பாஜக (BJP)வின் நேர்மறையான அணுகுமுறை அரசியல் மற்றும் வணிகத்தில் சமீபத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள்: @BJP4TamilNadu @annamalai_k
அண்ணாமலை அவர்களது நேர்மறை அரசியல் ஆவின் நிறுவனத்திற்கு லாபம்:
தீபாவளி கொண்டாட்டம் எதிரொலியாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில், 26 லட்சம் லிட்டர், பால் பாக்கெட்டுகளாகவும், எஞ்சியவை தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், இனிப்புகள், சாக்லேட் ஆகவும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினால்,
ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, 3.01 கோடி ரூபாய் மதிப்பிலான, 70 டன் இனிப்புகளை போக்குவரத்து துறை கொள்முதல் செய்துள்ளது.
இதுமட்டுமின்றி,
8,282 கிலோ சிறப்பு இனிப்புகள், 76.9 லட்சம் ரூபாய்க்கும்;
56 ஆயிரத்து 764 கிலோ வழக்கமான இனிப்புகள், 2.34 கோடி ரூபாய்க்கும்;
2.55 லட்சம் லிட்டர் நெய், 12.1 கோடி ரூபாய்க்கும்;
7,951 கிலோ பாதாம் மிக்ஸ் பவுடர், 30.8 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.
77 ஆயிரத்து 475 கிலோ இனிப்புகள், 3.98 கோடி ரூபாய்க்கு சிறப்பு ஆர்டர்கள் வாயிலாக விற்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையாரின் விளம்பரத்தால் ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துஉள்ளது. இது பாஜகவின் நேர்மறை அரசியலுக்கு கிடைத்த வெற்றி.
இந்த தகவல்கள் கொடுத்த தினமலர் நாளிதழுக்கு நன்றி.
அதே போல அண்ணாமலையாரின் அரை கூவலால் மிகப்பெரிய மின்வாரிய ஊழல் தடுக்கப் பட்டு உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு என்றும் இன்னும் இரன்டு நாட்களுக்கு தான் கையிருப்பு உள்ளது என்றும் 20 நாட்களாக தினமும் கூறிக் கொண்டு வந்தவர்கள் இப்போது கப்சிப்.
இதே போன்று சமீபத்தில் பாஜக வினர் சமூக வலைத்தங்கள் மூலம் 'No Binidi - No Busines' என்று பகிர்ந்ததால் ஹிந்து கலாச்சாரத்துக்கு எதிராக நெற்றியில் பொட்டு இல்லாமல் வந்த விளம்பரங்களின் பொருட்களை பகிஷ்கரித்தனர்.
எழுத்தாளர் ஷெபாலீ வைத்தியா ஆரம்பித்து வைத்த சமூக வலைதள கோஷம் 'பொட்டு இல்லையேல் பொருள் வாங்குவதில்லை" என்ற கோஷம் வலுப்பெற்று பாஜகவினால் அதிகம் பகிரப்பட்டு 327 கடைகளும் 1500 கோடி வியாபாரமும் உள்ள FAB India வியாபாரத்தை பெரிதும் பாதித்தது.
ஹிந்துக்களின் கலாச்சாரத்தை மதிக்காது உருது பெயரிலும், நெற்றியில் பொட்டு இல்லாமலும் விளம்பரம் செய்ததை எதிர்த்ததால் கடைகளில் யாரும் பொருள் வாங்கவில்லை. வேறு வழி இல்லாமல் அந்த விளம்பரத்தை நீக்கியது FAB India.
இதில் இருந்தாவது இந்துக்கள் உணர வேண்டும் ஒற்றுமையின் மகத்துவத்தை!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
இல்லையேல் ஹிந்துக்கள் நம் அனைவருக்கும் தாழ்வே!
உணர்ந்து ஒன்று பட்டு செயல் படுங்கள் பாஜக தலைமையில்!
பாஜக மட்டுமே தேச நலனில், அதன் வளர்ச்சியில், மக்களின் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டது என்பதும், நமது இந்திய, அதிலும் குறிப்பாக ஹிந்து கலாச்சாரம், பண்பாட்டை பேணி காப்பதிலும் பாஜகக்கு மட்டுமே அக்கறை உள்ளது என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது!
மீண்டும் பிறந்து வர மட்டாரா? கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா?’ பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.“தேசியத்தையும் தெய்வீகத்தையும்” தன் இரண்டு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தீவிரமான முருக பக்தர் பசும்பொன் தேவர் திருமகனார்.தேவர் திருமகனாரின் உயிர் பிரியும் வேளையில், அவர் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் ”முருகா, இந்த உலகத்தின் ஏழை மக்களைக் காப்பாற்று” என்பதாகும்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று.
சர்தார் வல்லபாய் படேல் அக்டோபர் 31 1875 குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.
இந்திய தேசிய காங்கிரஸில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானதாக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து,ஒன்றிணைந்த பாரதத்தை உருவாக்கினார்.
பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இணைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
பல்வேறு சர்ச்சைகள்,எதிர்ப்புகளை சமாளித்தார்.எனவே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
முஸ்லீம் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட சோமநாதபுரம் கோவிலை கே.எம்.முன்ஷி உடன் இணைந்து மீண்டும் எழுப்பினார்.
ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ஜிக்கல் அட்டாக்! தமிழகத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! இதெல்லாம் திமுக நினைக்காத ஒன்று!
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவர்.
இவரின் முழு பெயர் ரவீந்திர நாராயண் ரவி. 1952 ஆம் ஆண்டு பீஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தார்.1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.
தி.மு.க என்றால் கரப்ஷன்,கலெக்ஷன்,கட்மணி! எல்லா துறைகளிலும் ஏகபோகமாக ஊழல்! எல்லா விபரங்களையும் வைத்திருக்கிறேன்! அண்ணாமலை போட்ட அடுத்த குண்டு! @annamalai_k
தமிழகத்தின் எங்கு பார்த்தலும் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தான் பேசிவருகிறார்கள். அதுவும் பாசிட்டிவாக ஏனென்றால்,அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது.திமுக செய்யவிருக்கும் மின்சார ஊழலை வெளிகொண்டு வந்தது மேலும் போக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் குறித்து பேசியது தான்.
மேலும் அண்ணாமலை கூறிய பிறகுபோக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு ஊழல் தடுக்கப்ட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யோக்கியமான ஆட்சியை தருவோம்’ என கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க.,
திமுகவின் இந்த தற்காலிக வெற்றி…ஜனநாயகத்தின் தற்காலிகத் தோல்வி… அண்ணாமலை @annamalai_k #தலைவர்100
திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தேர்தல் நாடகத்தின் இறுதிக்காட்சி உறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வழங்கப்பட்டுவிட்டது அதை நிறைவேற்ற மாற்றுக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் எல்லாம் கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம், #தலைவர்100
கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம்
காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம், மிகக் கேவலம். காரணமில்லாமல் தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீட்டின் முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் தீக்குளித்தார். #தலைவர்100
தமிழகத்திற்கு ரூ.183.67கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67கோடி என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை
தெரிவித்துள்ளது.
இத்துடன் 17 மாநிலங்களுக்கு, வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தின் 7-வது மாதத் தவணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தத் தொகை ரூ.9,871 கோடியாகும்.