🔴போதிய விவாதங்களின்றி, அவசர கதியில் நேற்று லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட, தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021, அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
காரணம், அதில் இடம்பெற்றிருந்த வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் ஒரு அம்சம்தான்.
என்ன பிரச்னை அதில்?
தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவில் மொத்தம் 4 திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒன்றுதான் இந்த ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு. இது என்ன சொல்கிறது?
👉 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன், பிரிவு 23-ல் திருத்தம் செய்து, தேர்தல் ஆணையம், ஆதார் மற்றும் வாக்காளர் விவரங்களை இணைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது இந்த மசோதா.
👉இதன்மூலம், புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களிடம், அதிகாரிகள் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் எண்ணை கேட்கலாம்.
👉ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு வாக்காளர், வெவ்வேறு தொகுதிகளில் பதிவு செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யவும், ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை பதிவு செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யவும்கூட, அவரின் ஆதார் தகவல்களைக் கேட்டு பயன்படுத்தலாம்.
👉 ஆனால், ஆதார் இல்லை என்பதாலேயே ஒருவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கவோ, அவரை பட்டியலில் சேர்க்காமல் இருக்கவோ கூடாது. அதற்கு பதிலாக டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
👉 இந்த ஆதார் விவரங்களை, வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது என்பது கட்டாயமல்ல; வாக்காளர் தன் சுயவிருப்பத்தின் பெயரில் மட்டுமே இதைச் செய்யலாம்.
→ இந்த நான்கும்தான் அந்த முக்கிய அம்சங்கள்.
🗳 ஏன் இதைச் செய்கிறது தேர்தல் ஆணையம்?
ஒரே ஒரு காரணத்தைதான் பல ஆண்டுகளாகச் சொல்கிறது தேர்தல் ஆணையம். அது, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் போலி வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்குவது.
சரி, இதை ஏன் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன?
👉 காரணம், தேர்தல் ஆணையம் மற்றும் ஆதார் ஆணையத்தின் (UIDAI) கடந்தகால வரலாறு அப்படி. உண்மையில் தேர்தல் ஆணையம் நினைத்தவுடன் சுமுகமாக முடிய இந்த ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.
👉அதில் சட்டசிக்கல்கள், தொழில்நுட்ப சிக்கல்கள், பிரைவசி சிக்கல்கள், அரசியல் சிக்கல்கள் என அனைத்துமே இருக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையில் ஏன் அரசும், தேர்தல் ஆணையமும் அவசரப்படுகின்றன என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
என்னதான் பிரச்னை இதில்?
👨🏽⚖️ சட்ட சிக்கல்:
குடிமக்களின் பிரைவசி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த மிக முக்கியமான தீர்ப்பு 2017-ல் வழங்கப்பட்ட புட்டசாமி வழக்கின் தீர்ப்பு.
👉 அதில், ``ஆதாரை அரசின் சேவைகள் வழங்குவது தொடர்பாக மற்றும் வருமான வரி கண்காணிப்புக்காக பான் கார்டுடன் இணைப்பதை தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது” என்றது உச்சநீதிமன்றம்.
👉 ஆனால், பின்னர் வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் ஆதாரைப் பயன்படுத்திக் கொள்ள சட்டத்திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு.
தற்போது இதேபோல வாக்காளர் அடையாள அட்டைக்கும் கொண்டுவந்திருக்கிறது.
👉 ஆனால், இப்படி சட்டம் இயற்றுவதால் மட்டுமே, அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது என்கின்றனர் நிபுணர்கள். காரணம், ஆதாரை அரசு நினைப்பதற்கெல்லாம் பயன்படுத்த முடியாது.
அதற்கு வலுவான, தகுந்த காரணங்கள் வேண்டும். இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் சொல்லும் போலி வாக்காளர்களை நீக்குவது என்பது அப்படிப்பட்ட ஒன்றல்ல என்பது அவர்களின் வாதம்.
👉 மேலும், தேர்தல் ஆணையம் சொல்லும், வாக்காளர் பட்டியல் சிக்கல்களுக்கு ஆதார்தான் வேண்டுமென்று இல்லை. வேறு தொழில்நுட்ப முயற்சிகள் மூலமாகவும் தீர்வுகண்டு விட முடியும் என்கின்றனர்.
🗳 அரசியல் & தொழில்நுட்ப சிக்கல்:
👉எல்லாவற்றிற்கும், அரசாங்கம் ஆதாரையே கேட்பதால், அது மட்டுமே மிகத்துல்லியமான, மதிப்புவாய்ந்த அடையாள அட்டையாக பலரால் கருதப்படுகிறது; ஆனால், உண்மையில் அதுவும் பல்வேறு தகவல் பிழைகளைக் கொண்ட ஒரு Database-தான்.
👉 ஆதார் பயனாளர்கள் பலர் தங்கள் விவரங்களில் இருக்கும் பிழைகளை மற்ற அடையாள அட்டை போலவே சுட்டிக்காட்டி திருத்திக்கொண்டிருக்கின்றனர். இப்படியிருக்கையில், இந்த டேட்டாவை வைத்து, வாக்காளர் அடையாள அட்டையை மதிப்பீடு செய்தால், அதிலும் நிறைய குளறுபடிகள் ஏற்படவே வாய்ப்பு அதிகம்.
👉இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால்தான், 2015-ல் தேர்தல் ஆணையம் சுமார் 30 கோடி ஆதார் தகவல்களை, வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்க முயற்சி செய்தபோது, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் சுமார் 55 லட்சம் பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன், எதற்கென்றே தெரியாமல் நீக்கப்பட்டன.
👉 2018 சட்டமன்றத் தேர்தலின்போது, தெலங்கானாவில் இந்தப் பிரச்னை அங்கு விஸ்வரூபம் எடுக்கவே, தொழில்நுட்பத்தை கைகாட்டி தப்பிக்க பார்த்தது தேர்தல் ஆணையம்.
👉 இப்படி, லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை ஆதாரை காரணம் காட்டி பறிபோவது எவ்வளவு ஆபத்தான விஷயம்? இது சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை மக்களை அதிகம் பாதிக்கும் என்கின்றனர் ஆர்வலர்கள்.
👉 இப்படிப்பட்ட நடவடிக்கைகள், அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தி, வாக்கு அளிப்பதில் அவர்களின் பங்களிப்பை குறைக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
👉மேலும், ``ஆதார் என்பது வெறும் அடையாளச் சான்று மட்டுமே; அதைக் குடியுரிமைச் சான்றாகக் கருதமுடியாது; ஆனால், வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்தியக் குடிமகன் மட்டுமே பெறக்கூடிய ஒன்று. இந்தியக் குடிமகன்கள் அல்லாதோர் கூட, ஆதார் வைத்திருக்க முடியும்.
நிலைமை இப்படியிருக்க, ஆதாரை முதன்மை ஆவணமாக வைத்து ஒப்பிட்டால், குடிமகன்கள் அல்லாதோர்கூட ஆதாரைக் காட்டி வாக்குரிமை பெற்றுவிட முடியுமே?” என்றும் கேள்வியெழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.
🕵🏼♂️ பிரைவசி சிக்கல்:
வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் இரண்டிலுமே நம்மைப் பற்றிய பொதுவான Demographic தகவல்கள்தான் இருக்கும். ஆனால், இதில் ஆதார் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். காரணம், கூடுதலாக வைத்திருக்கும் பயோமெட்ரிக் தகவல்கள் மட்டுமல்ல.
மாநில / மத்திய அரசுகளின் பிற துறை Database-களுடன் இணைந்திருப்பதும் கூட. இப்படியிருக்கையில் ஆதாரை, வாக்காளர்களின் Database-ல் இணைத்து, அதில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டு, தகவல்கள் தவறாக கையாளப்பட்டால் அது இன்னும் ஆபத்தாக முடியலாம்.
👉 அரசியல் கட்சிகள் மக்களை உளவுபார்க்கவோ, திட்டமிட்டு விளம்பரம் செய்யவோ கூட இந்த தரவுகள் பயன்படுத்தப்படலாம். இன்னும் நம் நாட்டில் Data Protection Law எதுவுமே செயல் வடிவம் பெறாதபோது, இப்படியொரு முடிவை எடுப்பது இன்னும் ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள்.
அதான், இரண்டையும் இணைப்பது கட்டாயமல்ல எனச் சொல்லிவிட்டார்களே? 🤔
``ஆமாம். ஆதாருக்கும் இதையேதானே 2013-ல் சொன்னார்கள்? உச்சநீதிமன்றம், ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என உத்தரவுகூட இட்டது; ஆனால், இன்றைக்கு நிலை என்ன?
மேலும், 2015-லும் கூட தேர்தல் ஆணையம் ஆதாரை, வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது கட்டாயம் இல்லை என்றுதான் சொன்னது; ஆனால், 30 கோடி தகவல்கள் யார் அனுமதியும் இன்றிதான் இணைக்கப்பட்டன.
எனவேதான், இது கட்டாயமா, கட்டாயம் இல்லையா என்பதைத் தாண்டி, ``ஆதார் தகவல்களை, வாக்காளர் தகவல்களோடு இணைப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு இருந்த சட்டத்தடை இந்த மசோதா மூலம் நீங்கவிருக்கிறது..
.. எனவே, அடுத்து எப்போது வேண்டுமானாலும் இதைக் கட்டாயமாக்குவதற்கான முயற்சிகள் நடக்கலாம்” எனச் சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இப்படியாக வாக்காளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி, வாக்காளர்களுக்கே சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதுதான் அனைவரின் அச்சமாக இருக்கிறது. அடுத்து ராஜ்ய சபாவிலாவது, அரசு விரிவான விவாதங்களுக்கு வழிவகை செய்யவேண்டும்.
உலகின் மிக முக்கிய செய்திகளை, தினமும் இப்படி தெளிவாகத் தெரிந்துகொள்ள விருப்பமா? The Subject Line (@the_subjectline) நியூஸ்லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க! ✅
💳 மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜனவரி 1-க்குப் பிறகு என்னாகும்?
👉 வரும் ஜனவரி 1, 2022-லிருந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அமலாகின்றன. இதனால், ஆன்லைன் கார்டு பேமென்ட்களில் பெரியளவில் மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன.
🔴என்ன மாற்றம்?
இதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு தற்போது ஆன்லைன் பேமென்ட்கள் எப்படி நடக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். #TSLExplainer#Tokenization#RBI
👉 இப்போது, ஆன்லைனில் ஏதேனும் சேவைகளுக்காக (உதாரணம் ஸ்விக்கி, அமேசான்) பேமென்ட் மேற்கொள்ள வேண்டுமென்றால், பில்லிங் அல்லது செக் அவுட் பகுதிக்குச் சென்று 3 வேலைகளைச் செய்யவேண்டும்.
👉உலகின் முதல் கொரோனா ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று பதிவாகி இன்றுடன் 25 நாள்களாகின்றன. ஆரம்பத்தில் நம்மிடையே போதுமான Data இல்லாததால், #ஓமிக்ரான் பற்றி எந்தவொரு உறுதியான முடிவுக்கும் வரமுடியாமல் இருந்தனர் நிபுணர்கள். #Omicron
👉 தற்போது 25 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், ஓமிக்ரானின் தன்மை குறித்து நமக்கு புதிய தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. அவை என்ன?
🚨 இதுவரை எந்தெந்த நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன? #COVID19
👉 உலகம் முழுக்க 90 நாடுகள் இதுவரை ஓமிக்ரான் தொற்றை உறுதி செய்திருக்கின்றன. இதன் பரவும் வேகம் காரணமாக, தினசரி கொரோனா எண்ணிக்கையும் தற்போது உலகம் முழுக்க உயர்ந்து வருகிறது.