#திமுகஇளைஞரணி
தாய்க் கழகத்துக்குப் பிறகு திமுகவின் மிக முக்கிய அணியாக இளைஞர் அணி இருப்பதின் காரணம் யாவரும் அறிந்ததுதான்! அந்த அணியைத் துவக்கி, 30 ஆண்டுகள் திறம்பட நடத்தி வந்தது திமுகவின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனாலேயே இயல்பாக கூடுதல் கவனம் பெற்ற இளைஞர் அணி உருவாக்கிய
தலைவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பெரும் வெற்றிகளின் போதும், தொடர் தோல்விகளின் போதும் கட்சிக்கு அச்சாணியாக இருந்து செயல்பட்டது திமுக இளைஞர் அணிதான். அந்த இடத்தை இட்டு நிரப்ப மூன்றாண்டுகளுக்கு முன்னர் @Udhaystalin தேர்வு செய்யப்பட்ட போது அவர் எதிர்கொண்ட கடுமையான விமர்சனமும், இங்கே
நடந்த தொடர் விவாதங்களும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவியை தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியைப் போல பூதாகரமாக்கியது. அதனாலேயே, இளைஞர் அணிச் செயலாளரின் தேர்வு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
நான் கவனித்தவரை இளைஞர் அணியின் இந்த மூன்றாண்டு செயல்பாடுகளை தொகுத்து எழுதினால் அது ஒரு
துணை அமைப்புச் செயல்பாட்டின் case study ஆக கொள்ள முடியும். 1. ஒரு தலைவரின் முக்கியக் கடமை கூட்டுப் பொறுப்பு ஏற்பது. அதை இளைஞர் அணிச் செயலாளர் மிகச் சிறப்பாக செய்தார். 2. ஏற்கனவே சொந்த நிறுவனங்களை திறம்பட நடத்திய நிர்வாக அனுபவம் இருந்த காரணத்தால், தனது துணைச் செயலாளர்களுக்கு
பொறுப்பை மிகச் சரியாக delegate செய்தது அனைத்து மாவட்ட அணிச் செயலாளர்களையும் சிறப்பாக வழி நடத்த உதவியது. 2. உறுப்பினர் சேர்க்கையை ஒரு கடமைக்கோ, சாதனை நிகழ்த்தவோ செய்யாமல் உள்ளார்ந்து அதைச் செய்தது என்னை மிகவும் கவர்ந்தது. இளைஞர் அணி நிர்வாகத்தை தாய்க் கழகத்துக்கு இணையாக கிளை
அளவில் கொண்டு சென்றதே மிகப் பெரிய சாதனைதான். கடுமையான உழைப்பும், ஈடுபாடும் தேவைப்படும் செயல் அது. அதற்கும் மேலாக, உறுப்பினர் படிவத்தை வெறுமனே பெயர்களால் நிரப்பாமல், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆதார் எண், அடையாளக் குறியீடு என பல்வேறு அம்சங்களை கட்டாயமாக்கியதின் மூலம் அத்தனை
உறுப்பினர்களும் ஏட்டளவில் மட்டும் இல்லாமல், உண்மையில் களத்தில் அவர்கள் இருப்பை உறுதி செய்த அந்த யுத்தி மிகவும் அருமையானது. அப்படி சேர்க்கப்பட்ட அத்தனை லட்சம் புதிய உறுப்பினர்களின் பெயர்களையும் முரசொலி நாளிதழின் சிறப்புப் பிரதியாக அச்சிட்டு ஒவ்வொரு இளைஞருக்கும் ஆதாரமாக தந்த பாங்கு
இதுவரை கழகம் கண்டறியாதது. 3. தேர்தலில் இளைஞர் அணிக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் பொதுக்குழுவில் பேசியபோது லேசான சிரிப்பலையும், கைத்தட்டலும் எழுந்தது. வழக்கமான கோரிக்கைதான் அது எனவும் நினைத்தனர். ஆனால் தேர்தலில் வேட்பாளர் தேர்வின் போது இளைஞர் அணியினரின் தகுதியும், தரமும்
தலைமையை மிகவும் சிந்திக்க வைத்ததை யாவரும் அறிவோம். மூத்த நிர்வாகிகளே தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளத் திணறிப் போகுமளவுக்கு மிகச் சிறப்பானதொரு தொகுப்பைத் தயார் செய்து அனுப்பி வைத்தப் பெருமையும் இளைஞர் அணிச் செயலாளரைச் சேரும். 4. தேர்தலில், இளைஞர் அணிச்செயலாளரின் பிரச்சாரம்
அளித்தத் தாக்கத்தை நாடே அறியும். ஆனால் இதிலும் என்னைக் கவர்ந்தது, அவரே ஒரு வேட்பாளராக இருந்தும் தனது தொகுதிக்கு என எந்த முக்கியத்துவமும் தராமல் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் தொகுதிகளைக் கூட விடாமல் பம்பரமாகச் சுழன்றதுதான்! இந்தச் சுயநலமற்ற தலைமைப் பண்பை கூட்டணித் தலைவர்கள்
அனைவரும் பாராட்டியபோது எங்களுக்கே பெருமையாக இருந்தது எனில், தலைவர் நிச்சயம் மனம் நெகிழ்ந்து போயிருப்பார்.
பிரச்சாரத்தின் இறுதி நாளில் கூட தனது தொகுதிக்கு தலைவர் வரும்போது மட்டும் உடன் இருந்து விட்டு அதன்பிறகு எழும்பூர், பெரம்பூர் என சுற்றியதோடு, ராயபுரம் தொகுதியில் போட்டி கடுமை
என கேள்விப்பட்டு திட்டமிடப்படாதப் பயணமாக அங்கும் சென்று சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்ததின் விளைவுதான் தலைவர் சொன்னபடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வீழ்த்தியது. ஒரு பெரும் புயலின் போது தனதருகே இருக்கும் சிறு செடியையும் சேர்த்தே தாங்கும் விருட்சத்தின் தலைமைப் பண்பு அது.
5. பெரும் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிகாரத்தில் பங்கு பெறாமல், மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட @Udhaystalin ஐ நீங்கள் காண்கிறீர்கள். ஆனால், பேரிடரின் போது கரோனா நோய் தாக்குதலில் உயிருக்குப் போராடி பல நூறு பேர்களின் உயிரை தனது அயராத முயற்சியினால் காப்பாற்றிய
செயலாளரை நான் அறிவேன். அவரால் காப்பாற்றப்பட்ட அந்த உயிர்களின் உறவினர்கள் அறிவார்கள். இரவு 2 மணிக்குக் கூட உரிமையோடு அவரை எழுப்பி இருக்கிறோம். உடனடி உதவிகளைப் பெற்று பல உயிர்களைக் காத்து இருக்கிறோம். தலைவரின் உத்தரவின்படி களத்தில் உழைத்த எங்களுக்கெல்லாம் பேருதவியாக, பெரும் பலமாக
இருந்தது இளைஞர் அணிச் செயலாளர்தான் என்பதை இந்த நேரத்தில் நன்றியோடு பதிவு செய்கிறேன்.
இன்றுடன் அவர் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது எனும் செய்தியைப் பார்த்தவுடன் எனக்குள் எழுந்து வரும் எண்ணங்கள் இவை. என்னைக் காட்டிலும் அருகில் இருந்து அவருடன்
பணியாற்றும் பல ஆயிரம் இளைஞர் அணித் தம்பிகளுக்கு இதைவிட அதிகம் தெரிந்திருக்கும்.
காலம் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. கலைஞரின் பேரனுக்கான bench mark எப்போதுமே சராசரிக்கும் மிக உயரமானதாகத்தான் இருக்கும். அதுதான் இயற்கை. எந்த உயரம் என்றாலும் அதை அநாயசமாகத் தொட்டு விட்டு
தாண்டிச் செல்லும் அந்த இயல்பையும் கலைஞரின் கணக்கில்தான் எழுதியாக வேண்டும்.
"உழைப்பு! உழைப்பு! உழைப்பு! அதுதான் ஸ்டாலின்" என்றார் தலைவர் கலைஞர்.
"ஓயாமல் உழைத்தவன் இங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்" என்றது கலைஞரின் கல்லறை வாசகம்.
உழைப்பினால் உயரம் தொடும் ஒவ்வொருவருமே கலைஞரின்
வாரிசுகள்தான். "அறிவாலயம் பக்கமே வராமல் எங்கோ கிராமத்தில் இருந்தபடி உழைத்துக் கொண்டிருக்கிறானே! அந்தத் தொண்டனுக்கானதுதான் இந்தக் கட்சி" என்றார் தலைவர் @mkstalin .
அப்படியான தொண்டர்களை அரவணைக்கும் இளைஞர் அணிச் செயலாளருக்கு அன்பான வாழ்த்துகள்.
உழைப்பினால் உயரம் தொடுங்கள்.🙏💐
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Censorship : இதுவும் பிரிட்டனிடம் இருந்து நாம் கற்ற கட்டுப்பாட்டு முறைதான். முகலாய காலத்தில் கூட அரசர்களையே கேலியும், கிண்டலும் செய்து வந்த பல்வேறு கலைவடிவங்கள் எந்தவிதத் தடையுமின்றி நடந்து வந்த பண்பாட்டுச் சூழல் இது. நாட்டார் பாடல்களில் அதன் எச்சத்தை இன்னமும் நாம் காணலாம்.
பிரிட்டிஷ் அரசுதான் முதன்முறையாக மேடை நாடகங்களுக்குத் தணிக்கை முறையைக் கொண்டு வந்தனர். அதன்படி நாடகம் மேடை ஏறுவதற்கு முன் அதன் முழு ஸ்கிரிப்டை காவல்துறையிடம் தந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. திரைப்படங்கள் வரத் தொடங்கியபோது அவைகளுக்கு தணிக்கை இல்லாமல் இருந்ததாம்!
பிறகு, அதன் ஆதிக்கத்தைக் கண்டு மிரண்டு போன அரசு திரைப்படங்களுக்கு என தணிக்கைத் துறை உருவாக்கியது. எந்த ஒரு கட்டுப்பாட்டு அமைப்பும் நாளடைவில் தேவைப்படாமல் போவதுதான் சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளம். இங்கிலாந்தில் இப்போது திரைப்படத் தணிக்கைத் துறையின் பணி வெறுமனே, Age Rating
#தேசப்பற்று என்பதை தேசத்தின் எல்லையில் கிடைக்கும் பொருள் அல்ல. அது மக்களின் உணர்வுகளில் கிளர்ந்தெழக் கூடிய உணர்வு. தேசத்தைக் காப்பது என்பது தேசத்தின் எல்லையைக் காப்பது மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளைக் காப்பதும்தான். தேச சேவை என்பது எல்லையில் பணிபுரிவது
மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் அடிதட்டு மக்களை மேலுயர்த்தும் பணியும்தான்.
எப்போதெல்லாம் தங்களின் போலி முகமுடிகள் கிழிந்து தொங்குகிறதோ, அப்போது மட்டும் "எல்லையில் ராணுவ வீரர்கள்" என கூச்சலிட்டு உருவாக்கும் போலி எழுச்சிக்கு ஆயுள் ஓரிரு நிமிடங்கள் கூட இருக்காது. உதாரணமாக, எல்லையில்
ஒரு ரெஜிமெண்டில் பணிபுரியும் 1000 ராணுவ வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களை மாநிலம் வாரியாக பிரிப்போம். பிறகு பொருளாதார வாரியாக, மதம் வாரியாக, சாதி வாரியாக பிரிப்போம். இவர்கள் அனைவருமே தேசத்தின் பாதுகாவலர்கள்தானே! இவர்கள் அனைவருக்குமே தேசத்தின் வளங்கள் சமமாக பிரித்துத்
நீண்ட திரெட் :
நேற்று இந்நேரம் டைம்லைன் இருந்த கொதிநிலையை எண்ணிப் பார்க்கிறேன்.
தடுப்பூசி முகாம்களுக்கு மக்களைக் கொண்டு வரும் பணியைச் செய்ய சென்று கொண்டிருந்த நேரத்தில் டிவிட்டரை திறந்தபோது திருச்சியில் நடந்த சம்பவத்தை அறிந்தேன். இதென்ன! தவறான அணுகுமுறையாக உள்ளதே என நினைத்தபோது
நண்பர் ஒருவர் அழைத்து பாதிக்கப்பட்ட பையனுக்கு உதவ முடியுமா என கேட்டார். அந்தப் பக்கம் நடந்தது எதுவென தெரியலையே என்றேன். அந்த சம்பவத்தின் இணைப்பை அனுப்பி வைத்தார். பார்த்தால் அது நான் ப்ளாக் பண்ணி வைத்திருக்கும் ஐடி. அப்போதே நான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே
அதற்கான எதிர்வினையாக உங்களிடம் எழுந்த கோபமும், ஆத்திரமும் என்னையும் உள்ளே இழுத்து விட்டு விட்டது. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்களான @IlovemyNOAH2019 , @Surya_BornToWin போன்றோர் கூட சமநிலை இழந்திருந்ததை என்னால் இப்பவும் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் நிதானமாக தமது
"மாநில வளர்ச்சி கொள்கைக்குழு" எனப்படும் முன்னாள் மாநிலத் திட்டக்குழுவுக்கு துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு தமிழக அரசின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரங்களும், வசதிகளும் கொண்ட உயர்ந்த பொறுப்பாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில்
தமிழக அரசின் கொள்கைகள், மக்களுக்கான இலவசத் திட்டங்கள், கல்வி, மருத்துவ அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக வடக்கில் இருந்து சங்கிகள் நடத்திய மிகப் பெரிய பண்பாட்டுப் போரை நாம் எதிர்கொண்டோம். அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து நமது சமூகநீதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு
ஆதரவாக ஆதாரப்பூர்வமாக பேசியும், எழுதியும் இளம் தலைமுறையினருக்கு "நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம்" என ஆற்றுப்படுத்தி வழி நடத்திய பொருளாதார மேதைக்கு இந்த உயரிய கவுரம் அளித்தது மிகப் பொருத்தமே!
அடுத்ததாக பேரா. ம. விஜயபாஸ்கர். The Dravidian Model புத்தகம் எழுதிய ஆய்வாளர். அதுபோக
இந்திய தபால் துறை :
நான் மிகவும் மதிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் இது. உலகிலேயே மிகச் சிறப்பான கட்டமைப்பும், அர்ப்பணிப்பும் கொண்ட நிறுவனம் இது என்று கூட நான் சொல்வேன். சின்ன வயசிலே நான் பல பரிசோதனைகளை செய்து பார்த்த அனுபவத்தில் இதை சொல்கிறேன்.
நினைவு 1 : அட்லஸ் எடுத்து வடக்கே
ஒரு சின்ன ஊரின் பெயரைத் தேர்ந்தெடுப்பேன். 15 பைசாவுக்கு போஸ்ட் கார்டை வாங்கி அந்த ஊரில் ஒரு கற்பனைக் கேரக்டரை உருவாக்கி, உடைந்த ஆங்கிலத்தில் எங்க ஊர், கோவில் பற்றி, அன்றைக்கு மயில் பார்த்தது, வீட்டுப்பாடம் எழுதியது எல்லாம் டைரி போல எழுதி தபால் பெட்டியில் போடுவேன். நாட்கள் மிக மிக
மெதுவாக நகர்ந்த காலம் அது. பல நாள் கழித்து அந்த தபால் கார்டு மேலே பற்பல முத்திரைகளை வாங்கி குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப்போட்ட துணி போல எனக்கே திரும்ப வரும். addressee not found என முத்திரை தாங்கி.. நான் கொடுத்த 15 பைசாவுக்கு மதிப்புத் தந்து அந்த அட்டையை பல ஆயிரம் மைல்கள் பற்பல
+2 தேர்வை எப்படி நடத்தவது?
எனது யோசனைகள்.. பரிசீலினைக்கும் & விவாதத்துக்கும். 1. சராசரியாக 8 லட்சம் பிள்ளைகள் +2 தேர்வை எழுதுகின்றனர். 2. எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் 6 தேர்வுகள்தான். 3. அதில் இரண்டு மொழிப்பாடங்கள். 4. மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்கள்தான்
உயர்கல்விக்கான தகுதி மதிப்பெண்கள். சரிதானே!
எனது யோசனை :
1.) 8 லட்சம் பேர்களுக்கும் மொழிப்பாடங்களுக்கு அவர்களின் +1, +2 (பிற தேர்வுகள்) அடிப்படையில் மதிப்பெண்களைத் தந்து விடலாம். கூடுதலாக Covid Consideration ஆக 10 மதிப்பெண்களும் தரலாம் 2) வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள
கலை & அறிவியியல் கல்லூரி, பட்டயக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மீதமுள்ள 4 பாடங்களுக்கும் கூட இதே முறையில் மதிப்பெண்கள் வழங்கிவிடலாம்.
மேற்சொன்ன கல்லூரி / பாலிடெக்னிகளில் தேவைக்கும் அதிகமான இரு மடங்கு இடங்கள் உள்ளமையால் இவர்கள் கோரும் இடங்களைத்