#ரமணமகரிஷி#பகவான்ரமணர்
மகான் ஸ்ரீரமணர் தன் மௌனத்தாலும் எளிய, இனிய, ஒற்றை வார்த்தையாலும் உபதேசங்களை தந்து வழிகாட்டியவர். மிக நீண்ட சொற்பொழிவுகளோ, பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ அவரிடம் இல்லை. அவரது உபதேசம் மிக மிக எளிமையானது.
நீ எந்த அளவிற்கு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கு
அத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது. வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே. தவிர உன் வேலைகளை எல்லாம்
நீயே செய்துகொள் என்பன அவர் உரைத்த உபதேசங்கள்.
மந்திரங்களை நாமே கற்று ஜபிக்கலாமா என்று ஒருவர் கேட்டதற்கு ரமணர் உரைத்த பதில்: இல்லை. ஒருவர் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறி அதை ஒரு கதை மூலம்
விளக்கினார். ஒரு மன்னர் தமது மந்திரியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு மந்திரி தமது ஜபத்தில் ஈடுபட்டிருப்பதாக மன்னனிடம் தெரிவிக்கப்பட்டது. மன்னர் மந்திரிக்காக காத்திருந்து, பின்பு அவரைக் கண்டபோது, ஜெபத்தை பற்றி, அது எந்த ஜபம் என்று கேட்டார். அது எல்லாவற்றிலும்
மேன்மையான புனிதமான காயத்ரி ஜபம் என்று மந்திரி சொன்னார் . தமக்கு அந்த மந்திர தீட்சை அளிக்கும்படி மந்திரியை கேட்டார். ஆனால் மந்திரி அப்படி செய்ய இயலாது என்று கூறினார். எனவே மன்னர் அந்த மந்திரத்தை வேறொருவரிடம் இருந்து கற்றுக் கொண்டார். பின்பு மன்னன் மந்திரியை சந்தித்தபோது, கற்றுக்
கொண்ட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, அது சரியா என்று மந்திரியிடம் கேட்டார். மந்திரம் சரியானது தான், ஆனால் மன்னர் அதை சொல்வது சரியில்லை என்று மந்திரி பதிலளித்தார். ஏன் என்று மன்னன் அதன் காரணத்தைக் கேட்டபோது, மந்திரி அருகிலிருந்த பணியாளரிடம் மன்னரை பிடித்து கைது செய்யும்படி கட்டளை
இட்டார். கட்டளை கீழ்படிய படவில்லை. மந்திரி மீண்டும் கட்டளையிட்டார் பின்பும் கட்டளை புறக்கணிக்கப்பட்டது. இதுபோல் பலமுறை மீண்டும் மீண்டும் மந்திரி கட்டளையிட்டார். ஆனாலும் பணியாளர் கட்டளையை சட்டை செய்யவில்லை. இந்த கட்டளைகளால் மன்னர் மிகவும் கோபம் கொண்டார். உடனே பணியாளரிடம் மந்திரியை
பிடித்து கைது செய்யும்படி ஆணையிட்டார். உடனே அந்த ஆணை நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டு மந்திரி சிரித்துவிட்டு இந்த நிகழ்ச்சியே மன்னர் கேட்ட கேள்விக்கு விளக்கம் ஆகும் என்று சொன்னார். கட்டளை ஒன்றேதான் அதை கடைப்பிடிக்கும் பணியாளரும் ஒருவரே தான் ஆனால் அதிகாரம் வெவ்வேறு. நான் கட்டளையிட்ட
போது அதன் விளைவு ஒன்றுமே இல்லை ஆனால் நீங்கள் ஆணையிட்ட போது உடனடியாக விளைவு ஏற்பட்டது அதேபோலத்தான் புனித மந்திரங்களும். பெரியோர் சொல் கடைபிடிப்பது நம் நன்மைக்கே.
ஓம் ஶ்ரீ ரமணா நமஹ🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்று #ஹனுமத்ஜெயந்தி
ஹனுமத் பஞ்சரத்னம், ஐந்து ரத்தினங்கள் தான். ஆதி சங்கர பகவத் பாதாள் இராமாயணத்தைப் படித்து, ஸுந்தர காண்டம் பாராயணம் செய்து ஹனுமாரை நினைத்து புலகாங்கிதமா சொன்ன 5 ஸ்லோகங்கள் இவை.
இந்த பஞ்சரத்னத்திற்கு
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-
பா⁴க்³-ப⁴வதி என்று அவர் பலஸ்ருதி சொல்கிறார். இந்த ஸ்லோகங்களை சொல்வதால் இந்த உலகத்தில் போகங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு, அவன் ராம பக்தி அடைவான் என்கிறார். ஆசார்யாள் ராம பக்தி அடைவான் என்று சொன்னால் அந்த ராமனுக்கு பூஜை செய்கிற பாக்யம் கிடைக்கும், ராமர்கிட்ட பக்தியுடன் இருக்கும்
பாக்கியம் கிடைக்கும், ராமனாவே ஆகிவிடுவான் என்ற கர்ம பக்தி ஞானத்தைப் பற்றி சொல்கிறார். இந்த ஸ்லோகத்தின் நிர்வாகத்தில், அமைப்பில் ஆசார்யாளுக்கே ஹனுமாருடைய தரிசனம் கிடைத்துள்ளது புலனாகிறது. முதலில் நான் ‘அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ – இன்று மனத்தில் அந்த ஹனுமானை த்யானம் செய்கிறேன்
இன்று #ஹனுமத்ஜெயந்தி
மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்தது மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம். இத்தினத்தில் அனுமனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். ஸ்ரீ ஆஞ்சநேயர் வானர குல வேந்தரான கேசரி மற்றும் அஞ்சனா தேவிக்கு மைந்தனாக அவதரித்தார். அவர்
சிவபெருமானின் அம்சமானவர். தன் இளம் வயதிலிருந்தே அனைத்து வகையான கலைகளை கற்றுத் தேர்ந்தவர். அவருக்கு சுந்தரன் என்கிற பெயரும் உண்டு. அதனால் தான் இராமாயணத்தில் மிக விசேஷமான பகுதியான அனுமன் சீதையைத் தேடிக் கண்டுபிடித்து சீதை இருக்கும் இடத்தை இராமபிரானிடம் வந்து கூறும் படலத்துக்கு
சுந்தரக் காண்டம் என்று பெயர். பிரம்மச்சர்யத்திற்கு உதாரண புருஷராக, முதலமானவராக இருப்பது ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். அனுமனை முதன் முதலாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சந்தித்த போதே அனுமனின் பிரதிபலன் கருதா பக்தி, சிறந்த ஞானம், சிங்கத்தை ஒத்த தைரியம் ஆகியவற்றை கண்டு ஸ்ரீ ராமர் கண்டு கொண்டார்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துறவி அபினவ்குப்தா ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன் சோமு அவரிடம் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம், உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன்
தீயவழியில் தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன் என்று கேட்டான். துறவி அபினவ்குப்தா அவனிடம் சொன்னார், தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன் ஒரு
வேலை செய். ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார். மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு
#ஶ்ரீஜ்வாலாமுகி_அம்பாள்
ஹிமாசல ப்ரதேசத்தில் காங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீஜ்வாலாமுகி எனும் அம்பாளின் ஆலயம் ஶ்ரீலலிதா பரமேஸ்வரி வீற்றிருக்கும் ஆலயங்களில் மிகவும் பழமையான ஆலயமாகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். ஒன்பது அக்னி பிழம்புகள் எப்படி, எப்போதிருந்து தோன்றின என்று
யாராலும் இதுவரை கண்டறியப் படவில்லை. ஆலயத்தில் அம்பாளுக்கு எவ்வித உருவமும் இல்லை. பிண்டி அல்லது லிங்கம் போன்ற மூர்த்தங்களும் இல்லை. சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள். பாறைகளின் இடுக்கில் எரியும் தீயானது எப்படி எரிகின்றது என்பது இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. பல வருடங்கள்
முன் பூமிசந்த் என்னும் மன்னன் காங்க்ரா நகரத்தை தலைநகரமாக கொண்டு இந்த கோவில் இருக்கும் பகுதியை ஆண்டு வந்தான். அவர் ஒரு சிறந்த தேவி பக்தர். மன்னரின் கனவில் தோன்றிய சக்தி தேவியானவள் தீச்சுடரின் வடிவில் அம்பாள் வீற்றிருக்கும் இடத்தை மன்னருக்கு தெரியப்படுத்தினாள். அந்த இடத்தைத் தேடி
#தீட்டு இது குறித்த அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும்.
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது! தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து
விடும், தீட்டுக் கூடாது என்பார்கள். ஆண் பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால் தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத்
தொட்டால் தீட்டு என்பார்கள். தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத் தான் இவற்றை தீட்டு என்று சொன்னார்கள்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் நேருக்கு நேர் பேசும் ஆற்றல் பெற்றவர் #திருக்கச்சிநம்பிகள். இவர் காஞ்சி வரத /தேவப்பெருமாள் கோவிலில் எம்பெருமானுக்கு ஆலவட்டம் (விசிறி) வீசும் சேவையை செய்து வந்தார். இவர் வீசும் ஆலவட்டச் சேவையில் வரதருக்கு அலாதி சுகம். திருக்கச்சி
நம்பிகள் ஒருநாள் தேவப்பெருமாள் சன்னிதிக்கு வரவில்லை என்றாலும் தேவபெருமாள் அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பார். திருக்கச்சி நம்பிகளும் தினம் தேவப்பெருமாளை பார்க்க வந்து விடுவார். காஞ்சிபுரத்தில் இராமானுஜரும் தன் மனைவியோடு வசித்து வந்தார். இராமானுஜர் தனக்கு ஒரு குருவைத் தேடி
அலைந்து கொண்டிருக்கையில், திருக்கச்சி நம்பிகளிடம் தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, திருக்கச்சி நம்பிகளோ தாழ்வான குலத்தில் நான் பிறந்ததால் உங்களை சிஷ்யராக ஏற்க முடியாது என்று தீர்க்கமாக கூறிவிட்டார். அப்போது ஸ்ரீராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடமே தன் பிரச்சினையைத் தீர்க்க