#குருபக்தி
#ஆதிசங்கரர் அவருக்குப் பதினாறு வயதாகும் போது காசியில் அவர் பாஷ்யங்கள் எழுதி முடித்த சமயத்தில் பத்மபாதர் அவருக்கு சிஷ்யரானார். ஆதி சங்கரரின் முதல் சிஷ்யர் பத்மபாதர். சோழ நாட்டிலிருந்து சென்ற அவர் பெயர் ஸனந்தனன். ஆதிசங்கரரை தரிசித்து, பக்தி ஏற்பட்டு, ஆதிசங்கரருக்குக்
கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு நாள் கங்கையில், அந்த பக்கம் அக்கரையில், பத்மபாதர் இருந்தார். இந்த பக்கம் இக்கரையில ஆதி சங்கரர் இருந்தார். குரு ஸ்னானம் செய்துவிட்டு “துண்டு கொண்டுவா” என்றார். குருநாதர் ஈரமாக நிற்கிறாரே, துண்டு கேட்கிறாரே என்று நடுவில் நதி இருப்பது கூடத் தெரியாமல்
பத்மபாதர் நதியிலேயே நடந்து சென்றார். அப்போது கங்காதேவி அவர் பாதங்களை தாங்கிக் கொள்ள பத்மங்களை- தாமரைகளை உண்டாக்கி அதில் அவர் கால் வைத்துக் கொண்டு வர வழி செய்கிறாள். ஒடி வந்து வந்து துண்டை எடுத்துக் கொடுத்தார். அப்போது ஆதி சங்கரர் அவரிடம் காண்பிக்கிறார் “பார், கங்காதேவி பத்மங்களை
உருவாக்கி உன்னை காப்பாற்றினாள், அதனால் இன்றிலிருந்து உனக்கு பத்மபாதர் என்று பெயர்” என்று சொல்கிறார். பத்மபாதர் என்பது அவருக்குக் காரணப் பெயராயிற்று. உத்தம சிஷ்யர் அவர்.(பகவானின் திருவடியாக இருப்பதால் பகவத் பாதர்-சங்கரருக்கு சங்கர பகவத்பாதர் என்று பெயர்.) பத்மபாதருக்குப் பூர்வ
கதை ஒன்று உள்ளது. அவர் சோழ தேசத்தில் வசித்த பொழுது ஒரு மகானிடம் நரசிம்ம மந்த்ரம் உபதேசம் பெற்று, ஒரு காட்டுக்குள் மலை மேல் அமர்ந்து அந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். நரசிம்மரின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பல ஆயிரம் ஆவர்த்திகள் ஜபிம் செய்து வந்தார்.
அப்பொழுது ஒரு வேடன் அங்கு வந்து நீ எதற்காக இந்தக் காட்டில் வந்து கஷ்டப்படுகிறாய்? உனக்கு என்ன வேண்டும்? தேனா தினைமாவா? எது வேண்டும் என்றாலும் நாங்கள் வந்து கொடுப்போம். நீ பூஞ்ச பிராமணன், இந்தக் காட்டில் தாக்குப் பிடிக்க முடியாது. எங்களை மாதிரி பலசாலியாக இருப்பவர்கள் தான் காட்டில்
வேட்டையாடி உயிரோடு இருக்க முடியும் என்று கூறுகிறான். பத்மபாதருக்கு, இது என்னடா, இவன் ஒருத்தன் வந்து நம்ம தவைத்துக்கு இடையூறு செய்கிறானே என்று தோன்றியது. “நீ போயிட்டு வாப்பா. எனக்கு ஒண்ணும் வேண்டாம், நான் பார்த்துகறேன்” என்று சொன்னார். நீங்க என்ன வேணுமோ கேளுங்க சாமி, உங்களுக்கு
செய்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று விடாப்பிடியாக கேட்டான் வேடன். உடனே பத்மபாதர் சொன்னார் “சிங்கத் தலையும், மனித உடம்புமாக ஒரு மிருகம் உள்ளது, நான் அதை தேடிக் கொண்டு இருக்கிறேன், நீ போயிட்டு வா” என்கிறார். அவனுக்கு ஆச்சரியமாகி விட்டது. இந்த காட்டிலேயே நான் தான் பெரிய வேடன், இத்தனை
வருஷமாக நான் இந்த காட்டில் இருக்கேன், ஆனா நீ சொன்ன மாதிரி ஒரு மிருகத்தை நான் பார்த்தது இல்லையே என்கிறான். “அப்படி ஒண்ணு இருக்கு. நீ போயிட்டு வா” என்கிறார். சாமி, நீ பொய் சொல்ல மாட்டே. நான் உனக்கு அந்த மிருகத்தை பிடிச்சுத் தரேன் என்று சொன்னான். உடனே இவர் சிரிக்கறார். என்ன
சிரிக்கற நீ. நான் நாளை மாலைக்குள் உனக்கு அந்த மிருகத்தை பிடிச்சு தரேன். இல்லை என்றால் நான் உயிரையே விட்டு விடுகிறேன் என்று சொல்லி, அந்த வேடன் அன்று முழுவதும் காட்டில் திரிகிறான். அவர் சொன்னார் என்றால் சரியாக இருக்கும் என்று சொல்லி அந்த ரூபத்தையே தியானம் பண்ணிக் கொண்டு ஏகாக்ர
சித்ததோட அந்த காட்டில் அன்று பகலும் பிறகு இரவுவும் காட்டு முழுவதும் தேடினான். அடுத்த நாள் பகலெல்லாம் தேடினான். பசி, தாகம் எல்லாம் மறந்து ஒரு மனதோடு நரசிம்ம ஸ்வாமியை தியானம் பண்ணிக் கொண்டே தேடி வருகிறான். ஆனாலும் அவனுக்கு கிடைக்கவில்லை. இறுதியில் மனம் நொந்துபோய், சரி நமக்குத் தான்
தெரியவில்லை, உயிரை விடுவோம் என்று பக்கத்து மரத்தில் சுத்திக் கொண்டு இருந்த கொடியை எடுத்து, தூக்குப் போட்டுக் கொள்ளப் போகிறான். அவ்வளவு சத்ய நிஷ்டை. கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்றால் உயிரை விடுவோம் என்று உயிரை விட கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொள்ள போகும் போது, நரசிம்ம சுவாமி
அவனுக்கு தரிசனம் கொடுத்து விடுகிறார். ஆஹா மாட்டிக் கொண்டாயா? உன்னைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன் என்று சொல்லி, சுருக்கு போட்டுக்கொள்ள வைத்திருந்த அந்த கொடியையே எடுத்து அவரை கட்டுகிறான். அவரும் கட்டுப்படுகிறார், பக்த பராதீனன் அல்லவா! பத்மபாதரிடம் அழைத்துச் சென்று இதோ பாரு சாமி
பிடித்துக் கொண்டு வந்து விட்டேன், எடுத்துக் கொண்டு ஊருக்குப் போ என்கிறான். பத்மபாதரின் கண்ணுக்குத் தெரியவில்லை. வருத்ததுடன் “ஸ்வாமி நான் இத்தனை தவம் செய்கிறேன். என் கண்ணுக்கு நீங்கள் தெரியவில்லையே” என்றபோது, நரசிம்ம சுவாமி சொல்கிறார், “இரண்டு நாளில் இவன் கோடி வருடம் தவம் செய்தால்
என்ன ஒரு ஏகாக்ர சித்தம் வருமோ, அந்த அளவு ஒரு மனத்தோடு அவன் தியானம் செய்துள்ளான். இந்த வேடனோட ஸத்சங்கம் உனக்கு கிடைத்ததினால் என் வாக்கையும், கர்ஜனையையும் உன்னால் கேட்க முடிந்தது. உன் மந்திரம் சித்தி ஆகிவிட்டது என்று வைத்துக் கொள். நீ ஊருக்கு போ. நீ செய்த இந்த மந்திர ஜபம் பின்பு
ஒரு முறை பயன்படும்” என்று ஆசி கூறி மறைந்தார் பெருமாள். பிறகு அவர் காசிக்கு போகிறார் ஆதி சங்கரருக்கு சிஷ்யர் ஆகிறார். ஆதி சங்கர பகவத்பாதாளிடம் பல மதத்தவர்கள் வந்து வாதம் செய்வார்கள். ஒரு முறை நரபலி கொடுக்கும் காபாலிக மதத்தை சேர்ந்தவர்கள் வந்து வாதம் செய்கிறார்கள். அதில் ஒரு காபலிக
தலைவன், இவரை நேரடியாக வெற்றி பெற முடியாது, இவர் பெரிய தபஸ்வியாக உள்ளார் என்று ஒரு சூழ்ச்சி செய்கிறான். ஆதி சங்கரர் தனியாக இருக்கும் போது அவர் பக்கத்தில் வந்து சாமி நான் காபாலியை குறித்து வெகு நாளாக உபாசனை செய்கிறேன், எனக்கு தரிசனம் கிடைக்கவில்லை. ஒரு சாம்ராஜய பட்டாபிஷேகம் செய்து
கொண்ட அரசர் அல்லது ஒரு ஸன்யாசியின் தலையை வெட்டி பலி கொடுத்தால் சாமி தரிசனம் நிச்சயம். எங்க மதத்தின் நம்பிக்கை அது. அரசனிடம் போய் கேட்டால் அவன் முதலில் என்னை வெட்டிவிடுவான். நீ சாமியார், உன் தலையைக் கொடு என்று கேட்கிறான். உடம்பு நான் என்கிற எண்ணமே இல்லாத ஆதி சங்கரர், “ஆஹா அப்படியா
இந்த மரங்கள் பட்டுப் போனால் அடுப்பு எரிக்கப் பயன்படுகிறது. மிருகங்களின் உடம்பு கூட இறந்த பிறகு உபயோகமாக உள்ளது, கொம்பை வைத்து அபிஷேகம், தோல் வைத்து ஏதோ பயன்பாடு உள்ளது. இந்த மனித சரீரம் தான் இறந்த பிறகு பயனே இல்லாமல் இருக்கு என்று நினைத்தேன். இதுனால் உனக்கு ஒரு உபயோகம் என்றால்
நான் அதை கொடுக்கிறேன். எனக்கு ஆக்ஷேபணை இல்லை. இருந்தாலும் கூட இருக்கற சிஷ்யர்கள் எல்லாம், இந்த உடம்பின் மேல் அபிமானம் வைத்திருப்பதால் நான் ஒரு இடம் சொல்கிறேன். நாளைக்கு அந்த இடத்தில், அந்த நேரத்தில் இருப்பேன். நீ வந்து என் தலையை எடுத்துக் கொண்டு போய்விடு” என்கிறார். அப்படி ஒரு
வைராக்கியம். அடுத்த நாள் சொன்ன இடத்தில் அவர் உட்கார்ந்திருக்க, காபாலிகனும் வருகிறான். பெரிய வாளை எடுத்து அவர் கழுத்தில் வெட்டப் போகும்போது திடீர் என்று அங்கே பத்மபாதர் வருகிறார். அவருக்குள் நரசிம்ம ஸ்வாமி ஆவிர்பவித்து, அந்த காபலிகனை கிழித்துப் போட்டுவிடுகிறார். ஆதி சங்கரர் வெகு
நேரம் கழித்துக் கண்ணை திறந்து பார்க்கிறார். அந்த காபலிகனோட ம்ருத சரீரம் கிடக்கிறது. பத்மபாதர் கை கூப்பி நின்று கொண்டு இருந்தார். என்னாச்சு? என்று ஆதி சங்கரர் கேட்கிறார். அதற்கு பத்மபாதர், என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. நான் கங்கைக் கரையில் இருந்தேன், திடீரென்று இங்கே இருக்கிறேன்
என்று சொன்னார். “ஓஹோ! உனக்கு நரசிம்ம மந்த்ரம் உபதேசம் ஆகியிருக்கா” என்று ஆதி சங்கரர் கேட்டார். ஆமாம் முன்பு நிறைய ஆவ்ருத்தி செய்துள்ளேன், நரசிம்மர் ஒரு வேடனுக்கு தரிசனம் கொடுத்தார், எனக்கு தரிசனம் கொடுக்கலை, பின்னொரு சமயம் வந்து சஹாயம் செய்கிறேன் என்று சொன்னார் என்றார். “அதுதான்
செய்துள்ளார். நரசிம்ம ஸ்வாமி என்னை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உனக்குள் வந்து இந்த காபலிகனை கிழித்துப் போட்டுள்ளார்” என்று சங்கரர் சொன்ன உடனே, இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும், நரசிம்ம சுவாமி வந்து என் குருவை காப்பாற்றி உள்ளாரே என்று நரசிம்மரையும் ஆச்சார்யனையும் வணங்குகினார்
பத்மபாதர். நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அழகான ஓர் இதிகாச புராண நிகழ்வு இது.
ஹரே கிருஷ்ணா!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
@threadreaderapp please compile thanks

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

13 Nov
I want to share this beautiful story on what is Dharmam. It really touched me.
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மகா பெரியவா மீது அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், இறக்கும் தருவாயில், தன் மகனை அருகே அழைத்துப் பல விவரங்களைச் சொன்னார். கடைசியாகத் தான் ரூ.100 Image
ஒருவரிடம் கடன் பட்டதாகவும், அதை மகன் தான் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லியபின் உயிர் துறக்கிறார். அப்போது மகனுக்கு 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்தவர். அவருக்கு சம்பளம் ₹15 ரூபாய். தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று வருடங்கள் சிரமப்பட்டு ₹100
சேர்த்து விட்டார். ஆனால் தந்தைக்குக் கடன் கொடுத்தவர் யாரென்றே தெரியாத நிலை. சேமித்து வைத்த பணத்தை எங்கே கொண்டு போய்த் தருவது? காஞ்சி மகானின் பரம பக்தரான தனது தந்தையின் கடன் விவகாரம், ஒருவேளை மகானுக்குத் தெரிந்திருக்குமோ என்று காஞ்சி வந்த அவர், மகானிடம் விவரத்தைச் சொல்கிறார். ஒரு
Read 9 tweets
13 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரப்பொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் எலி, தவளை நீரில் Image
விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன்
சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும்
Read 7 tweets
12 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாசர் என்பவர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார். அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர். அவ்வூரின் தலைவரும் அதை விருப்பத்துடன் கேட்டு ரசித்து வந்தார். ஒரு நாள் கிருஷ்ணனும்
பலராமனும் பசுக்களை மேய்த்த கதையை கூறி உபன்யாசம் செய்தார். கிருஷ்ணன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பலராமன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பற்றியும் அழகாக வர்ணித்து அன்றைய உபன்யாசத்தை முடித்து கிளம்பினார். சிறிது தூரம் நடந்திருப்பார் ஹோய் சற்று நில்லும் என்று குரல் ஒரு மரத்தின் மறைவில்
இருந்து வந்தது. ஸ்ரீனிவாசரும் நின்று அழைத்தது யார் என்று பார்த்தார். கையில் கத்தியுடனும் ஒட்டிய வயிறுடனும் திருடன் ஒருவன் நின்றிருந்தான். ஸ்ரீனிவாசர் அதிர்ச்சியாகி ஓட, திருடன் அவரை பிடித்து மரத்தின் மறைவுக்கு அழைத்து சென்று அவரின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடாமல் நான்
Read 27 tweets
12 Nov
#நரசிம்மர்_குடைவரை_கோவில்
இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்குகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம
அவதாரத்தை தரிசிக்க இயலாத மகாலட்சுமி பெருமாளிடத்தில் அவரின் நரசிம்ம அவதாரத்தை தான் தரிசிக்க ஒரு வழி கேட்டார். அதற்கு அவர், ஸ்ரீசைலம் எனும் ஷேத்ரத்தில் கமலாலய குளத்தில் அமர்ந்து அஷ்டக்ஷரமாகிய திருஎட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து அதன் பலனாக தன் நரசிம்ம கோலத்தை தரிசிப்பாய் என்றார்.
அதன்படி மகாலட்சுமி கமல மலர்கள் நிறைந்திருந்த கமல வனத்தினில் ‘கமலாலயம்’ என்னும் குளத்தில் நரசிம்ம மூர்த்தியை நினைத்து கடுந்தவம் புரிந்தாள்.
இந்த சமயத்தில் திரேதாயுகத்தில் ராமராவண யுத்தத்தில் மூர்ச்சையான லக்ஷ்மணனின் மயக்கத்தை தெளிய வைப்பதற்காக சஞ்சீவி பர்வதத்தை ஆஞ்சநேயர் எடுத்து
Read 14 tweets
11 Nov
A beautiful story from #SrimadBhagavatam. There was a rich man who was devoted to Krishna. He used to observe the ekadashi vratam every month and the next day he would feed the pious people as It is considered a great punyam to do so. Pleased with his vratam, Krishna appeared
before him one day and said 'Ask me for a boon! You are doing so much wonderful work.' The rich man said, 'If you bless me with more wealth, I will be happy to do this service on a large scale.' Krishna blessed him with abundant wealth. The man was very happy. There was another
devotee, an old lady who used to think about Krishna, meditate on Krishna all the time; she was practically living with Krishna. She was a poor lady and had only a cow as her property. She also used to observe the ekadashi vratam, and the next day she would make a little butter
Read 8 tweets
11 Nov
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இராவணன், இராமர் படைக் கூட்டத்தைப் பார்த்து மிகவும் மனக்கலக்கம் அடைந்து தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து ஒரு தந்திரம் செய்தான். தனது தூதுவர்களில் சிறந்தவனான சுகனை வரவழைத்து அவனிடம் சுக்ரீவனிடம் தனியாக சென்று பேச வேண்டும் என்றும், பேசும் முறைகளையும் சொல்லி தூது
செல்ல அனுப்பினான். சுகன் ஒரு பறவை உருவத்தை அடைந்து கடலை தாண்டி யாருக்கும் தெரியாமல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். ராமர் லட்சுமணர் உட்பட மற்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்ததினால் அரசன் சுக்ரீவன் தனியாக வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அசுரன் சுகனுக்கு அதற்கான சமயம்
அமைந்தது. சுக்ரீவன் அருகில் பறவை வடிவிலேயே சென்றான் சுகன். இலங்கையின் அரசனான ராவணன் தங்களிடம் என்னை தூதுவனாக அனுப்பியுள்ளார் என்று பேசஆரம்பித்தான்.
வானர அரசே! ராவணன் இலங்கையின் அரசன். நீங்களும் ஒரு அரச பரம்பரையில் பிறந்த மகத்தான கிஷ்கிந்தை நாட்டின் அரசன். ஒரு நாட்டின் அரசன்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(