K. RAJESH Profile picture
Jan 18 12 tweets 2 min read
திவாலாகும் நிலையில் இலங்கை

இலங்கையில், கடந்த சில மாதங்களாக பணவீக்கம் (22.1%) அதிகரித்து வருவதாலும் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதாலும், அந்த நாட்டில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான வருமானம் சுற்றுலா மூலமாகவே வருகிறது.
அபரிமிதமான பணவீக்கத்தினால், எண்ணெய், அரிசி, சமையல் எரிவாயு போன்ற அடிப்படைத் தேவைகள் பெருமளவிற்கு விலையேற்றத்தை சந்தித்தன. பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதும் இதற்கொரு காரணம். ராணுவம் தலையிட்டு பொருட்கள் மக்களுக்கு சரிசமமாக கிடைக்க வழிவகை செய்தது.
கொரோனா காலகட்டத்தில், உலக அளவில் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிப்படைந்தது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால், அந்நிய செலாவணி வருவாயும் குறைந்து போனது. சுற்றுலாத்துறையை வெகுவாக நம்பியிருந்த இலங்கையின் பொருளாதாரம் இதனால் சுமார் 3.6% வீழ்ச்சியடைந்தது.
இறக்குமதிகளுக்கு செலுத்தவேண்டிய பில் தொகைகளை நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பிலிருந்து செலுத்த வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டது. 2019 நவம்பர் மாதம் 7.5 பில்லியன் டாலராக இருந்த கையிருப்பு படிப்படியாக குறைந்து தற்போது 1.5 பில்லியன் டாலராக (நவம்பர் 2021 நிலவரப்படி) உள்ளது.
இருப்பினும், இலங்கையின் ரிசர்வ் வாங்கி, 2021 இல் பொருளாதாரம் மீண்டு, 6% வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று கூறியது. நாட்டின் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, ஏப்ரல் 2021 இல், ராஜபக்சே அரசாங்கம் விவசாயத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதென அறிவித்தது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்த முடிவு ஓரளவு திரும்பப் பெறப்பட்டாலும், அதனால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு மீள முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. விவசாயம் பாதிப்படைந்ததால் ரிசர்வ் வங்கி சொன்ன 6% வளர்ச்சியை இலங்கையால் எட்ட முடியவில்லை.
உலக வங்கியின் தகவலின்படி சுமார் 5 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர். IMFன் SDR (Special Drawing Rights)ஐ பயன்படுத்தி, 787 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், வங்கதேசத்திடம் currency swap arrangement மூலமாக சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் இலங்கை திரட்டியது
ஆனால் இவையனைத்தும் தாமதமாகத்தான் இலங்கைக்குக் கிடைத்தது. தற்போது சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு நிவாரணமாக தனது குடிமக்களுக்கு வழங்கியது. மேலும், இலங்கை மற்ற நாடுகளுக்கு திருப்பித்தர வேண்டிய கடன்களில் ($7.3 பில்லியன்) இருந்து தவறாது என்றும் உறுதியளித்தது.
இந்த மாதம் $500 மில்லியன் சர்வதேச பாண்ட் முதிர்ச்சியடைகிறது. இந்த தொகையை இலங்கை செலுத்த வேண்டும். ஆனால் அதற்கான பணம் நாட்டில் இல்லை. ஆகையால், கூடுதல் நேரம் வழங்குமாறு கடன் வழங்கிய நாடுகளிடம் இலங்கை கேட்டுள்ளது.
இந்த கூடுதல் காலம் கிடைத்தால் பெரும் உதவியாக இருக்குமென்று அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, இலங்கையின் மொத்த அந்நிய செலாவணியும் ஜனவரி மாதத்துடன் தீர்ந்துவிடுமென்று தெரிகிறது. இது போக இன்னும் $437 மில்லியன் கூடுதலாக தேவைப்படுகிறது.
சீனா ஏற்கனவே $3.5 பில்லியன் (இலங்கையின் மொத்த கடன்தொகையான $35 பில்லியனில் 10%) இலங்கையின் சார்பாக கடனை திரும்ப செலுத்தியுள்ளது. அதிபர் ராஜபக்ஷே வின் வேண்டுகோளுக்கு சீன அதிபர் இன்னும் பதிலளிக்கவில்லை.

இதுதான் தற்போதைய நிலைமை. அடுத்த மாதம் நாட்டை நடத்த அவர்களிடம் பணமில்லை.
சீனாவிடமிருந்து உதவி கிடைக்காவிட்டால், இலங்கை திவாலாகும். பெருமளவு துன்பத்திற்கு அந்த நாட்டின் மக்கள் தள்ளப்படுவார்கள். இந்தியாவிடம் உதவி கேட்டதாக எந்தவொரு தகவலும் இல்லை.

சீன அரசின் முடிவில்தான் இலங்கையின் பொருளாதாரம் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்பதே தற்போதைய நிலைமை.

<End>

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K. RAJESH

K. RAJESH Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rajeshkmoorthy

Jan 18
SAVE TAX ON CAPITAL GAINS - Invest in 54EC Bonds

Investors who earned long-term capital gains during the financial year from the sale of land or building or both are eligible to get exemption under section 54EC of the income tax act.
Investors can avail of the exemption by investing in bonds issued by PFC (Power Finance Corporation Ltd), REC (Rural Electrification Corporation Ltd), Indian Railway Finance Corporation (IRFC) and NHAI (National Highways Authority of India).
The investment should be made within a period of 6 months from the date of sale of these specified assets to get exemption under section 54EC of the income tax act.

Salient features:

Allows to save tax on Long term capital gains and provides fixed interest income.
Read 5 tweets
Jan 16
அடுத்த வாரம் - பொருளாதார நிகழ்வுகள்

வரும் வாரம் (17 ஜனவரி - 21 ஜனவரி) பங்குச்சந்தையை பாதிக்கக் கூடிய நிகழ்வுகள்
ஜனவரி 17
காலாண்டு முடிவுகள்: UltraTech Cement, Tata Steel Long Products, Hathway Cable & Datacom and Sonata Software

சீனாவின் ஜிடிபி மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி பற்றிய அறிக்கைகள் வெளியாகவுள்ளன.
ஜனவரி 18
காலாண்டு முடிவுகள்: ICICI Prudential, Bajaj Finance, Just Dial, L&T Technology, Network18, ICICI Securities, Tata Elxsi, Trident and TV18 Broadcast

Bank Of Japan வட்டி விகித முடிவுகள்

Euro Area Economic Sentiment

OPECன் மாதாந்திர எண்ணெய் சந்தையின் அறிக்கை
Read 7 tweets
Dec 30, 2021
பங்குச்சந்தை முதலீடு - எச்சரிக்கை பதிவு

சென்ற வாரம் அன்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். Portfolio மேனேஜ்மென்ட் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய உறவினர் ஒருவருக்கு, பங்குச்சந்தையில் டிரேடிங் செய்யும் ஒரு நிறுவனத்திடமிருந்து வந்த offer பற்றி என்னிடம் சொன்னார்.
அதாவது, நாம் அவர்களிடம் டீமேட் அக்கௌன்ட் தொடங்கி, ₹1,00,000 டெபாசிட் செய்து, ID மற்றும் Password அவர்களிடம் கொடுத்து விட்டால், நமது சார்பாக டிரேடிங் செய்து அவர்கள் நமக்கு வரும் லாபத்தில் 30% எடுத்துக்கொண்டு 70% நமக்கு தந்து விடுவார்களாம்.
இது போல நிறைய நிறுவனங்கள் செயல்படுகின்றன. Modus Operandi மேலே சொன்ன முறைகள் தான். இந்த அணைத்து நிறுவனங்களும் தங்களுக்கே உரிய properietory டீமேட் applications வைத்துள்ளன. இவர்களுடைய நோக்கம் நமக்கு லாபம் சம்பாதித்து கொடுக்க அல்ல. அவர்களுக்கு brokerage ஈட்டவும், நம்முடைய balance
Read 13 tweets
Dec 17, 2021
நாம் ஏன் இளம் வயதிலேயே முதலீட்டு பழக்கத்தை தொடங்க வேண்டும்?

1. அதிக ரிஸ்க் மற்றும் அதற்கேற்ற returns எடுக்க சரியான தருணம்.

ஒரு 25 வயது முதலீட்டாளர் எடுக்கும் ரிஸ்க் அளவும், 40 வயதான முதலீட்டாளர் எடுக்கும் ரிஸ்க் அளவும் ஒரே மாதிரி இருக்காது. இருக்கக் கூடாது.
அதாவது, ஒரு 25 வயது முதலீட்டாளர், சந்தை சார்ந்த முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யும் விகிதம் 75% (100 மைனஸ் உங்கள் வயது). மீதமுள்ள 25%, அவர் நிச்சய முதலீடுகளில் (Liquid Funds, Bonds, NCD's, PPF, FD's முதலியன). அவர் எடுக்கும் ரிஸ்க் அளவிற்க்கேற்றாற்போல் returns மாறுபடும்.
இளம் வயதிலேயே அதிக ரிஸ்க் எடுப்பதால், அவர்களின் வருமானமும் அதிகமாகும். ஆனால் இதே ஒரு 40 வயதுடைய முதலீட்டாளர், வெறும் 60% மட்டுமே சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 40%, நிச்சய முதலீடுகளில் செய்யலாம்.
Read 12 tweets
Dec 12, 2021
எது சிறந்தது?
Endowment பாலிசியா அல்லது Mutual Fund முதலீடா?

வருமான வரி விலக்கு பெறவும், Guaranteed Returns மற்றும் காப்பீடு பெறவும் ஆகச்சிறந்த முதலீட்டு வழி Endowment பாலிசி தான் என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்நேரம் உங்களை முற்றுகையிட்டிருக்கும் இல்லையா?
உங்களுக்கும், ஆஹா நமக்கு காப்பீடு, வரி விலக்கு மற்றும் Guaranteed Returns கிடைக்கிறதே என்று நீங்கள் சற்றும் யோசிக்காமல் உடனே அந்த நிறுவனங்களின் பாலிசியை வாங்குபவரா?

சொந்தங்கள்/நண்பர்கள் பாலிசி விற்கிறார்களே என்று அவர்களுக்கு உதவ நினைப்பவரா?

சற்றே நிறுத்தி சிந்தியுங்கள்.
உதாரணத்திற்கு நான் எடுத்துக்கொண்ட Endowment பாலிசி ஒரு சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசி. அதன்படி, வருடத்திற்கு ₹1 லட்சம் வீதம் 10 வருடங்கள் நீங்கள் பிரீமியம் செலுத்தினால், உங்களுக்கு 20 வருடங்கள் முடிந்தவுடன் ₹22,87,200 கிடைக்கும். இது போக 20 வருடங்களுக்கு 10 லட்சம் cover
Read 13 tweets
Nov 25, 2021
Cryptocurrency Bill 2021
இந்திய அரசாங்கம் கிரிப்டோகரன்சிகளை தடை செய்யுமா இல்லையா என்பது குறித்து தற்போது பெரியதாக சமூகவெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் 2021 மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
2019 இல், இது போன்றொரு மசோதா Cryptocurrency களை மொத்தமாக தடை செய்ய (blanket ban) பரிந்துரைத்தது. அந்த மசோதா, கிரிப்டோகரன்சியை யாரும் mining செய்யவோ, உருவாக்கவோ, வைத்திருக்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று பரிந்துரை செய்தது.
2021ல், இந்த மசோதாவிற்கு ‘Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அரசாங்க வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவலின்படி, இந்த முறை, Blanket Ban இருக்காது. ஆனால் இதற்கொரு ஒழுங்குமுறை உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(