#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துறவி அபினவ்குப்தா ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன் சோமு அவரிடம் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம், உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன்
தீயவழியில் தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன் என்று கேட்டான். துறவி அபினவ்குப்தா அவனிடம் சொன்னார், தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன் ஒரு
வேலை செய். ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார். மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு
வந்தார். அப்பொழுது இளைஞன் சோமு அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன. அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த சோமுவிடம் வந்தார் துறவி அபினவ்குப்தா, தினமும்
நீ சுத்தப் படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு சோமு, என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி கேட்கறிங்க? திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க
முடியுமா? இதை கேட்ட துறவி அபினவ்குப்தா சொன்னார், தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில். நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல்
செய்வார்கள். இளைஞன் கேட்டான், சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன? அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார். பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார், இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா? ஆகாது சாமி என்றான். துறவி கூறினார், உன் கேள்விக்கு இதான் பதில். நீ செய்த
வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல். என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும். அன்று வரை
மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார். மனம் எப்பொழுதும் தாவி கொண்டே இருக்கும், அதை பரந்தாமன் பாத கமலங்களில் சரணாகதி செய்து விட வேண்டும், அதற்கு துணையாக பகவான் குருவாகி திருவருள் புரிகிறார்.
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை
ஸ்ரீகுருவே நமஹ
2022 நம்மை மாற்றிக் கொள்ள, மனத்தைக் கட்டுப்படுத்தி இறைவனின் பால் அதை திருப்ப முயற்சி செய்வோம். #HAPPYNEWYEAR2022
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்று #ஹனுமத்ஜெயந்தி
ஹனுமத் பஞ்சரத்னம், ஐந்து ரத்தினங்கள் தான். ஆதி சங்கர பகவத் பாதாள் இராமாயணத்தைப் படித்து, ஸுந்தர காண்டம் பாராயணம் செய்து ஹனுமாரை நினைத்து புலகாங்கிதமா சொன்ன 5 ஸ்லோகங்கள் இவை.
இந்த பஞ்சரத்னத்திற்கு
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-
பா⁴க்³-ப⁴வதி என்று அவர் பலஸ்ருதி சொல்கிறார். இந்த ஸ்லோகங்களை சொல்வதால் இந்த உலகத்தில் போகங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு, அவன் ராம பக்தி அடைவான் என்கிறார். ஆசார்யாள் ராம பக்தி அடைவான் என்று சொன்னால் அந்த ராமனுக்கு பூஜை செய்கிற பாக்யம் கிடைக்கும், ராமர்கிட்ட பக்தியுடன் இருக்கும்
பாக்கியம் கிடைக்கும், ராமனாவே ஆகிவிடுவான் என்ற கர்ம பக்தி ஞானத்தைப் பற்றி சொல்கிறார். இந்த ஸ்லோகத்தின் நிர்வாகத்தில், அமைப்பில் ஆசார்யாளுக்கே ஹனுமாருடைய தரிசனம் கிடைத்துள்ளது புலனாகிறது. முதலில் நான் ‘அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ – இன்று மனத்தில் அந்த ஹனுமானை த்யானம் செய்கிறேன்
இன்று #ஹனுமத்ஜெயந்தி
மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்தது மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம். இத்தினத்தில் அனுமனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். ஸ்ரீ ஆஞ்சநேயர் வானர குல வேந்தரான கேசரி மற்றும் அஞ்சனா தேவிக்கு மைந்தனாக அவதரித்தார். அவர்
சிவபெருமானின் அம்சமானவர். தன் இளம் வயதிலிருந்தே அனைத்து வகையான கலைகளை கற்றுத் தேர்ந்தவர். அவருக்கு சுந்தரன் என்கிற பெயரும் உண்டு. அதனால் தான் இராமாயணத்தில் மிக விசேஷமான பகுதியான அனுமன் சீதையைத் தேடிக் கண்டுபிடித்து சீதை இருக்கும் இடத்தை இராமபிரானிடம் வந்து கூறும் படலத்துக்கு
சுந்தரக் காண்டம் என்று பெயர். பிரம்மச்சர்யத்திற்கு உதாரண புருஷராக, முதலமானவராக இருப்பது ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். அனுமனை முதன் முதலாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சந்தித்த போதே அனுமனின் பிரதிபலன் கருதா பக்தி, சிறந்த ஞானம், சிங்கத்தை ஒத்த தைரியம் ஆகியவற்றை கண்டு ஸ்ரீ ராமர் கண்டு கொண்டார்.
#ரமணமகரிஷி#பகவான்ரமணர்
மகான் ஸ்ரீரமணர் தன் மௌனத்தாலும் எளிய, இனிய, ஒற்றை வார்த்தையாலும் உபதேசங்களை தந்து வழிகாட்டியவர். மிக நீண்ட சொற்பொழிவுகளோ, பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ அவரிடம் இல்லை. அவரது உபதேசம் மிக மிக எளிமையானது.
நீ எந்த அளவிற்கு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கு
அத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது. வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே. தவிர உன் வேலைகளை எல்லாம்
நீயே செய்துகொள் என்பன அவர் உரைத்த உபதேசங்கள்.
மந்திரங்களை நாமே கற்று ஜபிக்கலாமா என்று ஒருவர் கேட்டதற்கு ரமணர் உரைத்த பதில்: இல்லை. ஒருவர் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறி அதை ஒரு கதை மூலம்
#ஶ்ரீஜ்வாலாமுகி_அம்பாள்
ஹிமாசல ப்ரதேசத்தில் காங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீஜ்வாலாமுகி எனும் அம்பாளின் ஆலயம் ஶ்ரீலலிதா பரமேஸ்வரி வீற்றிருக்கும் ஆலயங்களில் மிகவும் பழமையான ஆலயமாகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். ஒன்பது அக்னி பிழம்புகள் எப்படி, எப்போதிருந்து தோன்றின என்று
யாராலும் இதுவரை கண்டறியப் படவில்லை. ஆலயத்தில் அம்பாளுக்கு எவ்வித உருவமும் இல்லை. பிண்டி அல்லது லிங்கம் போன்ற மூர்த்தங்களும் இல்லை. சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள். பாறைகளின் இடுக்கில் எரியும் தீயானது எப்படி எரிகின்றது என்பது இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. பல வருடங்கள்
முன் பூமிசந்த் என்னும் மன்னன் காங்க்ரா நகரத்தை தலைநகரமாக கொண்டு இந்த கோவில் இருக்கும் பகுதியை ஆண்டு வந்தான். அவர் ஒரு சிறந்த தேவி பக்தர். மன்னரின் கனவில் தோன்றிய சக்தி தேவியானவள் தீச்சுடரின் வடிவில் அம்பாள் வீற்றிருக்கும் இடத்தை மன்னருக்கு தெரியப்படுத்தினாள். அந்த இடத்தைத் தேடி
#தீட்டு இது குறித்த அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும்.
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது! தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து
விடும், தீட்டுக் கூடாது என்பார்கள். ஆண் பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால் தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத்
தொட்டால் தீட்டு என்பார்கள். தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத் தான் இவற்றை தீட்டு என்று சொன்னார்கள்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நேருக்கு நேர் பேசும் ஆற்றல் பெற்றவர் #திருக்கச்சிநம்பிகள். இவர் காஞ்சி வரத /தேவப்பெருமாள் கோவிலில் எம்பெருமானுக்கு ஆலவட்டம் (விசிறி) வீசும் சேவையை செய்து வந்தார். இவர் வீசும் ஆலவட்டச் சேவையில் வரதருக்கு அலாதி சுகம். திருக்கச்சி
நம்பிகள் ஒருநாள் தேவப்பெருமாள் சன்னிதிக்கு வரவில்லை என்றாலும் தேவபெருமாள் அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பார். திருக்கச்சி நம்பிகளும் தினம் தேவப்பெருமாளை பார்க்க வந்து விடுவார். காஞ்சிபுரத்தில் இராமானுஜரும் தன் மனைவியோடு வசித்து வந்தார். இராமானுஜர் தனக்கு ஒரு குருவைத் தேடி
அலைந்து கொண்டிருக்கையில், திருக்கச்சி நம்பிகளிடம் தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, திருக்கச்சி நம்பிகளோ தாழ்வான குலத்தில் நான் பிறந்ததால் உங்களை சிஷ்யராக ஏற்க முடியாது என்று தீர்க்கமாக கூறிவிட்டார். அப்போது ஸ்ரீராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடமே தன் பிரச்சினையைத் தீர்க்க