பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன் என்று வந்தார் ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் ஒருவர். பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள். "என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷியன் கேட்க வந்திருக்கியா?"
பக்தர் கலங்கி போய்
விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
வந்து எப்படி உத்திரவாகிறதோ அப்படி என்று இழுத்தார்.
"உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும் விரோதம் கொள்ள முடியுமா? விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்ச நஞ்சம் சாந்தியும் போயிடும்.
பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல் போடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு. தோற்று போயிட்டோமோ என்ற எண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன? அவன் நாளைடைவில் அடங்கி போயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான். தேவைப்பட்டால் அவனுக்கு உதவி செய். தானாகவே
திருந்திடுவான்"
பக்தர் உத்தரவு என்று சொல்லி, பெரியவாள் அறிவுரையை ஏற்றுக் கொண்டு போனார். ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்பது தமிழரின் தொன்மையான நீதிகளில் ஒன்று (உலகநீதி). அதனை இவ்வளவு அருமையாக, மனதில் நன்றாக பதியும் விதத்தில் உபதேசம் செய்திருக்கிறார் நம் பெரியவா - இந்த
உபதேசம் நம் எல்லோருக்காகவும் தான்!
பெரியவா சரணம்!
_தொகுப்பு: பெரியவா குரல்_ | t.me/perivakural
An initiative of Kanchi Periva Forum - periva.org |
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பாண்டவதூதப்பெருமாள்கோவில் பஞ்ச பாண்டவர்களுக்கு ஐந்து வீடாவது கொடுக்கச் சொல்லி கேட்பதற்காக கவுரவர்களிடம் தூது போகிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் வருவதை அறிந்து அவரை கொல்ல சதி செய்கிறார்கள் கௌரவர்கள். மூங்கிலால் ஆன பொய்யாசனம் அமைத்து, அதன் கீழ் ஆயுதங்களுடன் மல்லர்களை நிறுத்தி
வைக்கிறான் துரியோதனன். கிருஷ்ணருக்கு இது தெரிந்துவிடுகிறது. அடுத்து அவர் செய்ததுதான் காஞ்சிபுரம்/திருப்பாடகம் பாண்டவதூதர் பெருமாள் கோயில் எழுந்த வரலாறு. கொல்ல சதி செய்து அமைக்கப்பட்ட பொய்யாசனத்தில் பாண்டவர்களுக்கு தூது போன பெருமாள் அமர்கிறார் சாதாரணமாக அல்ல. விஸ்வரூபம் எடுத்து
அமர்கிறார். பொய்யாசனத்தின் கீழ் இருந்த மல்லர்கள் அழிக்கப் படுகிறார்கள். திருதுராஷ்ட்ரருக்கு பார்வை அளித்த அந்த நேரம் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். ஜெனமே ஜெயனும், ஹரித முனிவரும் இந்த விஸ்வரூபத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர். பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கந்தன் என்பவர் ஒருநாள் கோவிலுக்குப் போன போது அந்தக் கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கவனித்து அருகில் சென்று பார்த்தார். அவருக்கு அந்த எழுத்துக்களை படிக்க தெரியும். அதனால் அதை படித்து பார்த்தார். அந்த கல்வெட்டில் இந்த பெருமாளுக்கு யார் ஒரே
சமயத்தில், நூறு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்கிறாறோ, அவருக்கு ராஜ பதவி கிடைக்கும் என்று எழுதி இருந்தது. அதை படித்த கந்தன் அடடா ராஜ பதவி என்றால் சும்மாவா? உடனே, ஓடிச் சென்று ஒரு குடத்தை எடுத்து, பக்கத்திலிருந்த குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார்.
மனதிற்குள் ஒன்று, இரண்டு என எண்ணிக் கொண்டே அபிஷேகம் செய்ய ஆரம்பித்தார். எழுபது, எண்பது, தொண்ணூறு குடம் ஆயிற்று. உடனே கந்தன் புலம்ப ஆரம்பித்தார். 95 குடம் அபிஷேகம் செய்தாயிற்று, ராஜ பதவிக்கான அறிகுறி ஒன்றுமே தெரியவில்லையே! கிரீடத்தை எடுத்துக்கொண்டு யாராவது வருகின்றனரா என்று
தசாவதாரங்களில் ரொம்பப் பேசப்படாத அவதாரம் 6வது அவதாரமான் #பரசுராம_அவதாரம். பரசுராமர் நீதியை நிலைநாட்ட வந்த அவதாரம். சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் நான்காவது மகனாக அவதரித்தவர் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை நிலைநாட்டியவர். அதனாலேயே
தன்னுடைய தந்தையால் சிரஞ்ஜீவி வரத்தைப் பெற்றவர். அதற்கு முன் உள்ள எந்த அவதாரத்திலும் பகவான் எந்த ஆயுதத்தையும் பிரயோகப்படுத்தவில்லை. ஆனால் முதன்முதலாக பரசுராம அவதாரத்தில் தான் கோடலி ஆயுதத்தை பிரயோகப்படுத்துகிறார்.இதை ராமானுஜ நூற்றந்தாதி பாசுரம்
கோக்குலமன்னரை ஓர் கூர் மழுவால்
போக்கிய தேவன்
என்று வர்ணிக்கிறது. பரசுராமர் சிரஞ்ஜீவி என்பதால் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் மகேந்திர மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எங்கெல்லாம் தர்மம் குறைந்து, நலிந்து மக்கள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் பரசுராம அவதாரம் நிகழும். கோடாரியை ஆயுதமாகக்கொண்ட
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#மார்கழிஸ்பெஷல்
நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரையில் 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது தந்தையார் ரங்கார்யர், தாய் லட்சுமிபாய். பெற்றோர் பிள்ளைக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் படித்த காலத்தில் ஓம் என்ற
பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களையே திகைக்கச் செய்தார். அவரது மனம் எப்போதும் இறைச் சிந்னையிலேயே இருந்தது. இளமையில் வணிகர் ஒருவரிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார். ஆனால், வணிகர் ராமபத்ரனின் இறைச் சிந்தனையைக் கண்டு வேலையை விட்டு வெளியேற்றினார். பின்னர் தன் வீட்டுத்
தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். திடீரென்று ஒருநாள் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றத்தில் துறவியைப் போல யோகத்தில் ஆழ்ந்தார். ஒரு முறை மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் சுந்தராஜப் பெருமாளை தரிசித்தார். அன்றுமுதல் ஆழ்வார்களின் மீதும், நாலாயிரதிவ்ய பிரபந்தங்களின் மீதும் அவருக்கு
#கிருஷ்ணன்கதைகள் காசியில் சிங்கன் என்னும் பெயருடைய நாராயண பக்தன் ஒரு நீச்சல் வீரன். அவனுக்கு அன்றன்று மலர்ந்த தாமரை மலர்கள் மீது அதிகம் விருப்பம். அந்த மலர்களைத் தேடிச் சென்று பறித்து விஷ்ணு பகவானுக்குச் சூட்டுவதை தன் நித்திய பூஜையாகக் கொண்டிருந்தான். ஒவ்வொரு
நீர்நிலையிலும் எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் நீந்திச் சென்று மலர் கொய்வான். காசியைச் சுற்றியுள்ள நீர்நிலையில் உள்ள பூக்களைப் பறிக்க தாமரைக் கொடியினைப் பற்றி வேகமாக நீந்திச் செல்வான். நாளுக்கு நாள் தனது நீச்சல் திறமை குறித்த அகம்பாவம் மேலோங்க தற்பெருமை கொண்டவனாக,
ஆழமான கங்கை நதியில் இக்கரையிலிருந்து அக்கரை செல்ல பந்தயம் வைத்துக்கொண்டு பலருடன் நீச்சல் விளையாட்டில் இறங்கினான். கங்காதேவி அத்தனைப் பேர் பாவங்களையும் அழுக்குகளையும் இறந்த சடலங்களையும் சுமந்து இம்மண்ணுலகைத் தூய்மை
செய்பவள். தன் வற்றாத கருணையினால் பூமியெங்கும்
#மார்கழிஸ்பெஷல் மாதங்களுள் நான் மார்கழி என்று கண்ணபிரான் கீதையில் அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் அம் மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும்,
அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறது. நாம் நமது மனத்தைத் தெளிவுப்படுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமந் நாராயணனின் கேசவ, நாராயண, கோவிந்தா, மாதவா, மதுசூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக இருக்கும் கேசவா மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது.