மீண்டும் பிறந்து வர மட்டாரா? கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா?’ பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.“தேசியத்தையும் தெய்வீகத்தையும்” தன் இரண்டு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தீவிரமான முருக பக்தர் பசும்பொன் தேவர் திருமகனார்.தேவர் திருமகனாரின் உயிர் பிரியும் வேளையில், அவர் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் ”முருகா, இந்த உலகத்தின் ஏழை மக்களைக் காப்பாற்று” என்பதாகும்.
அந்த அளவிற்கு ஏழை மக்கள் மீதும் தெய்வத்தின் மீதும் மாறாத அன்பையும் நம்பிக்கையையும் வைத்திருந்தார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.“நீறில்லாத நெற்றி பாழ்” என்று வீரத்துடன் முழங்கியதோடு மட்டுமல்லாமல் நெற்றி துலங்க திருநீறை அள்ளிப் பூசிய நம் தேவர் திருமகனார் இன்று,
திருநீற்றை அவமதிப்பதை அனுமதித்திருப்பாரா?இந்தியா முழுமையிலும் உள்ள பல்வேறு திருக்கோயில்களுக்கு நேரில் சென்று வழிபாடும் பூசைகளும் செய்த பெருமைக்குரியவர் தேவர் அவர்கள்.ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் நம்பிக்கையற்றவர்கள் கரங்களில் நசுக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டுதான்,
சும்மா இருந்திருப்பாரா?கோவில் நகைகளை எல்லாம் கொண்டு சென்று உருக்குவதற்குத்தான் அனுமதித்திருப்பாரா?மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புனிதத்தை மதிக்காமல் மீனாட்சி அம்மனை ஒருமையில் பேசிய ஒரு கட்சித் தலைவர் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டார்.
அந்த அளவுக்கு தெய்வீக வீரம் மிக்கவர் தேவர் திருமகன்.கடவுளை மறுத்துப் பேசிய எவருக்கும் மதுரையில் தேவர் திருமகனாரின் மண்ணில் சென்று பேச துணிவு எக்காலத்திலும் வந்ததில்லை.இக்காலத்தில் தேவர் திருமகனார் போற்றி வணங்கிய தேசபக்தியும் தெய்வபக்தியும் இல்லா தவர்கள்,
அதிகாரத்தின் துணையோடு தேசத்தையும் தெய்வீகத்தையும் தொடர்ந்து நிந்தனை செய்து கொண்டே இருக்கிறார்கள். தேசத்தின் ஒருமைக்கும், தெய்வத்தின் பெருமைக்கும் எதிராகச் செயல்படுவதைத் தன் சாதனையாகச் சொல்லிப் பெருமைப்படுகிறார்கள்.தேவர் திருமகனார் இல்லை என்ற துணிவினால்,
தேவரின் ஒவ்வொரு கொள்கையையும் தீவிரமாக எதிர்க்கும் அவர்கள் எந்த அடிப்படையில் தேவருக்கு மரியாதை செய்ய வருகிறார்கள்?கடவுளைப் பழித்தவர்களையும், கடவுளின் பிரசாதம் ஆகிய திருநீற்றை அவமதித்தவர்களையும், தேவர் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், ஓட ஓட விரட்டி இருப்பார்.
தேவரின் வழி வந்த வீரம், வீணாகப் போகலாமா? தொடர்ந்து கடவுள்களை நிந்தனை செய்பவர்களும், கடவுளை இழித்து, அவமதித்துப் பேசுபவர்களும், தேர்தல் ஓட்டுகளுக்காக ஒரு சாராரை உயர்த்தியும் மற்றொரு சாராரைத் தாழ்த்தியும் பேசிக் கொண்டு வருவதை கேட்டவுடன் தேவர் அவர்கள் வெகுண்டெழுந்து இருக்க மாட்டாரா?
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த தேவர் திருமகனார் மீண்டும் பிறந்து வரமாட்டாரா…? தமிழகத்தில் கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா….?“என்று என் மனம் ஏங்குகிறது.தேவர் அவர்களைத் தெய்வமாகக் கொண்டாடும், தமிழக மக்களே,நீங்கள்தான் தமிழக திருக்கோவில்களின் காவல் தெய்வங்கள்.
இன்றே உறுதி எடுப்போம் தமிழக திருக்கோவில்களில் அதன் நடைமுறைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்கள் தீர்மானிக்கட்டும்.இதுவே தேவர் அவர்களுக்குச் செய்யப்படும் உண்மை யான பூசை.அவர் வழியில் நிறுத்த ஏற்கும் சபதமே அவருக்கு காட்டும் நன்றிதேசத்தின் ஒருமைக்கும்,
தெய்வத்தின் பெருமைக்கும் எதிராகச் செயல்பட்டு, ஆலயங்களைப் புறக்கணிக்கும், தெய்வ நிந்தனைகளைத் தொடரும் இந்த காலத்தில் நம் தேவர் திருமகனார் இருந்திருக்கக் கூடாதா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன்.
அந்த மாபெரும் தெய்வ சக்தியாக விளங்கி நம்மை எல்லாம் வாழ்வித்துக் கொண்டிருக்கும் மனிதருள் மாணிக்கத்தை, தேவர் திருமகனாரை வணங்கி மகிழ்கிறேன்.நன்றி வணக்கம்.
:- அன்பு சகோதரன் அண்ணாமலை
என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று.
சர்தார் வல்லபாய் படேல் அக்டோபர் 31 1875 குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.
இந்திய தேசிய காங்கிரஸில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானதாக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து,ஒன்றிணைந்த பாரதத்தை உருவாக்கினார்.
பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இணைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
பல்வேறு சர்ச்சைகள்,எதிர்ப்புகளை சமாளித்தார்.எனவே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
முஸ்லீம் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட சோமநாதபுரம் கோவிலை கே.எம்.முன்ஷி உடன் இணைந்து மீண்டும் எழுப்பினார்.
ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ஜிக்கல் அட்டாக்! தமிழகத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! இதெல்லாம் திமுக நினைக்காத ஒன்று!
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவர்.
இவரின் முழு பெயர் ரவீந்திர நாராயண் ரவி. 1952 ஆம் ஆண்டு பீஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தார்.1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.
பாஜக (BJP)வின் நேர்மறையான அணுகுமுறை அரசியல் மற்றும் வணிகத்தில் சமீபத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள்: @BJP4TamilNadu @annamalai_k
அண்ணாமலை அவர்களது நேர்மறை அரசியல் ஆவின் நிறுவனத்திற்கு லாபம்:
தீபாவளி கொண்டாட்டம் எதிரொலியாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில், 26 லட்சம் லிட்டர், பால் பாக்கெட்டுகளாகவும், எஞ்சியவை தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், இனிப்புகள், சாக்லேட் ஆகவும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினால்,
தி.மு.க என்றால் கரப்ஷன்,கலெக்ஷன்,கட்மணி! எல்லா துறைகளிலும் ஏகபோகமாக ஊழல்! எல்லா விபரங்களையும் வைத்திருக்கிறேன்! அண்ணாமலை போட்ட அடுத்த குண்டு! @annamalai_k
தமிழகத்தின் எங்கு பார்த்தலும் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தான் பேசிவருகிறார்கள். அதுவும் பாசிட்டிவாக ஏனென்றால்,அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது.திமுக செய்யவிருக்கும் மின்சார ஊழலை வெளிகொண்டு வந்தது மேலும் போக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் குறித்து பேசியது தான்.
மேலும் அண்ணாமலை கூறிய பிறகுபோக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு ஊழல் தடுக்கப்ட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யோக்கியமான ஆட்சியை தருவோம்’ என கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க.,
திமுகவின் இந்த தற்காலிக வெற்றி…ஜனநாயகத்தின் தற்காலிகத் தோல்வி… அண்ணாமலை @annamalai_k #தலைவர்100
திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தேர்தல் நாடகத்தின் இறுதிக்காட்சி உறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வழங்கப்பட்டுவிட்டது அதை நிறைவேற்ற மாற்றுக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் எல்லாம் கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம், #தலைவர்100
கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம்
காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம், மிகக் கேவலம். காரணமில்லாமல் தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீட்டின் முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் தீக்குளித்தார். #தலைவர்100
தமிழகத்திற்கு ரூ.183.67கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67கோடி என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை
தெரிவித்துள்ளது.
இத்துடன் 17 மாநிலங்களுக்கு, வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தின் 7-வது மாதத் தவணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தத் தொகை ரூ.9,871 கோடியாகும்.