பகவான் கண்ணன் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மார்கழிக்கு அடுத்த மாதமான #தை மாதமும் புண்ணிய மாதம் தான். தை மாத சிறப்புகள் பல! சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண புண்ணிய காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். 'தை பிறந்தால் வழி பிறக்கும்'
என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாதத்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுகின்றனர். #தை_கிருத்திகை
தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து கந்தவேளை வணங்கி
வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கம் என்பது ஐதீகம். ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் மிக முக்கியமானவை. அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.
சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது தை மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் கருப்பை திறக்கும், கட்டாயம் குழந்தை பிறக்கும்.
#தைப்பூசம்
இவ்விழா தை மாதம் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருக்கடவுள் ஆகியோரை வழிபாடு செய்கிறோம். சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் தைப்பூசம். உமையம்மை முருகனுக்கு சக்தி வேலை
வழங்கிய நாள் தைப்பூசம். இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரியவர். அறிவுக் கடவுள் என்று அவர் போற்றப்படுகின்றார். எனவே, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி அமையும் மாதமான தை மாதத்தில் தைப்பூச தினத்தன்று புண்ணியத்
தீர்த்தங்களில் நீராடினால், அறிவாற்றல் வளரும் என்பது ஐதிகம். மயிலை கபாலீசுவரர் கோயிலில் தைப்பூச நாளையொட்டி முதல்நாள் சந்திரசேகர சுவாமி தெப்போற்சவமும், இரண்டாவது மூன்றாவது நாட்கள் சிங்கார வேலர் தெப்போற்சவமும் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் தைப்பூசத்தன்று வட திருக்காவிரிக்கு
எழுந்தருளி, அண்ணனாகிய ரங்கநாதரிடமிருந்து பட்டாடை, பரிவட்டம் மற்றும் சீர்வரிசைகளைப் பெற்றுத் திரும்புகிறாள். #தை_அமாவாசை
தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு
மேற்கொள்ளப்படுகிறது. உத்தராயண காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சிணாயன காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை. இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு,
குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைகின்றன. #ரத_சப்தமி:
ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இன்மை
செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மேலும் மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும் என்றும் கருதப்படுகிறது. #பீஷ்ம_அஷ்டமி:
ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி.
இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். 58 நாட்கள் அம்புபடுக்கையில் படுத்து இருந்த பிதாமகர் பீஷ்மர் பரமாத்மாவின் கடாக்ஷத்தால் ஸ்ரீ வைகுண்ட ப்ராப்தி அடைந்த நாள்.வேதம் படிக்கும் படித்த வித்யார்த்திகள் அனைவரும் மந்திர ரூபமாக பிதாமகருக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த பாக்கியத்தை நல்கும்
தவிர மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் பிதாமகருக்கு தர்ப்பணம் செய்யலாம். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை! #வசந்த_பஞ்சமி
ஸ்ரீசரஸ்வதி அவதரித்த
தினமே வசந்த பஞ்சமி. அந்த நாள் தை மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமியாகும். இதனை 'மகாபஞ்சமி' என்றும் சொல்வர். அம்பிகை ஜனனமான வசந்த பஞ்சமி தினத்தில் சங்கீதத்தாலும் நாம சங்கீர்த்தனம், பஜனை முதலியவற்றாலும் அம்பிகையை ஆராதிப்பது சிறப்பு. ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வசந்த பஞ்சமி தினத்தில் பூஜைகள்
செய்து வழிபாடு செய்வதால், ஞான சித்தியாகும். அக்ஷராப்பியாசத்திற்கும் கல்வி சம்பந்தமான புதிய முயற்சிகள் துவங்கவும் ஏற்ற தினம் இது. ஸ்ரீகிருஷ்ணர், சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் துவங்கிய நாளும் இன்று தான். வட மாநிலங்களில் பங்குனி மாதத்தில் வசந்த பஞ்சமி, வசந்த ருதுவின் ஆரம்ப
தினமாகக் கொண்டாடபடுகிறது. மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாள் அன்றுதான் வித்யாரம்பம் செய்கிறார்கள். #வீரபத்ர_வழிபாடு
வீரபத்ர வழிபாடு என்பது செவ்வாய் தோறும் ஓராண்டு காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஓராண்டு வழிபட முடியாதவர்கள் தை மாத செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது இவ்வழிபாட்டினை கட
பிடிக்கலாம். இவ்வழிபாட்டை மேற்கொள்வதால் நீங்காத தடையும் நீங்கும். தீராத பகையும் தீரூம். நவககிரக பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும். #தை_வெள்ளி வழிபாடு
உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தையில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
அன்றைய தினங்களில் அபிராமி
அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
தை மாதத்தின் திருவிழாக்களைக் கொண்டாடி, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இறையருள் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Annam Atma Paripalanam: Food nourishes the soul!
In Sanatana Dharma, the term annam is used for the English term 'food', but not as an equivalent. The term annam denotes and connotes physical and spiritual ramifications. Annam is not just something which is input to stomach and
digested, but it includes everything that is ingested by the ten senses and the mind. This is the reason our physical body is called ‘annamaya kosha’.('உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே' என்று சொல்வார் திருமூலர். இந்த உடம்பு சோற்றால் அடித்த சுவர்.) A number of our scriptures talk
about annam. The main emphasis is on the truth ‘What we eat, we become’.
Kanchi Maha Periyavaa took sanyasam at the age of thirteen. From that day, until he attained videha mukti at the age of 100, he lived an exemplary life of strictest austerity. His daily main meal was often
பரஸ்பரம் பாவயந்த:’ என்று பகவான் கீதையில் சொன்ன மாதிரி பரஸ்பரம் நாமும் கோவும் ஒருவரையொருவர் போஷித்துக் கொள்ள வேண்டும். கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு
ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும், பசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ய வரவேயாகும்
ஆதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க முன்வரவேண்டும். இந்த தேசத்தின் புராதனமான கலாசாரத்தில் ஊறி வந்துள்ள கோரக்ஷண தர்மம் நம் ரத்தத்தில் பேச வேண்டும். அப்படிப் பேசி, ஒரு பசு கன்றுக்கு ஊட்டுக் கொடுப்பதற்கு
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
நினைத்துப் பார்த்தாலே நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்து வசை பாடி இருக்கிறார்கள்! எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்! அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன் என்று சாமியார் முன் வந்து பொருமினான் சீடன் பக்தவசலம். ஏதாவது
மந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி என்றான் பக்தவசலம். சாமியார் யோசித்தார். நீ ஒன்று செய் என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி. நீ யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக் கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக் கொண்டே வா, நீ எங்கு
எல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும் என்றார். இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன் என்று சீடன் பக்தவசலம் எழுந்து போனான். அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ பழிவாங்க வேண்டும் என்ற நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஓர்
#பொங்கல்#மகர_சங்கராந்தி ஒரு தெளிவுரை:
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் #தமிழ்மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில் #சங்கராந்தி என்பர். தை மாதப் பிறப்பு #மகர_சங்கராந்தி எனக் கொண்டாடப் படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாத சங்கராந்தியும் ஒவ்வொரு
பெயரால் அழைக்கப்பட்டு, அன்று செய்ய வேண்டிய பூஜைகள், தானங்கள் பற்றி நம் சித்த ரிஷிகள் வழிமுறையை வகுத்துள்ளனர். #தான்ய_சங்கராந்தி:
சூரியன் மேஷராசியில் நுழையும் சித்திரை மாதத்தின் முதல் நாள் தான்ய சங்கராந்தி! அன்று சூரியபகவானை பூஜித்து தானிய வகைகளை தானம் செய்தால் 1000 யாகங்கள்
செய்த பலன் கிட்டும். #தாம்பூல_சங்கராந்தி:
வைகாசி, ரிஷபராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். அன்று சூரியனுக்கு அர்ச்சனை செய்து ஒரு மண் பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், இயன்ற தட்சணை வைத்து வாசனைப் பொருட்களுடன் வயதான தம்பதியருக்கு தானம் அளித்தால் நற்பலன்கள் பெருகும்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இராமன் காட்டிற்கு எழுந்தருளும் போது சீதை பிராட்டி தானும் கூட வருவேன் என்று சொல்ல அதற்கு இராமன் நகர வாசத்திற்கும் வன வாசத்திற்கும் உண்டான வேறுபாடுகளை எடுத்துரைத்து அதனால் காட்டிற்கு உடன் வருவது துன்பம், அரண்மனையில் இருப்பதே இன்பம் என்று சொன்னார். அதைக் கேட்ட
பிராட்டி, இன்ப துன்பங்கள் நீர் சொல்வது போல் அல்ல. ஒவ்வொருவருக்கும் வேறு வேறாய் இருக்கும் உம்மோடு கூடியிருப்பது எதுவோ அதுவே சுகம். உம்மைப் பிரிந்து அரண்மனையில் இருப்பதே எனக்கு துன்பமாகும். இந்த உண்மை உமக்குத் தெரியாமல் போனாலும் என்னிடம் கேட்டு அறிவீராக. உம்மைப் போல நாம் அளந்து
அன்பு செய்யவில்லை. நான் உம்மிடம் கொண்டுள்ள அன்பு அளவு கடந்ததாகும் என்று சொன்னாள். இதற்கு இராமன் நம்மைக் காட்டிலும் உனக்கு அன்பு மலை போல் இருப்பதாய்ச் சொன்னாயே. இதற்கு நம்மை என்ன செய்யச் சொல்கிறாய் என்றான். அதற்கு பிராட்டி நான் முன்னே போகின்றேன். நீர் எனக்குப் பின்னாலே வரப் பாரும்
#HappyPongal பொங்கல் நாளன்று, வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்வார் காஞ்சி மகாபெரியவர். அதற்கென்ன காரணம் என பக்தர்கள் கேட்ட போது, “பல் இல்லாத கிரகம் எது என தெரியுமா?” என்று திருப்பிக் கேட்டார். பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. “அதுதான் சூரியன்’ என்ற பெரியவர், பல் இல்லாதவர்களால்
கடினமான தேங்காயைச் சாப்பிட முடியுமா? அதனால் தான் வழுக்கை தேங்காயை நைவேத்யம் செய்ய வேண்டும்,” என்றார். இன்னொரு நைவேத்யமும் சூரியனுக்கு முக்கியம்.
அது தான் உளுந்து வடை. காரணம், பல் இல்லாத சூரியனுக்கு மெதுவடை சாப்பிட இதமாக இருக்குமே! அதற்காகத்தான். இதுதவிர வாழைப்பழமும் முக்கியம்.
பெரியவர், சங்கர மடத்தில் இருந்த காலத்தில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, மடம் சுத்தம் செய்யப்படும்.
அவர் பூஜித்த சந்திர மௌலீஸ்வரர் பூஜா மண்டபத்தில், சுண்ணாம்பு வெண் பட்டையும், காவியும் அடிக்கப்படும். வாழை மாவிலை தோரணங்கள் கட்டப்படும். காட்டுப் பூக்களால் மடத்தை அலங்காரம்