முன்னெச்சரிக்கை: இந்த பதிவு #தன்மை_நிலையில் (First person singular - Grammar) எழுதப்பட்டுள்ளது.
முழுவதும் கற்பனை... யார் மனதையும் புண்படுத்த இல்லை
குறிப்பாக... இது @rgkannan & @makkolam அவர்கள் விரைவில் குணமடையவும் அவர்கள் மன அமைதியோடு நிறைய ஓய்வு எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.... இதோ ஒரு இசைப் பதிவு ( #கொஞ்சம்_நகைச்சுவையும் கலந்து தான்)
தற்போது கொரோனா பாதிப்பால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் போது இங்கே ட்விட்டரில் விரைவில் நலம்பெற வாழ்த்திய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியும் அன்பும்...
‘நலந்தானா?’ என்று உலகத்து சோகமெல்லாம் முகத்தில் தாங்கி, துடிக்கும் பத்மினியைப் பார்த்து, உதடுகள் துடிக்க கண்கள் கசிய உணர்ச்சிக் குவியலாவாரே நடிகர் திலகம் சிவாஜி.......உங்கள் கரிசனம் கண்டு, நானும் அவர் போலானேன்.
எனக்கு சாதாரண உடல் வலி தான். ஆனால் இன்றைய நிலையில்.... ருக்கு ஆடிப் போய்விட்டாள்.. சீனி... நீ bed rest எடு என்று சொல்லி விட்டு பூ மாதிரி இட்டிலியை ஊட்டிவிட்டாள்.
எனக்கோ வெட்கமும், காதலும் ஒரே நேரம் #முட்டிக் கொண்டது. சீச்சீ.. சாப்பிடற நேரத்துல இது என்ன #முட்டிக்கிறது?
சின்னதாய் கண்ணடித்தவாறே, "ருக்கு... இதுக்கு முன்னாடி எப்போ எனக்கு கடைசியாய் ஊட்டிவிட்டே சொல்லேன்!”
“சாப்பிடும் போது பேசினா புரையேறும்” என்று பதிலாய் அவள் சொன்னாலும், அவள் பார்வையோ, ‘வாயிலேயே ஒண்ணு போட்டேன்னா’ என்பது போலிருந்தது.
அதற்குப்பின் பானிபூரிக்காரன், முதலில் கொடுத்ததை விழுங்கு முன்பே அடுத்த பூரியை கையில் திணிப்பானே, அந்த மாதிரி மீதி இட்லியை வேகமாய் என் வாயில் திணித்தாள்
என்னுடைய நெருங்கிய நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு.
“இப்போ எப்படி இருக்கே?”
“உடம்பு ரொம்ப வலிக்குதுடா!”
சிரித்தான்... “காலேஜில ‘காதல்வலி’ன்னு ஒரு கவிதை எழுதினே தெரியுமா?”
“உதைபடுவே! அது என்ன வலி கவிதை? நினைப்புக்கு வரல்லையே?”
“சரி! அப்புறமா பேசுடா..”
“ஓ,கே! சீனி... நீ வீட்டில் தான் இருக்கே. ஞாபகம் வச்சுக்கோ. ஆஸ்பத்திரியில் இல்லை. ஏதாவது ஞாபகத்தில "சிநேகம் காட்டும் செவிலிப்புறாவே"ன்னு நர்ஸைப் பார்த்து கவிதை எழுதின மாதிரி, எதுவும் சொல்லாம பொத்திக்கிட்டு படு...”.
“சரிடா! சிரிக்க முடியலே! பை !!”
எவ்வளவு வருஷமானால் என்ன? நட்பு மனத்தை லேசாக்கி விடுகிறது..
அந்த 'காதல்வலி' கவிதை நினைவுக்கு வரவேயில்லை.
மாறாக, தூக்கம் வராமல், இந்த இசைவலி பின்னத் தொடங்கியது.
ஒரு மாதத்திற்கும் மேலாக @SivaRoobini555@VasaviNarayanan இருவரால் அற்புத தமிழ் விருந்து அளிக்கப்பட்டு, கோதையின் கீதை என்று அவள் திருப்பாவையை ரசித்து எழுதினார்கள்.
கடந்த 30 நாட்களாக அற்புதமான அந்தப் பெண் ஆண்டாள் எனும் கோதையோடு பழகி அவள் தேன் தமிழ் திருப்பாவை பாசுரங்களை ரசித்தோம்.
அவள் காத்யாயனி விரதம் இருந்தாள் . அரங்கனையே மணாளனாக அடைய விரும்பினாள் . அவளுக்கு அவனைப் பிடித்தது போல் அவனுக்கும் அவளை ரொம்ப பிடித்தது .
அவனோடு மணம் ஆகும் வைபவத்தை கனா கண்டாள். கனவு நிஜமானது. ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சென்றடைந்தாள் அந்த சிறுமி.
அவள் கண்ட கனவு எவ்வளவு திவ்யமானது என்று அவள் விவரிக்கும் நாச்சியார் திருமொழியில் சுவைத்து ரசிக்கலாம்.
இந்த தலைப்பிற்கும் நம்ப @bullettuupandi அவர்கள் பதிவு செய்த கீழேயுள்ள வீடியோவில் கதை சொல்லும் #பேராசிரியர்_ஜெயந்தி ஶ்ரீ அவர்களுக்கும் ஒரு reference உண்டு.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை. பெங்களூரில் எனது அண்ணி PhD பட்டம் பெற்றதை கொண்டாடும் வகையில் என் அக்கா வீட்டில் எங்கள் குடும்பம் சார்ந்த ஒரு விழா நடந்தது.
அந்த குடும்ப விழாவிற்கு Prof.Jayanthi அவர்கள் என் அண்ணிக்கு professional educational coordinator என்ற முறையில் அவரையும் வரச்சொன்னதால் அவரும் வந்திருந்தார்.
எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சிலர் Prof.Jayanthi அவர்களை பேசச் சொல்லி கேட்டார்கள்.
கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்).
வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
எல்லோர் சார்பாகவும் ப்ரசாதம் & அன்னதானம் செய்து வருகிறேன்.
அதன்படி இன்று எல்லாம் இனிதே நடைபெற்று வருகிறது. 11 மணியளவில் எல்லோர்க்குமான போஜனம் வழங்கப்பட இருக்கிறது.