#திருத்துறைப்பூண்டிஸ்ரீமருந்தீஸ்வரர் #சுமங்கலி_பாக்கியம்
திலிபச்சக்கரவர்த்தி காட்டுக்கு வேட்டைக்கு வந்தபோது பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால் அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி
வடிவெடுத்தது முனிவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா, அவளருகே ஓடிவந்தார். அம்மா, மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே என்று கண்ணீர் வடித்தார். அதுகேட்ட ரிஷிபத்தினி,
மன்னா இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள் என்று அழுதாள். மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை அதிலும் அந்தணப் பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன
செய்வேன் என் குலகுருவே வசிஷ்ட மகரிஷியே தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள். என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர் தீர்க்க சுமங்கலி பவ என
அவளை வாழ்த்தினார். மாமுனிவரே இதோ இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன். தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே. இதெப்படி சாத்தியம் என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. தன் மாணவனையும்
காப்பாற்ற வேண்டும், இந்தப் பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம் அவர் யோசித்தார். பெண்ணே, காவிரிக் கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில்
ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள்.
அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு, என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள்
முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, அன்னையே! என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாள் பெரியநாயகியும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள். ரிஷிபத்தினியும்,
முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே #திருத்துறைப்பூண்டி_பிறவிமருந்தீஸ்வரர் கோயிலாகும். திருவாரூரில் இருந்து 30 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப் படித்தவர்களின்
குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்.
இக்கோயிலின் இறைவன் மேற்கு நோக்கிய திசையில் இருப்பதும், இங்கு சிவனின் கஜசம்ஹார மூர்த்தி இருப்பதும் இக்கோயிலின் விசேஷ
அம்சங்களாகும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் வாழ்வில் திருமண தடை மற்றும் தாமதங்கள் நீங்கவும், கல்வி பொருளாதாரத்தில் சிறந்து விளங்கவும் இத்தலத்தில் வந்து வழிபடுவதால் விரும்பிய பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.
காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல்
இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.
கோயில் முகவரி
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
திருத்துறைபூண்டி
திருவாரூர் மாவட்டம் – 614713
தொலைபேசி எண்
9944223644
திருசிற்றம்பலம்🙏🏻
#ஶ்ரீஜ்வாலாமுகி_அம்பாள்
ஹிமாசல ப்ரதேசத்தில் காங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீஜ்வாலாமுகி எனும் அம்பாளின் ஆலயம் ஶ்ரீலலிதா பரமேஸ்வரி வீற்றிருக்கும் ஆலயங்களில் மிகவும் பழமையான ஆலயமாகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். ஒன்பது அக்னி பிழம்புகள் எப்படி, எப்போதிருந்து தோன்றின என்று
யாராலும் இதுவரை கண்டறியப் படவில்லை. ஆலயத்தில் அம்பாளுக்கு எவ்வித உருவமும் இல்லை. பிண்டி அல்லது லிங்கம் போன்ற மூர்த்தங்களும் இல்லை. சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள். பாறைகளின் இடுக்கில் எரியும் தீயானது எப்படி எரிகின்றது என்பது இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. பல வருடங்கள்
முன் பூமிசந்த் என்னும் மன்னன் காங்க்ரா நகரத்தை தலைநகரமாக கொண்டு இந்த கோவில் இருக்கும் பகுதியை ஆண்டு வந்தான். அவர் ஒரு சிறந்த தேவி பக்தர். மன்னரின் கனவில் தோன்றிய சக்தி தேவியானவள் தீச்சுடரின் வடிவில் அம்பாள் வீற்றிருக்கும் இடத்தை மன்னருக்கு தெரியப்படுத்தினாள். அந்த இடத்தைத் தேடி
#தீட்டு இது குறித்த அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும்.
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது! தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து
விடும், தீட்டுக் கூடாது என்பார்கள். ஆண் பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால் தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத்
தொட்டால் தீட்டு என்பார்கள். தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத் தான் இவற்றை தீட்டு என்று சொன்னார்கள்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நேருக்கு நேர் பேசும் ஆற்றல் பெற்றவர் #திருக்கச்சிநம்பிகள். இவர் காஞ்சி வரத /தேவப்பெருமாள் கோவிலில் எம்பெருமானுக்கு ஆலவட்டம் (விசிறி) வீசும் சேவையை செய்து வந்தார். இவர் வீசும் ஆலவட்டச் சேவையில் வரதருக்கு அலாதி சுகம். திருக்கச்சி
நம்பிகள் ஒருநாள் தேவப்பெருமாள் சன்னிதிக்கு வரவில்லை என்றாலும் தேவபெருமாள் அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பார். திருக்கச்சி நம்பிகளும் தினம் தேவப்பெருமாளை பார்க்க வந்து விடுவார். காஞ்சிபுரத்தில் இராமானுஜரும் தன் மனைவியோடு வசித்து வந்தார். இராமானுஜர் தனக்கு ஒரு குருவைத் தேடி
அலைந்து கொண்டிருக்கையில், திருக்கச்சி நம்பிகளிடம் தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, திருக்கச்சி நம்பிகளோ தாழ்வான குலத்தில் நான் பிறந்ததால் உங்களை சிஷ்யராக ஏற்க முடியாது என்று தீர்க்கமாக கூறிவிட்டார். அப்போது ஸ்ரீராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடமே தன் பிரச்சினையைத் தீர்க்க
#ஸ்நானம் பற்றி முக்கிய தகவல்கள் அடங்கிய பதிவு இது. ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நம் சாஸ்திரங்கள் விவரமாக சொல்கின்றன. ஸ்நானங்கள் இரு வகைப்படும். அவை #முக்கிய ஸ்நானம் #கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம்
மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.
#க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதே க்ரியா ஸ்நானம். நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
#காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில க்ஷேத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.
#அரங்கன்#பாண்டியன்_கொண்டை அரங்கன் தன் பக்தர்களில் ஒருவரைக் கொண்டே இந்தப் பாண்டியன் கொண்டை என்னும் ரத்தினக் கிரீடத்தைச் செய்ய வைத்தார். அவர் தான் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி. அவர் பரம ஏழை. உஞ்சவ்ருத்தி எடுத்துப் பணம் சேர்த்து இந்தப் பாண்டியன் கொண்டையைச் செய்து கொடுத்தார். தமிழ்
நாட்டு சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீக்ஷிதர், ச்யாமா சாஸ்திரிகள் போல் ஆந்திர நாட்டு மும்மூர்த்திகள் தலப்பாக்கம் அன்னமாசார்யா, பத்ராசலம் ராமதாசர், அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி ஆகியோர். அவர் திருமலையில் திருமலையப்பன் சேவையிலே ஈடுபட்டு, பின்னர் அவர்
காஞ்சிக்கு வரதராஜப் பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு தினமும் உஞ்சவ்ருத்தி மேற்கொண்டு அதில் கிடைக்கும் பொருட்களை, தானியங்களைப் பணமாக மாற்றி அதன் மூலம் வரதராஜப் பெருமாளின் சந்நிதிக்குக்ப் பல கைங்கரியங்களைச் செய்து வந்தார். காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் பல
#பகவத்கீதை எளிய விளக்கம்:
பகவத் கீதை என்பது
விடு – பிடி அல்லது
பிடி – விடு
விடு பிடி என்றால், இந்த உலக பந்தங்களையெல்லாம்
உதறித் தள்ளிவிடு. அதே நேரம் பரந்தாமன் பாதங்களை இறுகப் பற்றிக்கொள் என்று அர்த்தம். ஆனால் நம்மைப் போன்ற சாமான்ய மக்களுக்கு, இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித்
தள்ளுவது எளிதல்ல. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் இறுகப் பற்றுவது? கவலை வேண்டாம். இன்னொரு வழி உள்ளது. அது தான் பிடி விடு.
பிடி என்றால் முதலில் பரந்தாமன் பாதங்களைப் பிடி அல்லது பற்று. அந்தப் பிடி இறுக, இறுக இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.
இது எப்படி என்று புரிந்து கொள்ள ஓர் எளிய உதாரணம் உள்ளது. ஹோமத்துக்கான சில சமித்து குச்சிகள், ஒரு கயிற்றால்
இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன, முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.
(இது நம்முடைய உலக
பாசபந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே அதை விட இறுக்ககட்டி ஒரு குலுக்கு