இன்று #ஹனுமத்ஜெயந்தி
மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்தது மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம். இத்தினத்தில் அனுமனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். ஸ்ரீ ஆஞ்சநேயர் வானர குல வேந்தரான கேசரி மற்றும் அஞ்சனா தேவிக்கு மைந்தனாக அவதரித்தார். அவர்
சிவபெருமானின் அம்சமானவர். தன் இளம் வயதிலிருந்தே அனைத்து வகையான கலைகளை கற்றுத் தேர்ந்தவர். அவருக்கு சுந்தரன் என்கிற பெயரும் உண்டு. அதனால் தான் இராமாயணத்தில் மிக விசேஷமான பகுதியான அனுமன் சீதையைத் தேடிக் கண்டுபிடித்து சீதை இருக்கும் இடத்தை இராமபிரானிடம் வந்து கூறும் படலத்துக்கு
சுந்தரக் காண்டம் என்று பெயர். பிரம்மச்சர்யத்திற்கு உதாரண புருஷராக, முதலமானவராக இருப்பது ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். அனுமனை முதன் முதலாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சந்தித்த போதே அனுமனின் பிரதிபலன் கருதா பக்தி, சிறந்த ஞானம், சிங்கத்தை ஒத்த தைரியம் ஆகியவற்றை கண்டு ஸ்ரீ ராமர் கண்டு கொண்டார்.
அனுமனின் பக்திக்கு தான் அடிமை என்பதை புரிந்து கொண்டார். ராம நாமத்தை நாம் ஜபிக்க ஜபிக்க இராமனை விட அனுமன் அதிக மகிழ்ச்சி கொள்கிறார். எல்லா நலன்களையும் இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் தர வல்லது ராம நாமம். அதை அவர் இடைவிடாது ஜபித்து வருகிறார். அந்த ராம நாமத்தின் பலத்தினால் சேதுக்
கரையில் இருந்து வானர சேனைகள் இலங்கையை அடைய கடலில் பாலத்தைக் கட்டினார். இறவா வரம் பெற்ற சிரஞ்சீவிகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். இன்றும் இமய மலையில் அருவமாக ராமதியானத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஈடுபட்டிருக்கிறார். மகத்தான சக்தி கொண்ட ஆஞ்சநேயரின் அவதார தினமான மார்கழி மூல நட்சத்திர தினத்தில்
அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உணவு நீர் ஏதும் அருந்தாமல் அருகிலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு ஸ்ரீ ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் மந்திரங்கள் துதித்த வாரே, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவதற்கு வடைகள் தயாரிக்கலாம் அல்லது வெற்றிலை மாலை சாற்ற வெற்றிலைகளை
கோர்க்கலாம். மாலையில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நாம் தயாரித்த வடை, வெற்றிலை மலைகளை சாற்றி வழிபடலாம். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். கிரக தோஷம் குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும். துஷ்ட
சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும். தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபங்கள் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியின் அருளால் பெறலாம். இன்று முடிந்த அளவு ராம நாமத்தை ஜபிப்போம்.
உலகில் மிகக் கொடூரமான தாக்குதல் உண்டாவது நமது நாவால் தான். நம் வார்த்தைகளால் தான். ஆயுதங்களை வைத்து தாக்கினால் ஒன்று நம் எதிரி மரணம் அடைவான் அல்லது காயம் அடைவான். ஆனால் நாம் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தால் எதிரி மரணம் அடைய மாட்டான். மாறாக, அவன் மனதிற்குள் பழிவாங்கும் எண்ணம்
என்னும் அரக்கன் விழித்துக் கொள்வான். இதனால் நமக்கு நாமே, பெரிய குழியை பறித்துக் கொள்கிறோம். அதனால் தான் கோபத்தில் கூட நமது நாவின் கட்டுப்பாட்டை நாம் இழந்து விட கூடாது. நாவை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது?
அதற்குத்தான், உடலால் இறைவனை வணங்குவது, மனதால் இறைவனை சிந்திப்பது,
நாவால் இறைவனைப் பாடுவது என்று வைத்தார்கள். ஆண்டாள் நாச்சியார் இதைத் தான் “தூவயாமாய் வந்து நாம் தூமலர் தூவித் நதாழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்: செப்பு ஏவலார் எம்பாவாய்” என்கிறாள்.
நோன்பு இருப்பவர்கள் மட்டுமல்லாது,
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
அதில் ஒரு அணிலுக்கு ஸ்ரீமந் நாராயணன் மீது பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஸ்ரீமந் நாராயணனை சிந்தனை செய்து விட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.
அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது.
திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணில்களையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. ஒரு நாள் சுவாரசியமாக விளையாடி
கொண்டிருக்கும் போது, உற்சாகத்துடன் ஓடும் போது பக்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்றாலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே ஸ்ரீமந் நாராயணா உங்களுக்கு மிக்க நன்றி என்றது.
இன்று #ஹனுமத்ஜெயந்தி
ஹனுமத் பஞ்சரத்னம், ஐந்து ரத்தினங்கள் தான். ஆதி சங்கர பகவத் பாதாள் இராமாயணத்தைப் படித்து, ஸுந்தர காண்டம் பாராயணம் செய்து ஹனுமாரை நினைத்து புலகாங்கிதமா சொன்ன 5 ஸ்லோகங்கள் இவை.
இந்த பஞ்சரத்னத்திற்கு
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-
பா⁴க்³-ப⁴வதி என்று அவர் பலஸ்ருதி சொல்கிறார். இந்த ஸ்லோகங்களை சொல்வதால் இந்த உலகத்தில் போகங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு, அவன் ராம பக்தி அடைவான் என்கிறார். ஆசார்யாள் ராம பக்தி அடைவான் என்று சொன்னால் அந்த ராமனுக்கு பூஜை செய்கிற பாக்யம் கிடைக்கும், ராமர்கிட்ட பக்தியுடன் இருக்கும்
பாக்கியம் கிடைக்கும், ராமனாவே ஆகிவிடுவான் என்ற கர்ம பக்தி ஞானத்தைப் பற்றி சொல்கிறார். இந்த ஸ்லோகத்தின் நிர்வாகத்தில், அமைப்பில் ஆசார்யாளுக்கே ஹனுமாருடைய தரிசனம் கிடைத்துள்ளது புலனாகிறது. முதலில் நான் ‘அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ – இன்று மனத்தில் அந்த ஹனுமானை த்யானம் செய்கிறேன்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துறவி அபினவ்குப்தா ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன் சோமு அவரிடம் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம், உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன்
தீயவழியில் தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன் என்று கேட்டான். துறவி அபினவ்குப்தா அவனிடம் சொன்னார், தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன் ஒரு
வேலை செய். ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார். மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு
#ரமணமகரிஷி#பகவான்ரமணர்
மகான் ஸ்ரீரமணர் தன் மௌனத்தாலும் எளிய, இனிய, ஒற்றை வார்த்தையாலும் உபதேசங்களை தந்து வழிகாட்டியவர். மிக நீண்ட சொற்பொழிவுகளோ, பெரிய கஷ்டமான வழிகளைச் சொல்வதோ அவரிடம் இல்லை. அவரது உபதேசம் மிக மிக எளிமையானது.
நீ எந்த அளவிற்கு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கு
அத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது. வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் செலவிட வேண்டும். ஒரு கணமும் கவனக் குறைவிலோ, சோம்பலிலோ வீணாக்காதே. யாருக்கும் இம்மியும் தடையோ, தொந்தரவோ விளைவிக்காதே. தவிர உன் வேலைகளை எல்லாம்
நீயே செய்துகொள் என்பன அவர் உரைத்த உபதேசங்கள்.
மந்திரங்களை நாமே கற்று ஜபிக்கலாமா என்று ஒருவர் கேட்டதற்கு ரமணர் உரைத்த பதில்: இல்லை. ஒருவர் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறி அதை ஒரு கதை மூலம்
#ஶ்ரீஜ்வாலாமுகி_அம்பாள்
ஹிமாசல ப்ரதேசத்தில் காங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீஜ்வாலாமுகி எனும் அம்பாளின் ஆலயம் ஶ்ரீலலிதா பரமேஸ்வரி வீற்றிருக்கும் ஆலயங்களில் மிகவும் பழமையான ஆலயமாகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். ஒன்பது அக்னி பிழம்புகள் எப்படி, எப்போதிருந்து தோன்றின என்று
யாராலும் இதுவரை கண்டறியப் படவில்லை. ஆலயத்தில் அம்பாளுக்கு எவ்வித உருவமும் இல்லை. பிண்டி அல்லது லிங்கம் போன்ற மூர்த்தங்களும் இல்லை. சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள். பாறைகளின் இடுக்கில் எரியும் தீயானது எப்படி எரிகின்றது என்பது இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. பல வருடங்கள்
முன் பூமிசந்த் என்னும் மன்னன் காங்க்ரா நகரத்தை தலைநகரமாக கொண்டு இந்த கோவில் இருக்கும் பகுதியை ஆண்டு வந்தான். அவர் ஒரு சிறந்த தேவி பக்தர். மன்னரின் கனவில் தோன்றிய சக்தி தேவியானவள் தீச்சுடரின் வடிவில் அம்பாள் வீற்றிருக்கும் இடத்தை மன்னருக்கு தெரியப்படுத்தினாள். அந்த இடத்தைத் தேடி