தி.மு.க என்றால் கரப்ஷன்,கலெக்ஷன்,கட்மணி! எல்லா துறைகளிலும் ஏகபோகமாக ஊழல்! எல்லா விபரங்களையும் வைத்திருக்கிறேன்! அண்ணாமலை போட்ட அடுத்த குண்டு! @annamalai_k
தமிழகத்தின் எங்கு பார்த்தலும் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தான் பேசிவருகிறார்கள். அதுவும் பாசிட்டிவாக ஏனென்றால்,அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது.திமுக செய்யவிருக்கும் மின்சார ஊழலை வெளிகொண்டு வந்தது மேலும் போக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் குறித்து பேசியது தான்.
மேலும் அண்ணாமலை கூறிய பிறகுபோக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு ஊழல் தடுக்கப்ட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யோக்கியமான ஆட்சியை தருவோம்’ என கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க.,
தொடர்ந்து ஊழல் செய்வதில் குறியாக இருக்கிறது.தி.மு.க. அரசை ‘கரப்ஷன்; கலெக் ஷன்; கட்மணி’ என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடக்கிறது.உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியை தமிழக பா.ஜ. செய்து வருகிறது.
அந்த வகையில் தான் மின்சார துறை ஊழல்கள் குறித்து கூறினேன். மின்சாரம் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அதற்கான பணம் கொடுக்கும்போது கமிஷன் பெறப்படுகிறது என கூறினேன்.அதற்கான ஆவணங்களை கேட்டனர்; பணம் கொடுத்ததற்கான ஆவணங்களையும் வெளியிட்டு விட்டேன்.
உடனே ‘இதுதான் ஆதாரமா?’ என்று கேட்கின்றனர்.செய்யும் தவறை திருத்திக் கொள்ளாமல் விமர்சனத்துக்கு பதில் விமர்சனமாக கேள்வி கேட்டு பிரச்னையை மூடி மறைக்க பார்க்கின்றனர்.அதே மாதிரி தான் ‘போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு தீபாவளிக்காக கொடுக்கப்படும் ‘சுவீட் பாக்ஸ்’ பரிசை கமிஷன் தொகை பேசி,
அதிக விலை கொடுத்து தனியாரிடம் வாங்கப் பார்க்கின்றனர்’ என குறிப்பிட்டேன்.தவறு என்றதும் பிரச்னையாகி விட்டது. உடனே அரசு நிறுவனமான ஆவினில் வாங்க முடிவெடுத்து அறிவித்து விட்டனர். இந்த விவகாரத்தில் முதல்வரே தலையிட்டு உத்தரவிட்டுள்ளார்.
அப்படியென்றால் முறைகேடு செய்ய தயாராக இருந்தனர் என்பது தானே பொருள்?தவறு நடக்க தடை போட்டு விட்டார் முதல்வர் என்றதும் பாராட்டினேன்.தவறு செய்யாமல் ஆட்சி செய்யட்டும்; அவர்களை பாராட்ட தயாராகத் தான் இருக்கிறோம்.செய்வது அத்தனையும் தவறு; முறைகேடு. சொன்னால் மட்டும் கோபம் வருகிறது.
தனியார் நிறுவனத்தில் குறைந்த அளவில் முதலீடு செய்துவிட்டு அந்நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்க அதிகவிலைக்கு ஒப்பந்தம் போட்டு பலநுாறு கோடிகளை சம்பாதிக்க திட்டமிட்டனர்.இதற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.அது தொடர்பான செய்தி வந்ததும் திமுக அரசின் மின் கொள்முதல் முறைகேடு என சொன்னேன்.
இப்படித் தான் மின் துறை போக்குவரத்துத் துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஏகபோகமாக ஊழல் நடக்கிறது. எல்லா விபரங்களையும் திரட்டி வைத்திருக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் பிறந்து வர மட்டாரா? கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா?’ பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.“தேசியத்தையும் தெய்வீகத்தையும்” தன் இரண்டு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தீவிரமான முருக பக்தர் பசும்பொன் தேவர் திருமகனார்.தேவர் திருமகனாரின் உயிர் பிரியும் வேளையில், அவர் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் ”முருகா, இந்த உலகத்தின் ஏழை மக்களைக் காப்பாற்று” என்பதாகும்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று.
சர்தார் வல்லபாய் படேல் அக்டோபர் 31 1875 குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.
இந்திய தேசிய காங்கிரஸில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானதாக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து,ஒன்றிணைந்த பாரதத்தை உருவாக்கினார்.
பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இணைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
பல்வேறு சர்ச்சைகள்,எதிர்ப்புகளை சமாளித்தார்.எனவே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
முஸ்லீம் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட சோமநாதபுரம் கோவிலை கே.எம்.முன்ஷி உடன் இணைந்து மீண்டும் எழுப்பினார்.
ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ஜிக்கல் அட்டாக்! தமிழகத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! இதெல்லாம் திமுக நினைக்காத ஒன்று!
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவர்.
இவரின் முழு பெயர் ரவீந்திர நாராயண் ரவி. 1952 ஆம் ஆண்டு பீஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தார்.1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.
பாஜக (BJP)வின் நேர்மறையான அணுகுமுறை அரசியல் மற்றும் வணிகத்தில் சமீபத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள்: @BJP4TamilNadu @annamalai_k
அண்ணாமலை அவர்களது நேர்மறை அரசியல் ஆவின் நிறுவனத்திற்கு லாபம்:
தீபாவளி கொண்டாட்டம் எதிரொலியாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில், 26 லட்சம் லிட்டர், பால் பாக்கெட்டுகளாகவும், எஞ்சியவை தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், இனிப்புகள், சாக்லேட் ஆகவும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினால்,
திமுகவின் இந்த தற்காலிக வெற்றி…ஜனநாயகத்தின் தற்காலிகத் தோல்வி… அண்ணாமலை @annamalai_k #தலைவர்100
திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தேர்தல் நாடகத்தின் இறுதிக்காட்சி உறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வழங்கப்பட்டுவிட்டது அதை நிறைவேற்ற மாற்றுக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் எல்லாம் கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம், #தலைவர்100
கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம்
காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம், மிகக் கேவலம். காரணமில்லாமல் தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீட்டின் முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் தீக்குளித்தார். #தலைவர்100
தமிழகத்திற்கு ரூ.183.67கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67கோடி என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை
தெரிவித்துள்ளது.
இத்துடன் 17 மாநிலங்களுக்கு, வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தின் 7-வது மாதத் தவணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தத் தொகை ரூ.9,871 கோடியாகும்.