கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்).
வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
எல்லோர் சார்பாகவும் ப்ரசாதம் & அன்னதானம் செய்து வருகிறேன்.
அதன்படி இன்று எல்லாம் இனிதே நடைபெற்று வருகிறது. 11 மணியளவில் எல்லோர்க்குமான போஜனம் வழங்கப்பட இருக்கிறது.
Kind attention: @SivaRoobini555
மகளே!!! சில நாட்களுக்கு முன்பு நீ காதல் பற்றியும் காமம் பற்றியும் காரசாரமான விவாதம் செய்ததை கொஞ்சம் கற்பனை கலந்த உருவகம் செய்துள்ளேன். 👇👇👇👇👇
#10_வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ?
ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக் கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன்.
#15_வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக் கொண்டு மரண அடி விழுந்தது அவனுக்கு.