இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.
🙏🇮🇳2
மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார். 🙏🇮🇳3
மண்டபத்தின் மேல்பகுதியில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் உணர்த்தும் விதமாக ஒரே சிலையில் வடிவமைக் கப்பட்டுள்ளதும், முன்புறம் யானையும், சிங்கமும் தவம் செய்யும் கோலத்தில் "கஜகேசரி'யாக உள்ளதையும் காண கண்கோடி வேண்டும்.
🙏🇮🇳4
*திறக்கும் நேரம்* :
வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் காலை 8 - 10, மாலை 5 - 7 மணி வரையில் நடை திறந்திருக்கும்.
🙏🇮🇳5
*பொது தகவல்* :
வளாகத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனி மரங்கள் தலவிருட்சங்களாக உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்சி தருவதைப்போலவே, இங்குள்ள ஆண்டாள், முன்புறம் துளசிமாடம், பின்புறம் தீர்த்தத்தொட்டி அமைந்திருக்க மத்தியில் அருளுகிறாள்.🙏🇮🇳6
வலம்புரி விநாயகர், நம்மாழ்வார், நாகர், சந்தான கோபால கிருஷ்ணன், துர்க்கை ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்.
*பிரார்த்தனை*
திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல இல்வாழ்வுஅமைய,செவ்வாய்தோஷம் நீங்க வேண்டிக்கொள்ளலாம்.
🙏🇮🇳7
*நேர்த்திக்கடன்* :
நரசிம்மருக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி, திருமஞ்சனம் செய்து திருவாபரணங்கள் செலுத்தலாம்.
🙏🇮🇳8
*தலபெருமை* :
துவாரபாலகர்கள்: மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆஞ்சநேயர் விரும்பியதால் அவருக்கு சோளிங்கபுரத்திலும், கருடனின் விருப்பத்தால் அவருக்கு அகோபிலத்திலும் காட்சி தந்து அருளினார். 🙏🇮🇳9
எனவே இங்கு இவ்விருவரும் மகாமண்டபத்தில் துவாரபாலகர்களாக காட்சி தருகின்றர்.கொடிமரம், விமானம் இல்லை.
செவ்வாய் தோஷம் நீக்கும் நரசிங்கர்: மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும், நவக்கிரகங்களை ஒத்துள்ளன. எனவே, நவக்கிரகங்களை வணங்கி பெறும் பலன்களை, விஷ்ணுவின் அவதாரங்களை வணங்கிபெறலாம்.
🙏🇮🇳10
அவ்வகையில் இங்குள்ள நரசிம்மர், செவ்வாய் கிரகத்தை ஒத்துள்ளார். எனவே, இவரை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கி, தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
🙏🇮🇳11
*தல வரலாறு* :
சிவனை நோக்கி தவம் செய்த இரணியன், தேவர், அரக்கர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆயுதங்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அவன் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றான். 🙏🇮🇳12
ஆனால், அவனது மகனாகப்பிறந்த பிரகலாதன், தந்தையை வணங்காமல் நாராயணனை வணங்கி வந்தான். கோபம்கொண்ட இரணியன், மகனை துன்புறுத்தி அவன் வணங்கும் நாராயணனை காட்டும் படி கூறினான். அது பகல் நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கும் அந்திக்காலம். 🙏🇮🇳13
அப்போது, தூணிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட உருவில் தோன்றிய மகாவிஷ்ணு, இரணியனை அழித்தார். இவரே, இத்தலத்தின் மூலவராக இருந்து அருளுகிறார்.
🙏🇮🇳14
*சிறப்பம்சம்* :
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். 🙏🇮🇳15
மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார்
*பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பிக் கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். 🙏🇮🇳3
ஜாதகம் என்பது லக்னத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ராசி என்பது இரண்டேகால் நாளைக்கு ஒன்று வீதம் வரும்.
லக்னம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் வரும்.
அதுவும் அம்சலக்னம் 13நிமிடத்திற்கு ஒன்று வீதம் வரும்.
இன்னும் சொல்லப்போனால் சஷ்டியாம்ச லக்னம் என்பது 2நிமிடத்திற்க் ஒன்று வீதம் ஒரு நாளைக்கு 720லக்னங்கள் வரும்.ஆகவேதான் ஒரே ராசியில் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு விதமாக அமைகிறது.ஒரே லக்னத்தில் ஒரே நட்சரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைமுறைக் கூட வேறு பட்டுள்ளது.ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில்தான் எவ்வளவு வித்தியாசம்! .
உ.பி.யில் ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசனத் திட்டம்: நாளை தொடக்கம்
உ.பி.யில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 5 நதிகளை இணைக்கும் நீர்பாசன திட்டப்ப பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை காரணமாக,
இத்திட்டம் தாமதமாகி, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.
2016 ஆம் ஆண்டு, பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது.
அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி, அடுத்த 200 ஆண்டுக்காலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி,லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காக தியாகம் செய்த வ.உ.சி வகையறா.
அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம், அரசியல், தேசபணி எனப் பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான், இந்தியாவில் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லிக் கொடுத்ததே அந்த மாமனிதனே.
ஆளுநர், மத்திய அமைச்சர், எனப் பல பதவிகளை வகித்த தமிழர் அவர், பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.
மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான். சக்கரவர்த்தி ராஜாகோபாலசாரியார் சுருக்கமாக ராஜாஜி.
இது உங்கள் இடம்: தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு புரியும்.. அதெல்லாம் வெறும் வேஷம்!
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் துாக்கி மணையில் வை' என்று ஒரு சொலவடை உண்டு.
அப்படி தான், தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள், நுாற்றுக்கணக்கில் வரிசைக் கட்டி காத்து கொண்டிருக்கின்றன.
அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது, மழை நீர் வெள்ளம். வீதி மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் புகுந்த வெள்ளத்தால், மக்கள் உச்ச கட்ட வேதனையில் தவித்து வருகின்றனர்.