இந்த தலைப்பிற்கும் நம்ப @bullettuupandi அவர்கள் பதிவு செய்த கீழேயுள்ள வீடியோவில் கதை சொல்லும் #பேராசிரியர்_ஜெயந்தி ஶ்ரீ அவர்களுக்கும் ஒரு reference உண்டு.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை. பெங்களூரில் எனது அண்ணி PhD பட்டம் பெற்றதை கொண்டாடும் வகையில் என் அக்கா வீட்டில் எங்கள் குடும்பம் சார்ந்த ஒரு விழா நடந்தது.
அந்த குடும்ப விழாவிற்கு Prof.Jayanthi அவர்கள் என் அண்ணிக்கு professional educational coordinator என்ற முறையில் அவரையும் வரச்சொன்னதால் அவரும் வந்திருந்தார்.
எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சிலர் Prof.Jayanthi அவர்களை பேசச் சொல்லி கேட்டார்கள்.
அவரும் அவருக்கே உரிய பாணியில் கிட்டத்தட்ட அரைமணி உரையாற்றினார்.
அவர் பேச்சின் முடிவில் எனது அண்ணியை கூப்பிட்டு, "சாரதா, உங்க brother or brother in law யாரோ ஒருவர் நல்லா கதை சொல்லுவார்னு சொன்னீங்க இல்ல. அவர் வந்திருக்காரா... அவரை இங்கே வரச்சொல்லுங்க" என்றதும்
அங்கிருந்த அனைவரும், "டேய் சீனி.... உன்னை கூப்பிடுறாங்கடா" என்று என்னை தேரை இழுத்து தெருவில் விட்டது போல தள்ளி விட்டனர்.
எனக்கு பேராசிரியரை பற்றி நன்கு தெரியும் - உபயம்: youtube
கொஞ்சம் நடுக்கத்துடன் அவரிடம் சென்று என்னை நானே அறிமுகப்படுத்தி கொண்டேன்.
பேராசிரியர், "ஶ்ரீனி சார்... உங்களுடைய பெரும்பாலான #தஞ்சையாயண_கதைகளை (அப்போது நான் என் பதிவுகளை இந்த தலைப்பில் #சனிக்கிழமை_சங்கடம் எனும் துணைத் தலைப்பில் எழுதி எங்கள் #தஞ்சை_பூர்வீக_குடும்ப whatsapp groupல் பதிவு செய்து வந்தேன்) சாரதா எனக்கு forward பண்ணியிருக்காங்க.
அப்படியே நேர்லயே பேசற மாதிரி ரொம்ப நல்லா இருக்கும்
அது மாதிரி இப்பவும் ஏதாவது கதை சொல்லுங்களேன். சொல்வீங்களா?" என்று கேட்டார்.
அப்போது என் அக்கா அவரிடம், "Prof நாங்க whatsappல ஏதாவது கேள்வி கேட்டு discuss பண்ணினா இவன் நடுல புகுந்து கதை சொல்லுவான் மேடம்" என்று போட்டு கொடுத்தாள்.
"அப்படியா... ப்ரமாதம்... இப்ப இங்கே இருக்கற 30/40 பேரும் சேர்ந்து திரு.ஶ்ரீனியை கேள்வி கேட்போம். With one condition. அவரோட ஒவ்வொரு பதிலும் நேரிடையாக இல்லாமல் #கதை மூலம் சொல்ல வேண்டும்" என்று மற்றொரு இடியை தூக்கி போட்டார் பேராசிரியர் ஜெயந்தி ஶ்ரீ
பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து அந்த அக்டோபர் குளிரிலும் வியர்த்த என் முகத்தை துடைத்து கொண்டு...
#மணந்தால்_மகாதேவி... இல்லையேல் #மரணதேவி என்று மனதை தைரியப்படுத்திக் கொண்டு... கேள்விக் கணைகளை நேரேதிராக சந்திக்க தயாராகி... ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தேன்.
அங்கே இருந்த எங்கள் மாமா, "இந்த கேள்வி அரங்கை நீங்களே தொடங்கி வைங்க மேடம். முதல் கேள்வியை நீங்களே கேளுங்க" என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினார்.
OK. என்று பேராசிரியர் ஜெயந்தி என்னை பார்த்து, "உங்களை இங்கே எல்லோருக்கும் தெரியும். ஆனால் எனக்கு தெரியாது...
அதனால் உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்க. Please remember..... You've to answer only through a story. கதை சொல்லி தான் அறிமுகப்படுத்தி கொள்ளணும்" என்று சொன்னார்
கொஞ்சம் ஙேஙேஙேஙே என்று விழித்ததை கண்டு விட்டு, "உங்க #பெயர்_என்ன?" அதுலேந்து ஆரம்பிங்க" என்று சொன்னதும்..
ஒரு flash... பசுமரத்தாணி போல ஒரு கதை ஞாபகம் வந்தது.
அதை (பின்வருமாறு) சொல்ல தொடங்கினேன் (இதை படிப்பவர்கள் அநேகம் பேருக்கு தெரியும்)
இப்படி... கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் எல்லோரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டு நான் எழுதிய #சனிக்கிழமை_சங்கடத்திற்கு பழி தீர்த்து கொண்டார்கள்.
அந்த ஒன்றரை மணி நேரத்தில் நான் 23 கதைகள் சொன்னதாக எனது மாமா பிறகு சொன்னார்
நல்லவேளையாக சாப்பாடு ரெடி என்று அப்போது யாரோ சொன்னதால் என்னை விட்டு விட்டார்கள்.
அந்த #கேள்வி_அரங்கை முடிக்கும் வகையில் பேராசிரியர் ஜெயந்தி நிறைவுரை சொல்லும் போது, "ஶ்ரீனி சார்.... நெஜமாவே மனசார சொல்றேன்... நீங்க ஒரு #கதை_களஞ்சியம்" என்று பாராட்டியபோது... எனது நிலை...
அன்றிலிருந்து என் #தஞ்சையாயணம் என்ற தலைப்பை #கதையளப்பு_களஞ்சியம் என்று மாற்றி கொண்டு... அதே தலைப்பில் தான் இங்கே ட்விட்டரிலும் களமாடி கொண்டு வருகிறேன்.
ஒரு மாதத்திற்கும் மேலாக @SivaRoobini555@VasaviNarayanan இருவரால் அற்புத தமிழ் விருந்து அளிக்கப்பட்டு, கோதையின் கீதை என்று அவள் திருப்பாவையை ரசித்து எழுதினார்கள்.
கடந்த 30 நாட்களாக அற்புதமான அந்தப் பெண் ஆண்டாள் எனும் கோதையோடு பழகி அவள் தேன் தமிழ் திருப்பாவை பாசுரங்களை ரசித்தோம்.
அவள் காத்யாயனி விரதம் இருந்தாள் . அரங்கனையே மணாளனாக அடைய விரும்பினாள் . அவளுக்கு அவனைப் பிடித்தது போல் அவனுக்கும் அவளை ரொம்ப பிடித்தது .
அவனோடு மணம் ஆகும் வைபவத்தை கனா கண்டாள். கனவு நிஜமானது. ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சென்றடைந்தாள் அந்த சிறுமி.
அவள் கண்ட கனவு எவ்வளவு திவ்யமானது என்று அவள் விவரிக்கும் நாச்சியார் திருமொழியில் சுவைத்து ரசிக்கலாம்.
முன்னெச்சரிக்கை: இந்த பதிவு #தன்மை_நிலையில் (First person singular - Grammar) எழுதப்பட்டுள்ளது.
முழுவதும் கற்பனை... யார் மனதையும் புண்படுத்த இல்லை
குறிப்பாக... இது @rgkannan & @makkolam அவர்கள் விரைவில் குணமடையவும் அவர்கள் மன அமைதியோடு நிறைய ஓய்வு எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.... இதோ ஒரு இசைப் பதிவு ( #கொஞ்சம்_நகைச்சுவையும் கலந்து தான்)
தற்போது கொரோனா பாதிப்பால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் போது இங்கே ட்விட்டரில் விரைவில் நலம்பெற வாழ்த்திய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியும் அன்பும்...
கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்).
வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
எல்லோர் சார்பாகவும் ப்ரசாதம் & அன்னதானம் செய்து வருகிறேன்.
அதன்படி இன்று எல்லாம் இனிதே நடைபெற்று வருகிறது. 11 மணியளவில் எல்லோர்க்குமான போஜனம் வழங்கப்பட இருக்கிறது.