#மார்கழிஸ்பெஷல் மாதங்களுள் நான் மார்கழி என்று கண்ணபிரான் கீதையில் அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் அம் மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும்,
அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறது. நாம் நமது மனத்தைத் தெளிவுப்படுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமந் நாராயணனின் கேசவ, நாராயண, கோவிந்தா, மாதவா, மதுசூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக இருக்கும் கேசவா மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது.
ஆன்மீக மார்க்கத்திற்குச் செல்ல தலையான மாதமாகக் கருதப்படும் இம்மார்கழி மாதம் மார்க்சீர்ஷம் என்பர். அதுவே நாளடைவில் மருவி மார்கழி என்றானது. இம்மாதத்தை கிரிபிரதஷிணத்துக்கு உகந்த மாதமாகக் கருதுகிறார்கள். இராம காதையில் இளையபெருமாள் ஸ்ரீராமபிரானிடம், ஸ்ரீ ராமா! உமக்கு ப்ரியமானதான காலம்
வந்திருக்கிறது. இந்த மார்கழி மாதத்தினால் ஆண்டு முழுவதுமே அலங்கரிக்கப்பட்டது போல் விளங்குகிறது என்று கூறுகிறார். இம்மாதத்தில் மாதர்கள் வைகறைத் துயிலெழுந்து வீட்டிற்கு முன்னால் சுத்தமாக மெழுகி கோலமிட்டு, சாணத்தினைப் பிடித்து வைத்து அதன் மீது பரங்கி பூவை, மகுடம் வைத்தாற் போல் அழகுற
வைப்பர். அதனைச்சுற்றி வித விதமான வகையில் வண்ண வண்ணப்பூக்களை கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக அடுக்குவர். இவ்வாறு வாயில் முன் புறத்தை அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டையகாலம் தொட்டே நிலவி வருகின்றது. அதற்குக் காரணமான முக்கிய பாரதக் கதை ஒன்றுண்டு. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர்
நடந்தது மார்கழி மாதத்தில் தான்!பாண்டவர்களின் வீட்டை அடையாளம் கண்டு கொள்ள வேண்டி, வியாசர், வீட்டு வாயிலில் சாணம் இட்டு மெழுகி ஊமத்தம் பூ வைப்பதற்கான ஏற்பாடு செய்தாராம். அந்த அடையாளத்தை வைத்து யுத்த காலத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கவுரவர்களின் தாக்குதல் ஏற்படாமல், கண்ணன்
பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார். அன்று முதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வர ஆரம்பித்தது. இம்மார்கழி மாதத்தில் பல வைஷ்ணவ ஆசாரியர்களும், சைவ பெரியார்களும், மாமன்னர்களும் தோன்றியுள்ளனர். இம்மாதத்தைச் சிறப்பித்துக் கொண்டாடுவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளலாயினர். இம்மாதத்தில் ஆண்களும்,
பெண்களும் திருப்பாவை. திருவெம்பாவை மற்றும் தோத்திரப் பாடல்களையும் பாடிப் பரவச முறுவர். ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல்பத்து என்ற முறையில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும். இம்மாதத்தில், எம்பெருமானுக்கு நெய் வழிய வழிய சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதிப்பதனை
கூடாரவல்லி என்று வைஷ்ணவர்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடுகின்றனர். இதன் உண்மை தத்துவத்தை கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாட்டால் பாவை #ஆண்டாள் நமக்கு ஆழகுற மொழிகின்றாள். மார்கழி மாதத்தில் மதி மறைந்த நந்நாள் மூல நஷத்ரம் கூடிய சுப தினத்தில் ஆஞ்சநேயருடைய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது
இத்தகைய மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து, பகவானைத் துதி செய்வதால் மற்ற எல்லா மாதங்களிலும் பகவானைப் பூஜித்த பலனைப் பெறலாம்.🙏
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தசாவதாரங்களில் ரொம்பப் பேசப்படாத அவதாரம் 6வது அவதாரமான் #பரசுராம_அவதாரம். பரசுராமர் நீதியை நிலைநாட்ட வந்த அவதாரம். சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் நான்காவது மகனாக அவதரித்தவர் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை நிலைநாட்டியவர். அதனாலேயே
தன்னுடைய தந்தையால் சிரஞ்ஜீவி வரத்தைப் பெற்றவர். அதற்கு முன் உள்ள எந்த அவதாரத்திலும் பகவான் எந்த ஆயுதத்தையும் பிரயோகப்படுத்தவில்லை. ஆனால் முதன்முதலாக பரசுராம அவதாரத்தில் தான் கோடலி ஆயுதத்தை பிரயோகப்படுத்துகிறார்.இதை ராமானுஜ நூற்றந்தாதி பாசுரம்
கோக்குலமன்னரை ஓர் கூர் மழுவால்
போக்கிய தேவன்
என்று வர்ணிக்கிறது. பரசுராமர் சிரஞ்ஜீவி என்பதால் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் மகேந்திர மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எங்கெல்லாம் தர்மம் குறைந்து, நலிந்து மக்கள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் பரசுராம அவதாரம் நிகழும். கோடாரியை ஆயுதமாகக்கொண்ட
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#மார்கழிஸ்பெஷல்
நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரையில் 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது தந்தையார் ரங்கார்யர், தாய் லட்சுமிபாய். பெற்றோர் பிள்ளைக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் படித்த காலத்தில் ஓம் என்ற
பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களையே திகைக்கச் செய்தார். அவரது மனம் எப்போதும் இறைச் சிந்னையிலேயே இருந்தது. இளமையில் வணிகர் ஒருவரிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார். ஆனால், வணிகர் ராமபத்ரனின் இறைச் சிந்தனையைக் கண்டு வேலையை விட்டு வெளியேற்றினார். பின்னர் தன் வீட்டுத்
தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். திடீரென்று ஒருநாள் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றத்தில் துறவியைப் போல யோகத்தில் ஆழ்ந்தார். ஒரு முறை மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் சுந்தராஜப் பெருமாளை தரிசித்தார். அன்றுமுதல் ஆழ்வார்களின் மீதும், நாலாயிரதிவ்ய பிரபந்தங்களின் மீதும் அவருக்கு
பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன் என்று வந்தார் ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் ஒருவர். பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள். "என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷியன் கேட்க வந்திருக்கியா?"
பக்தர் கலங்கி போய்
விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
வந்து எப்படி உத்திரவாகிறதோ அப்படி என்று இழுத்தார்.
"உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும் விரோதம் கொள்ள முடியுமா? விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்ச நஞ்சம் சாந்தியும் போயிடும்.
பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல் போடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு. தோற்று போயிட்டோமோ என்ற எண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன? அவன் நாளைடைவில் அடங்கி போயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான். தேவைப்பட்டால் அவனுக்கு உதவி செய். தானாகவே
#கிருஷ்ணன்கதைகள் காசியில் சிங்கன் என்னும் பெயருடைய நாராயண பக்தன் ஒரு நீச்சல் வீரன். அவனுக்கு அன்றன்று மலர்ந்த தாமரை மலர்கள் மீது அதிகம் விருப்பம். அந்த மலர்களைத் தேடிச் சென்று பறித்து விஷ்ணு பகவானுக்குச் சூட்டுவதை தன் நித்திய பூஜையாகக் கொண்டிருந்தான். ஒவ்வொரு
நீர்நிலையிலும் எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் நீந்திச் சென்று மலர் கொய்வான். காசியைச் சுற்றியுள்ள நீர்நிலையில் உள்ள பூக்களைப் பறிக்க தாமரைக் கொடியினைப் பற்றி வேகமாக நீந்திச் செல்வான். நாளுக்கு நாள் தனது நீச்சல் திறமை குறித்த அகம்பாவம் மேலோங்க தற்பெருமை கொண்டவனாக,
ஆழமான கங்கை நதியில் இக்கரையிலிருந்து அக்கரை செல்ல பந்தயம் வைத்துக்கொண்டு பலருடன் நீச்சல் விளையாட்டில் இறங்கினான். கங்காதேவி அத்தனைப் பேர் பாவங்களையும் அழுக்குகளையும் இறந்த சடலங்களையும் சுமந்து இம்மண்ணுலகைத் தூய்மை
செய்பவள். தன் வற்றாத கருணையினால் பூமியெங்கும்
சிவபெருமானை வழிபடுவதற்கு ‘மகாசிவராத்திரி’ எப்படி விசேஷமான நாளோ அதேபோல ஈசனின் திருவடிவங்களில் ஒன்றான நடராஜப் பெருமானை வழிபடுவதற்கு ‘ஆருத்ரா தரிசனம்’ சிறப்பு மிக்க தினமாகும். ‘சிவம்’ என்பது அனைத்தையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டு அசையாதிருப்பது. அதுவே நடராஜர் என்பவர் ஆனந்த
நடனம் ஆடி உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆற்றலாக இருப்பவர். அப்படிப் பட்ட நடராஜப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த தினமே மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனம். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பவுர்ணமி தினமும் இணையும் நாளில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. அன்று
நடராஜருக்கு ஆறுவிதமான அபிஷேகங்களைச் செய்து அவரை குளிர்விப்பது வழக்கம். ருத்ரன் என்பவர் அக்னி வடிவமாக இருப்பவர். அவருக்கு குளிர் மிகுந்த மார்கழி மாதத்தில், அந்த மாதத்திலேயே அதிக குளிர்ச்சி நிறைந்த திருவாதிரை நாளில், ஆறுவிதமான அபிஷேகம் செய்து குளிரூட்டி வெப்பத்தை தணிக்கிறார்கள்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சைதன்ய மகாபிரபு தன்னுடைய சேது யாத்திரைக்குச் செல்லும்போது வழியில் ஒரு ஊரில் பூரி ஜகந்நாதரைப் போலவே ஒரு ஜகந்நாதர் கோவில் இருப்பதை அறிந்த சைதன்ய மகாபிரபு, ஜகந்நாதரை வழிபட அந்தக் கோயிலுக்குச் சென்றார். அங்கே ஹிமாம்சு என்ற அர்ச்சகர் ஜகந்நாதப் பெருமாளுக்கு
நித்திய பூஜைகளைச் செய்து வந்தார். அவருக்கு வடமொழியோ, ஆகமங்களோ எதுவுமே தெரியாது. அவரது தந்தை நிசாகர் தாஸ் என்பவர் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவர்.ஜயதேவரின் அஷ்டபதி பாடுவதில் வல்லவர். பல வருடங்கள் அதே கோயிலில் ஜகந்நாதப் பெருமாளுக்குப் பூஜை செய்து வந்தார். அதனால் நிசாகர் தாஸுக்குப்
பின் அவரது மகனான ஹிமாம்சுவையே அர்ச்சகராக நியமித்து விட்டார்கள். சீடர்கள் புடைசூழ சைதன்ய மகாபிரபு கோயிலுக்கு வந்தபோது, ஹிமாம்சு பக்தியுடன் அவரை வரவேற்றார். மகாபிரபுவின் சீடர்கள் ஹிமாம்சுவிடம் பெருமாளுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்படி கூறினார்கள். அர்ச்சனையைத் தொடங்கிய