கமலஹாசனின் இன்றைய புத்தக பரிந்துரை. ஆஸ்திரிய உளவியல் மருத்துவர் விக்டர் ஃபிராங்கல் எழுதி 1946-ம் ஆண்டு வெளிவந்த ‘வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல்’ (Man’s Search for Meaning) புத்தகம். இரண்டாம் உலகப் போரின்போது, நாஜி வதை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவரின் அனுபவங்கள்.
இந்தப் புத்தகம், முதல் பாதியில் வதை முகாமில் ஃபிராங்கலுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இரண்டாம் பாதியில், வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் ‘லோகோதெரபி’ என்று அவர் கண்டறிந்த உளவியல் சிகிச்சை முறை கோட்பாட்டையும் விளக்குகிறது.
24 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கும் இந்தப் புத்தகம் 1.2 கோடிப் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தமிழில் ச. சரவணன் மொழிபெயர்த்திருக்கிறார்.
வாழ்க்கையில் மனிதன் எப்படிப்பட்ட துன்பங்களைக் கடந்தும் வாழமுடியும் என்பதற்கான நம்பிக்கையையும் அதற்கு உதாரணமான பல அனுபவங்களையும் இந்தப் புத்தகம் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறது.
1. The Emerging Mind - ராமச்சந்திரன் 2. தமிழர் நாட்டுப்பாடல்கள் - நா.வானமாமலை 3. ஞானக்கூத்தன் கவிதைகள் 4. முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள் 5. தென்றல் வெண்பா ஆயிரம் - கவியரசு கண்ணதாசன் 6. Spartacus - Howard Fast
7. இடக்கை-எஸ்.ராமகிருஷ்ணன் 8. வாழ்வின் அர்த்தம் – மனிதனின் தேடல் - விக்டர் ஃபிராங்கல்
போன season 👇
1. The Plague - Albert Camus 2. 'அவமானம்' - மண்டோ படைப்புகள் 3. புயலிலே ஓரு தோனி - ப. சிங்காரம் 4. அடிமையின் காதல் - ரா. கி . ரங்கராஜன் 5. மிர்தாதின் புத்தகம் - Mikhail Nainy
6. கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
7.எஸ்தர் - வண்ணநிலவன்
8.தொடுவானம் தேடி - ஏ.தில்லைராஜன், கே. அருண்குமார் , சஜி மேத்யூ 9. நாளை மற்றுமொரு நாளே - ஜி, நாகராஜன் 10. ஜே.ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி 11. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் 12. கூளமாதாரி - பெருமாள் முருகன்
ஒரு நூலாசிரியர் தான் படைத்த நூலொன்றின் பிரதியைச் சக எழுத்தாளருக்கோ நண்பருக்கோ கையெழுத்திட்டுக் கொடுப்பது வாடிக்கை. இத்தகைய நூற்படியை அரிய நூல் சேகரிப்பாளர்கள் ‘அசோசியேஷன் காப்பி’ (association copy) என்பர்.
நூலாசிரியர் மட்டுமல்லாமல் அந்த நூலோடு தொடர்புடைய பிறர் (அச்சிடுபவர், வெளியீட்டாளர், முகப்போவியர், அணிந்துரை வழங்கியவர்) நூற்படியை இதே போல் வழங்கினாலும் அதனையும் இவ்வாறே சுட்டுவர்.
பெயர் பெறாத ஒருவருக்கு நூலாசிரியர் கையெழுத்திட்டுத் தரும் பிரதி ‘ப்ரெசன்டேஷன் காப்பி’ (presentation copy) எனப்படும். இதன் மதிப்பு ‘அசோசியேஷன் காப்பி’யைவிட மிகக் குறைவாகும். இவ்வாறு பெயர்பெற்ற இருவருடன் தொடர்புடையதால் இப்பெயர் பெறுகின்றது.
இந்த trinity concept இருக்கே அது குழப்பமான concept. யூதர்களை பொறுத்தவரை trinity concept கிடையாது அவர்களுக்கு ஒரே ஒரு கடவுள் தான். அதனால் தான் இறைவனின் மகன் என்னும் இயேசுவை அவர்கள் நிராகரிக்கிறார்கள். கடவுள் மனிதனுடன் தொடர்பு கொள்ள இறை தூதர்களை பயன்படுத்துகிறார்.
இறைத்தூதர்கள் கடவுளின் செய்தியை மனிதனுக்கு சொல்லுவார்கள். இறைத்தூதர்கள் மரியாதைக்குரியவர்கள் ஆனால் வழிபடக்கூட கூடாது. இறைவன் ஒருவனே வழிபட வேண்டியவன். இறைவன் மோசேஸ்க்கு குடுத்த 10 கட்டளைகளில் முதல் 3 கட்டளைகள் என்னை தவிர வேறு யாரையும் வழிபட கூடாது என்பது தான்.
கிறிஸ்தவர்கள் ஒரு குழப்பமான concept வச்சு இருக்காங்க. இயேசு இறைவனின் மகன் ஆனால் அவர்தான் இறைவன். இறைவன் மூன்று பரிணாமமாக இருக்கிறார். தேவன், மகன், பரிசுத்த ஆவி. இவை மூன்றும் ஒன்று ஆனால் வேறு வேறு. கடவுள் ஒருவர் ஆனால் 3 பரிணாமமாக இருக்கிறார்.
Flavius Josephus ( 37 CE– c. 100) கிறிஸ்து இறந்தபின் 4 வருடங்கள் கழித்து ஜெருசலேமில் பிறக்கிறார். அவர் எழுதிய புத்தகத்தில் இயேசுவை பற்றி இரண்டே இடத்தில தான் வருகிறது. ஒரு மனிதன் இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து நான் தான் கடவுள் என்று சொன்னால்
அதை இவ்வளவு எளிதாகவா கடந்து போவார்கள்? அதுவும் Pontius Pilate (யேசுவிற்கு தண்டனை வழங்கியவர்) பற்றி பேசும்போது இயேசுவை பற்றி சொல்லி கடந்து செல்கிறார் (Antiquities 18:63). அதாவது இப்படி இப்படி பேசிக்கிறாங்க சொல்றாங்க என்பது போல.
அவரது புத்தகம் முழுவதிலும் பலரை பற்றி விலாவரியாக எழுதி இருக்கும் Flavius Josephus இயேசுவை பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் போகிற போக்கில் ஊருல இப்படி பேசிக்கிறாங்க என்பது போல கடந்து போகிறார்.
அய்யா வைகுண்டர் கதை பலருக்கும் தெரிந்து இருக்கும். 1809 CE-ஆம் ஆண்டு தாமரைகுளம் என்ற ஊரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் முடிசூடும் பெருமாள். இந்த பெயருக்கு மேல் சாதியில் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தால் முத்துக்குட்டி என மாற்றப்பட்டது.
சிறுவயதிலேயே பக்தி ஈடுபாடு அதிகம் முத்துக்குட்டிக்கு. பதினேழு வயதில் திருமணம். நிறைய தவங்கள் எல்லாம் செய்து வந்தார். இந்து மதத்தில் இருக்கும் சாதி கொடுமைகளை எதிர்த்தார். இவருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. பல சீர்திரு்தங்களை மதத்தில் கொண்டு வருகிறார்.
அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகமானதால் திருவிதாங்கூர் மன்னன் இவரை கைது செய்கிறார்.2 June 1851 இல் இறந்து போகிறார். இவர் இறக்கவில்லை ஜோதியாக வைகுந்தம் சென்று விட்டார் என்கின்றனர்.
12 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பைபிளில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இயேசு எங்கு சென்றிருக்கலாம் அல்லது என்ன செய்திருக்கலாம் என்று எழுதப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. பெரும்பாலும் செவிவழிக் கதைகள் தான் இருக்கின்றன.
இந்தியாவிற்கு வந்தார், பாரசீகம் போனார், அமெரிக்கா போனார், King Arthur ஐ பார்த்தார் இருவரும் நண்பர்கள் அந்த கடைசியாக இயேசு குடித்த cup, Holy Grail இவருகிட்ட தான் இருந்தது என்று பல கதைகள் இருக்கின்றன ஆனால் ஆதாரம் இருக்கின்றதா என்றால் இல்லை.
அப்படியானால் 30 வயதிற்கு முன் என்ன நடந்து இருக்கும்?
கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் இடம் பெத்லஹேம், ஆனால் அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறி நாசரேத் நகரில் குடியேறியது. நாசரேத் ஒரு அமைதியான ஊர். மீன்பிடித்தல் விவசாயம் தான் தொழில்.