தமிழ்நாட்டிலும் நுழைந்த சங்கிகளின் வதந்தி அரசியல் :
நேற்று ஒரே நாளில் டிவிட்டர், பேஸ்புக் வழியே நடந்த பல வதந்திப் பரவல்களை கவனித்திருப்பீர்கள். அது ஒரு organized attack. அவைகளுக்கிடையே இருந்த pattern வடமாநில மக்களுக்கு பழக்கமானது. தமிழ்நாட்டுக்குப் புதியது. ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்ததாக காலையில் ஒரு ட்வீட் வருகிறது. அதுவரை ஏரி திறக்கப்படவில்லை. மதியம் விநாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப் போவதாக முந்தைய நாளே அரசு அறிவிக்கும் காணொளிகள் டிவியில் வந்தது. ஆனாலும் தெரிந்தே இந்தப் பச்சைப் புளுகு வெளியானது.
அடுத்து சென்னை மாநகரமே நீரில் மூழ்கித் தத்தளிப்பதாக
அதே நாளில் இன்னொரு ட்வீட் படத்துடன் வருகிறது. அது குஜராத்தில் எடுக்கப்பட்ட பழைய படம். சென்னை பாதுகாப்பாகவே உள்ளது என @angry_birdu ஆதாரத்துடன் மறுப்பு வெளியிட்டும், பலர் சுட்டிக்காட்டியும் இதுவரை அந்த ட்வீட் நீக்கப்படவில்லை.
அடுத்து, ஒரு பெண் கூரை வீட்டில் தவித்ததாகவும், பிரதமர் நிதி உதவித் திட்டத்தின்கீழ் அவருக்கு கான்கிரீட் வீட்டை பாஜக கட்டித் தந்ததாகவும் இன்னொரு பொய் வந்தது. அது தவறு., அந்தப் பெண்ணுக்கு பலரிடம் உதவிகளை வாங்கி தாங்கள் வீடு கட்டித் தந்ததாக ஆதாரத்துடன் ஒருவர் மறுக்கிறார்.
எத்தனை செருப்படி வாங்கினாலும் தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத சங்கிகள் இன்னொரு அஸ்திரத்தை இறக்குகின்றனர். இந்த முறை நேரடியாக முதல்வரைக் குறி வைத்து..
ஒரு வாரம் முன்பு வெளிவந்த திரைப்படம் ஒன்றை முதல்வர் பார்த்த படத்தை, நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழையின் போது பார்த்ததை
போல சித்தரித்து மேலும் ஒரு பொய் செய்தி வருகிறது. இவைகள் தவிர என் கண்ணில் படாத வதந்திகள், பொய்கள் எத்தனையோ!
நான் குறிப்பிட்ட இந்த நான்கு பொய்களையும் பரப்பியது யாரோ பாஜக தொண்டர்களோ, அபிமானிகளோ அல்ல! அவர்கள் அனைவருமே பாஜகவின் உயர் பதவிகளில் இருப்பவர்கள்., சமூகத்திலும் நல்ல நிலையில்
உள்ளவர்கள். இப்படி இவர்கள் பொய் செய்திகளைப் பரப்ப வேண்டிய அவசியம் என்ன? அது தவறான செய்தி என்பதைச் சுட்டிக் காட்டியும் நீக்காமல் அப்படியே வைத்திருக்கும் தடித்தனம் எங்கிருந்து வருகிறது? இப்படி பலரிடம் திட்டுகளும், சாபங்களும் வாங்கிக் கொண்டு வாழ வேண்டிய தேவை என்ன?
அனைத்துக்கும் ஒரே
பதில் : இவர்கள் வெறும் அம்புகள் மட்டுமே!
இப்படியான வதந்திகளை, பொய்களை உருவாக்கி பரப்புவதும், மெல்ல அவைகளை நம்ப வைக்கும் யுத்தியும் தலைமையின் Proven Success Formula. இதைக் கொண்டுதான் கட்சியின் அமைப்பே இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் கூட கம்யூனிஸ்டுகளை வீழ்த்தினர். குஜராத் மாடல் என
ஒரு சொர்க்க லோகம் இருப்பதாக தமிழ்நாட்டிலும் படம் காட்டினர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வதந்திகளைப் பரப்பும் போக்கு மென்மேலும் அதிகரித்து வருகிறது. இவைகளை இப்போதே தகுந்த முறையில் நாம் எதிர்கொள்ள வில்லை எனில் நாளை இதே போல, சின்ன சண்டைகளைக் கூட இவர்களால் மதக்கலவரமாக உருமாற்ற
படும். தீ விபத்துகள் கூட திட்டமிட்ட வன்முறையாக மாற்றப்படும். இவர்களின் பொய்களுக்கும், சதிகளுக்கும் ஒத்து ஊத தமிழ்த் தேசியம், சாதிய அமைப்புகள் என பற்பல Fringe elements வேறு புறப்பட்டுள்ளன.
சட்டரீதியாக இவர்களை எதிர்கொள்ள இப்போதைய நீதிமன்ற வழிமுறைகளும், தாமதங்களும் நமக்கு உதவாது.
தமிழ்நாட்டுக்கு இப்போதைக்கு மக்கள் மனம் அறிந்து, தேவை புரிந்து செயல்படக் கூடிய ஆளும்கட்சியும், முதலமைச்சரும் கிடைத்துள்ளனர். அடுத்த முக்கியமான தேவை ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி. இதைச் சொல்வதில் சிலருக்கு கோபம் வரலாம். உண்மையில் அதிமுக பலவீனம் அடைந்து அடிமையாக இருப்பது நமது மாநில
நலனுக்கு நல்லதல்ல. அது விட்டுச் செல்லும் வெற்றிடம் மதவாத சக்திகளாலும், ஆதிக்கச்சாதி கோட்பாட்டாளர்களாலுமே நிரப்பப்படும். என்னதான் பெரும் பகை இருந்தாலும் திமுகவும், அதிமுகவும் தடம் மாறாமல் நடத்திச் சென்ற சமூகநீதிப் பாதை திசை மாற்றப்படும். கல்விக்கும், சுகாதாரத்துக்கும் வழிவழியாக
நாம் அளித்து வந்த முன்னுரிமை மாற்றப்பட்டு கோவில்களுக்கும் சிலைகளுக்குமாக மாற்றப்படும். ஏற்கனவே 4 ஆண்டுகால அடிமைத்தனத்தாலேயே நாம் இழந்து விட்ட உரிமைகள் அதிகம். இனியும் நமது மாநில உரிமைகளும், எதிர்காலத் தமிழ்ச் சமூகத்தின் நலனும் பாதுக்காக்கப்பட வேண்டுமெனில் இப்போது நான் வேண்டுவது
1. அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும் வண்ணம் திமுகவின் ஆட்சி 10-15 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடக்க வேண்டும். 2. அதிமுக அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வந்து ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும்.
இந்த இரண்டும் நடந்தாலொழிய இந்த இழிவான அரசியலில் இருந்து தப்ப வழியேயில்லை.
இரண்டாவது நிகழ்வு நம் கையில் இல்லை. காலம் என்ன செய்ய உள்ளதோ தெரியவில்லை. அதுவரையில் இந்தக் கேவலமான பொய் புரட்டு அரசியல் யுத்திகளை நாம் மட்டுமே எதிர்கொண்டாக வேண்டும். ஆதாரங்களுடன் போர் செய்வோம். நட்பு முரண்களை அன்புடன் கடந்து செல்வோம். தமிழ்ச் சமூகமாக நமக்கு இந்தக் கடமை உண்டு. 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இது இப்படித்தான் முடியும்.
முதல் நுழைவாயில் : தமிழர்கள் மட்டும் உள்ளே வாங்க. திராவிடர் என சொல்பவர்களுக்கு அனுமதி இல்லை.
இரண்டாம் நுழைவாயில்: வெளிநாட்டு மதங்களைச் சார்ந்தோர் தாய் மதத்தில் சேர்ந்தால் மட்டுமே உள்ளே வரலாம். சைவம், வைணவ சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.
மூன்றாவது நுழைவாயில்: சைவம் தான் தமிழ்ச் சமயம். வைணவம் வந்தேறி. எனவே சிவனை வழிபடுபவர்கள் மட்டும் உள்ளே வாங்க.
நான்காவது நுழைவாயில் : ஆண்ட சாதிகளுக்கு முன்னுரிமை தருவதுதான் வழக்கம். அவங்க மட்டும் உள்ளே வரலாம்.
ஐந்தாம் நுழைவாயில்: முப்பாட்டன் ராஜராஜன் காலத்திலேயே பிராமணர்கள்
சொல்படிதான் கேட்டு நடந்திருக்காங்க. அவங்க மட்டும் நாற்காலியில் உட்காரட்டும். நாமெல்லாம் வசதியா தரையிலேயே உட்கார்ந்துக்கலாம் என்பார்கள்.
இது இப்படித்தான் முடியும். ஆயிரமாண்டுகள் ஒவ்வோர் அடியாக முன்னெடுத்துதான் அதிகாரத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இனி ஓர் அடி கூட பின்னோக்கி
#Thread முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு, வழக்கு, கைதுகள் பழி வாங்கும் நடவடிக்கையா? இதிலே பார்ப்போம்.
1996ல் இதை முதலில் தொடங்கி வைத்தது திமுக. அதற்கும் முன்னரும் பல குற்றச்சாட்டுகள் எம்ஜிஆர், கலைஞர் மோதலில் வந்தாலும் அவைகள் விசாரணைக் கமிஷன் என்ற அளவில் போயிடும். கைது வரை சென்றது
96ல் தான். 91-96 ஜெ ஆட்சியில் நடந்த அராஜகங்கள் அப்படி! மக்கள் கொந்தளிச்சுப் போயிருந்தனர். சிட்டிங் சி.எம்மை தோற்கடித்தது அப்போதுதான். அதிமுக கோட்டையான பர்கூரில் ஜெ தோற்கடிக்கப்பட்டார். அப்போது ஜெ & சசி டீம் அடிச்ச கொள்ளை, நடத்திய அராஜகச் செயல்கள் (ஐ.ஏ.எஸ் அதிகாரி மீதே ஆசிட்)
தாளாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தந்த அழுத்தத்தினாலும் ஜெ & கோ மீது ரெய்டு நடத்தப்பட்டது. அங்கே கிடைத்த நகைகள், வைரக்குவியல்கள், சொத்துப் பத்திரங்கள் அவரை சிறைச்சாலைக்கும் அழைத்துச் சென்றது. அப்போதும் இதை அதிமுக பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்தனர்.
அந்த ரெய்டின் விளைவாக
#திமுகஇளைஞரணி
தாய்க் கழகத்துக்குப் பிறகு திமுகவின் மிக முக்கிய அணியாக இளைஞர் அணி இருப்பதின் காரணம் யாவரும் அறிந்ததுதான்! அந்த அணியைத் துவக்கி, 30 ஆண்டுகள் திறம்பட நடத்தி வந்தது திமுகவின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனாலேயே இயல்பாக கூடுதல் கவனம் பெற்ற இளைஞர் அணி உருவாக்கிய
தலைவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பெரும் வெற்றிகளின் போதும், தொடர் தோல்விகளின் போதும் கட்சிக்கு அச்சாணியாக இருந்து செயல்பட்டது திமுக இளைஞர் அணிதான். அந்த இடத்தை இட்டு நிரப்ப மூன்றாண்டுகளுக்கு முன்னர் @Udhaystalin தேர்வு செய்யப்பட்ட போது அவர் எதிர்கொண்ட கடுமையான விமர்சனமும், இங்கே
நடந்த தொடர் விவாதங்களும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவியை தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியைப் போல பூதாகரமாக்கியது. அதனாலேயே, இளைஞர் அணிச் செயலாளரின் தேர்வு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
நான் கவனித்தவரை இளைஞர் அணியின் இந்த மூன்றாண்டு செயல்பாடுகளை தொகுத்து எழுதினால் அது ஒரு
Censorship : இதுவும் பிரிட்டனிடம் இருந்து நாம் கற்ற கட்டுப்பாட்டு முறைதான். முகலாய காலத்தில் கூட அரசர்களையே கேலியும், கிண்டலும் செய்து வந்த பல்வேறு கலைவடிவங்கள் எந்தவிதத் தடையுமின்றி நடந்து வந்த பண்பாட்டுச் சூழல் இது. நாட்டார் பாடல்களில் அதன் எச்சத்தை இன்னமும் நாம் காணலாம்.
பிரிட்டிஷ் அரசுதான் முதன்முறையாக மேடை நாடகங்களுக்குத் தணிக்கை முறையைக் கொண்டு வந்தனர். அதன்படி நாடகம் மேடை ஏறுவதற்கு முன் அதன் முழு ஸ்கிரிப்டை காவல்துறையிடம் தந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. திரைப்படங்கள் வரத் தொடங்கியபோது அவைகளுக்கு தணிக்கை இல்லாமல் இருந்ததாம்!
பிறகு, அதன் ஆதிக்கத்தைக் கண்டு மிரண்டு போன அரசு திரைப்படங்களுக்கு என தணிக்கைத் துறை உருவாக்கியது. எந்த ஒரு கட்டுப்பாட்டு அமைப்பும் நாளடைவில் தேவைப்படாமல் போவதுதான் சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளம். இங்கிலாந்தில் இப்போது திரைப்படத் தணிக்கைத் துறையின் பணி வெறுமனே, Age Rating
#தேசப்பற்று என்பதை தேசத்தின் எல்லையில் கிடைக்கும் பொருள் அல்ல. அது மக்களின் உணர்வுகளில் கிளர்ந்தெழக் கூடிய உணர்வு. தேசத்தைக் காப்பது என்பது தேசத்தின் எல்லையைக் காப்பது மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளைக் காப்பதும்தான். தேச சேவை என்பது எல்லையில் பணிபுரிவது
மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் அடிதட்டு மக்களை மேலுயர்த்தும் பணியும்தான்.
எப்போதெல்லாம் தங்களின் போலி முகமுடிகள் கிழிந்து தொங்குகிறதோ, அப்போது மட்டும் "எல்லையில் ராணுவ வீரர்கள்" என கூச்சலிட்டு உருவாக்கும் போலி எழுச்சிக்கு ஆயுள் ஓரிரு நிமிடங்கள் கூட இருக்காது. உதாரணமாக, எல்லையில்
ஒரு ரெஜிமெண்டில் பணிபுரியும் 1000 ராணுவ வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களை மாநிலம் வாரியாக பிரிப்போம். பிறகு பொருளாதார வாரியாக, மதம் வாரியாக, சாதி வாரியாக பிரிப்போம். இவர்கள் அனைவருமே தேசத்தின் பாதுகாவலர்கள்தானே! இவர்கள் அனைவருக்குமே தேசத்தின் வளங்கள் சமமாக பிரித்துத்
நீண்ட திரெட் :
நேற்று இந்நேரம் டைம்லைன் இருந்த கொதிநிலையை எண்ணிப் பார்க்கிறேன்.
தடுப்பூசி முகாம்களுக்கு மக்களைக் கொண்டு வரும் பணியைச் செய்ய சென்று கொண்டிருந்த நேரத்தில் டிவிட்டரை திறந்தபோது திருச்சியில் நடந்த சம்பவத்தை அறிந்தேன். இதென்ன! தவறான அணுகுமுறையாக உள்ளதே என நினைத்தபோது
நண்பர் ஒருவர் அழைத்து பாதிக்கப்பட்ட பையனுக்கு உதவ முடியுமா என கேட்டார். அந்தப் பக்கம் நடந்தது எதுவென தெரியலையே என்றேன். அந்த சம்பவத்தின் இணைப்பை அனுப்பி வைத்தார். பார்த்தால் அது நான் ப்ளாக் பண்ணி வைத்திருக்கும் ஐடி. அப்போதே நான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே
அதற்கான எதிர்வினையாக உங்களிடம் எழுந்த கோபமும், ஆத்திரமும் என்னையும் உள்ளே இழுத்து விட்டு விட்டது. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்களான @IlovemyNOAH2019 , @Surya_BornToWin போன்றோர் கூட சமநிலை இழந்திருந்ததை என்னால் இப்பவும் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் நிதானமாக தமது