அறுபடை வீடுகளில் திருத்தனியில் மட்டும் சூரசம்ஹாரம் நடை பெறுவதில்லை. மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்கின்றன புராணங்கள். அதனால் தான் திருத்தணியில் முருகனின்
சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. மலைகளில் சிறந்தது திருத்தணிகை என்று போற்றுகிறது கந்த புராணம். திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை
புராணம். தேவர்களது துயர் தீர்க்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து முருகப்பெருமான் சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது. தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும்
ஒரு பொருளாதலின், அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை என்று கொள்ளுதலும் பொருந்தும்.
தேவர்களது அச்சம் தணிந்த தலம்; அடியவர்களது துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றை தணிக்கும் திருத்தணி முருகனை வணங்குவோம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A beautiful story from #SrimadBhagavatam. There was a rich man who was devoted to Krishna. He used to observe the ekadashi vratam every month and the next day he would feed the pious people as It is considered a great punyam to do so. Pleased with his vratam, Krishna appeared
before him one day and said 'Ask me for a boon! You are doing so much wonderful work.' The rich man said, 'If you bless me with more wealth, I will be happy to do this service on a large scale.' Krishna blessed him with abundant wealth. The man was very happy. There was another
devotee, an old lady who used to think about Krishna, meditate on Krishna all the time; she was practically living with Krishna. She was a poor lady and had only a cow as her property. She also used to observe the ekadashi vratam, and the next day she would make a little butter
#குருபக்தி #ஆதிசங்கரர் அவருக்குப் பதினாறு வயதாகும் போது காசியில் அவர் பாஷ்யங்கள் எழுதி முடித்த சமயத்தில் பத்மபாதர் அவருக்கு சிஷ்யரானார். ஆதி சங்கரரின் முதல் சிஷ்யர் பத்மபாதர். சோழ நாட்டிலிருந்து சென்ற அவர் பெயர் ஸனந்தனன். ஆதிசங்கரரை தரிசித்து, பக்தி ஏற்பட்டு, ஆதிசங்கரருக்குக்
கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு நாள் கங்கையில், அந்த பக்கம் அக்கரையில், பத்மபாதர் இருந்தார். இந்த பக்கம் இக்கரையில ஆதி சங்கரர் இருந்தார். குரு ஸ்னானம் செய்துவிட்டு “துண்டு கொண்டுவா” என்றார். குருநாதர் ஈரமாக நிற்கிறாரே, துண்டு கேட்கிறாரே என்று நடுவில் நதி இருப்பது கூடத் தெரியாமல்
பத்மபாதர் நதியிலேயே நடந்து சென்றார். அப்போது கங்காதேவி அவர் பாதங்களை தாங்கிக் கொள்ள பத்மங்களை- தாமரைகளை உண்டாக்கி அதில் அவர் கால் வைத்துக் கொண்டு வர வழி செய்கிறாள். ஒடி வந்து வந்து துண்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது ஆதி சங்கரர் அவரிடம் காண்பிக்கிறார் “பார், கங்காதேவி பத்மங்களை
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இராவணன், இராமர் படைக் கூட்டத்தைப் பார்த்து மிகவும் மனக்கலக்கம் அடைந்து தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து ஒரு தந்திரம் செய்தான். தனது தூதுவர்களில் சிறந்தவனான சுகனை வரவழைத்து அவனிடம் சுக்ரீவனிடம் தனியாக சென்று பேச வேண்டும் என்றும், பேசும் முறைகளையும் சொல்லி தூது
செல்ல அனுப்பினான். சுகன் ஒரு பறவை உருவத்தை அடைந்து கடலை தாண்டி யாருக்கும் தெரியாமல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். ராமர் லட்சுமணர் உட்பட மற்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்ததினால் அரசன் சுக்ரீவன் தனியாக வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அசுரன் சுகனுக்கு அதற்கான சமயம்
அமைந்தது. சுக்ரீவன் அருகில் பறவை வடிவிலேயே சென்றான் சுகன். இலங்கையின் அரசனான ராவணன் தங்களிடம் என்னை தூதுவனாக அனுப்பியுள்ளார் என்று பேசஆரம்பித்தான்.
வானர அரசே! ராவணன் இலங்கையின் அரசன். நீங்களும் ஒரு அரச பரம்பரையில் பிறந்த மகத்தான கிஷ்கிந்தை நாட்டின் அரசன். ஒரு நாட்டின் அரசன்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது. விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த
நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இளம் வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர்
ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும்,
ஒரு முறை சௌகந்திகம் என்னும் தேவலோக மலரைப் பறிப்பதற்காக பீமன் சென்றபோது வழியில் அனுமார் வயதான குரங்கின் வடிவத்தில் தன்னுடைய வாலை நீட்டிப் படுத்திருந்தார். அவர் அனுமார் என்று அறியாத பீமன் அந்த குரங்கின் வாலை அப்புறப்படுத்த நினைத்தபோது அது முடியவில்லை. அதற்குக் காரணம் அனுமார்
தன்னுடைய வாலில் உள்ள பஞ்ச பூத சக்திகளை ஸ்தம்பனம் செய்து வைத்ததே ஆகும். (ஸ்தம்பனம் என்றால் காற்றை நீரை ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம்.)
அதே போல காஞ்சி மடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
காஞ்சி மகா பெரியவா அவர்கள் நூறு வயதை அடைந்தபோது அவருடைய நடமாட்டம் குறைந்து போனதால் குளித்தல்
போன்ற நித்திய அனுஷ்டானுங்களுக்காக அவரை மற்றவர்கள் சுமந்து சென்று வேறு இடத்தில் வைத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறை அவரை மற்றோர் இடத்திற்கு மாற்றும்போது அவரை சாஷ்டாங்கமாக வணங்கி அவரிடம் அனுமதி பெற்ற பின்னரே அவர் திருமேனியைத் தூக்குவது வழக்கம். ஒரு முறை அசிரத்தை காரணமாக அவரிடம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#ஶ்ரீரங்கம்
“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி' என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்), ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால்
யாருக்குத் தான் ஆசை இருக்காது? #ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்
“இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேஸ்ம்பு காங்கம்
யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார். ஆசைப்பட்டது அனைத்தையும் கொடுக்கும் இடம்
ஸ்ரீரங்கம். இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர். #பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன். #அதிகாரஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி #ஸ்வாமிதேசிகன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
“ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத