இன்று #ஹனுமத்ஜெயந்தி
ஹனுமத் பஞ்சரத்னம், ஐந்து ரத்தினங்கள் தான். ஆதி சங்கர பகவத் பாதாள் இராமாயணத்தைப் படித்து, ஸுந்தர காண்டம் பாராயணம் செய்து ஹனுமாரை நினைத்து புலகாங்கிதமா சொன்ன 5 ஸ்லோகங்கள் இவை.
இந்த பஞ்சரத்னத்திற்கு
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-
பா⁴க்³-ப⁴வதி என்று அவர் பலஸ்ருதி சொல்கிறார். இந்த ஸ்லோகங்களை சொல்வதால் இந்த உலகத்தில் போகங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு, அவன் ராம பக்தி அடைவான் என்கிறார். ஆசார்யாள் ராம பக்தி அடைவான் என்று சொன்னால் அந்த ராமனுக்கு பூஜை செய்கிற பாக்யம் கிடைக்கும், ராமர்கிட்ட பக்தியுடன் இருக்கும்
பாக்கியம் கிடைக்கும், ராமனாவே ஆகிவிடுவான் என்ற கர்ம பக்தி ஞானத்தைப் பற்றி சொல்கிறார். இந்த ஸ்லோகத்தின் நிர்வாகத்தில், அமைப்பில் ஆசார்யாளுக்கே ஹனுமாருடைய தரிசனம் கிடைத்துள்ளது புலனாகிறது. முதலில் நான் ‘அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ – இன்று மனத்தில் அந்த ஹனுமானை த்யானம் செய்கிறேன்
என்கிறார். அடுத்தது, ‘ஸஞ்ஜீவநமாஶாஸேவின் – அந்த ஹனுமார ஸ்தோத்ரம் செய்கிறேன் என்கிறார். அடுத்தது ‘பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³’ – அந்த ஹனுமாரைப் பற்றி கொள்கிறேன் என்று சொல்கிறார். ‘அவலம்பே³ மா’ – நான் அவரையே பிடித்துக் கொள்கிறேன்! என் ஊன்றுகோலாக அவர் கையை பிடித்துக் கொள்கிறேன்
என்கிற மாதிரி சொல்கிறார். அடுத்தது, ‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ – என் முன்னால் ஹனுமார் காட்சி கொடுக்கட்டும் என்கிறார். அடுத்த ஶ்லோகத்தில்,
‘பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ – அந்த வாயு பகவான் தபஸெல்லாம் சேர்ந்து ஒரு வடிவம் எடுத்த மாதிரி அந்த ஹனுமாரை நான் கண்டேன் அப்படீன்னு
சொல்கிறார். இந்த ஸ்லோகத்தில் அவருக்கு ஹனுமார் தரிசனம் கிடைத்தது. இந்த ஸ்லோகத்தை நாமும் சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த பாக்கியம் நமக்கும் கிடைக்கும்!
ஹனுமாரை ஸ்தோத்ரம் பண்ணி, அவரிடம் வரங்கள் கேட்டா அவர் கொடுப்பார். இந்த ஹனுமத் பஞ்சரத்னத்தை 108 தடவை சொல்லி அவரிடம் ப்ரார்த்தனை
செய்தால் கட்டாயம் நம் ப்ரார்த்தனையப் பூர்த்தி செய்வார். அப்படி இந்த ஹனுமத் பஞ்சரத்னத்திற்கு அபார மகிமை உள்ளது. #ஶ்ரீஹனுமத்பஞ்சரத்னம் கேட்டுப் பயில google.co.in/search?q=%E0%A…
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#மாமரம் வாழை மரத்தைப் போல மா மரத்தின் இலை, மலர்கள், காய், கனி, வேர்ப் பட்டை மற்றும் பிசின் உள்ளிட்ட அத்தனை பாகங்களும், மனிதர்களின் உடல் நலனுக்கு அரிய தீர்வாகிறது. கோவில்களில் தல விருட்சமாக, பூஜைகளில் கலசங்களின் காப்பாக, தமிழர் பண்டிகைகளில் தோரணங்களாக மாவிலைகள் ஆன்மீகத்திலும்,
சித்த மருத்துவத்திலும் சிறப்பு வாய்ந்தது. மாவிலைகள் சிறந்த கிருமி நாசினி, வியாதி எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகையாகும். அதனால் தான் இந்து சமய திருவிழாக்கள், திருமணம், பிறந்த நாள் போன்ற மக்கள் கூடும் சிறப்பு நாட்களில் வீட்டு முகப்பில் மாவிலை தோரணம் கட்டப்படுகிறது. கோவில்கள், கோவிலைச்
சுற்றியுள்ள வீதிகளில் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டியே இருப்பது அந்தக் கால வழக்கம். கோமியம் எனும் பசுமாட்டின் சிறுநீர் கலந்த கலவையை மாவிலையைக் கொண்டு வீடுகளில் தெளிக்கும் போது, கிருமிகள் அகற்றப் படுகின்றன. மாவிலையின் மருத்துவ குணம், பயன்பாடு பற்றி தனி பதிவே போடலாம், ஏராளமானவை!
உலகில் மிகக் கொடூரமான தாக்குதல் உண்டாவது நமது நாவால் தான். நம் வார்த்தைகளால் தான். ஆயுதங்களை வைத்து தாக்கினால் ஒன்று நம் எதிரி மரணம் அடைவான் அல்லது காயம் அடைவான். ஆனால் நாம் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தால் எதிரி மரணம் அடைய மாட்டான். மாறாக, அவன் மனதிற்குள் பழிவாங்கும் எண்ணம்
என்னும் அரக்கன் விழித்துக் கொள்வான். இதனால் நமக்கு நாமே, பெரிய குழியை பறித்துக் கொள்கிறோம். அதனால் தான் கோபத்தில் கூட நமது நாவின் கட்டுப்பாட்டை நாம் இழந்து விட கூடாது. நாவை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது?
அதற்குத்தான், உடலால் இறைவனை வணங்குவது, மனதால் இறைவனை சிந்திப்பது,
நாவால் இறைவனைப் பாடுவது என்று வைத்தார்கள். ஆண்டாள் நாச்சியார் இதைத் தான் “தூவயாமாய் வந்து நாம் தூமலர் தூவித் நதாழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்: செப்பு ஏவலார் எம்பாவாய்” என்கிறாள்.
நோன்பு இருப்பவர்கள் மட்டுமல்லாது,
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
அதில் ஒரு அணிலுக்கு ஸ்ரீமந் நாராயணன் மீது பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஸ்ரீமந் நாராயணனை சிந்தனை செய்து விட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.
அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது.
திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணில்களையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. ஒரு நாள் சுவாரசியமாக விளையாடி
கொண்டிருக்கும் போது, உற்சாகத்துடன் ஓடும் போது பக்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்றாலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே ஸ்ரீமந் நாராயணா உங்களுக்கு மிக்க நன்றி என்றது.
இன்று #ஹனுமத்ஜெயந்தி
மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்தது மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம். இத்தினத்தில் அனுமனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். ஸ்ரீ ஆஞ்சநேயர் வானர குல வேந்தரான கேசரி மற்றும் அஞ்சனா தேவிக்கு மைந்தனாக அவதரித்தார். அவர்
சிவபெருமானின் அம்சமானவர். தன் இளம் வயதிலிருந்தே அனைத்து வகையான கலைகளை கற்றுத் தேர்ந்தவர். அவருக்கு சுந்தரன் என்கிற பெயரும் உண்டு. அதனால் தான் இராமாயணத்தில் மிக விசேஷமான பகுதியான அனுமன் சீதையைத் தேடிக் கண்டுபிடித்து சீதை இருக்கும் இடத்தை இராமபிரானிடம் வந்து கூறும் படலத்துக்கு
சுந்தரக் காண்டம் என்று பெயர். பிரம்மச்சர்யத்திற்கு உதாரண புருஷராக, முதலமானவராக இருப்பது ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். அனுமனை முதன் முதலாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சந்தித்த போதே அனுமனின் பிரதிபலன் கருதா பக்தி, சிறந்த ஞானம், சிங்கத்தை ஒத்த தைரியம் ஆகியவற்றை கண்டு ஸ்ரீ ராமர் கண்டு கொண்டார்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துறவி அபினவ்குப்தா ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன் சோமு அவரிடம் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம், உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன்
தீயவழியில் தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன் என்று கேட்டான். துறவி அபினவ்குப்தா அவனிடம் சொன்னார், தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன் ஒரு
வேலை செய். ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார். மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு
#ரமணமகரிஷி#பகவான்ரமணர்
மகான் ஸ்ரீரமணர் தன் மௌனத்தாலும் எளிய, இனிய, ஒற்றை வார்த்தையாலும் உபதேசங்களை தந்து வழிகாட்டியவர். மிக நீண்ட சொற்பொழிவுகளோ, பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ அவரிடம் இல்லை. அவரது உபதேசம் மிக மிக எளிமையானது.
நீ எந்த அளவிற்கு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கு
அத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது. வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே. தவிர உன் வேலைகளை எல்லாம்
நீயே செய்துகொள் என்பன அவர் உரைத்த உபதேசங்கள்.
மந்திரங்களை நாமே கற்று ஜபிக்கலாமா என்று ஒருவர் கேட்டதற்கு ரமணர் உரைத்த பதில்: இல்லை. ஒருவர் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறி அதை ஒரு கதை மூலம்