பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப்பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார். 🙏🇮🇳1
அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு எதிரில் யோக நரசிம்மர் இரண்டு தாயார்களுடன் உள்ளார். இப்படி ஒரே இடத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் மூவரையும் தரிசிப்பது தலத்தின் சிறப்பம்சம்.
🙏🇮🇳2
பிரம்மா சிவனின் தலைமுடியைப் பார்க்க அன்ன வடிவெடுத்து பறந்ததாகவும், அம்முயற்சியில் தோற்றதால் பார்த்து விட்டதாக பொய் சொன்னதாகவும் ஒரு கதையுண்டு.
🙏🇮🇳3
நான்கு வேதங்களையும் நான்கு வாயால் உச்சரித்துக் காப்பவர்
பிரம்மா.படைத்தவரையே மீண்டும் சென்றடைய வேண்டும் என்பது ஆன்மிகத்தத்துவம். அந்த வகையில் படைத்த பிரம்மனையே மீண்டும் நாம் அடைய வேண்டும் என்ற அடிப்படையில் பிரம்மன் வழிபாடும் முக்கியத்துவம் பெறுகிறது. 🙏🇮🇳4
எனவே, பிரம்மனுக்கும் சில கோயில்கள் அமைந்தன. இந்தவகையில், கும்பகோணத்திலுள்ள பிரம்மன் கோயிலில் சரஸ்வதி, காயத்ரி ஆகிய தனது தேவியருடன் அவர் அருள் செய்கிறார்.
🙏🇮🇳5
பிரம்மா தன் தேவியர்களான சரஸ்வதி, காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப் பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார். அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். 🙏🇮🇳6
பிரம்மனுக்கு எதிரில் யோக நரசிம்மர் இரண்டு தாயார்களுடன் உள்ளார். இப்படி ஒரே இடத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் மூவரையும் தரிசிப்பது தலத்தின் சிறப்பம்சம்.
திண்டல் முருகன் கோயில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில், திண்டல்...
ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் திருத்தலம்.
🙏🇮🇳1
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.
மூலவர்:
வேலாயுத சுவாமி, முருகன்
கட்டடக்கலை வடிவமைப்பு:
தென் இந்தியா, கோயில்கள்
கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். 🙏🇮🇳2
திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு சிறப்பாக நடைபெறும்.
🙏🇮🇳3
#சிதம்பரத்தை நடராஜர் கோவில் என்று குறிப்பிட்டாலும் இங்குள்ள மூலவர் *ஆதிமூல நாதர்* என்னும் பெயரில் லிங்க வடிவில் அருள்புரிகிறார்.
கைலாய நாதரான சிவபெருமானின் நடனத்தை பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் தில்லைவனமான இத் தலத்தில் ஆதிமூல நாதரை நோக்கி தவமிருந்தனர்.
அம்முனிவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தைப்பூச நந்நாளில் உச்சிப்பொழுதில்
*திரிசக்ர முனிவர்கள்* என்னும் தில்லைவாழ் அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார். இதைவிட சிறப்பாக யாரும் நடனமாட முடியாது என்பதால் ஆடலரசன் என்னும் பொருளில் *நடராஜர்* எனப் பெயர் பெற்றார்.
சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,
உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். 🙏🇮🇳1
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.
3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.
*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.
🙏🇮🇳2
மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.
தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.