ஒருமுறை #ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர். பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம். மூன்று ஜோதிடர்களும்
தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர். "என்ன வேண்டும்’’ என்று சுவாமிகள் கேட்டார். அதற்கு அவர்கள், நாங்கள் ஜோதிடம் சொல்பவர்கள். எங்களுக்கு இங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை எங்களுடைய பாக்கியமாக நினைப்போம் என்றனர். சற்று யோசித்த சுவாமிகள், ''உங்களிடம் ஒரு ஜாதகம்
தருகிறேன். அந்த ஜாதகத்துக்கு உரியவரின் ஆயுள் காலம் என்ன என்று கணித்துச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார். பொதுவாக ஜோதிடர்கள் ஆயுளை கணிப்பதில்லை. ஆனால், சுவாமிகளின் உத்தரவு என்பதால் அவர்களால் மறுக்கவும் முடியவில்லை. கொஞ்சம் தயங்கியபடியே, எங்களால் முடிந்தவரை கணித்துச் சொல்கிறோம்
என்று கூறினார்கள். ''சரி, நான் ஜாதகத்தை தனித்தனியாக மூன்று பேரிடமும் கொடுக்கச் சொல்கிறேன். கணித்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். அதற்கு பிறகு என்னுடைய முடிவைக் கூறுகிறேன்'' என்றார். அதன்படியே மூன்று ஜோதிடர்களிடமும்
ஜாதகம் தரப்பட்டது. அவர்களும் தாங்கள் சொல்லியபடியே ஜாதகத்தைக்
கணித்துப் பார்த்தனர். பின்னர், தங்கள் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்த போது, மூவரின் கணிப்பும் வேறு வேறாக இருந்தது. ஜாதகரின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள் என்றார் ஒருவர். முந்நூறு ஆண்டுகள் என்றார் அடுத்தவர். எழுநூறு ஆண்டுகள் என்பதே சரி என்றார் மூன்றாமவர். "உங்கள் திறமையில் முழு
நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதல்லவா? உங்கள் கணிப்பை முழு கவனத்துடன் தானே செய்தீர்கள்?'' என்று கேட்டார் ராகவேந்திர சுவாமிகள்.
ஆம் சுவாமி! அதில் சந்தேகமே இல்லை. அதுவும் தங்களுக்காக மேற்கொண்ட பணியில் நாங்கள் சிரத்தையுடன் ஈடுபட வேண்டியது எங்கள் கடமையல்லவா என்றனர். ஏன் அப்படி
அவர்களின் கணிப்பில் வித்தியாசம் ஏற்பட்டது? எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அனைவரும் திகைத்து நின்றார்கள். ஆனால், சுவாமிகளோ, "உங்களை சோதித்து பார்க்கவே இப்படிக் கேட்டேன். உங்களுடைய தன்னம்பிக்கையை மெச்சுகிறேன். நீங்கள் மூவரும் கணித்த கணிப்பு சரிதான்’' என்றார். சுவாமி, தங்கள்
கட்டளைப்படி எங்கள் கடமையைச் செய்து விட்டோம். ஆனால், தங்களிடம் ஒரு விளக்கம் பெற விரும்புகிறோம். தனித்தன்மை வாய்ந்த இந்த ஜாதகத்துக்கு உரியவர் யார் என்று கேட்டனர். ராகவேந்திர மகான் புன்னகைத்தபடி "நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அது என்னுடைய ஜாதகம்தான்’' என்றார்.
தொடர்ந்து, "என்னுடைய ஆயுள்
காலத்தை மூன்று பேரும் மூன்று விதமாக கணித்தது சரி தான். எப்படி என்பதை நான் விளக்குகிறேன். ஒருவர் ஆயுள்காலம் நூறு வயது என்று கூறியிருக்கிறார். நான் சரீரத்துடன் இருக்கும் காலத்தைத்தான் அவர் கணித்திருக்கிறார். எனவே, அவருடைய கணிப்பு சரி. அடுத்தவர் முந்நூறு
ஆண்டுகள் என்று கூறியிருக்கிறார். அவர், எனது கிரந்த நூல்கள் பிரகாசம் அடைந்து பரவும் காலத்தை கணித்துக் கூறினார். மூன்றாமவர் எழுநூறு ஆண்டுகள் என்று கூறி யிருப்பது, நான் எழுநூறு ஆண்டுகள் பிருந்தாவனவாசத்தின் மூலம் என் பக்தர்களை காப்பாற்றுவேன் என்பதைத்தான். ஆக, மூவருடைய கணிப்பும்
சரிதான்’’ என்று கூறி, மூவருக்கும் பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்தார்.

ஓம் பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனுவே.

ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 22
லாவண்யா என்ற பெயருக்குப் பதில் எஸ்தர், ஆஷிபா அல்லது surname வில்சன் என்று இருந்திருந்தால், தமிழக ஊடகங்கள் அவர் வீட்டில் தவம் கிடந்து, அவர் தாயின் கண்ணீரை, குடும்பத்தின் சோகத்தை, இந்தியா ஒரு வாழத்தகாத தேசம் என்று 24x7 ஒளிபரப்பி காசு பார்த்து இருக்கும்.
17 வயது மாணவியை, பரீட்சைக்கு
தயார் செய்யவிடாமல், மதம் மாறாத குற்றத்திற்காக, பழிவாங்கும் எண்ணத்துடன், கழிவறையை கழுவச் செய்த பள்ளியின் பெயர் "பத்மா சேஷாத்திரி" என்று இருந்திருந்தால், இந்நேரம் தமிழக அரசு பள்ளியின் அனுமதியை ரத்து செய்து தாளாளரைக் கைது உனக்கு கண்ணீர் வடித்திருக்கும். அவர் குடும்பத்துக்கு ₹1கோடி
+ அரசு வேலையும் கொடுத்திருக்கும். என்ன செய்வது பள்ளியின் பெயர் "தூய ஹ்ருதய மேரி" ஆயிற்றே! #NEET க்கு படிக்க முடியவில்லை என்று ஒரே ஒரு வரி எழுதிவிட்டு சென்றிருந்தால், சினிமா பட்டாளம் வீடு தேடி வந்து, அரசை எதிர்த்து ஒருவிரல் புரட்சி செய்து ட்விட்டர் பேச்புக்கில் அறிக்கை விட்டு
Read 6 tweets
Jan 22
#கும்பகோணம் #திருக்குடப்தை கும்பகோணம், அதை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான (188) கோவிகள் அமைந்திருப்பதால் அது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. கரு முதல் 60ஆம் கல்யாணம் வரை நம் வாழ்க்கை மங்களமாக அமைய வேண்டிய வரும் தரும் கோவில்கள் இங்குள்ளது தனிச் சிறப்பு.
1. கரு உருவாக (புத்திர Image
பாக்கியம்) - கருவளர்ச்சேரி
2. கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற - திருக்கருகாவூர்
3. நோயற்ற வாழ்வு பெறுவதற்கு -
ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில்
4. ஞானம் பெற - சுவாமிமலை
5. கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு -
கூத்தனூர்
6. எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட - பட்டீஸ்வரம்
7. உயர் பதவி ImageImage
அடைய (வேலை வேண்டி) - கும்பகோணம் பிரம்மன் கோயில்
8. செல்வம், பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோயில்
9. கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்
10. இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி
11. பெண்கள் நற்சமயத்தில் ருது
ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீர ImageImage
Read 7 tweets
Jan 21
About thirty years back, Bairava Subramanya Aiyer was running a prasadam shop in Tiruttani hills. I was among the people who worked in that shop. Once I fell ill because of incessant work. As time passed, the fever shot up. Thinking that I could reach home by ten in the night,
started walking slowly down the steps in the mountain path, staggering, and repeatedly taking rest here and there, and finally reaching the last step. There was a mena (palanquin) parked on the banks of the Teppakkulam. A man came towards me from that direction. He asked me, have
you come down from the hill top? I said, yes. Then you come here. He took me to the mena. I peeped slightly inside the mena. From there Maha Periyava gave darshan to my darkened eyes as Shantha Swaroopi. I good joining my palms forgetting about myself. “You come from the hill top
Read 15 tweets
Jan 20
அனுமனின் வாலில் தொங்கிக் கொண்டிருக்கும் மணி எப்படி வந்தது என்று கூறும் பதிவு இது.
சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீராமன் கிஷ்கிந்தாவில் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்கள் பல வகை. அதில் #சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான
வானரங்களைக் கொண்டு ஒரு படை அமைத்தார். இதில் ஆயிரம் வானரங்கள் இருந்தன. இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர்
அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில்! அதைக் கவனித்த ஸ்ரீராமன், "யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு” என்று உறுதி கொடுத்தார். போர் ஆரம்பமாயிற்று. கடும்போர் நடந்தது. ராவணனின் படையில் பல முக்கிய
Read 19 tweets
Jan 20
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் மகனான சாமிநாதையரவர்கள் தமிழ்த்
தாத்தா என போற்றப்படுபவர். ஆற்றொழுக்கு போன்ற அழகிய தமிழ் நடையில் சுவையான பாரம்பரியச் செய்திகளைத் தருவதில் அவர் வல்லவர்.
அவரது என் சரித்திரத்தில் (1941 ஆம் வருடம் எழுதியது) முதல்
அத்தியாயமாக
மிளிர்வது உத்தமதானபுரம் எப்படித்
தோன்றியது என்பது பற்றித்
தான். சற்றேறக்குறைய இருநூறு
வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர்
ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த
காலகேயன் எனும் அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு
முழுவதையும் சுற்றிப் பார்க்கும்
பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரில் இருந்து
புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டுகளித்தும், ஸ்தலங்களைத்
தரிசித்துக் கொண்டும் சென்றார்.
இடையில், தஞ்சைக்குக் கிழக்கே
பதினைந்து மைல் தூரத்திலுள்ள
பாபநாசத்திற்கு அருகில்
ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்
போல் அங்கே போஜனம் முடித்துக்
கொண்ட பிறகு தாம்பூலம்
Read 10 tweets
Jan 20
#ஜல்லிக்கட்டு #சாமி_மாடு.
மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விவரம் அறிந்தவர்களுக்கு
தெரியும் அந்த மாடு மாவீரன்
அழகாத்தேவன் நினைவாகவே
அவிழ்த்து விடப்படுகிறது என்பது. அழகாத்தேவன் என்பவர் யார்? மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன் பட்டியை (இன்றைக்கு சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் பொறுப்பில்லாமல்
தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி. அழகாத்தேவனுக்கு கால்கட்டு போட்டு விட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட
கருத்தமாயன் பெண் பார்க்கும்
படலத்தைத் தொடங்கினார். நாகமலைக்கு அருகேயுள்ள
கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும்
கருத்தமலையின்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(