பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். எந்த ஒன்றைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் என்றால் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவை தரவுகள் எனப்படுகின்றன. இவ்வகைத் தரவுகளைக் கொண்டு முறைப்படி ஆய்வு செய்து புதிய முடிவுகள், கருத்துகள்
, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பெற முடியும்.
உலகில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட தரவுகளில், 90 சதவிகிதம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன என்ற தகவல் உங்களைத் திகைக்கச் செய்யலாம். மனிதர்கள் நாளொன்றில் சுமார் 2.5 குவின்டில்லியன் பைட்ஸ் அளவுக்குத் தரவுகள்
உற்பத்தி செய்கின்றனர். 2025-ல் 463 எக்ஸாபைட்ஸ் அளவுக்கான தரவுகளை நாளொன்றில் மனிதர்கள் உற்பத்தி செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 'Data is the new oil' என்று கூறும் அளவுக்கு தரவுகளின் ஆற்றல் வளர்ந்திருக்கிறது; ஆம், நாம் வாழ்வது
பெருந்தரவுகளின் யுகத்தில்!2020-ம் ஆண்டு இந்தியாவில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 69 கோடியாக இருந்தநிலையில், இந்த ஆண்டு அது 76 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 82 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது; 2017-ல் இந்தியாவில் 24 கோடியாக இருந்த ஃபேஸ்புக்
பயனாளர்களின் எண்ணிக்கை, 2020-ல் 34 கோடியாக உயர்ந்திருக்கிறது. இத்தனை கோடி பயனாளர்களின் இணையச் செயல்பாடுகள் உற்பத்தி செய்யும் தரவுகளின் அடிப்படையில் தான் விளம்பரங்களும், பரிந்துரைகளும் இன்னும் பிறவும் திரையில் தோன்றுகின்றன. இந்தக் கட்டற்ற தரவுகளைக் கொண்டு தரவு அறிவியலின்
அடிப்படையில் உருவாக்கப்படும் நிரல்கள்தான் இணைய உலகை இன்று ஆள்கின்றன.
ஆக, டிஜிட்டல் உலகில் நம்முடைய இயக்கம் என்பது நாம் உற்பத்தி செய்யும் தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது; அது நம் யதார்த்த வாழ்விலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பின்னணியில் தான் தரவு
அறிவியல் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒன்றாக இன்றைக்குப் பரிணமித்திருக்கிறது.தரவு அறிவியல் என்றால் என்ன என்று இப்போது உங்களுக்கு ஓர் அறிமுகம் கிடைத்திருக்கும். இது அடிப்படையில் ஒரு தகவல் தொழில்நுட்பப் பிரிவு. உற்பத்தியாகும் ஒட்டுமொத்த தரவுகளைத் தொகுத்து, அவற்றை
ஒருங்கிணைத்து அவற்றிலிருந்து பயன்படக்கூடிய தேவையாக தரவுகளைப் பிரித்து குறிப்பிட்ட புதிய தரவுகளை எதிர்காலச் செயல்பாட்டுக்கு உருவாக்குதல் தரவு அறிவியல் எனப்படுகிறது.யாரெல்லாம் படிக்கலாம்?
எந்தவொன்றின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதும், அதன் அடுத்தடுத்த நிலைகள் மீதும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற துறையாக தரவு அறிவியல் விளங்குகிறது. எண்கள், கணக்குகளில் ஆர்வம் கொண்ட கணிதம், புள்ளியியல் மாணவர்கள் தரவு அறிவியலை எளிமையாகப் படிக்க முடியும்; கணிதம்,
புள்ளியியல், கணினி அறிவியல், பொறியியல் படித்தவர்கள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாக இருக்கும். மற்ற படிப்புகளில் இருந்து சற்றே மாறுபட்ட இந்தத் துறையில், கட்டற்ற எண்ணிக்கையிலான தரவுகளைக் கையாள்வதற்கு மன ஆற்றலும் அவசியமாகிறது. எக்ஸெல் (Excel) குறித்த அறிவும் தேவை;
ஆர் (R) ப்ரோகிராமிங், டாப்ளூ (Tableau), மைக்ரோசாஃப்ட் பிஐ (BI), கூகுள் சார்ட்ஸ் (Charts), பைதன் (Python), சாஸ் (SAS) போன்ற நிரல்கள் குறித்த அறிவு இருப்பதும் அவசியமானது. இந்தத் தகுதிகளோடு தரவு அறிவியலைப் படிப்பவர்கள் துறை சார் வல்லுநர்களாக மிளிரலாம்.
எங்கு படிக்கலாம்?
இந்தியாவில் கீழ்கண்ட இடங்களில் டேட்டா சயின்ஸ் பயிலலாம்:
Indian Institute of Information Technology and Management (IITM) – Kerala, IIT Madras, IIIT Delhi, Jawaharlal Nehru University (JNU), Indian Institute of Science (IISc) - Bangalore, National Institute of
Securities Markets (NISM), IIM Calcutta, IIT Hyderabad, IIT Kharagpur, Ahmedabad University, Academy of Maritime Education and Training, Bharathiar University Coimbatore.
தமிழகத்தில் வி.ஐ.டி பல்கலைக்கழகம், சென்னை லயோலா கல்லூரி போன்ற இடங்களில் எம்.ஸ்.சி., டேட்டா சயின்ஸ்
படிப்பு வழங்கப்படுகிறது.
இவை தவிர, இணைய வழியிலான டேட்டா சயின்ஸ் படிப்பைச் சென்னை ஐ.ஐ.டி. வழங்குகிறது
விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை ஐ.ஐ.டி-யில் வழங்கப்படும் இணைய வழியிலான டேட்டா சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
சான்றிதழ் படிப்பாகவும் வழங்கப்படும் டேட்டா சயின்ஸ் பயில புள்ளியியல், கணினியியல், கணிதம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகள்
டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு, Data Scientist, Data Architect, Data Mining Engineer, Business Intelligence Analyst என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழகம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளதால்,
வரும் காலங்களில் மாணவர்களின் தவிர்க்கமுடியாத தேர்வாக டேட்டா சயின்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக என்னென்ன படிப்புகள் உள்ளன? எங்கெல்லாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கலாம்?
அவற்றை கற்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பார்க்கலாம்.
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சென்னையில் மத்திய அரசின் நிறுவனமும், திருச்சியில் மாநில அரசின் கல்வி நிறுவனமும் உள்ளன. இதில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களும் 10ஆம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம்.
ஆண்டுக்கு பிரிவை பொறுத்து தோராயமாக ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேட்டரிங் படிப்பில் செய்முறையே பிரதானமாக இருக்கும். இந்த கேட்டரிங் படிப்புக்கு வெளிநாட்டில் அதிக வேலைவாய்ப்பு இருக்கிறது.
தொழிலாளர் துறையின் வரலாறு 1920 ஆம் ஆண்டில் துவங்கியது. ஆரம்ப காலத்தில் தொழில்முறைசாரா தொழிலாளர்களின் நலன்களை காப்பதையே முதன்மைப் பணியாக இத்துறை கவனித்து வந்தது. துரிதமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது அமைப்புசாரா தொழிலாளர்களது
நலனையும் பேணும் வகையில் இத்துறையின் பணி விரிவடைந்துள்ளது.
அரசின் தாராளமயமாக்கல் கொள்கை, மாநிலத்தின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. நாட்டில், பெருமளவு தொழில்மயமான மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், இம்மாநிலம் பல தொழில்களில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது
தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்புயும், மனித ஆற்றலையும் தமிழகம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழு பயன்களையும்
பெற்றுத்தந்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்திடவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல்மிக்க சீரிய தலைமையின்கீழ் இந்தியாவிலேயே, தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக
போதுமானது. சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது.
இளநிலை படிப்புகள்:
டிப்ளமோ இன் இந்தியன் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் ஆர்கியாலஜி அண்ட் மியூசியாலஜி.
முதுநிலைப் படிப்புகள்:
எம்.ஏ. இன் ஆர்கியாலஜி.
எம்.ஏ. ஏன்சியன்ட் ஹிஸ்டரி அண்ட் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் இன் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் பிலாஷபி இன் ஏன்சியன்ட் ஹிஸ்டரி இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
போஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் ஆர்கியாலஜி.
மனிதவள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இளைஞர்களிடையே சுகாதாரம், தோழமை, நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த தெளிவான தாக்கத்தை உண்டாக்கும். அனைத்து தரப்பு இளைஞர்களிடையே நல்ல குடிமகனாக
விளங்குவதற்கான தகுதிகள், சமுதாய பனிக்காக தங்களை அர்ப்பணித்தல் போன்ற பண்புகளை வளர்ப்பதே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிக்கோளாகும். தனிநபர் பண்புகளை வளர்த்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் குறிக்கோளுக்காக பொறுப்பேற்கும் எண்ணத்தை உருவாக்குதல்
கடல் சார்ந்த வணிகத்திலும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் மிகச்சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. #ஒன்றியஉயிரினங்கள்
கடல் மற்றும் கடல் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் ஏராளமான வல்லுநர்கள் தமிழகத்தில் இருந்து தயாராகி உள்ளார்கள். கப்பல் சார்ந்த படிப்புகள் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியையும் மாற்றங்களையும் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ப இந்தத் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
மரைன் எஞ்சினியரிங் படிப்பில் கப்பல்களின் தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு குறித்து தெரிந்துகொள்வதால் பரந்து விரிந்திருக்கும் இந்தக் கடல் பரப்பில் உலக அளவில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. +2வில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களும்,