உலகில் மிகக் கொடூரமான தாக்குதல் உண்டாவது நமது நாவால் தான். நம் வார்த்தைகளால் தான். ஆயுதங்களை வைத்து தாக்கினால் ஒன்று நம் எதிரி மரணம் அடைவான் அல்லது காயம் அடைவான். ஆனால் நாம் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தால் எதிரி மரணம் அடைய மாட்டான். மாறாக, அவன் மனதிற்குள் பழிவாங்கும் எண்ணம்
என்னும் அரக்கன் விழித்துக் கொள்வான். இதனால் நமக்கு நாமே, பெரிய குழியை பறித்துக் கொள்கிறோம். அதனால் தான் கோபத்தில் கூட நமது நாவின் கட்டுப்பாட்டை நாம் இழந்து விட கூடாது. நாவை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது?
அதற்குத்தான், உடலால் இறைவனை வணங்குவது, மனதால் இறைவனை சிந்திப்பது,
நாவால் இறைவனைப் பாடுவது என்று வைத்தார்கள். ஆண்டாள் நாச்சியார் இதைத் தான் “தூவயாமாய் வந்து நாம் தூமலர் தூவித் நதாழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்: செப்பு ஏவலார் எம்பாவாய்” என்கிறாள்.
நோன்பு இருப்பவர்கள் மட்டுமல்லாது,
இறைவனை வழிபட கூடிய அனைவருமே புனித நீராடி அப்பரமனை தூய மலர்களோடு அர்ச்சனை செய்ய வேண்டும் வாயார பாடி மனத்தினால் நன்கு சிந்தறன செய்து வழிபட்டால் நமக்குத் துன்பம் தரும் பாவங்கள் நீங்கிவிடும். வர இருக்கும் பாவங்களும் நெருப்பில் எரிந்து தூசு போன்று அழியும். அதனால் ஒவ்வொருவரும் மனத்
தூய்மையோடு பரமனுடைய திருநாமங்களை நாவினால் உச்சரிக்கவேண்டும் என்று ஆண்டாள் பாடுகின்றாள். ‘தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனத்தினால் சிந்திக்க’ இந்த மூன்றினாலும் நாவை கட்டுப் பாட்டுக்குள் வைத்துவிட முடியும் என்பதை விளக்க இந்த சின்ன கதை. சீடன் ஒருவன், குருவே! இறை நம்பிக்கை
இல்லாமல் நம்மால் கட்டுப்பாட்டில் இருக்க முடியாதா என்று சந்தேகம் கேட்டான். “சமயம் வரும்போது சொல்கிறேன்” என்றார் குரு. சில நாட்கள் கழித்து அந்தச் சீடன், ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். அச்சமயம் அங்கு வந்த குருநாதர், “சீடனே பசுவுடன்
நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா?” எனக் கேட்டார். குழம்பிய சீடன், சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள் எனக் கேட்டான். “இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்?”
என்றார். கயிறை விட்டால் அது ஓடிவிடும் என்றான் சிஷ்யன். “அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லையா?” என்றார் குரு. குருவே, பசு எனக்குப் பழக்கம்தான், பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன் என்றாலும், அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன்.
“ ஆம்! உன்னைப் போலத்தான் இறைவனும், மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து, சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக, இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது அன்றைய கேள்விக்குப் பதில் இதுதான்!” என்று குரு சொல்ல, இறை வழிபாட்டின்
அவசியத்தை உணர்ந்தான் சீடன். இதைத் தான் திருவள்ளுவரும் தன் திருக்குறளில்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
என்கிறார். பொருள்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர்
துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நடராஜர் ஸ்ரீ நடராஜரின் உருவ அமைப்பை பற்றி பொதுவாக தெரிந்துகொள்வது அவசியம். நடராஜ வடிவம் சிவனின் நடனத்தை குறிக்கிறது, நான்கு கரங்கள் கொண்டது. சிவனின் சடை முடியப்பட்டு அணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கீழ்பக்க சடை அவிழ்ந்து நடனத்தில் விரிந்து பறந்துகொண்டிருக்கிறது. முடிந்த சடையின்
மீது மண்டையோட்டையும், கங்கா தேவியின் உருவத்தையும், சடையைச் சுற்றி ஒரு நாகத்தையும், சடையின் மீது பிறைநிலவையும் காணலாம். தலையில் கொன்றையிலை மகுடம் சூடப்பட்டுள்ளது. வலது காதில் ஆண்கள் அணியும் காதணியும் (மகர குண்டலம்), இடது காதில் பெண்கள் அணியும் காதணியும் (குழை) அணிந்திருக்கிறான்.
கழுத்தில் ஆரமும், கைகளில் வளையங்களும், முழங்கையில் கடக வளையமும், கை விரல்களிலும், கால் விரல்களிலும் மோதிரங்களும் அணிந்திருக்கிறான். இடையில் இறுக்கமாக அணிந்துள்ள புலித்தோலாடை அவன் அணிந்துள்ளவற்றில் முக்கியமான ஒன்றாகும். மேலும் உதரபந்தமும் முப்புரிணூலும் அணிந்துள்ளான். ஒரு வலது
#ஸ்ரீகிருஷ்ணனதைகள் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் தன் மனதை பறி கொடுத்த காஞ்சி நகர் ஊழிசேரன் எனும் மன்னர், பெருமாள் பள்ளி கொண்ட வடிவத்தை, விக்ரகமாக செய்வித்து, தினமும் விதவிதமான அலங்காரங்கள், நைவேத்தியங்கள் என வழிபட்டு வந்தார். நாளாக நாளாக, நாம் இறைவனுக்கு எவ்வளவு விலை உயர்ந்த ஆடைகளும்,
ஆபரணங்களும் சமர்ப்பிக்கிறோம், வாசனையும் அழகும் கலந்த மலர்கள், விதவிதமான பழங்கள், உயர்ந்ததான நைவேத்தியப் பொருட்கள், இம்மாதிரியான வழிபாட்டை யாருமே செய்ய முடியாது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்ற, ஆணவம் எனும் நச்சு மரம், அவருள் வேர் விட துவங்கியது. ஒரு நாள் மன்னர் ஊழிசேரன் உலாவச்
சென்று அரண்மனை திரும்புகையில், வழியில் மரத்தடியில் ஏழை பக்தர் ஆதிரன் என்பவர் விஷ்ணு பகவானின் சிறிய விக்ரகம் ஒன்றை வைத்து, துளசியால் அர்ச்சனை செய்வதை பார்த்தார். உடனே அவரை கூப்பிட்டு என் பகவானை வெறும் துளசியை சாற்றி அலங்கோலமாக்கி விட்டாயே அரண்மனையில் வந்து பார் என்றார் பெருமையுடன்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஜனகபுரி எனும் நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது மன்னன் குலசேகரனின் வழக்கம். அவன் சிறந்த மகாவிஷ்ணு பக்தன். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும்
என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் குலசேகரன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு
#மாமரம் வாழை மரத்தைப் போல மா மரத்தின் இலை, மலர்கள், காய், கனி, வேர்ப் பட்டை மற்றும் பிசின் உள்ளிட்ட அத்தனை பாகங்களும், மனிதர்களின் உடல் நலனுக்கு அரிய தீர்வாகிறது. கோவில்களில் தல விருட்சமாக, பூஜைகளில் கலசங்களின் காப்பாக, தமிழர் பண்டிகைகளில் தோரணங்களாக மாவிலைகள் ஆன்மீகத்திலும்,
சித்த மருத்துவத்திலும் சிறப்பு வாய்ந்தது. மாவிலைகள் சிறந்த கிருமி நாசினி, வியாதி எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகையாகும். அதனால் தான் இந்து சமய திருவிழாக்கள், திருமணம், பிறந்த நாள் போன்ற மக்கள் கூடும் சிறப்பு நாட்களில் வீட்டு முகப்பில் மாவிலை தோரணம் கட்டப்படுகிறது. கோவில்கள், கோவிலைச்
சுற்றியுள்ள வீதிகளில் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டியே இருப்பது அந்தக் கால வழக்கம். கோமியம் எனும் பசுமாட்டின் சிறுநீர் கலந்த கலவையை மாவிலையைக் கொண்டு வீடுகளில் தெளிக்கும் போது, கிருமிகள் அகற்றப் படுகின்றன. மாவிலையின் மருத்துவ குணம், பயன்பாடு பற்றி தனி பதிவே போடலாம், ஏராளமானவை!
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
அதில் ஒரு அணிலுக்கு ஸ்ரீமந் நாராயணன் மீது பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஸ்ரீமந் நாராயணனை சிந்தனை செய்து விட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.
அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது.
திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணில்களையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. ஒரு நாள் சுவாரசியமாக விளையாடி
கொண்டிருக்கும் போது, உற்சாகத்துடன் ஓடும் போது பக்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்றாலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே ஸ்ரீமந் நாராயணா உங்களுக்கு மிக்க நன்றி என்றது.
இன்று #ஹனுமத்ஜெயந்தி
ஹனுமத் பஞ்சரத்னம், ஐந்து ரத்தினங்கள் தான். ஆதி சங்கர பகவத் பாதாள் இராமாயணத்தைப் படித்து, ஸுந்தர காண்டம் பாராயணம் செய்து ஹனுமாரை நினைத்து புலகாங்கிதமா சொன்ன 5 ஸ்லோகங்கள் இவை.
இந்த பஞ்சரத்னத்திற்கு
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-
பா⁴க்³-ப⁴வதி என்று அவர் பலஸ்ருதி சொல்கிறார். இந்த ஸ்லோகங்களை சொல்வதால் இந்த உலகத்தில் போகங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு, அவன் ராம பக்தி அடைவான் என்கிறார். ஆசார்யாள் ராம பக்தி அடைவான் என்று சொன்னால் அந்த ராமனுக்கு பூஜை செய்கிற பாக்யம் கிடைக்கும், ராமர்கிட்ட பக்தியுடன் இருக்கும்
பாக்கியம் கிடைக்கும், ராமனாவே ஆகிவிடுவான் என்ற கர்ம பக்தி ஞானத்தைப் பற்றி சொல்கிறார். இந்த ஸ்லோகத்தின் நிர்வாகத்தில், அமைப்பில் ஆசார்யாளுக்கே ஹனுமாருடைய தரிசனம் கிடைத்துள்ளது புலனாகிறது. முதலில் நான் ‘அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ – இன்று மனத்தில் அந்த ஹனுமானை த்யானம் செய்கிறேன்