ஒரு சின்ன ஸ்பின்னிங் யூனிட் மெசின் செட்டப் முடிச்சு உற்பத்திய தொடங்க என்ன பட்ஜெட் ஆகும்னு ஒரு #திரட்...🙏
👇👇👇
முதல் இடம் பார்க்கனும்னா உங்கள் ஊர்ல போக்குவரத்துக்கு சாலை வசதி உள்ள இடமாகவும்... ஊரை விட்டு தள்ளி ஒரு ஏக்கர்ல இடம் இருக்க வேண்டும்...👇
கரிசல் பூமியாக இல்லாத இருந்தா.ஏனென்றால் பில்டிங் செலவு அதிகமாகும் என்பதனால்.. பூமிக்கு குறைந்தபச்சம் ஒரு ஏக்கர் 6லட்சம் முதலீடாக இருக்கட்டும்...👇
அடுத்து பில்டிங் செலவுனு எடுத்துக்கொண்டால் 202அடி நிளமும், 82அடி அகளமும் 22அடி உயரமும் உள்ள பில்டிங் கட்ட வேண்டும். இந்த அளவு மெசின் மாட்டுவதற்கான இடம்..வாஸ்த்துக்காரன கூட்டியாந்து அளவ மாத்தி கும்மியடிச்சா நா பொறுப்பில்ல.👇
அந்த பில்டிங் உள்கட்டமைப்புல பவர் கேபிள் ட்ரிஞ்ச் தனியாகவும் ,ஏசி பிளான்ட்& எக்ஜாஸ்ட்க்கு தனியான ட்ரிஞ்சும் கட்ட வேண்டும்.. மேல் கூரையில் சிமெண்ட் சீட்டுக்கு பதிலாக அல்மினியம் சீட் போட வேண்டும்..👇
இது எதற்கு என்றால் வரும் காலத்தில் சோலார் பேனல் மாட்டுவதற்காக அலுமினியம் சீட் தான் இருக்கவேண்டும்..சிமெண்ட் சீட் மேல பேனல் லோடு ஏற்ற முடியாது...👇
அடுத்து பில்டிங் கட்டிமுடித்து இது போல் பால்சீலிங் போட வேண்டும் இது எதற்கு என்றால் மேலே இருந்து கீட் உள்ளே வராமல் இருப்பதற்கும் மைக்ரோ டஸ்ட் பரவாமல்இருப்பதற்கும்.👇
அடுத்து பால்சீலிங் வேலை முடிந்த பின்பு லைட்டிங் வேலை இந்த லைட்டிங்க எப்படி இருக்கனும்னா பில்டிங் உள்ள என்ன மாதிரி மெசின் லேஅவுட் செய்யறெமோ அதற்கு தகுந்த மாதிரி ஜிக்ஜாக்ல ஒயரிங் கணைக்சன் இருக்கனும் இது எதர்க்குனா..👇
ஒரு சர்யூட்ல எதாவது பிரச்சனைனாலும் அந்த சர்யூட் இருக்க லைட்டுக ஜிக்ஜாக்ல தான் அனையும் அப்ப பக்கத்துல இருக்க வெளிச்சத்துல மேனேஜ் பண்ணிக்கலாம்..👇
இப்ப நமக்கு மெசின் மாட்ட பில்டிங் ரெடி இந்த செட்டப்புல பில்டிங் செலவு 75லட்சம் வரும்.👇
அடுத்து பவர்ஹவுஸ்க்குவ15*15ல கேபிள் ட்ரிஜ் வசதியோட டரஸ் பில்டிங் ரெடி செய்யனும் அதுக்கு 6லட்சம் செலவாகும்..👇
அடுத்து 2poll ஸ்டச்சரோட 500kva ட்ரேன்ஸ்பாமர், பவர் ஹவுஸ் NV பேனல் , டிபாட்மெண்ட்ல இருக்கு SSB மெயின் கேபிள்,TNEB அப்ரூவுடுனு 30லட்சம் வந்திடும்..👇
25hpல ஸ்குரு கம்பரசர் 2லட்சத்துல ஒன்னு வாங்கனும். இதோட வேலை டெக்ஸ்டைல்ல முக்கிய பங்கு கம்பரசர் Air அனைந்து டிபாட்மெண்ட்க்கும் முக்கியமாக வேண்டும்..கம்பரசர் ஓடவில்லைனா கம்பெனியே ஓடாது.. ஆக ஸ்டேண்ட் பை ஒரு கம்பரசர் வச்சுக்கர்து நல்லது..👇
அடுத்து பேட்லிபாய் Ac பிளாண்ட்க்கு 8லட்சம். இந்த பிளாண்ட் அதிகமான வெயில் காலங்கள்ங இந்த பிளாண்ட்ட ஓட்டனும் இல்லைனா டிபாட்மெண்ட்ல கீட் அதிகமாகி உற்பத்தி பாதிக்கும்..👇
அந்த டைம்ல இந்த பிளாண்ட் ஓட்டனும் ரெண்டாவது மெசினோட கீட் டிபாட்மெண்ட்ல இருந்து ட்ரிஜ் வழியாக வெளிய எக்ஜாஸ்ட்ல வெளிய அனுப்பும்.👇
இதுவே குளிர்காலங்கள்ல ரிட்டனர் வழியாக மெசினோட கீட் வெளிய போகாத ரிட்டனர் வழியக டிபாட்மெண்ட்கே கொண்டு வரனும்..👇
டிபாட்மெண்ட்ல இதமான கிளைமெண்ட் இருந்தாத்தான் உற்பத்தி பாதிப்பு இல்லாத நல்ல்நிலைமைல மெசின் ஓடும்... எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பொருளும் பாதுகாப்பாயிருக்கும்..👇
புலோரூம்
இந்த மெசின் #LMW MBO, நல்ல கண்டிசன்ல 5லட்சத்துக்கு வாங்கலாம். இந்த மெசின்ல நம்ம ஓட்டும் கவுண்ட்க்க. தேவையான பஞ்சை லாட் பிரகாரமாக மிக்சிங் போட்டு இந்த மெசின்ல போட்டா பஞ்சை உடைத்து யுனிமிக்ஸ்க்கு அனுப்பும்..👇
மெட்டல் டிடெக்டர் நல்ல கண்டிசன்ல 1லட்சத்துக்கு வாங்கலாம்..இந்த மெட்டல் டிடெக்டரோட வேலை பஞ்சுல வர்ற இரும்பு துகல்க எல்லத்தையும் புடிச்சுக்கும்..👇
இரும்பு துகல்க கார்டிங் மெசின்ல போயிட்டா கார்டிங் சிலிண்டர்ல இருக்க மென்மையான ஸ்டீல் ஓயர்க அடிபட்டு விடும் அப்படி அடிபட்டால் கார்டிங் மெசின்ல இருந்த ஸ்டீல் ஒயர் மாற்ற பல லட்சம் செலவாகும்..ரெண்டாவது உற்பத்தி பாதிக்கும் அதற்காக புலோரூம்ல மெட்டல டிடெக்டர் இன்றியமையாத தேவை.👇
#LMW யுனிமிக்ஸ் நல்ல கண்டிசன்ல 9லட்சத்துக்கு வாங்கலாம். இந்த யுனிமிக்ஸ்ல 750கிலோ பஞ்சு ஸ்டோர் பண்ணலாம்..இதுல எக்ஸ்டா பீட்டிங் பாயிண்ட் இருக்கர்தால #ERM இல்ல ப்ளக்சி மேசினோ வேண்டியதில்லை நேராக கார்டிங் சூட்லைன்க்கு மெட்டீரியல் ஃபேன் வழியாக பஞ்சை அனுப்பி விடலாம்..👇
#LMW LC 300A கார்டிங் 2நெம்பர் வாங்கனும். பழசு 1னு 7லட்சம் வரும் ரெண்டு கார்டிங்க்கு 21லட்சம்..இதோட புலோரூம்ல இருந்து மெட்டீரியல் வர பைப்லைன்,கார்டிங் சூட் லைன் எல்லாம் சேத்தி 22லட்சம் வரும்..👇
LC300a கார்டிங்ல ஒரு சிப்ட்க்கு 50s கவுண்ட்ல 250கிலோ கார்டிங் சிலைவர் கிடைக்கும. ஆக LC300a 2கார்டிங்ல ஒரு சிப்ட்க்கு 750கிலோ கார்டிங் சிலைவர் கிடைக்கும் ஆக 3சிப்ட்க்கு 2,250 கிலோ கார்டிங் சிலைவர் உற்பத்தியாகும்..👇
ஆக இரண்டுநாள்க்கு ஒரு சிப்ட் கார்டிங், புலோரூம், வேஸ்ட் கலைச்சன் டிபாட்மெண்ட்னு நிறுத்திக்கலாம் அப்ப கம்பெனிக்கு பவர் காஸ்ட் மிச்சம் லேபர் சேலரி சேவ் ஆகும்.. இதுவே பிளாண்ட்எக்ஸ்பேசன் போகும் போது இந்த கார்டிங்கே போதும்..👇
அடுத்து புலோரூம், கார்டிங் ரெண்டு டிபாட்மெண்ட்க்கும் வேஸ்ட் கலைச்சன் யூனிட் 2லட்சம் வரும். இதோட வேலை புலோரூம்ல இருந்து வர்ற மைக்ரோ டஸ்ட் & கார்டிங்ல வர்ற மைக்ரோ டஸ்ட்னு கலைக்ட் பண்ணிக்கும்.👇
அடுத்து #LMW RSB நல்ல கண்டிசன்ல பிரேக்கர்க்கு ஆட்டோ லெவலர் இல்லாத RSB 2மெசின் 6லட்சம், ஆட்டோ லெவலரோட பினிசர்க்கு ஆன RSB 2மெசின் 9லட்சம் ஆக #RSB க்கு 15லட்சத்துக்கு வாங்களாம்.👇
ஆட்டோ லெவலரோட 1 பினிசர்ல ஒரு சிப்ட்க்கு 50s கவுண்ட் (PC) 280 கிலோ சிலைவர் எடுக்கலாம்.. ஆக 2 பினிசர் RSBல சிப்ட்டுக்கு 560கிலோனு 3சிப்ட்க்கு 1,680 ட்ராயிங் சிலைவர் எடுக்கலாம்....👇
அடுத்து #LMW Speed frame LF 1400A நல்ல கண்டிசன்ல Ac ட்ரைவோட 2மெசின் 14லட்சத்துக்கு வாங்கலாம்.. இந்த 1மெசின் 140 ஸ்பின்டில 50s கவுண்ட்ல ஒரு சிப்ட்க்கு (8மணி நேரம்) 300கிலோ உற்பத்தியாகும்..👇
ஆக 2மெசின்க்கு ஒரு சிப்ட்க்கு 600கிலோ பாபின் உற்பத்தியாகும்..ஆக 3சிப்ட்க்கு 1800 கிலோ பாபின் உற்பத்தியாகும்..👇
பாபின் அதிகமாக ஸ்டாக் பண்ணிட்டா ஒரு சிப்ட் இந்த மெசினை நிறுத்தி வைக்கலாம் அப்படி நிறுத்தும் போது பவர் சேவிங், லேபர் சம்பளம், மெசின் மெயிண்டென்ஸ் செலவுனு கம்பெனிக்கு சேவ் ஆகும்..👇
அடுத்து #LMW LR/6 Ring-frame நல்ல கண்டிசன்ல 1200 ஸ்பின்டிலோட இருக்க ஒரு மெசின் 17லட்சத்துக்கு வாஙரகளாம் அப்ப 7மெசின்க்கு 1கோடியே 19லட்சத்துக்கு வாங்கலாம்..👇
நம்ம மாட்ற ரிங்க் பிரேம் (7nos) 7*1200=8,400 ஸ்பின்டில் க்கு ஒரு சிப்ட்டுக்கு ஒரு LR/6 ரிங்பிரேம் 50s கவுண்ட் ஓட்டினால் 280 கிலோ எடுக்கலாம், அப்ப 7 ரிங்பிரேம்க்கு 1960 கிலோ உற்பத்தியாகும்..👇
அடுத்து #Muratec 21c 60 ட்ரம்ல ஆட்டோ கோனர் நல்ல கண்டிசன்ல 2 மெசின் வாங்கனும் ஒரு மெசின் 35லட்சம் வரும் , 2மெசின் 120 ட்ரம் 70லட்சத்துக்கு வாங்கலாம்..👇
ஒரு ட்ரம் சிப்ட்டுக்கு (8மணி நேரம்) 6கிலோ உற்பத்தி எடுக்கலாம் ஆக 8மணி நேரத்துக்கு ஐடில் இல்லாமல் ஓட்டினால் 960கிலோ எடுக்கலாம், ஆக 3சிப்ட்க்கு 2,880 கிலோ எடுக்கலாம்..👇
ஆனால் நம்ம கிட்ட ஸ்பின்னிங்ல உற்பத்தியாகுற நூல் 1960 கிலோ தானேனு நினைக்காதீங்க ஆட்டோ கோனர் கிளீனிங் செட்யூல்ல தினமும் 3மணி நேரத்துக்கு மேல நிருத்துவோம். அடுத்து ப்யூச்சர்ல இன்னும் 3ரிங்பிரேம் போட்டாலும் இந்த ஆட்டோகோனரே மேக்கப் பண்ணும்..👇
பட்ஜெட்..👇
3கோடியே 69லட்சம் வருது இதுல இருந்து பட்ஜெட் குறையத்தான் வாய்பிருக்கு அதிகமாகாது...😎😎👇
இந்த பிளாண்ட் ஓப்பன் செஞ்சா கம்பெனி பக்கத்துல இருக்க 60 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம்.. பணமும் மனசும் இருக்கவுங்க இந்த தொழில் நடத்தலாம் ஸ்பின்னிங் யூனிட்ட பொருத்தவரைக்கும் நஷ்டமாகாது..👇
மிதமான லாபம் இருந்து கொண்டே இருக்கும்.. தொழில் தொடங்க பேங்க் லோன் வழியாக ஏற்பாடு செஞ்சிங்கனாத்தான்.. தொழில் மேல ஈடுபாடு இருக்கும்..🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புதிதாக வீடுகட்டுபவர்கள் கவனத்திற்கு..உங்கள் வீட்டில் உள்ளவர்கள், மற்றும் மின்சார சாதனங்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்னு இந்த #திரட்ட பாருங்க..🙏
வீட்டு ஒயரிங் செய்யும் சில முக்கியமான விசியங்கள நீங்க கவனிக்க வேண்டும் என்னனா..? 👇
ஒவ்வொரு ரூம் கனைக்சனை தனி சர்க்யூட்டாக பிரிச்சு அந்த லைனை மெயின் சுச்சு இருக்கும் ஏரியாவுக்கு கொண்டு செல்லனும்..👇
#சோலார் மின்சாரம் எப்படி உற்பத்தி ஆகிறது என்று தெரியாதவங்க தெரிஞ்சுக்க பார்த்த, வேலைசெய்த அனுபவத்த இங்க #திரட்டாக பதிவு செய்கிறேன்..🙏
இந்த சோலார் பேனல் 6 அடி நீளம்,31/4 அடி அகளம் 370 வாட்ஸ் உள்ள பேனல்..முதல் போட்டோ பேனல் முன்சைடு. இரண்டாவது போட்டோ பேனல் பின்சைடு..👇
இந்த டிவைஸ் ஆப்டிமைசர் இந்த டிலைஸ்சில் இரண்டு பேனல்களை இனைக்க வேண்டும். வெயில் தகுந்தாட்போல பேனலில் இருந்து வரும் DC வோல்டேஜை இந்த ஆப்டீமைசர் சீராக அனுப்பும்.. 👇
1500 அடி ஃபோர் போட்டாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் இந்த சூழல்ல தண்ணீர நவீன தொழில்நுட்பத்த பயன்படுத்தி சிக்கனமா விவசாயத்துக்கு தண்ணீர பயன்படுத்த ஒரு டிவைஸ் ரெடி செஞ்சுயிருக்கோம் அந்த தொழில்நுட்பத்த #திரட் டாக இங்க பதிவு செஞ்சிருக்கேன்..🙏
உங்க கிணத்துக்கு கம்பரசர் ஏர் வழியாக ஃபோர்ல இருந்து வரும் தண்ணீர ஒரு ஃபுலோ சென்சார் வச்சு திணமும் எத்தன லிட்டர் தண்ணீர் கிணத்துக்கு வருதுனு டேட்டாவ எடுத்து வச்சுக்கூறோம்.. 👇
அதே ஒரு ஃபோர்ல இருந்து தண்ணீர் வராது காத்து மட்டும் வந்துட்டு இருந்தா நாம செட் செய்த நேரத்துக்கு மேல் அந்த கம்பரசர் மோட்டார் ஆப் ஆகிடும்.. (இது பவர் சேவிங் செய்ய) சரி இனி மெயின் மேட்டர்க்கு போவோம்.. 👇
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்களின் ஒத்துழைப்போடு நம்முடைய அரசாங்கம் எப்படி நவீன மயமாக்கலாம் என, 30 ஆண்டுகால மின்துறை சார்ந்து இயங்கும் #Geeyes_Control எனும் நிறுவனத்தை நடத்தி வரும் மின் பொறியாளன் என்கிற முறையில் சில யோசனைகள் இங்கே ஒரு #திரட்டாக பதிவு செய்து இருக்கேன்..👇👇👇
இந்தியாவில் உள்ள மின் வாரியங்களிலேயே நல்லமுறையில், உயரிய பாதுகாப்போடு இருப்பது நமது #தமிழ்நாடு_மின்சார_வாரியம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமையும் கொள்ள வேண்டும்👇
ஆனால் நம்முடைய #தமிழ்நாடு_மின்சார_வாரியம் பல வருடங்களாக நட்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கான காரணங்கள் என்ன என நாம் தேடும்போது..👇
நல்லமுறைல #BE முடிச்சுட்டு வெளிய வந்து கோவைல லீடிங் டெக்ஸ்டைல் மெசின் கம்பெனில உள்ள கால் வச்சாச்சு வேகமா போயிட்டு இருந்த வாழ்க்கைல திடீர்னு ஒரு பிரச்சனை 3வருசம் பாண்டுல சைன் பண்ண சொன்னாங்க...👇
அப்ப இனி இங்க ஆகாதுனு #ஓசூர்ல இருக்க பிரிமீயர் மில்ஸ் எலக்ட்ரீகல் சூப்பரவைசராக ஜாயிண்ட் செஞ்சு..மெசின் உற்பத்தி செஞ்ச பக்கமும் ஒரு வருசம் இருந்து அதோட மெக்கானீக்கல் நாலேஜ்ம் ஒரு அளவுக்கு தெரிஞ்சுட்டு இங்க வந்தது எலக்ட்ரிக்கல்க்கு நல்ல சாப்போட்டா இருந்துச்சு.👇