மஹாபாரதத்தில் அநுசாஸனிக பர்வத்தில் பீஷ்மர் ஸகல தர்மங்களையும் தர்ம புத்ரருக்கு உபதேசிக்கும்போது கோஸம்ரக்ஷணத்தையும் சொல்லி கோ மஹிமையை எடுத்துக் கூறுகிறார். நஹுஷ மஹாராஜனுக்கு ச்யவனர் என்ற மஹரிஷியை விலை கொடுத்து வாங்கும்படியாக ஒரு ஸந்தர்பம், நிர்பந்தம் ஏற்படுகிறது. `[மூவுலகும்
அடங்கும்] தன் த்ரைலோக்ய ராஜ்யம் முழுதையும் விலை கொடுத்தாலும் அந்த உத்தம ரிஷிக்கு ஈடாகாதே! எதைத் தருவது?’ என்று புரியாமல் அவன் தவிக்கிறான். அப்போது பசுவின் வயிற்றில் பிறந்த ஒரு ரிஷி அவனிடம் வந்து ஒரு பசுவை அவருக்கு விலையாகத் தந்தால் போதுமானது என்கிறார். அவர் சொன்னதை ச்யவனரும்
மனஸார ஒப்புக் கொண்டு, ‘கோவுக்கு ஈடான எந்த இன்னொரு செல்வமும் நான் காணவில்லை – கோபிஸ்துல்யம் ந பச்யாமி தநம் கிஞ்சித்’ என்று சொல்கிறார். அப்படியே நஹுஷ மஹாராஜாவும் கோவைக் கொடுத்து அவரை வாங்கி அப்புறம் அவரை ஸ்வதந்திரமாக விட்டு விடுகிறான். கோதானத்துக்கு மிஞ்சி ஒரு புண்யமுமில்லை. பாப
பரிஹாரத்துக்கு அதுவே பெரிய மருந்து. தானம் வாங்குபவர் அதை நன்றாக ஸம்ரக்ஷித்து வைத்துக் கொள்ளக் கூடியவர்தான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டே கோதானம் செய்ய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் mahaperiyavaa.blog/2021/11/01/sri…
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கஷ்டப்படுகிறோம். அதற்கு நிவர்த்தி செய்ய பரிகாரம் செய்கிறோம். ஆனாலும் துன்பப் படுகிறோமே என்று நினைப்பவர்களுக்கு-பரிகாரம் என்பது என்ன என்பதை விளக்கும் கதை இது. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த
ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பணத்தை செலுத்தினார். அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து ஐயோ அம்மா என்ற குரல்
கேட்டது. யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தார். அங்கு பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான். இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே என்று பதைபதைத்த அரசன் உடனே காவலாளிகளை கூப்பிட்டு, இவன் பெற்றோர் அருகே தான்
மயில் வாகனம் முருகனுக்கு, ஹம்ச வாகனம் சரஸ்வதிக்கு, கருட வாகனம் திருமாலுக்கு, ரிஷப வாகனம் சிவபெருமானுக்கு. முனி வாகனம்? ஒரு மனிதரையே வாகனமாக அவர் மேல் ஏறி (அரங்கன் கோவில்பட்டர்) திருவரங்கம் வந்தவர் திருப்பாணாழ்வார். அதன்பின் அரங்கனுடன் ஐக்கியமாகிய திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே
அவன் பரிசுத்தமானவன். உலகுக்கெல்லாம் மூலகாரணமானவன். உலகப் பற்றுக்களில் மயங்கிக் கிடக்கும் என்னைத் தன்னுடைய அடியார்களுக்கு ஆட்படுத்தியவன். நித்ய சூரிகளுக்குத் தலைவன். அவன் மணம்மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருமலையிலே (திருப்பதி) தங்கி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் வீர சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பகுதியை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தனர். அவனது கோட்டையையும் கைப்பற்றினர்.
அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்று விடுவார்கள்.
சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனம் குளிரட்டும் என்று எண்ணி அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டு
விடுகின்றனர். அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, பல்லக்கில் இருப்பது யார் என்று தனது தளபதியிடம் கேட்க, மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தில் இருக்க முடியாது. எனவே
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா (பூஜாரி) பூரியில் இருந்து ராஜ்புதனத்திற்கு (இன்றைய ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம் மழைக்காலமாக இருந்ததால் மன்னர் அவரை அரண்மனையில் சிறிது காலம் தங்கி செல்ல
விண்ணப்பித்தார். மன்னரின் விருப்பப்படி அங்கேயே சிறுது காலம் தங்கினார். மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள் அவளது பெயர் விஷ்ணுபிரியா பெயருக்கு ஏற்றார் போல் அவள் பகவான் விஷ்ணுவையே எப்போதும் பூஜித்து வந்தாள். பூரியிலிருந்து விஷ்ணுவின் பிரதிநிதியாக ஒரு பூஜாரி அரண்மனைக்கு வந்திருப்பதால்
அவர் தேவைகளை அதிக அக்கறையோடு கவனித்து கொண்டாள். மேலும் பாண்டா தன் மனதினுள் விஷ்ணுபிரியா பகவான் ஜெகநாதருக்கு சமர்ப்பிக்க ஏதாவது கொஞ்சம் வெகுமதிகளை அவரது பிரதிநிதி என்ற முறையில் தன்னிடம் நிச்சயம் வழங்குவார் என்று நினைத்தார். இறுதியாக அந்த நாளும் வந்தது. பாண்டா பூரிக்கு திரும்ப
#கோனேரிராஜபுரம் நடராஜரின் சிறப்பு.
சோழ மன்னன் ஒரு மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால் தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்
சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு
நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு
#கோரக்கர் ஒரு சமுத்திரம். அவரின் குரு ஸ்ரீ #மச்சேந்திரநாதர் ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக்
கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின்
கருணையாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டி உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார், இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார், கிடைத்தால் உண்பார் இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல் வனங்களின்