தோழர், அருந்ததிராய் அவர்களின் பெருங்கட்டுரை "இந்திய இழிவு" புத்தகம். தமிழில் "நலங்கிள்ளி" அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்.
உங்களுக்கு மலாலா அவர்களை தெரியும், சுரேகா போட்மங்கே பற்றி தெரியாது எனில், நிச்சயம் அம்பேத்கரை படியுங்கள் என துவங்குகிறது புத்தகம்.
(1/n)
தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தின் ஒரு உதாரணத்தை எடுத்துரைத்து, தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளார். இந்தியாவில் சாதிய கட்டமைப்புகள் குறித்த அம்பேத்கரின் பார்வையை மிகத்துல்லியமாக மேற்கோள்காட்டி எழுதியுள்ளார்.
(2/n)
குறிப்பிட்ட மக்களை தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைத்து அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்த சாதி அடக்குமுறை, அவர்களின் பெண்கள் மீது தன்னை உயர்ந்த சாதி எனக் கருதிக் கொள்பவனுக்கு அதீத உரிமை இருப்பதாக எண்ணுவதன் விளைவு தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு என்கிறார்.
(3/n)
இந்தியாவில் நிலைகொண்டுள்ள சாதிய கட்டமைப்பை குறித்த காந்தியின் பார்வையை, அம்பேத்கர் அவர்களின் கருத்துக்கள் கொண்டு எதிர் கொள்கிறார்.
பார்ப்பனர்களின் கை ஓங்கி இருப்பதையும் தரவுகளின் அடிப்படையில் எடுத்துரைக்கிறார்.
அதிகார மையத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை தக்க ஆதாரங்களுடன் விளக்கி கூறுகிறார்.
(5/n)
கடைசியில் சாதியை அழிக்க முடியுமா என்ற கேள்விக்கு,
நாம் நமது மண்டலத்தில் விண்மீன் நிலைகளை மாற்றியமைக்கத் துணிவு காட்டாத வரை, புரட்சியாளர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் தங்களைப் பார்ப்பனியத்தின் தீவிர விமர்சகர்ளாக மாற்றிக் கொள்ளாத வரை,
(6/n)
பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டோர் தங்களின் முதலாளித்துவ விமர்சனத்தைக் கூர்மைப்படுத்திக் கொள்ளாத வரை சாதியை அழிக்க முடியாது. அது வரை இந்துஸ்தானத்தின் நோய்வாய்ப்பட்ட ஆண் பெண்களாகவே இருந்து வருவோம் என புத்தகத்தை முடிக்கிறார்.
(7/n)
50 பக்கங்களுக்கும் குறைவான இந்த புத்தகத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலை பெற்றிருக்கும் சாதிய கட்டமைப்பையும், அதன் பெயரில் நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கண்கள் வழியே நம்மை பார்க்கச் செய்கிறார், அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
காலம் நான்கு கால் பாய்ச்சலில் குதித்து செல்லும்போது, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மானுட வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களை செய்யும்போது மொழி மட்டும் எந்த மாற்றமும் பெறாமல் இருந்துவிட முடியுமா? @The_69_Percent@esemarr3 @Greatgo1
சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஒன்றிய அரசின் அமைச்சகம், 1980- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியாவின் வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்த முன்மொழிவுகள் உள்ள ஆவணத்தை அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
(1/n)
காடு எனும் வரையறைக்குள் வரும் பகுதிகளில், காடு சாராத திட்டமான நெடுஞ்சாலை, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளில், தேவைக்கு அதிகமாகவோ, தேவையில்லாமலோ காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க உருவாக்கப்பட்டது தான் வனப்பாதுக்காப்பு சட்டம்.
(2/n)
இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய ஒன்றிய அரசு முயற்சிக்கிறது, அதில் 14 திருத்தங்களை/ சட்ட விலக்குகள் குறித்த முழுமையல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு, அதன்மீது கருத்துக்களை கோரியுள்ளது.
நாம் இந்த தளத்தில் பல நாட்கள் வெறும் பொழுது போக்கிற்காக பதிவுகளை இட்டு கடந்து செல்கிறோம், ஆனால் இன்று இது பேச வேண்டிய விஷயம் என தோன்றுகிறது. இது விளையாட்டல்ல நமக்கு பெறும் வினையாற்றும் ஒரு செய்தி.
(1/n)
டெல்லியில் விவசாயிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர், அதற்கு காரணம் புதிய வேளாண் சட்டம், என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட வேண்டிய தேவை என்ன என்பது பலருக்கும் புரியாமல் இது தேவையில்லாத போராட்டம் என்று கூறுகின்றனர்.
(2/n)
இந்த வேளாண் சட்டத்தில் இருக்கும் எனக்கு தெரிந்த பிரச்சனைகளை கூறுகிறேன், நீங்கள் சொல்லுங்கள் இதை எதிர்க்க வேண்டுமா? இல்லையா என்று....
சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள "நடுகல்"லினை கொண்டு ஏற்படுத்தப்பட்ட புரட்டுகள்..
தொல்காப்பியர் காட்டும் நடுகல் என்பது "சீர்த்தகு மரபு"
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்த்தகு மரபில பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)
(1/n)
இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய லிங்கம் போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள் ஆனால், அன்றைய தமிழில் "ல" என்று வார்த்தை துவங்காது
எடுத்துக்காட்டாக,
லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்.
(2/n)
லிங்கம் என்பது வடமொழி அதை தமிழில் எழுதும் போது இலிங்கம்.
அப்புறம் எப்படி நடுகல் லிங்கம் ஆகும்?
தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்றும் மதம் எனும் பேயும் வந்து ஊடாடினால் இது தான் கதி.
சங்க இலக்கியங்களில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளது, அது ஆரியர்கள் சொன்னது அல்ல. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் கூட கடவுளைப் பற்றிய குறிப்பு உள்ளது என்று வாதிடுவார்கள் பலர்,அதற்க்கு எடுத்துக் காட்டு என்று இந்த பாடலையும் கூறுவார்கள்.