மயில் வாகனம் முருகனுக்கு, ஹம்ச வாகனம் சரஸ்வதிக்கு, கருட வாகனம் திருமாலுக்கு, ரிஷப வாகனம் சிவபெருமானுக்கு. முனி வாகனம்? ஒரு மனிதரையே வாகனமாக அவர் மேல் ஏறி (அரங்கன் கோவில்பட்டர்) திருவரங்கம் வந்தவர் திருப்பாணாழ்வார். அதன்பின் அரங்கனுடன் ஐக்கியமாகிய திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
பெருமானின் ஸ்ரீவத்சம் என்னும் மறுவின் அம்சமாகத் தோன்றியவர் திருப்பாணாழ்வார். பாணர் குலத்தில் அவதரித்ததால் பாணர் என்றழைக்கப்பட்டார்.
அமலன், ஆதிபிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன், விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன், நீள்மதில் அரங்கத்தம்மான்
திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே
அவன் பரிசுத்தமானவன். உலகுக்கெல்லாம் மூலகாரணமானவன். உலகப் பற்றுக்களில் மயங்கிக் கிடக்கும் என்னைத் தன்னுடைய அடியார்களுக்கு ஆட்படுத்தியவன். நித்ய சூரிகளுக்குத் தலைவன். அவன் மணம்மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருமலையிலே (திருப்பதி) தங்கி
நான் விரும்பாமலே, நான் கேட்கும் முன்பாகவே எனக்கு அருள் செய்தவன். உயர்ந்த மதில்களை உடைய திருவரங்கத்தில் கண்வளரும் அப்பெருமானின் திருவடித் தாமரைகள் தாமே வந்து என் கண்களுக்குள்ளே புகுந்தது போலிருந்தது.
இது தான் அவர் இயற்றிய முதல் பாசுரம். அவர் இயற்றியது பத்தே பாசுரங்கள் தாம்.
நாலாயிரத்தில் அவர் இயற்றியது அவரின் முதல் பாசுரத்தின் முதல் இரண்டு சொற்களால் குறிப்பிடப்படுகின்றன - அமலனாதிபிரான். அவர் இயற்றிய பத்துப் பாடல்களின் கடைசிப் பாடல்
'கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள்
மற்றொன்றினைக் காணாவே'
நீலமேக வண்ணன், ஆயர்குலத்தில் பிறந்த வெண்ணையுண்ட வாயன், அவன் என் நெஞ்சைக் கொள்ளை கொண்டான். அண்டங்களுக்கெல்லாம் தலைவனான அவன் திருவரங்கத்தில் அழகாகக் கண்வளர்பவன். உண்ண உண்ணத் தெவிட்டாத அமுதம்போன்ற அவனைக் கண்டு சேவித்த கண்கள் வேறெதையும் சேவிக்குமா? ஆரா அமுதனான
அவனுடைய அழகைக் கண்டு களித்த கண்கள் வேறு எதையும் கண்டு களிக்குமா? கண்டு களிக்கவும் பாணர் விரும்பவில்லை.
மற்ற ஆழ்வார்கள் தங்கள் ஊரையும் பெயரையும் பாசுரக் கணக்கையும் கூறியதுபோல இவர் தம் பெயரையோ ஊரையோ குறிப்பிட வில்லை. அரங்கநாதா, உன்னைக் கண்ணாரக் கண்டபின்,உன்னைக் கண்ட கண்கள் வேறு
எதையும் பார்க்க விரும்புமா? என்று கேட்டவுடன் அரங்கன் திருப்பாணாழ்வாரைத் தன் மேனியோடு சேர்த்துக் கொண்டார்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

3 Nov
கஷ்டப்படுகிறோம். அதற்கு நிவர்த்தி செய்ய பரிகாரம் செய்கிறோம். ஆனாலும் துன்பப் படுகிறோமே என்று நினைப்பவர்களுக்கு-பரிகாரம் என்பது என்ன என்பதை விளக்கும் கதை இது. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த
ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பணத்தை செலுத்தினார். அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து ஐயோ அம்மா என்ற குரல்
கேட்டது. யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தார். அங்கு பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான். இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே என்று பதைபதைத்த அரசன் உடனே காவலாளிகளை கூப்பிட்டு, இவன் பெற்றோர் அருகே தான்
Read 17 tweets
3 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் வீர சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பகுதியை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தனர். அவனது கோட்டையையும் கைப்பற்றினர்.
அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்று விடுவார்கள்.
சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனம் குளிரட்டும் என்று எண்ணி அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டு
விடுகின்றனர். அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, பல்லக்கில் இருப்பது யார் என்று தனது தளபதியிடம் கேட்க, மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தில் இருக்க முடியாது. எனவே
Read 8 tweets
2 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா (பூஜாரி) பூரியில் இருந்து ராஜ்புதனத்திற்கு (இன்றைய ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம் மழைக்காலமாக இருந்ததால் மன்னர் அவரை அரண்மனையில் சிறிது காலம் தங்கி செல்ல
விண்ணப்பித்தார். மன்னரின் விருப்பப்படி அங்கேயே சிறுது காலம் தங்கினார். மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள் அவளது பெயர் விஷ்ணுபிரியா பெயருக்கு ஏற்றார் போல் அவள் பகவான் விஷ்ணுவையே எப்போதும் பூஜித்து வந்தாள். பூரியிலிருந்து விஷ்ணுவின் பிரதிநிதியாக ஒரு பூஜாரி அரண்மனைக்கு வந்திருப்பதால்
அவர் தேவைகளை அதிக அக்கறையோடு கவனித்து கொண்டாள். மேலும் பாண்டா தன் மனதினுள் விஷ்ணுபிரியா பகவான் ஜெகநாதருக்கு சமர்ப்பிக்க ஏதாவது கொஞ்சம் வெகுமதிகளை அவரது பிரதிநிதி என்ற முறையில் தன்னிடம் நிச்சயம் வழங்குவார் என்று நினைத்தார். இறுதியாக அந்த நாளும் வந்தது. பாண்டா பூரிக்கு திரும்ப
Read 15 tweets
1 Nov
மஹாபாரதத்தில் அநுசாஸனிக பர்வத்தில் பீஷ்மர் ஸகல தர்மங்களையும் தர்ம புத்ரருக்கு உபதேசிக்கும்போது கோஸம்ரக்ஷணத்தையும் சொல்லி கோ மஹிமையை எடுத்துக் கூறுகிறார். நஹுஷ மஹாராஜனுக்கு ச்யவனர் என்ற மஹரிஷியை விலை கொடுத்து வாங்கும்படியாக ஒரு ஸந்தர்பம், நிர்பந்தம் ஏற்படுகிறது. `[மூவுலகும் Image
அடங்கும்] தன் த்ரைலோக்ய ராஜ்யம் முழுதையும் விலை கொடுத்தாலும் அந்த உத்தம ரிஷிக்கு ஈடாகாதே! எதைத் தருவது?’ என்று புரியாமல் அவன் தவிக்கிறான். அப்போது பசுவின் வயிற்றில் பிறந்த ஒரு ரிஷி அவனிடம் வந்து ஒரு பசுவை அவருக்கு விலையாகத் தந்தால் போதுமானது என்கிறார். அவர் சொன்னதை ச்யவனரும்
மனஸார ஒப்புக் கொண்டு, ‘கோவுக்கு ஈடான எந்த இன்னொரு செல்வமும் நான் காணவில்லை – கோபிஸ்துல்யம் ந பச்யாமி தநம் கிஞ்சித்’ என்று சொல்கிறார். அப்படியே நஹுஷ மஹாராஜாவும் கோவைக் கொடுத்து அவரை வாங்கி அப்புறம் அவரை ஸ்வதந்திரமாக விட்டு விடுகிறான். கோதானத்துக்கு மிஞ்சி ஒரு புண்யமுமில்லை. பாப
Read 4 tweets
1 Nov
#கோனேரிராஜபுரம் நடராஜரின் சிறப்பு.
சோழ மன்னன் ஒரு மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால் தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான்
சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு, சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. மன்னன் கூறிச் சென்ற கால அவகாசம் நெருங்க, நெருங்க சிற்பிக்கு கவலையும், ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக ஒரு
நாள் சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (பஞ்சலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமான் புலையன் உருவத்தில், கையில் நான்கு வேதங்களையும் நாய்களாக பிடித்துக் கொண்டு வந்தார். அவருடன் அம்பிகை தலையில் கள் குடத்தை சுமந்தபடி முருகப்பெருமானை சிறு
Read 10 tweets
1 Nov
#கோரக்கர் ஒரு சமுத்திரம். அவரின் குரு ஸ்ரீ #மச்சேந்திரநாதர் ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக்
கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின்
கருணையாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டி உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார், இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார், கிடைத்தால் உண்பார் இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல் வனங்களின்
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(