ஒரு வெல்லத்தை கூட உருப்படியாக கொடுக்க முடியவில்லை டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை அழைத்து வந்து விசாரிக்க வேண்டும்
- அண்ணாமலை. @annamalai_k
கோவை செல்வபுரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் “நம்ம ஊரு மோடி பொங்கல் விழா” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.அப்போது அண்ணாமலை உறியடி போட்டியில்,
கலந்து கொண்டு பானையை உடைத்தார். பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “தேசிய தலைவர்கள் இல்லை என்பதால் டெல்லி குடியரசு தினவிழாவில் வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் படங்கள் பொறுத்திய தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி இல்லை என்பது பொய்யான தகவல்.
பாதுகாப்புத்துறை அமைச்சகம் தான் இதற்கு அனுமதி வழங்கும்.அதற்கு பலகட்ட பேச்சுவார்த்தை நடக்கும். நேரம் கருதி எல்லா மாநிலங்களுக்கும் இதில் வாய்ப்பு கிடைக்காது. முழு விவரங்களையும் திரட்டிவிட்டு இதுதொடர்பான தகவல்களை சொல்கிறேன்.தனியார் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி,
கருத்து சுதந்திரம் அல்ல. குழந்தைகளை பாதுகாக்கும் என்.சி.பி.சி.ஆர் அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. வஞ்சகமான முறையில் இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை சட்ட ரீதியாக அணுகுவோம்.உத்தரப்பிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது.
சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் பா.ஜ.க-விலிருந்து விலகி செல்கின்றனர். உ.பி., தேர்தலில் பா.ஜ.க 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்.பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பிரதமரின்,
பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது.கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகனநிறுத்தம் செய்ய கட்டணம் என்பது ஏற்புடையதல்ல.இதை கண்டித்து வருகிற 21ம்தேதி பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பொங்கல் பரிசில்,தமிழக அரசு வெல்லம் உருகும் என்று சொல்கின்றனர்.
விஞ்ஞான ஊழலுக்கு, எப்போதும் ஒரு விஞ்ஞான பதிலை தான் சொல்வார்கள்.வெல்லம் உருகுவது தொடர்பாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை அழைத்து வந்து ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும். ஒரு வெல்லத்தை கூட உருப்படியாக கொடுக்க முடியவில்லை.தி.மு.க-வின் கிரவுன் பிரின்ஸ் உதயநிதி,
நகைக் கடன் தள்ளுபடியில் இருந்து எல்லாவற்றையும் சரவணா ஸ்டோர்ஸில் பொருள்களை விற்பது போல சொல்லிவிட்டு இப்போது எஸ்கேப் ஆகிவிட்டார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் என்னை அவதூறாக பேசுவதோடு,மேகதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறார். ஆனால் தி.மு.க இது குறித்து இதுவரை
கருத்து தெரிவிக்கவில்லை. மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழக பா.ஜ.க உறுதியாக உள்ளது. தமிழக அரசின் உரிமைகளை மீட்டெடுக்காவிட்டால் காவிரி, முல்லைப்பெரியாறு அணைகளின் நம் உரிமைகள் பறிபோகும்” என்றார்.
அடுத்த விக்கெட்டை வீழ்த்திய அண்ணாமலை, இந்த முறை முக்கிய அமைச்சர் பதுங்கல்!
~ @annamalai_k
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் முதலில் தங்கள் கட்சியினரை சட்ட போராட்டம் நடத்தி பாதுகாப்பது குறிப்பாக ஆளும் திமுக அரசிற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் பாஜகவினரை கைத்துசெய்வதாக புகார் எழுந்த போது அதனை,
சட்ட ரீதியாக எதிர்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்க முழு வீச்சில் வழக்கறிஞர் குழுவை செயல்பட அறிவுரை வழங்கியத்துடன் அவரே மேற்பார்வையும் செய்துள்ளார் இதன் மூலம் பாஜகவினர் ஆளும் தரப்பின் மிரட்டலுக்கு பயம் கொள்ளாமல் களப்பணியாற்றி வருகின்றனர்.இது ஒன்று என்றால் அடுத்தது,
மாணவி லாவண்யா மரணம்… பா.ஜ.க போராட்டம்… சி.பி.ஐ க்கு மாற்றப்படுகிறதா வழக்கு..? #JusticeFor_TNHinduGirl
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளர்.இந்த நிலையில் மாணவி லாவண்யா
திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.காவல்துறை வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்
இந்த நிலையில் இறப்பதற்கு முன் லாவண்யா
ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கும் கவர்னர்!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது, கவர்னர் ரவிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம், இதுகுறித்து அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித்,
2021 செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். மருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து, தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றது; அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
களத்தில் அண்ணாமலை! தனியார் சேனல் மீது நடவடிக்கைக்கு தயாரான மத்தியமைச்சர் முருகன்! சம்பவம் இருக்கு! 🔥 @annamalai_k@Murugan_MoS
தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து சுதந்திரம் என்று படைப்பாளிகள் கம்பு சுத்தி வந்தார்கள்.
இனி பிரதமரையோ அல்லது தாய்நாட்டை அவமதித்தால் சும்மா இருக்கப்போவதில்லை என சட்டையை சுழற்றியிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.ஜீ நெட்ஒர்க் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது.அந்த தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும்
பெரியார், பெரியாறு – வித்தியாசம் தெரியாத முதல்வர் மு.க.ஸ்டாலின்..! திருவள்ளுவர் தினத்தில் தமிழுக்கு வந்த சோதனை..!
தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தில்,
அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.
தமிழகத்தில் நடக்கும்சதி திட்டம் அம்பலம்! கியா தொழிற்சாலை போல் ஆப்பிள்தொழிற்சாலையும் கை நழுவுகிறதா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15 அன்று மதிய உணவு உட்கொண்ட சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு,
அருகே உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தான் ஸ்டெர்லைட் பிரச்சனையும் ஆரம்பித்தது., ஐஃபோன் தயாரிப்பை மீண்டும் சீனாவுக்கு கொண்டு போக சீனா தன் விசுவாசிகளை கொண்டு செய்யும் சதி நாடகமா?