#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _10

• நேற்றைய தினம் சவிதா அம்பேத்கர் பற்றி கண்டோம் இன்று அதன் தொடர்ச்சியாக இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் பற்றி காண்போம்...

•இரமாபாய் பீம்ராவ்
அம்பேத்கர்.
•இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் (7 பிப்ரவரி 1898 - 27 மே 1935; இரமாய் அல்லது தாய் இரமா என்றும் அழைக்கப்படுகிறார்) பி.ஆர்.அம்பேத்கரின் முதல் மனைவியாவார்.
•இவர் தனது உயர் கல்வியையும் தனது உண்மையான திறனையும் தொடர உதவுவதில் ஆதரவாக இருந்ததாகக் அம்பேத்கர் கூறினார்.
•இவர் பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களில் இடம்பெற்றவர்.
•இந்தியா முழுவதும் பல அடையாளங்களுக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளன.

✓இரமாபாய் அம்பேத்கரின்
ஆரம்ப கால வாழ்க்கை.

•இரமாபாய் ஒரு ஏழைக் குடும்பத்தில்,
பிக்கு தத்ரே (வலங்கர்) மற்றும் ருக்மிணி ஆகியோருக்குப் பிறந்தார்.
•இவர் தனது மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் சங்கருடன் வனந்த் கிராமத்திற்கு அருகிலுள்ள மகாபுரா வட்டாரத்தில் வசித்து வந்தார்.
•இவரது தந்தை தபோல் துறைமுகத்திலிருந்து,
கூடை மீன்களை சந்தைக்கு கொண்டு சென்று வாழ்வாதாரத்தை சம்பாதித்தார்.
• இவர் சிறுமியாக இருந்தபொழுது இவரது தாயார் இறந்தார்.
• பின்னர், தந்தையும் இறந்த பிறகு இவரது மாமாக்கள் குழந்தைகளை தங்களுடன் மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.
•திருமணம்.
•இரமாபாய் 1906 ஆம் ஆண்டில் மும்பையின் பைகுல்லாவின் காய்கறி சந்தையில் மிகவும் எளிமையான விழாவில் அம்பேத்கரை மணந்தார்.
•அப்போது, அம்பேத்கருக்கு 15 வயது, இரமாபாய்க்கு ஒன்பது வயது.
•அம்பேத்கர் இவரை பாசமாக "இராமு", என்றும், இவர் அம்பேத்கரை,
"சாகேப்" என்று அழைத்துக் கொண்டனர்.
•இவர்களுக்கு யசுவந்த், கங்காதர், ரமேசு, இந்து (மகள்) மற்றும் இராசரத்னா ஆகிய ஐந்து குழந்தைகள் இருந்தனர்.
•யசுவந்த் (1912-1977) தவிர, மற்ற நான்கு பேரும் தங்கள் குழந்தை பருவத்திலேயே இறந்தனர்.
•இறப்பு.
•இரமாபாய் 1935 மே 27 அன்று மும்பையின் தாதர், இந்து காலனியில் உள்ள இராசகிருகத்தில் நோய்வாய்பட்டு இறந்தார்.
•இவர் அம்பேத்கரை மணந்து 29 ஆண்டுகள் ஆகியிருந்தது.

•கணவரின் கடமை.

•1941 இல் வெளியிடப்பட்ட பி.ஆர்.அம்பேத்கரின்,
"பாக்கித்தான் பற்றிய எண்ணங்கள்" என்ற புத்தகம் இரமாபாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டது.
•முன்னுரையில், அம்பேத்கர் தன்னை ஒரு சாதாரண பிவா அல்லது பீமாவிலிருந்து டாக்டர் அம்பேத்கராக மாற்றியமைத்ததைப் பாராட்டுகிறார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோல்ட்ஃபிஷ்_official 🐠

கோல்ட்ஃபிஷ்_official 🐠 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @goldfish_officl

31 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _9

•சவிதா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்டோம் அதன் தொடர்ச்சியாக....

• சவிதா அம்பேத்கரின்
திருமணம்.
•ஏப்ரல் 15, 1948 அன்று சாரதா கபீர் பீம்ராவ் அம்பேத்கரை மணந்தார்.
•அப்போது இவருக்கு வயது 39, அமேத்கருக்கு வயது 57.
•அவர்களது திருமணத்திற்குப் பிறகு, அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் இவரை பிரபலமாக "மா" (தாய்) என்று அழைத்தனர்.
•திருமணத்திற்குப் பிறகு சாரதா 'சவிதா' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
•ஆனால் அம்பேத்கர் இவரை "செரா" என்று பழைய பெயரில் அழைப்பார்.

•பௌத்த மதத்திற்கு
மாற்றம்.

•1956 14 அக்டோபர் அன்று அசோக விசய தசமி,
Read 16 tweets
30 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _8

அம்பேத்கரின் வாழக்கை வரலாறு அதன் தொடர்ச்சியாக....

•சவிதா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம்.

•சவிதா பீம்ராவ் அம்பேத்கர் 27 சனவரி 1909 - 29 மே 2003, சாரதா கபீர் என்ற பெயரில்,
பிறந்த இவர் ஒரு இந்திய சமூக ஆர்வலரும், மருத்துவரும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் இரண்டாவது மனைவியுமாவார்.

•அம்பேத்கரை பின்பற்றுவர்களும், பௌத்த மதத்தினரும் இவரை மா அல்லது மாசாகேப் (மராத்தி மொழியில் அம்மா) என்று அழைத்தனர்.
•அம்பேத்கரின் பல்வேறு இயக்கங்களில், புத்தகங்கள், இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்து குறியீடு சட்டங்கள் மற்றும் தலித் பௌத்த இயக்கங்களின் போது, இவர் அவ்வப்போது அவருக்கு உதவினார்.

•எட்டிலிருந்து பத்து ஆண்டுகளாக தனது வாழ்க்கையை நீட்டித்ததற்காக அம்பேத்கர் தனது,
Read 18 tweets
29 Oct
தோழர் @Matty96612593 கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று நாம் காண இருப்பது குலாப் ஜாமுனின் வரலாறு 😍

#உணவே_மருந்து.
#im_foodie.
•குலாப் ஜாமுன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் பிரபலமான திட-பால் சார்ந்த இனிப்பு வகையாகும். ,
•மொரிஷியஸ் பிஜி, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மலாய் தீபகற்பம், கரிபியன் நாடுகள், ஜமைக்கா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது.
•இது பெரும்பாலும் திட பால் பொருட்கள், கோயாவில் (பால் குறுக்கப்பட்டு மாவு போன்று மாற்றப்படுதல்) இருந்து தயாரிக்கப்படுகிறது.
•தற்காலத்தில் கோயாவிற்கு பதிலாக உலர்த்தி பொடியாக்கிய பால் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பாதாம் சேர்த்து அரைத்து சுவை அதிகரிக்கப்படுகிறது.

✓மாற்றுப் பெயர்கள்.

•குலாப் ஜாமுன்
(வட இந்தியா/பாகிஸ்தான்),
Read 9 tweets
28 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _7

அம்பேத்கரின் சிறப்பம்சம் தொடர்ச்சியாக....

•இந்திய அரசியலமைப்பில்
பங்கு.

•இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை ,
உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது.
•அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார்.
•ஆகத்து 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.
•அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.
•அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின்உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது.
Read 15 tweets
27 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _6

•இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.
•இவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது,
அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

•(1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952-ல் அந்த சட்டம் நிறைவேறியது)
சமூக நீதிப் போராளி முனைவர் அம்பேத்கர் 1956 - திசம்பர் 6 அன்று காலமானார்.

•அம்பேத்கரின் மரணம்.

•1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
•இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும்,
Read 18 tweets
26 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _5
•தீக்சாபூமி
தீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப் பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலமாகும்.
•இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
•வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும்,
இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.

•தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
•தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக்,
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(