கஷ்டப்படுகிறோம். அதற்கு நிவர்த்தி செய்ய பரிகாரம் செய்கிறோம். ஆனாலும் துன்பப் படுகிறோமே என்று நினைப்பவர்களுக்கு-பரிகாரம் என்பது என்ன என்பதை விளக்கும் கதை இது. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த
ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பணத்தை செலுத்தினார். அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து ஐயோ அம்மா என்ற குரல்
கேட்டது. யாரையோ தவறுதலாக கொன்றுவிட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தார். அங்கு பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான். இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே என்று பதைபதைத்த அரசன் உடனே காவலாளிகளை கூப்பிட்டு, இவன் பெற்றோர் அருகே தான்
எங்காவது இருக்கவேண்டும்.
உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள் என்று கட்டளை இட்டான். வீரர்கள் நாலாபக்கமும் விரைந்து ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர். இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில் என்று மன்னனிடம் கூறினார்கள்.
அரசன் காவலர்களிடம் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு சொன்னார். தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான். பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை
மற்றொரு தட்டில் வைத்தான். மக்களை காக்க வேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன்.
பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன். நான் செய்த தவறுக்கு #பிராயச்சித்தம் (பரிகாரம்) இது தான். இதோ ஒரு தட்டு நிறைய
பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.
அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று தனது கிரீடத்தை கழற்றி
மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தார் அரசன். சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தார். ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும், அல்லது மன்னரை கொல்ல வேண்டும் அப்படித்தனே? நான் எதைச் செய்யப் போகிறேன்
என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே என்றார் விறகுவெட்டி. நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல. என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். ஐயோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப்போகிறான் போலிருக்கிறதே எல்லாரும்
வெடவெடத்து போனார்கள். விறகு வெட்டி தொடர்ந்தார். நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன். அவரோ வருந்திக்
கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும். மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை
மன்னிக்காது. அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக்கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும். மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டார் விறகுவெட்டி.
அந்த மன்னன் தான் நாம். நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை. அந்த விறகுவெட்டி தான் இறைவன். இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று! இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும். பரிகாரம் என்பது ஒரு உபாயம் அவ்வளவே. அதுவே இறுதியானது அல்ல. நாம் செய்யும்
பரிகாரங்களை எல்லாம் இறைவன் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கில்லை. ஆனால், நாம் என்ன நினைத்து பாவ மன்னிப்பு கேட்கிறோம், அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம் என்பது இங்கே மிகவும் முக்கியம். இயந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.
எத்தனை கோடிகள்
கொட்டிக் கொடுத்தாலும், எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் செய்த பாவத்திற்கு மனம்திருந்தி கண்ணீர்விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய பாவமன்னிப்பு என்பது கிடையாது. அடுத்த முறை என்ன பரிகாரம் செய்தாலும் நாம் செய்த குற்றத்திற்கு (பாவத்திற்கு) பிராயச்சித்தமாகத் தான் இதை செய்கிறோம்
என்று உணர்ந்து கடந்தகால / முன்ஜென்ம தவறுக்கு வருந்தி, கண்ணீர் விட்டு பாவமன்னிப்பு கேட்கும் ஒருவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில்தான் ஒருவர் பரிகாரம் செய்யவேண்டும். உடனே பலன் கிடைப்பது உறுதி.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
கந்த ஸஷ்டி விரதம் பற்றிய பதிவு: தேவர்களுக்குப் பெருந்துன்பத்தை விளைத்த சூரபத்மனையும், அவனது அசுரர் கூட்டத்தையும் அழிக்கச் சிவபெருமான் முருகப் பெருமானைத் தோற்றுவித்து அவருக்கு உருத்திரர்களின் அம்சமான பதினோரு படைக் கலங்களையும் அளித்தார். பின்னர் பராசக்தி தனது சக்தி அம்சத்திலிருந்து
வேலாயுதத்தைத் தோற்றுவித்து முருகப்பெருமானுக்கு அளித்தார். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். சூரசம்ஹார விழாவின் அங்கமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சக்தியிடம் வேல் வாங்கும் விழா என்று பெயர். பெரிய சிவாலயங்களில்
சிறப்புமிக்க முருகன் ஆலயங்களில் சில அம்மன் கோயில்களிலும் கந்தர் சஷ்டியினை ஒட்டி நடத்தப்படும் பெருவிழா சூரசம்ஹார பெருவிழாவாகும். இது தீபாவளிக்கு மறுநாளான பிரதமையில் தொடங்கி சஷ்டியில் நிறைவு பெறும். இதவே கந்தர் சஷ்டி விரதம். பிரதமையில் தொடங்கி முருகனுக்கு இந்த ஆறு நாட்களிலும் காலை,
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஹோட்டல் உரிமையாளர் மாணிக்கம் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது பெரியவர் சின்னையன் மதிய உணவுக்கு எவ்வளவு பணம் என கேட்டார். உரிமையாளர் மாணிக்கம் மீன் குழம்புடன் 50 மீன் இல்லாமல் 20 ரூபாய் என்றார். கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை
எடுத்து உரிமையாளரை நோக்கி நீட்டினார் 65 வயது பெரியவர் சின்னையன். இதுவே என் கையில் உள்ளது. இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க. வெறும் சாதமானாலும் பரவாயில்லை. எனக்கு மிகுந்த பசி. நேற்று முதல் எதுவும் சாப்பிடவில்லை என்று சொல்லத் தயங்கியபடியே அவர் தொண்டை நடுங்கியது. ஹோட்டல்
உரிமையாளர் மாணிக்கம் மீன் குழம்போடு, அனைத்தையும் அவருக்கு பரிமாறினார். பெரியவர் சின்னையன் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன. நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? பொறுமையாக சாப்பிடுங்கள் அய்யா. அந்த வார்த்தையைக் கேட்டவரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார், எனது கடந்த கால
#HappyDeepavali#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது நரகாசுர சதுர்தசி என்பார்கள். நம் பண்டிகைகளில் தீபத்திற்கு முக்கியத்துவம் உண்டு. தீபம் இல்லாத வழிபாடே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக
தீபாவளி அன்று வரிசையாய் விளக்கேற்றி வைக்கும் போது, புற இருள் மட்டுமின்றி, அக இருளும் அழிந்து போகும். இதற்கு காரணம் தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து வருகின்றனர் என்ற நம் ஐதீகமே. தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரத்தை மஹாவிஷ்ணுக்கும்,
பூமாதேவிக்கும் மகனாக
பிறந்தவன் நரகாசுரன். முதலில் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான். அவன் வளர வளர தன்னுடைய அசுர குணதிற்கே உரித்தான அம்சத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். தவத்தில் சிறந்த மகரிஷிகள், குருமார்கள் போன்றவர்களை இகழவும் செய்தான். ஈரேழு லோகங்களை
மயில் வாகனம் முருகனுக்கு, ஹம்ச வாகனம் சரஸ்வதிக்கு, கருட வாகனம் திருமாலுக்கு, ரிஷப வாகனம் சிவபெருமானுக்கு. முனி வாகனம்? ஒரு மனிதரையே வாகனமாக அவர் மேல் ஏறி (அரங்கன் கோவில்பட்டர்) திருவரங்கம் வந்தவர் திருப்பாணாழ்வார். அதன்பின் அரங்கனுடன் ஐக்கியமாகிய திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே
அவன் பரிசுத்தமானவன். உலகுக்கெல்லாம் மூலகாரணமானவன். உலகப் பற்றுக்களில் மயங்கிக் கிடக்கும் என்னைத் தன்னுடைய அடியார்களுக்கு ஆட்படுத்தியவன். நித்ய சூரிகளுக்குத் தலைவன். அவன் மணம்மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருமலையிலே (திருப்பதி) தங்கி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் வீர சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பகுதியை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தனர். அவனது கோட்டையையும் கைப்பற்றினர்.
அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்று விடுவார்கள்.
சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனம் குளிரட்டும் என்று எண்ணி அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டு
விடுகின்றனர். அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, பல்லக்கில் இருப்பது யார் என்று தனது தளபதியிடம் கேட்க, மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தில் இருக்க முடியாது. எனவே
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா (பூஜாரி) பூரியில் இருந்து ராஜ்புதனத்திற்கு (இன்றைய ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம் மழைக்காலமாக இருந்ததால் மன்னர் அவரை அரண்மனையில் சிறிது காலம் தங்கி செல்ல
விண்ணப்பித்தார். மன்னரின் விருப்பப்படி அங்கேயே சிறுது காலம் தங்கினார். மன்னருக்கு ஒரு மகள் இருந்தாள் அவளது பெயர் விஷ்ணுபிரியா பெயருக்கு ஏற்றார் போல் அவள் பகவான் விஷ்ணுவையே எப்போதும் பூஜித்து வந்தாள். பூரியிலிருந்து விஷ்ணுவின் பிரதிநிதியாக ஒரு பூஜாரி அரண்மனைக்கு வந்திருப்பதால்
அவர் தேவைகளை அதிக அக்கறையோடு கவனித்து கொண்டாள். மேலும் பாண்டா தன் மனதினுள் விஷ்ணுபிரியா பகவான் ஜெகநாதருக்கு சமர்ப்பிக்க ஏதாவது கொஞ்சம் வெகுமதிகளை அவரது பிரதிநிதி என்ற முறையில் தன்னிடம் நிச்சயம் வழங்குவார் என்று நினைத்தார். இறுதியாக அந்த நாளும் வந்தது. பாண்டா பூரிக்கு திரும்ப