ரூப்டாப் #சோலார்_பேனல் மாட்டலாம்னு இருந்தீங்கனா அதில் உள்ள பல்வேறு சாதக பாதகங்களை நீங்கள் அறிந்து புரிந்துகொண்டு ரூப்டாப் #சோலார்_பேனல் மாட்ட முடிவு செய்ய உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கட்டும்னு இந்த #திரட்ல எனக்கு தெரிஞ்சத எழுதியிருக்கு.!
👇👇👇
முதல்ல நம்ம கவனிக்க வேண்டியது நம்ம ரூப் (சிமெண்ட் சீட்) லைப் சிமெண்ட் சீட்டோட லைப்னு எடுத்துட்டா 20ல இருந்து 25 வருசத்துக்குள்ள தான் நல்லமுறைல இருக்கும், அதற்கு மேல் அதோட எபிசென்சி குறைந்து விடும், 👇
நம்ம புதிதாக மாட்ட இருக்கும் #சோலார்_பேனல்கள அந்த கண்டிசன்ல இருக்க ரூப் மேல லோடு பண்ண முடியாது, ஏன்னா சோலார்_பேனல்க ஒரு டைம் எரக்சன் பண்ணிட்டா 20 வருசத்துக்கு எடுக்க வேண்டியிருக்காது.👇
ஆகவே நம்ம பில்டிங் மேல இருக்க சிமெண்ட் சீட்டோட லைப் எப்படி இருக்கு,நம்ம அந்ந சீட் மாட்டி எத்தன வருசமாச்சு இதேல்லாம், சிமெண்ட் சீட் மாட்ற எரக்டர் கிட்ட கேட்டு தெரிஞ்சு வச்சுக்கனும் அப்பத்தான் சோலார்_பேனல் எரக்சன் கம்பெனி கிட்ட பேசும் போது..👇
நம்ம இதே சீட் மேல பேனல் லோடு பண்ண முடியுமா..? இல்ல புது சீட் மாட்டவேண்டுமானு தெரிஞ்சுக்கலாம்.. புது சீட் மாட்டனும்னா அந்த இன்வெர்ஸ்மெண்டும் சோலார்_பேனல் மாட்டும் கேப்பிட்டல் இன்வெர்ஸ்ல சேத்த வேண்டி வரும்..👇
அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டியது.. சிமெண்ட் சீட் மாட்டியிருக்கும் இரும்பு (ட்ரெஸ்) ஆங்கில்க அந்த ஆங்கில்க முதல்ல மாட்டும் போது சிமெண்ட் சீட் லோடுக்கு தகுந்த மாதிரி தான் இப்ப நம்ம சோலார்_பேனல் அந்த சீட் மேல லோடு பண்ணும் போது டன்னேஜ் அதிகமாகும்..👇
ஆகவே #சோலார்_பேனல் டன்னேஜ் என்ன மாதிரி வரும்னு கேட்டு ஒர்க்சாப் டெக்னீசியன்க வச்ச. நம்ம பழைய (ட்ரேஸ்) இரும்பு ஆங்கில்களுக்கு புதிதாக ஜிக்ஜாக்காக இரும்பு ராடுகள் வழியாக சப்போட் செய்யனும், இந்த ஒர்க்சாப் ஆல்ட்டர் ஒர்க் செய்வதற்கு ஆகும்..👇
செலவும் கேப்பிட்டல் இன்வெர்ஸ்மெண்டில் சேர்க்க வேண்டும். இதுல முக்கியமாக புதிதாக சின்ன கம்பெனியே,பெரிய கம்பெனியோ தொடங்குபவர்கள், இப்போதே ரூப்டாப் #சோலார்_பேனல் மாட்டுவதற்கான ஐடியால உங்க பில்டிங் மேல சிமெண்ட் சீட்டுக்கு பதிலாக..👇
மெட்டல் சீட்டும், #சோலார்_பேனல் லோடு தாங்கும் அளவுக்கான இரும்பு (ட்ரெஸ்) ஆங்கில்களும் மாட்டிட்டா நீங்க எப்பவேனும்னாலும் ரூப்டாப் சோலார்_பேனல்க மாட்டிக்கலாம், அந்த நேரத்துல சிரமங்க இருக்காது அடுத்து உங்க பில்டிங்கோட ரூப்போட சரிவு பகுதி..👇
ஒரு சைடு தெற்கும், ஒரு சைடு வடக்கும் இருக்கும் பச்சத்துல பவர் எபிசென்சி கூடுதலாக இருக்கும், அடுத்து நம்ம பில்டிங்கோட சைஸ் என்ன? அந்த ரூப்ல எத்தன KW பேனல் மாட்டமுடியும்? அதற்கான இன்வெஸ்மெண்ட் என்ன?நம்ம கிட்ட எவ்வளவு லோடு(HP) இருக்கு? இது மாதிரி டேட்டா எல்லாம் எடுத்து வச்சுட்டு.👇
நம்ம #சோலார்_பேனல்க்காக செய்யற இன்வெர்ஸ்மெண்ட் அதிகபச்சம் 31/2வருசத்துக்குள்ள ரிட்டன் எடுக்குற மாதிரி இருந்தா மட்டுமே சோலார்_பேனல் பிராஜெக்ட்க்குள்ள போகனும், அதுக்கு மேல வருசம் போகும் போது நம்ம செஞ்ச இன்வெர்ஸ்மெண்ட்க்கு கட்டுபடியாகுது..🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலகில் பல நாட்டுகள்ல பல அறிஞர்களோட நவீன தொழில்நுட்ப அறிவுல பல மாடல்கள்ல காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி #விண்ட்மில் வழியாக மின் உற்பத்தி செய்வதற்கு வெவ்வேறு வித்தியாசமான டர்பைன்க கண்டுபிடிச்சுயிருக்காங்க அந்த சில டர்பைன் பற்றி இந்த #திரட்ல பதிவு செஞ்சிருக்கு..😍👇
நம்ம இப்ப அதிகமாக பார்த்தது இந்த விண்டுமில் டர்பைன் தான் அது ஒரு பெரிய மூன்று~பிளேடு விசிறி போல் இருக்கும். காற்று வீசும்போது பிளேடு சுழலும் போது விண்டுமில் டர்பைன் வழியாக மின் உற்பத்தியாகி கிரிட்டுக்கு அனுப்ப படுகிறது..👇
இது காற்றிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான மிகவும் பொதுவான வழியாகும், ஆனால் இந்த தொழில்நுட்பம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. இது உண்மையில் விண்டுமில் எனர்ஜியை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழியானு பாத்தா..? பல உலக அறிஞர்க இல்லைனு சொல்றாங்க..👇
இந்தியால சமிபத்துல பவர்கட் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னனு பாத்தோம்னா நமக்கான மின் தேவைகள 70 % மேல பூர்த்தி செய்யர்து அனல் மின் நிலையங்க தான் அந்த ஆனல்மின் நிலையங்க இயங்க மூலப்பொருள் நிலக்கரி தான்..அந்த நிலக்கரி ஏன் தட்டுப்பாடு ஆச்சுனு இந்த #திரட்ல பாக்கலாம் வாங்க..🙏
நாடு தற்போது எதிர்கொள்ளும் அனல் மின்சார நெருக்கடி நிலக்கரி கிடைக்காததால் ஏற்படுகிறது, பெரும்பாலான அனல் மின்சார பிளான்டுக நிலக்கரி கிடைக்காததால் அனல் மின் உற்பத்தியில்லாத இருக்கு..👇
நிலக்கரி இருப்பு குறைந்தபட்சம் 50 முதல் 60 நாட்கள் வரை இருக்க வேண்டும்.ஆனால் இது 4 நாட்களுக்கு குறைந்துவிட்டது இந்தியா போன்ற நாட்டிற்கு தேவை அதிகரிப்பது இயற்கையானது .👇
புதிதாக வீடுகட்டுபவர்கள் கவனத்திற்கு..உங்கள் வீட்டில் உள்ளவர்கள், மற்றும் மின்சார சாதனங்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்னு இந்த #திரட்ட பாருங்க..🙏
வீட்டு ஒயரிங் செய்யும் சில முக்கியமான விசியங்கள நீங்க கவனிக்க வேண்டும் என்னனா..? 👇
ஒவ்வொரு ரூம் கனைக்சனை தனி சர்க்யூட்டாக பிரிச்சு அந்த லைனை மெயின் சுச்சு இருக்கும் ஏரியாவுக்கு கொண்டு செல்லனும்..👇
#சோலார் மின்சாரம் எப்படி உற்பத்தி ஆகிறது என்று தெரியாதவங்க தெரிஞ்சுக்க பார்த்த, வேலைசெய்த அனுபவத்த இங்க #திரட்டாக பதிவு செய்கிறேன்..🙏
இந்த சோலார் பேனல் 6 அடி நீளம்,31/4 அடி அகளம் 370 வாட்ஸ் உள்ள பேனல்..முதல் போட்டோ பேனல் முன்சைடு. இரண்டாவது போட்டோ பேனல் பின்சைடு..👇
இந்த டிவைஸ் ஆப்டிமைசர் இந்த டிலைஸ்சில் இரண்டு பேனல்களை இனைக்க வேண்டும். வெயில் தகுந்தாட்போல பேனலில் இருந்து வரும் DC வோல்டேஜை இந்த ஆப்டீமைசர் சீராக அனுப்பும்.. 👇
1500 அடி ஃபோர் போட்டாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் இந்த சூழல்ல தண்ணீர நவீன தொழில்நுட்பத்த பயன்படுத்தி சிக்கனமா விவசாயத்துக்கு தண்ணீர பயன்படுத்த ஒரு டிவைஸ் ரெடி செஞ்சுயிருக்கோம் அந்த தொழில்நுட்பத்த #திரட் டாக இங்க பதிவு செஞ்சிருக்கேன்..🙏
உங்க கிணத்துக்கு கம்பரசர் ஏர் வழியாக ஃபோர்ல இருந்து வரும் தண்ணீர ஒரு ஃபுலோ சென்சார் வச்சு திணமும் எத்தன லிட்டர் தண்ணீர் கிணத்துக்கு வருதுனு டேட்டாவ எடுத்து வச்சுக்கூறோம்.. 👇
அதே ஒரு ஃபோர்ல இருந்து தண்ணீர் வராது காத்து மட்டும் வந்துட்டு இருந்தா நாம செட் செய்த நேரத்துக்கு மேல் அந்த கம்பரசர் மோட்டார் ஆப் ஆகிடும்.. (இது பவர் சேவிங் செய்ய) சரி இனி மெயின் மேட்டர்க்கு போவோம்.. 👇