வெள்ள கதைகளை பற்றி பார்ப்போம். இந்த வெள்ள கதைக்கு பொதுவான கரு மக்கள் சொன்னதை கேக்கவில்லை அதனால் அவர்களை தண்டிக்க கடவுள் வெள்ளத்தை அனுப்புகிறார்.
எகிப்திய வெள்ள புராணங்களில் கடவுள் ரா அவரது மகள் சேக்மெட் அழைத்து மனிதகுலம் கடவுளை மறந்து மரியாதை செலுத்தாமல் இருக்கிறார்கள்.
எனவே ஒரு வெள்ளத்தின் மூலம் அவர்களை அழித்து விடு என்று சொல்லி அனுப்புகிறார், இதன் விளைவாக ஒரு பெரிய ரத்த வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும், ரீ என்கிற மற்றொரு கடவுள் குறுக்கிட்டு சேக்மெட் ஐ குடிக்கவைத்து அவளை திசைத்திருப்புவதின் மூலம் மக்களை காப்பாற்றுகிறார்.
மத்ஸ்யா (விஷ்ணுவின் மீன் அவதாரம்) வரவிருக்கும் பேரழிவு வெள்ளத்தைப் பற்றி மனுவுக்கு முன்னறிவித்து, உலகின் அனைத்து தானியங்களையும் ஒரு படகில் சேகரிக்கும்படி கட்டளையிடுகிறார்;
கதையின் சில வடிவங்களில், அனைத்து உயிரினங்களும் படகில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லுவதாக இருக்கிறது. வெள்ளம் உலகை அழிக்கும்போது, மனு - ஏழு பெரிய முனிவர்களுடன் பேழையில் ஏறி உயிர் பிழைக்கிறார்.
Aztec:
ஆஸ்டெக் வெள்ளக் கதை கொஞ்சம் நோவாவின் கதையுடன் ஒத்து போகிறது. இந்த கதையில், வரவிருக்கும் வெள்ளம் குறித்து நோட் மற்றும் அவரது மனைவி நேனா என்ற நபரை டிட்லாகவுன் எச்சரித்தார்.
நாட்டாவும் நேனாவும் ஒரு சைப்ரஸ் மரத்தை வெட்டினர், டிட்லாச்சஹுவான் அவர்களை உள்ளே சீல் வைத்தார், அவர்கள் மக்காச்சோளத்தை மட்டுமே சாப்பிடலாம் என்று சொன்னார்.
பூமி வெள்ளத்தில் மூழ்கியது, ஆனால் மக்கள் கொல்லப்படவில்லை, அதற்கு பதிலாக மீன்களாக மாற்றப்பட்டனர்.
வெள்ளத்திற்குப் பிறகு நாட்டாவும் நேனாவும் டைட்லாகானுக்கு கீழ்ப்படியாமல் மீன் சாப்பிட்டார்கள். எனவே டிட்லாகவுன் அவற்களை நாய்களாக மாற்றினார்.
இன்றைய digital உலகில் நூலகம் அவசியமா?
மின் புத்தகங்கள் அல்லது ஆடியோ புத்தகங்கள் எனப்படும் புத்தகங்களின் ஆன்லைன் பதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்த டிஜிட்டல் யுகத்தில் இன்னும் நூலகங்கள் தேவையா என்ற கேள்வியை எதிர்கொள்கிறோம். அதற்கான பதில் ஆமாம்!!
உலகத்தில் உள்ள எல்லா புத்தகங்களும் digital ஆக்கப்பட்டுவிட்டதா? இலவசமாக எல்லா புத்தகத்தையும் டிஜிட்டலில் பார்க்க எல்லாரிடமும் வசதி இருக்கிறதா? அதற்கு net, data எல்லாம் எல்லோருக்கும் இருக்கிறதா? எல்லா ஊரிலும் இணைய சேவை இருக்கிறதா? கணினி அல்லது கைபேசி எல்லாரிடமும் இருக்கிறதா?
அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று எல்லோரும் அறிந்து இருக்கிறார்களா? இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லாத சூழலில் நூலகம் அவசியம்தான்.
நூலகம் இன்றைய காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு வருகிறது digital புத்தகங்களும் இலவச இணையசேவையுடன் (free wifi) நூலகங்களில் வழங்கப்படுகிறது.
ஒரு அம்மா கிட்ட உங்க பையன் தம்மடிக்கிறதை பார்த்தேன் என்று யாராவது சொன்னால் நம்ப மாட்டாங்க. என் பையன் அப்படியெல்லாம் இல்ல நீ வேற யாரையாவது பார்த்து இருப்ப...அப்படினு சொல்லுவாங்க. சரி அவன் தம்மடிக்குற போட்டோ காமிச்சா இதெல்லாம் ஏத்துக்க முடியாது அவன் சும்மா கூட வச்சு இருக்கலாம் கைல,
போட்டோஷாப் ஆ இருக்கலாம் நான் நம்பமாட்டேன் என் பையன் சொக்க தங்கம் சொக்க தங்கம் ஜூவல்லரி சொக்க வைக்கும் ஜூவல்லரி அப்படினு சொல்லுவாங்க. இதுவே ஒரு வீடியோ காமிச்சா அவன் நண்பர்களுக்காக விளையாட்டுக்கு செய்து இருக்கலாம், ஒரு ஆர்வத்துல இப்போதான் முதல் முறை பிடிச்சு பார்த்து இருக்கலாம்
ஆனாலும் அவனுக்கு அந்த பழக்கம் இல்லவே இல்லனு சொல்லுவாங்க. அந்த பையனே வந்து எனக்கு தம்மடிக்குற பழக்கம் இருக்குன்னு சொல்லிட்டா, "ஏன் ஊர்ல யாருக்குமே இந்த பழக்கம் இல்லையா? ஏதோ என் பையன் தான் தம்மடிக்குற மாதிரி பேசற உன் பையன் தண்ணி அடிக்கலையா? பக்கத்து வீட்டு பையன் கஞ்சா அடிக்கலையா?
இந்திய முற்போக்கு எழுத்தாளரும் சமூகப் போராளியுமான அருந்ததி ராய் பிறந்த தினம் இன்று. இவர் எழுதிய ‘தி கிரேட்டர் காமன் குட்’ மற்றும் ‘தி என்ட் ஆஃப் இமேஜினேஷன்’ உள்ளிட்ட கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
1992ல் வெளிவந்த ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவல் இவரது தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலுக்காக இவருக்கு 1997-ல் ‘மான் புக்கர்’ பரிசு கிடைத்தது. இந்தப் பரிசை வென்ற முதல் இந்திய எழுத்தாளர் என்ற பெருமை பெற்றார்.
இவரது எழுத்துப் பணிகளுக்காக ‘மகாத்மா ஜோதி புலே’ விருது கிடைத்தது. சமூகப் பிரச்சினைகள் குறித்த இவரது கட்டுரைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருதை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதைப் பெற மறுத்துவிட்டார். panuval.com/sinna-visayang…
1. The Emerging Mind - ராமச்சந்திரன் 2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை 3. ஞானக்கூத்தன் கவிதைகள் 4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள் 5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன் 6. Spartacus - Howard Fast
7. இடக்கை-எஸ்.ராமகிருஷ்ணன் 8. வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல் - விக்டர் ஃபிராங்கல்
போன season 👇
1. The Plague - Albert Camus 2. 'அவமானம்' - மண்டோ படைப்புகள் 3. புயலிலே ஓரு தோனி - ப. சிங்காரம் 4. அடிமையின் காதல் - ரா. கி . ரங்கராஜன் 5. மிர்தாதின் புத்தகம் - Mikhail Nainy
6. கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
7.எஸ்தர் - வண்ணநிலவன்
8.தொடுவானம் தேடி - ஏ.தில்லைராஜன், கே. அருண்குமார் , சஜி மேத்யூ 9. நாளை மற்றுமொரு நாளே - ஜி, நாகராஜன் 10. ஜே.ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி 11. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் 12. கூளமாதாரி - பெருமாள் முருகன்
ஒரு நூலாசிரியர் தான் படைத்த நூலொன்றின் பிரதியைச் சக எழுத்தாளருக்கோ நண்பருக்கோ கையெழுத்திட்டுக் கொடுப்பது வாடிக்கை. இத்தகைய நூற்படியை அரிய நூல் சேகரிப்பாளர்கள் ‘அசோசியேஷன் காப்பி’ (association copy) என்பர்.
நூலாசிரியர் மட்டுமல்லாமல் அந்த நூலோடு தொடர்புடைய பிறர் (அச்சிடுபவர், வெளியீட்டாளர், முகப்போவியர், அணிந்துரை வழங்கியவர்) நூற்படியை இதே போல் வழங்கினாலும் அதனையும் இவ்வாறே சுட்டுவர்.
பெயர் பெறாத ஒருவருக்கு நூலாசிரியர் கையெழுத்திட்டுத் தரும் பிரதி ‘ப்ரெசன்டேஷன் காப்பி’ (presentation copy) எனப்படும். இதன் மதிப்பு ‘அசோசியேஷன் காப்பி’யைவிட மிகக் குறைவாகும். இவ்வாறு பெயர்பெற்ற இருவருடன் தொடர்புடையதால் இப்பெயர் பெறுகின்றது.
கமலஹாசனின் இன்றைய புத்தக பரிந்துரை. ஆஸ்திரிய உளவியல் மருத்துவர் விக்டர் ஃபிராங்கல் எழுதி 1946-ம் ஆண்டு வெளிவந்த ‘வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல்’ (Man’s Search for Meaning) புத்தகம். இரண்டாம் உலகப் போரின்போது, நாஜி வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவரின் அனுபவங்கள்.
இந்தப் புத்தகம், முதல் பாதியில் வதை முகாமில் ஃபிராங்கலுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இரண்டாம் பாதியில், வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் ‘லோகோதெரபி’ என்று அவர் கண்டறிந்த உளவியல் சிகிச்சை முறை கோட்பாட்டையும் விளக்குகிறது.
24 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் இந்தப் புத்தகம் 1.2 கோடிப் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தமிழில் ச. சரவணன் மொழிபெயர்த்திருக்கிறார்.