே முடியாது என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே பிரசாந்த் கிஷோர் கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.
பெட்ரோல் மீது மத்திய வரி குறைக்காதது, இந்தியாவை முந்தைய அரசு விட்டு சென்ற கடன் தொல்லையில் இருந்து மீட்பதற்கு - பிரதமர் வாக்கு மூலம்.
"நான் இந்தியாவின் பிரதமர் - நரேந்திர மோடி.
இந்த பொறுப்பை நீங்கள் எனக்குக் கொடுத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் பிரதமராக பதவியேற்றபோது இது ஒரு முள் சிம்மாசனமாக இருந்தது. முந்தைய அரசாங்கம் தனது 10 ஆண்டு பதவியில் ஏராளமான ஊழல் மற்றும் மோசடிகளுடன். . கிட்டத்தட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியிருந்தன. மேலும் அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருந்தது.
தக்காளி விலை ஏறிவிட்டது,
வெங்காயம் விலை ஏறிவிட்டது,
பருப்பு விலை ஏறிவிட்டது,
பால் விலை ஏறிவிட்டது, இவைகள்தான், பொதுமக்களின் தினசரி குமுறல்.!!!
நான் தெரியாமல் கேட்கிறேன்!!
என் மகனை என்ஜினியர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனை வக்கீல் ஆக்குவேன்
என்று கூறும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வேளாண்துறை வல்லுனராக்குவேன் என்றும், விவசாயி ஆக்குவேன் என்றும் கூறுவதில்லை..
COLGATE விலை ஏறலாம்,
HAMAM SOAP விலை ஏறலாம்,
PEPSI விலை ஏறலாம்,
CINEMA TICKET விலை ஏறலாம்,
KFC CHICKEN விலை ஏறலாம்,
THALAPAAKATU BRIYANI விலை ஏறலாம்,
GOLD விலை ஏறலாம்,
DIAMOND விலை ஏறலாம்,
எத்தனை பேர் இதற்காக கேள்வி கேட்டுள்ளீர்கள்???
கோவில்களில் விரைவில் அறங்காவலர்கள் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
சென்னை : 'கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விட்டால், அறங்காவலர் நியமன நடவடிக்கையை கண்காணிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு ஏற்படலாம்
ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:ஹிந்து கோவில்களில், அயல்பணி என்ற முறையில், அறநிலையத் துறை ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, அந்தந்த கோவில்களின் நிதியில் இருந்து சம்பளம், அலவன்ஸ் வழங்கப்பட வேண்டும்.